_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, February 15, 2011

பிஞ்சுக்கைகள்....

பிஞ்சுக்கைகள்....


மாறிவரும் சூழலில் நாம் எங்கேயோ சிக்கி தவிப்பதுபோல உள்ளது. ஆயிராமாயிரம் வளர்ச்சிகள் கண்டபொழுதும் மனம் ஏதோ ஒன்றை இழந்த தோற்றம் உள்
ளது என்பதை எல்லோரும் உணரமுடிகின்றது. அப்படிதான் மாணவர்களும் அவர்களின் மனநிலையும். சமீபத்தில் மட்டும் நான்கிற்கு மேற்பட்ட தற்கொலைகள் மாணவர்களாக இருப்பது சிந்திக்க தோன்றுகின்றது. இதில் மாணவர்கள் மனநிலை போதிய அளவிற்கு பக்குவம் இல்லையா? அல்லது மாணவர்களை கண்டிக்கும் முறையில் தவறுகள் நடக்கின்றதா? என்பதில்தான் நாம் இன்று சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஒரு சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். நான் என் நண்பனின் வீட்டிற்கு சென்றேன், என் நண்பனின் மகனுக்கு 10 வயது அவன் "இரண்டு நாட்களாக சாப்பாடு சரியாக சாப்பிடவில்லை இரவில் ஏதோ பிதற்றல் செய்கின்றான்" என்று என்னிடம் சொன்னார்கள். அவனிடன் தனியாக விசாரித்ததில் அவன் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாலை நேர சிறப்பு வகுப்பிற்கு சென்றுள்ளான். அங்கு அவர்களின் அலைபேசி காணவில்லை நீண்ட இடைவெளிக்கு பின் தேடியதில் பகுதி பகுதியாக கிடைத்துள்ளது. அதில் ஒரு பகுதியை இவன் தேடி எடுத்துள்ளான், அதனால் இவன் எடுத்துள்ளான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். அவர்கள் இவனை தனியாக மிரட்டியுள்ளார்கள் (அவர்களுக்கும் இவன் வயது பிள்ளை இருக்கின்றது என்பது குறிப்பிடதக்கது...... இவன் பிள்ளைக்கு எந்த நல்லொழுக்க சான்றிதல் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை!). போலீஸ்க்கு போவேன், உன் வகுப்பாசிரியரிடம் வந்து சொல்லுவேன் என்று மிரட்டியதில் பயந்துள்ளான். அந்த திகில் இன்னும் அவன் மனதை வீட்டு செல்லவில்லை. நான் அவர்களிடன் விசாரித்து நிலைமையை விளக்கியும் அவர்களால் புரிந்துகோள்ள முடியவில்லை " ஆறாயிரம் ருபாய் அலைபேசி காணவில்லை நாங்கள் அப்படிதான் மிரட்டுவோம் என்றார்கள்". சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களை ஆலோசிக்காமல் தனி நபராக இப்படி செய்வதை பற்றி உங்களின் கருத்துகளுக்கு விட்டுவிடுகின்றேன்.


இப்படிப்பட்ட சம்பவங்கள் ஒருபுறம் இருக்க மாணவர்களின் மனநிலை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. சின்ன சின்ன தோல்விகளை கூட தாங்கிகொள்ள முடியாத நிலைக்கு மாணவர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள். இன்றைய வளர்ப்பு முறையிலும், கல்வி முறையிலும் அவர்களுக்கு தன்நம்பிக்கை இல்லாத நிலைதான் உள்ளது. கல்வி என்பது அவர்கள் சாம்பாரிக்க உதவும் ஒரு முதலீடாகத்தான் வைத்துள்ளோம். நேற்றய சின்ன சின்ன விளையாட்டுகள் இன்று இல்லை, எல்லாமே வீட்டோடு இருக்கும் விளையாட்டுகள் இதில் வெற்றி தோல்வி அவன் நிர்ணயப்பதுதான். அதனால்தான் தோல்வியை அவனால் தாங்கிகொள்ள முடிவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் படிகள் என்பதை படிப்பதோடு நின்றுவிட்டது. மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும், பேற்றோர்களுக்கும் ஆலோசானை மையம் தேவையாகின்றது.

நாளைய உலகம் இன்றைய மாணவர்களிடம் உள்ளது என்பதை நாமெல்லாம் உணரவேண்டிய தருனம் இது. அந்த மாணவர்களின் மனநிலையை திடப்படுத்த எல்லொரும் ஆலோசிப்போம்...... அங்கொன்று இங்கொன்று நடக்கும் தற்கொலைகளை தடுக்க அவனசெய்வோம்..... அதற்கு அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது எல்லொருடைய ஆசைகள்...


அன்புடன்

ஆ.ஞானசேகரன்.

18 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு.

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு.//

வணக்கம்ங்க..
மிக்க நன்றிங்க

மாணவன் said...

//நாளைய உலகம் இன்றைய மாணவர்களிடம் உள்ளது என்பதை நாமெல்லாம் உணரவேண்டிய தருனம் இது. அந்த மாணவர்களின் மனநிலையை திடப்படுத்த எல்லொரும் ஆலோசிப்போம்...... அங்கொன்று இங்கொன்று நடக்கும் தற்கொலைகளை தடுக்க அவனசெய்வோம்..... அதற்கு அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது எல்லொருடைய ஆசைகள்...//

தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க அருமை

பகிர்வுக்கு நன்றி நண்பரே :)

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

ஹேமா said...

