ஓடும் ஓடும்...... வேகம்!
ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் அந்த நாட்டின் போக்குவரத்து காரணிகளை பார்த்தாலே தெரிந்துவிடும். அந்த வகையில் நம் நாட்டின் (இந்தியா) சாலை மற்றும் போக்குவரத்து உலக தரம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக உலக வங்கியின் கடன் உதவியுடன் சாலை சீரமைப்பு மற்றும் மேன்படுத்துதல் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. பல இடங்களில் முடியும் தருவாயில் இருக்கின்றது. இப்படிப்பட்ட சீரமைப்பு பணிக்காக மத்திய மாநில அரசுகளை பாராட்டியே ஆகவேண்டும்..... அதைவிட முக்கியம் ஒரு துறையின் வளர்ச்சி என்பது அதனை சார்ந்த துறைகளின் வளர்ச்சியையும் கவணிக்கவேண்டும். அப்படி கவணிக்காத வகையில் விபத்துகளை சந்திக்க நேரிடும், அப்படிதான் சாலை மேன்பாடும், சாலைகளை மேன்படுத்தும்பொழுது வாகனங்களின் வேகமும் அதிகரிக்க செய்கின்றது. வேகம் அதிகரிக்கும் பொழுது சாலை பாதுகாப்பும் சேர்ந்தே வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அப்படி சாலை பாதுகாப்பை கவணம் கொள்ளாத வளர்ச்சி பேராபத்தை கொடுக்கும்...
சாலை பாதுக்காப்பை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பது ஒரு கவலையாக இருந்தாலும்.... அரசு அதற்கான விழிப்புணர்வை சரியாக செய்யவில்லை என்பது தினம் நடக்கும் சாலை விபத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். வானோலி மற்றும் தொலைக்காட்சியை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. நொந்த படத்தையும் பிஞ்ச படத்தையும் காட்டி காட்டி நல்லபடமாக மாற்றும் தந்திரத்தை ஏன் சாலை விழிப்புணர்வுக்கு பயன்படுத்தவில்லை. இதுவரை பாதைசாரிகளுக்காண (zebra crossing) யை முறையாக பயன்படுத்தியுள்ளார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதை பற்றி தெரிந்து வைத்துள்ளார்களா என்றாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட விழிப்புணர்வை மக்களிடம் கொடுக்க தவறிய அரசுக்கும் அதனை சார்ந்த அதிகரிகளுக்கும் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்.... மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடு என்பதால் எந்த பாதுகாப்பை பற்றி கண்டுக்கொள்ள வேண்டாம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு உயிரும் நாளைய நம்பிக்கை தூண்களாக இருக்கும். அப்படிப்பட்ட நம்பிக்கை தூண்கள் சாதரணமாக இழக்க முடியாது.
சாலைப் பயணம் என்பது சாகசம் செய்யும் கலம் இல்லை. சாலைகள்தோரும் இருக்கும் குண்டு குழியை எப்போழுதுதான் சரிசெய்கின்றார்களோ தெரியவில்லை. இதனை பார்வையிட, பராமறிக்க இருக்கும் துறைகள் செயல் வடிவில் இருக்கின்றாதா? அப்படி ஒரு துறை, பிரிவு இருக்கின்றதா? என்பதும் தெரியவில்லை. இத்தனை இடற்பாடுகள் இருந்தும் வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டும் பொழுது அலைபேசியை பயன்படுத்துதல், மது அறிந்துவிட்டு வண்டி ஓட்டுதல், போன்ற தகாத செயல்பாடுகள் இருக்கின்றது. சுயக்கட்டுபாடும், தனிமனித ஒழுக்கம் இல்லாத இடத்தில் அரசை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லையே
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
Friday, February 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அருமையான கருத்துகள்.
வணக்கம் ஞானா,
நலமா? ,சாலை என்றாலே பயமாக இருக்கிறது .திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .வாகன ஓட்டுனராய் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை தடுக்க முடியாது ...யாருக்குமே பொறுப்பில்லை ஞானா.ரொம்ப வருத்தமா இருக்கு .குறிப்பா இளம் வயது வாகன ஓட்டிகள் படு வேகம் .வேகத்தை மையமாக வைத்து சந்தையில் வரும் இன்றைய வாகனங்கள் மற்றும் விளம்பரங்கள் .வீட்டை விட்டு வெளியே சென்று உயிருடன் வந்தால் நிஜம் .இதற்க்கு யார் பொறுப்பு??????????? ஒவ்வொரு சக மனிதாபமற்ற மனிதனும் பொறுப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!
//இத்தனை இடற்பாடுகள் இருந்தும் வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டும் பொழுது அலைபேசியை பயன்படுத்துதல், மது அறிந்துவிட்டு வண்டி ஓட்டுதல், போன்ற தகாத செயல்பாடுகள் இருக்கின்றது. சுயக்கட்டுபாடும், தனிமனித ஒழுக்கம் இல்லாத இடத்தில் அரசை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லையே///
மிகச் சரியாக சொன்னீங்க முடிந்தளவிற்கு நாமும் விழிப்புணர்வோடும் பொறுப்போடும் இருக்க வேண்டும்
நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே :)
// தமிழ் உதயம் said...
