_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, December 13, 2008

பயத்தின் பரினாமமும் நடந்து முடிந்த தீவிரவாதமும்...

பயத்தின் பரினாமமும் நடந்து முடிந்த தீவிரவாதமும்...
பயம் என்பது நம்மை நிதானம் இழக்க செய்திடும், பயம் இன்றி யாரும் இருப்பதாக தெரியவில்லை... பத்மஸ்ரீ டாக்டர் காமலஹாசனும் நடிகர் நாசரும் குருதிபுனல் திரைப்படத்தில் பேசும் காட்சியில் வீரம் என்பது பயம் இல்லாதுபோல இருப்பதுதான்(நடிப்பது) என்று கூறுவார். பயம் கண்ணில் தெரிந்துவிட்டால் போதும் உன்னில் இருக்கும் தீவிரவாதம் வெளிப்படும்.. கண்ணொளி பார்க்க>>>>>>>
இதேபோல் இந்திய தேசத்தை நடுக்க வைத்த மும்பை தாக்குதலில் ஈடுப்பட்ட இளஞர்களின் கண்ணில் காணப்பட்ட பயமில்லா உணர்ச்சிதான்,... அவர்களால் இப்படிப்பட்ட கொடுஞ்செயல் செய்ய முடிந்தது... இதை நேரில் பார்த்த மும்பை ரயில் நிலையத்தின் அறிவிப்பாளார் சொல்வதும் அப்படித்தான்... அவர்கள் அப்பாவி மக்களை சுடும் பொழுது அவர்கள் முகத்தில் பயமோ பதற்றமோ காணவில்லை என்று சொல்லுகின்றார். இவர்களிடம் தோன்றிய பயமின்மை உயிரின் விலைத்தெரியாமல் போய்விட்டது. இரத்ததின் துளிகள் அவர்களை பயம்காட்டாமல் விட்டதுதான் இவர்களின் வன்முறைக்கு உதவியது.

இத்தனை வன்முறைக்கிடையில் தன் உயிர் துச்சமென எண்ணிய இந்திய கமோண்டோகளின் துணிவுதான், அவர்களின் வெற்றியின் பலம். எந்த பயமின்மை மானுடனை கொன்றதோ, அதே பயமின்மைதான் மானுடனை காத்தது. இந்த பயத்தின் பல பரினாமம்தான் உயிரைக் குடிப்பதும், உயிரை காப்பதும்.... மேலும் இந்த கண்ணோளியை பார்க்கவும்>>>

இந்த மண்ணில் நடக்கும் தீவிரவாதத்தின் மூலமும் இதே பயத்தின் அடிப்படையில் உண்டானதுதானே! தீவிரவாதம் என்றும் உருவாகிறதில்லை உருவாக்கப்படுகின்றது. பலச்சாலி ஒரு முடவனை குனியும் வரை கொட்டிதீர்க்க மூர்க்கம் கொண்டால், ஒரு எல்லைக்கு மேல் வெகுண்டு எழுவானாயின் அங்கேதான் தீவிரவாதம் உருவாக்கப்படுகின்றது... இதற்கு பொறுப்பு அந்த பலச்சாலிதானே!.. இந்த நூற்றாண்டுகளில் பல காட்சியமைப்புகள், கோர நிகழ்ச்சிகள், இந்திய வரலாற்றையே புரட்டி போட்ட சம்பவங்கள் அனைத்தும் எதோ ஒரு விபத்தாகவும் அல்லது உணர்ச்சியில் உண்டான நிகழ்வாகவும் சொல்வதற்கில்லை...

தீவிரவாதம் ஏதோ ஒரு இனத்தின் முட்டாள் செயல் என்று சொல்லிவிட முடியாது. அரசியல் ஆதாயத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் இந்திய மக்களை துண்டாடி வேடிக்கைப் பார்க்கும் சமுக விரோதிகளின் கொடிய செயல்தான் இன்றுவரை நடக்கும் எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தின் முன்னோடி. பாபர் மசுதி இடிப்புக்கு பின்னர்தான் தீவிரவாதம் கொடியேற்றி வைக்கப்பட்டது. பெரும்பான்மை இனத்தின் வன்முறையான தாக்குதல் சிறுபான்மையினரை பயம்கொள்ள வைக்கப்பட்டது. இந்த பயம்தான் எல்லைத்தாண்டிய தீவிரவாதத்தை வலிமையாக்கியது.