நல்லதொரு பதிவு ஞானம்.எத்தனை பேர் இதுபற்றிச் சிந்திப்பார்கள்.மனம் தவிர்த்து பணம் பணம் என்றே மனிதர்கள் இப்பல்லாம் !

ஆ.ஞானசேகரன் said...

[[மாணவன் said...

//நாளைய உலகம் இன்றைய மாணவர்களிடம் உள்ளது என்பதை நாமெல்லாம் உணரவேண்டிய தருனம் இது. அந்த மாணவர்களின் மனநிலையை திடப்படுத்த எல்லொரும் ஆலோசிப்போம்...... அங்கொன்று இங்கொன்று நடக்கும் தற்கொலைகளை தடுக்க அவனசெய்வோம்..... அதற்கு அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது எல்லொருடைய ஆசைகள்...//

தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க அருமை

பகிர்வுக்கு நன்றி நண்பரே :)]]

மிக்க நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

[[அன்புடன் அருணா said...

பூங்கொத்து!]]

வணக்கம் அருணா... நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

[[ஹேமா said...

நல்லதொரு பதிவு ஞானம்.எத்தனை பேர் இதுபற்றிச் சிந்திப்பார்கள்.மனம் தவிர்த்து பணம் பணம் என்றே மனிதர்கள் இப்பல்லாம் !]]


வணக்கம் ஹேமா,..... நீங்கள் சொல்வதும் சரிதான்... என்ன செய்வது

மதுரை சரவணன் said...

mirattal kaariyaththukku aakaathu... vaalththukkal

Anonymous said...

பெரியவங்களுக்கே சிறு பிள்ளைகளின் மனப்பக்குவம் சரியான தெளிவு சிந்தனை இல்லாமல் அவசரப்பட்டு பிள்ளைகளை காயப்படுத்துதல்..சிறுவர்களுக்கு இருக்கும் நிதானம் பெருந்தன்மை கூட பெரியவர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்..குழந்தைகள் மனதை புரியாதவர்களை என்ன சொல்வது..இதில் ஆசிரியர்கள் பெற்றவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் பெரும்பாலோர் பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் தான் இருக்கின்றோம்..

ஆ.ஞானசேகரன் said...

// மதுரை சரவணன் said...

mirattal kaariyaththukku aakaathu... vaalththukkal//

வாங்க சரவணன்... நன்றிங்க
நீங்கள் சொல்வதை அனைவரும் கவனிப்பார்களா>>>

ஆ.ஞானசேகரன் said...

//தமிழரசி said...

பெரியவங்களுக்கே சிறு பிள்ளைகளின் மனப்பக்குவம் சரியான தெளிவு சிந்தனை இல்லாமல் அவசரப்பட்டு பிள்ளைகளை காயப்படுத்துதல்..சிறுவர்களுக்கு இருக்கும் நிதானம் பெருந்தன்மை கூட பெரியவர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்..குழந்தைகள் மனதை புரியாதவர்களை என்ன சொல்வது..இதில் ஆசிரியர்கள் பெற்றவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் பெரும்பாலோர் பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் தான் இருக்கின்றோம்..//

வணக்கம் தமிழ்
நீங்கள் சொல்வதும்.... கவணிக்கப்பட வேண்டிய விடயம்.... நாமும் கடைபிடிக்க வேண்டியவை

சுந்தரா said...

குழந்தைகளைக் கூடிவிளையாடப் பழக்குவதும், மனதில்பட்டதைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிப்பதும் அவசியம்.

இந்தக்காலகட்டத்தில்,முக்கியமா கஷ்டநஷ்டம் தெரிந்து குழந்தைகள் வளர வகைசெய்தல்வேண்டும்.

ஆ.ஞானசேகரன் said...

// சுந்தரா said...

குழந்தைகளைக் கூடிவிளையாடப் பழக்குவதும், மனதில்பட்டதைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிப்பதும் அவசியம்.

இந்தக்காலகட்டத்தில்,முக்கியமா கஷ்டநஷ்டம் தெரிந்து குழந்தைகள் வளர வகைசெய்தல்வேண்டும்.//

Thanks சுந்தரா

வேலன். said...

குழந்தைகளிடம் விளையாடும் நேரத்தைதான் டிவி சீரியல்கள் எடுத்துக்கொள்கின்றதே...சீரியல்களை குறைப்போம். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதி்ப்பளிப்போம்....

வாழ்க வளமுடன்.
வேலன்.

அன்புடன் நான் said...

மிக சரியான தருணத்தில் உரிய கருத்தை பகிர்ந்திருக்கிங்க ..... பெற்றோர்தான் முதலில் தன் குழந்தையிடம் நண்பனாக பழக வேண்டும்......

ஆ.ஞானசேகரன் said...

//வேலன். said...

குழந்தைகளிடம் விளையாடும் நேரத்தைதான் டிவி சீரியல்கள் எடுத்துக்கொள்கின்றதே...சீரியல்களை குறைப்போம். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதி்ப்பளிப்போம்....

வாழ்க வளமுடன்.
வேலன்.//

வணக்கம் வேலன் சார்...
டீவி சீரியல் பார்ப்பது அடுத்து வீட்டு விவகாரத்தில் மூக்கை நுழைப்பது போல என்று சொல்ல மறந்துவிட்டீர்களே!

ஆ.ஞானசேகரன் said...

//சி.கருணாகரசு said...

மிக சரியான தருணத்தில் உரிய கருத்தை பகிர்ந்திருக்கிங்க ..... பெற்றோர்தான் முதலில் தன் குழந்தையிடம் நண்பனாக பழக வேண்டும்......//

வணக்கம் நண்பா.. நலமா? மிக்க நன்றிப்பா