அருமையான கருத்துகள்.
//
வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்க
//sakthi said...
வணக்கம் ஞானா,
நலமா? ,சாலை என்றாலே பயமாக இருக்கிறது .திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .வாகன ஓட்டுனராய் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை தடுக்க முடியாது ...யாருக்குமே பொறுப்பில்லை ஞானா.ரொம்ப வருத்தமா இருக்கு .குறிப்பா இளம் வயது வாகன ஓட்டிகள் படு வேகம் .வேகத்தை மையமாக வைத்து சந்தையில் வரும் இன்றைய வாகனங்கள் மற்றும் விளம்பரங்கள் .வீட்டை விட்டு வெளியே சென்று உயிருடன் வந்தால் நிஜம் .இதற்க்கு யார் பொறுப்பு??????????? ஒவ்வொரு சக மனிதாபமற்ற மனிதனும் பொறுப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!//
வணக்கம் சக்தி
நான் நலம்.. நிங்கள்?
ஆமாங்க சக்தி உண்மைதான் ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்களாக திருந்துவார்களா? என்று எதிர்பபார்க்க முடியாது பல நேரங்களில் சட்டத்தாலும் தண்டனைகளாலும் கட்டுப்படுத்தி ஆக வேண்டும்...
மிக்க நன்றிங்க சக்தி
[[மாணவன் said...
//இத்தனை இடற்பாடுகள் இருந்தும் வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டும் பொழுது அலைபேசியை பயன்படுத்துதல், மது அறிந்துவிட்டு வண்டி ஓட்டுதல், போன்ற தகாத செயல்பாடுகள் இருக்கின்றது. சுயக்கட்டுபாடும், தனிமனித ஒழுக்கம் இல்லாத இடத்தில் அரசை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லையே///
மிகச் சரியாக சொன்னீங்க முடிந்தளவிற்கு நாமும் விழிப்புணர்வோடும் பொறுப்போடும் இருக்க வேண்டும்
நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே :)]]]
வணக்கம் நண்பா மிக்க நன்றிப்பா
சரியாச் சொல்லி முடிச்சிருக்கீங்க ஞானம்.
நானும் சொல்வதுண்டு நம் நாடுகளில் வாகனங்களோடு சர்க்கஸ் காட்டுகிறார்கள் தெருவில் என்று.அதுவும் அந்த”ஆட்டோ”
இருக்கே....கடவுளே.நுழையாத இடமெல்லாம் நுழையுது.இப்படி ஓட்டுதலுக்கு ஓட்டுனர் உரிமைப் பத்திரம் பிரத்தியேக விஷேசமா குடுத்தே ஆகணும்.
போன தடவை ஒரு மாத விடுமுறையில் இரண்டு அசம்பாவிதங்கள்.அதுவும் நான் பிரயாணம் செய்த ஆட்டோ !
[[ஹேமா said...
சரியாச் சொல்லி முடிச்சிருக்கீங்க ஞானம்.
நானும் சொல்வதுண்டு நம் நாடுகளில் வாகனங்களோடு சர்க்கஸ் காட்டுகிறார்கள் தெருவில் என்று.அதுவும் அந்த”ஆட்டோ”
இருக்கே....கடவுளே.நுழையாத இடமெல்லாம் நுழையுது.இப்படி ஓட்டுதலுக்கு ஓட்டுனர் உரிமைப் பத்திரம் பிரத்தியேக விஷேசமா குடுத்தே ஆகணும்.
போன தடவை ஒரு மாத விடுமுறையில் இரண்டு அசம்பாவிதங்கள்.அதுவும் நான் பிரயாணம் செய்த ஆட்டோ ]]
ஆமங்க ஹேமா.... 8 போட்ட ஓட்டுனர் உரிமை கொடுத்து விடுகின்றார்கள். அப்பரம் ஊரேள்ளாம் 8 போடுகின்றார்கள்.. விழிப்புணர்வும் பொருப்புணர்வும் இல்லையே!...
மிக்க நன்றிங்க ஹேமா
சிந்தித்து தெளிவுற வேண்டிய பதிவுகளை மட்டுமே வெளியிடவது மகிழ்ச்சிக்குரியது..சிறந்த கருத்துக்கள் சேகர்..
சுயக்கட்டுபாடும், தனிமனித ஒழுக்கம் இல்லாத இடத்தில் அரசை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லையே
exactly ...
//தமிழரசி said...
சிந்தித்து தெளிவுற வேண்டிய பதிவுகளை மட்டுமே வெளியிடவது மகிழ்ச்சிக்குரியது..சிறந்த கருத்துக்கள் சேகர்..//
வணக்கங்க தமிழ்
மிக்க நன்றிங்க
//நட்புடன் ஜமால் said...
சுயக்கட்டுபாடும், தனிமனித ஒழுக்கம் இல்லாத இடத்தில் அரசை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லையே
exactly ...//
வாங்க ஜமால்... மிக்க நன்றிங்க
நன்றாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்.
//மாதேவி said...
நன்றாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்.//
வாங்க மாதேவி
மிக்க நன்றிங்க
Post a Comment