வயதில் முதியவன் ஒருவன் தன்னை விட மிக சிறுவனை அடித்தால், ஒரு நிலைக்கு மேல் அந்த சிறுவன் அவனை வாயால் கடிக்க ஆரம்பித்து விடமாட்டானா? அதேதான் இங்கேயும் நடந்துவிட்டது.... பாபர் மசுதி இடிக்கப்பட்டதும் அதன் தீர்ப்பு இன்னமும் முடிவுக்கு வராமல் இருப்பதும். அயோத்தி பிரச்சனைக்கு தொடர் பிரச்சனையாக இருப்பது கோத்ரா சம்பவமும் அதற்கு பின் நடந்த குஜராத் கலவரமும். இதன் தொடராகத்தான் நடக்கும் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்திற்கு வழிவகை செய்துவருகின்றது.
இதுபோன்ற வன்செயல்களால் நம்பிக்கை இழந்த சிறுபான்மைனர், பயத்தின் காரணமாக எல்லை தாண்டி கரம் கோருகின்றனர்.. அரசியல் ஆதாயத்திற்காகவும், பதவி சுகம் காணவும் பிரதமர் கனவில் இருக்கும் அத்வாணி பொன்றோர்களினின் பொறுப்பற்ற செயல்காளால் அப்பாவி மக்கள் வன்முறையில் பலியாகின்றனர். மோடி போன்றோர் தூண்டும் இனவெறியினால் அப்பாவிகள் செத்து மடிகின்றனர்.

இந்தியாவில் சிறுபான்மைனரால் நடத்தப்படும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டுமானால், அவர்களுக்கு நம்பிகையை உருவாக்க வேண்டும். அவர்களின் பயத்தை தெளிவாக்க வேண்டும்... ஏதோ 12 பேர் பாகிஸ்தானிலிருந்து வந்து மும்பையை தாக்கிவிட்டனர் என்று நினைத்தால் முட்டாள்தனம்.. இங்குள்ளவர்கள் உதவியதால்தான் அவர்களால் செயல்பட முடிந்தது.

நம் அருகில் உள்ள வன்முறையும், தீவிரவாதமும் தீர்க்கப்படாமல் போனால் சவகுழியில் விழுவோம் என்பதும் உண்மைதானே! பயம்மில்லா நிலையை எல்லா இன மக்கள் உணரப்படுமேயானால் எல்லைத்தாண்டிய தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுச் செல்ல முடியும் எனபது என் விருப்பமும் எண்ணமும்.

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

5 comments:

Anonymous said...

Your post completely ignores the core issue. It is not all the hindus who destroyed Babri Masjid. Even if they want to take vengence for Masjid demolition it should be against Advani&Co and not against innocent people on the railway station.It means they've hatred against India and exploiting Indian muslims for their purpose. Lot of temples were looted and hindus killed in the history. Lot of hindus are brain washed today citing that history only. If they also take the same way like the Islamic terrorists (take malegon) will you support them also?? Stop justifying terrorism

Muthuraj

ஆ.ஞானசேகரன் said...

பெயரில்ல நண்பரே! இந்தியாவில் உள்ள முஸ்லீம் நண்பர்களும் இந்தியர்கள்தான்... இவர்களின் பய உணர்ச்சிதான் எல்லை தாண்டி தீவிரவாதத்திற்க்கு துணைபோகின்றது. மதநல்லிணக்கம் உருவக்க படுவதன் மூலம்தான் முழுமையாக எல்லைத்தாண்டிய தீவிரவாதத்தை தடுக்க முடியும்... பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதன்மூலம் நம் அருகிலே உள்ள வன்முறைகள் தடுக்க வாய்பே இல்லை என்பதும் உண்மை... தேவையில்லா பாபர் மசுதி தகர்த்ததால் சிறுபான்மை இனத்தில் பயம் உண்டானதால் பக்கத்து நாட்டுடன் உதவி கரம் தேட வேண்டிய சுழலை உருவாக்கிய பெருமை அத்வாணி போன்ற தலைவர்களின் பொறுப்பின்மையும் ஆசையும்தான் என்பதில் என்ன சந்தேகம்..

பிரபு said...

//////
இந்தியாவில் சிறுபான்மைனரால் நடத்தப்படும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டுமானால், அவர்களுக்கு நம்பிகையை உருவாக்க வேண்டும். அவர்களின் பயத்தை தெளிவாக்க வேண்டும்... ஏதோ 12 பேர் பாகிஸ்தானிலிருந்து வந்து மும்பையை தாக்கிவிட்டனர் என்று நினைத்தால் முட்டாள்தனம்.. இங்குள்ளவர்கள் உதவியதால்தான் அவர்களால் செயல்பட முடிந்தது.
////

நல்ல சிந்தனை

பிரபு said...

பெயரில்ல நண்பர் சொன்ன
demolition it should be against Advani&Co and not against innocent people on the railway station

இந்த கரூத்து சரி

அத்வானி போன்ற பொருக்கிகளை தாக்காமல் இப்பாவிமக்களை தாக்குவதால் என்ன பயன் அவர்களுக்கு

ஆ.ஞானசேகரன் said...

// பிரபு said... இந்தியாவில் சிறுபான்மைனரால் நடத்தப்படும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டுமானால், அவர்களுக்கு நம்பிகையை உருவாக்க வேண்டும். அவர்களின் பயத்தை தெளிவாக்க வேண்டும்... ஏதோ 12 பேர் பாகிஸ்தானிலிருந்து வந்து மும்பையை தாக்கிவிட்டனர் என்று நினைத்தால் முட்டாள்தனம்.. இங்குள்ளவர்கள் உதவியதால்தான் அவர்களால் செயல்பட முடிந்தது.
////

நல்ல சிந்தனை//

நன்றி பிரபு...