_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, December 17, 2008

மொழித்தெரியா ஊரில்.......

மொழித்தெரியா ஊரில்.......




நமக்கு கொடுக்கும் அடையாலமுனு சொன்னா நாம் பேசுர மொழிதான்னு எல்லோருக்கும் தெரியும். அப்படி நமக்கு புரியாத மொழி பேசுர ஊருல இருந்தா என்ன என்ன நடக்கும்.... ஜோதிகா மொழி படத்துல ஊமையும் செவிடாகவும் வாழ்ந்திருப்பார்(நடித்திருப்பார்), பிரகாஸ்ராஜ் ஜோதிகாவிடம் இசையை பற்றி உன்னுடைய புரிதல் என்னா? என்று கேட்ப்பார்,... அதற்கு ஜொதிகா உங்கள் எல்லாருக்கும் இசை ஒரு கலை, எனக்கு அது ஒரு மொழி அப்படிதான் நானும் உணர்கின்றேன் என்று கூறுவதுபோல மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும்... அப்படி மொழிப் புரியாத ஊரில தனி ஆளா இருந்தா அந்த மொழிக்கூட ஒரு நாடகமே நடக்க வேண்டிவரும்..

இப்படிதான் நான் 1994ல் மலேசியாவில் வேலைக்காக சென்றேன்। கோலாம்பூர் அருகில் பெட்டாலிங் ஜெயா எனற இடத்தில் தங்கி இருந்தேன் எனக்கோ தமிழ் மட்டும்தான் ஒழுங்காக தெரியும், கொஞ்சம் ஆங்கிலம் அவ்வளவுதான். இதை வைத்துக்கொண்டுதான் சமாளிக்க வேண்டும். மலேசியாவில் மலாய் மொழியில் பேசுவார்கள். நான் தங்கி இருக்கும் இடத்தில் ஆங்கிலம் துளிகூட தெரியவில்லை ஒன்று இரண்டு கூட மலாய்ல்தான் சொல்லுவார்கள்.

சாப்பிட ஒரு குறிப்பிட்ட கடைக்குதான் செல்வேன். ஒரு வித புரிதல் முறையில் ஒரு சில மலாய் வார்த்தைகள் மூலம் காலம் ஓட்டினேன். என்றும் போல அன்றும் கடையில் சாப்பிட்ட பிறகு காசு கொடுக்க செல்லும் பொழுது கல்லாப்பெட்டி அருகில் இருந்த கேக் நல்லா இருந்தது அதனால் ஒன்றை சாப்பிட்டு விட்டேன். பிறகு கேக்குக்கும் சேர்த்து காசு கொடுத்தேன். அந்த கடையில் இருந்த பெண் கேக்குக்கு காசு எடுக்கவில்லை. நான் கேக் எடுத்ததை அவள் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன். அந்த கேக்கை காட்டி சத்து என்றேன்(சத்து என்றால் ஒன்று) . ஒன்றை மடித்து கொடுத்தாள்.... நான் no no மக்கான் என்றேன்( மக்கான் என்றால் சாப்பிடுதல்). அவள் சாப்பிட தட்டில் வைத்து கொடுத்தாள்.. நான் சாப்பிட்டுவிட்டதை எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் ஆங்கில வார்த்தைகளை சொல்லி பார்த்தேன் முடியவில்லை. கடைசியில் வெறும் வாயை மென்று முழுங்கி காட்டினேன்.. அவளோ ஓஓ சுடமக்கான் என்று சொல்லி காசை வாங்கி கொண்டாள். ( சுட மக்கான் என்றால் சாப்பிட்டாச்சு) அந்த "சுட" வை மறந்ததால் மொழியில் ஒரு கலையை காட்ட வேண்டியதாயிற்று...

அதேபோல் மற்றொரு சம்பவம் என்மனைவியின் அம்மா அப்பா கர்நாடகத்தில், வசிக்கின்றார்கள் பாகல்கோட் என்ற இடம். என்வீடு திருச்சிலிருந்து செனறால் ஒரு நாள் பயணம் ஆகும். என் மனைவியை அழைத்து வர நான் தனியாக செல்லவேண்டி இருந்தது. எனக்கு கன்னடமும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது. ஊப்பிலி வரை சென்றுவிட்டேன் அங்கிருந்து பாகல்கோட் பஸ்ஸில் செல்லவேண்டும்... இரவு சாமம் அப்போது அங்கு உள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை ஹிந்தி புரிந்துக்கொள்கின்றார்கள்... பஸ்ஸில் எல்லாம் கன்னடத்தில் எழுதியுள்ளார்கள்.. பாகல்கோட் பஸ் எது எங்கே என்றால் அவர்களுக்கு புரியவில்லை எனக்கு ஹிந்தியும் தெரியாது... எப்படியோ ஒரு சின்ன பையன்னுக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் புரிந்துக்கொண்டான்.. அவனிடம் பாகல்கோட் என்று கன்னடத்தில் எழுத சொன்னேன். அதை வைத்து பொருத்திப் பார்த்து பாகல்கோட் பஸ்ஸை பிடித்து ஊர்போய் சேர்ந்தேன்....

பாகல்கோட்டில் ஒருவாரம் தங்கி இருந்தேன். முடி வெட்ட வேண்டும்போல இருந்தது. நான் கடையில் சென்று முடி வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் மனைவிக்கு ஒரே ஆச்சரியம் மொழித்தெரியாமல் எப்படி முடிவெட்டிக்கொண்டு வந்தேன் என்று.... எப்படி என்று கேட்டாள்?, முடிவெட்டுற கடையில் சாப்பிடவா செல்வார்கள் முடிவெட்டதானே.. கடைக்கு சென்றேன், தலையில் கையை காட்டி நாற்காலில் உற்கார்ந்தேன், முடியை வெட்டி விட்டார்கள் இருபது ருபாய் கொடுத்தேன் மீதி கொடுத்தார்கள் வந்துவிட்டேன்.

மொழி படத்துல ஜொதிக்காவிற்கு இசை ஒரு மொழி போல, எனக்கு மொழித்தெரியா ஊரில் மொழி ஒரு கலையாக இருந்தது... இந்த கலை இருக்கும் வரை எல்லா ஊரும் நம்ம ஊருதான் போங்க!....

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

4 comments:

priyamudanprabu said...

முடிவெட்டுற கடையில் சாப்பிடவா செல்வார்கள் முடிவெட்டதானே.. கடைக்கு சென்றேன், தலையில் கையை காட்டி நாற்காலில் உற்கார்ந்தேன், முடியை வெட்டி விட்டார்கள் இருபது ருபாய் கொடுத்தேன் மீதி கொடுத்தார்கள் வந்துவிட்டேன்.
/////////


நல்ல எழுத்துநடை
வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

பிரபு said//நல்ல எழுத்துநடை
வாழ்த்துக்கள்//

நன்றி பிரபு, வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!...

கொடும்பாவி-Kodumpavi said...

என்ன ஞானசேகரன்..? நல்ல பெயர் வச்சிருக்கீங்க.. அம்மா அப்பா..ன்னு உங்க வலைப்பதிவுக்கு.. ஆனா எல்லா பதிவு முடிவிலும் 'மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன் 'ன்னு முடிக்குறீங்க... எப்பவும் நீங்க பிரச்சனையோடுதான் வருவீங்களா? இல்ல அந்த பிரச்சனைக்கு ஒரு முடிவோடு வருவீங்களா? ... சொல்லுங்க ஞானசேகரன் சொல்லுங்க..!
- கொடும்பாவி

ஆ.ஞானசேகரன் said...

//கொடும்பாவி-Kodumpavi said...
என்ன ஞானசேகரன்..? நல்ல பெயர் வச்சிருக்கீங்க.. அம்மா அப்பா..ன்னு உங்க வலைப்பதிவுக்கு.. ஆனா எல்லா பதிவு முடிவிலும் 'மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன் 'ன்னு முடிக்குறீங்க... எப்பவும் நீங்க பிரச்சனையோடுதான் வருவீங்களா? இல்ல அந்த பிரச்சனைக்கு ஒரு முடிவோடு வருவீங்களா? ... சொல்லுங்க ஞானசேகரன் சொல்லுங்க..!
- கொடும்பாவி//

வணக்கம் கொடும்பாவி.... உங்கள் வருகைக்கும்.. உங்கள் கருத்துரைக்கும் நன்றி!.. எல்லா பிரச்சனைகளுக்கும் நல்ல முடிவு இருக்க வெண்டும் என்ற ஆசைதான்...