_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, December 5, 2008

பொய்யர்களாக இருப்பதேன்?

பொய்யர்களாக இருப்பதேன்?

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கு மெனின்.-குரள்

சாமி கும்பிட வைக்கப்பட்ட பாலை தன் மகள் காலால் தவறி தட்டிவிட்டாள், அம்மா, யார் இந்த பாலை கொட்டியது என்று மகளிடம் கேட்டாள். சின்ன பொன்னு பயத்தில் நான் இல்லை என்று சொல்லுகின்றாள். தாயோ கொபம் அடைகின்றாள். என்ன சின்ன வயசிலே பொய்சொல்லுகிறாய் என்று அடிக்கவும் செய்கின்றாள்.

வேலை முடிந்து அப்பா விட்டுக்கு வருகின்றார், வரும்போதே ஹெலோ செல்லம் விளையாடுகின்றாயா விஜய் மாமா கேட்டால் அப்பா இன்னும் வரவில்லை என்று சொல்லிவிடு, என்று சொல்லி குளியல் அரைக்கு சென்றுவிட்டார். குழந்தையும் அவ்வாறே சொல்லிவிடுகின்றது. ஒரு சில குழந்தைகள் அப்பா விட்டில் இல்லை என்று சொல்ல சொன்னார் என்று கூறுவதும் உண்டு.

அலுவலகத்திற்கு போக தாமதமானால் எதோ ஒரு பொய்யான காரணத்தை சொல்லி விடுகின்றோம். நண்பர் ஒருவர் கடனாக 100 ரூபாய் கேட்கின்றார். கொடுக்க மனமில்லாமல் நானும் கடந்தான் வாங்கியுள்ளேன் என்று பொய்யாக கூறுகின்றோம். நண்பர் ஒருவர் உங்கள் காரை ஒருநாள் இரவல் கேட்டால், காரில் ப்ரேக் சரியில்லை என்று சொல்லிவிடுகின்றோம். பொய் என்பது நமக்கும் தெரியும் கேட்ட நண்பர்க்கும் புரியும். அவருக்கு புரியும் என்பது தெரிந்தே பொய் சொல்லுகின்றோம்...

இப்படியே பொய்யாகவே வாழ்க்கையை நகர்த்துகின்றோம். கார் இரவல் கேட்ட நண்பரிடம் காரை கொடுக்க விருப்பம் இல்லை என்று சொன்னால் அவர் வருத்தப்படுவார் என்று நாம் பொய்யர் அவதேன்? நாம் பொய்தான் சொல்லுகின்றோம் என்பதும் அவருக்கும் புரியும் என்பது தெரிந்தே சொல்வதேன்? இப்படியே ஏதோ ஒரு காரணங்களுக்காக பொய்யர்களாவே வாழ்கின்றோம்.. இதற்கு யாரும் விதிவிளக்கு இல்லை என்றே தெரிகின்றது...

மீண்டும் ஒரு முக்கியமான பிரச்சனையுடன் சந்திக்கும்..

ஆ.ஞானசெகரன்

8 comments:

ஆட்காட்டி said...

அந்த நேர நிவர்த்திகள்...

ஆ.ஞானசேகரன் said...

//ஆட்காட்டி said...
அந்த நேர நிவர்த்திகள்...//

உண்மைதான்...இருப்பினும் நமக்கு நாமே பொய்யர்களாகின்றோம்..

Anonymous said...

உண்மையின் சக்தியை உணராததும்,
பொய்யினால் பிரச்சனைகளை இலகுவாக முடித்து விடலாம் என்னும் அறியாமையுமே.

ஆ.ஞானசேகரன் said...

// Anonymous said...
உண்மையின் சக்தியை உணராததும்,
பொய்யினால் பிரச்சனைகளை இலகுவாக முடித்து விடலாம் என்னும் அறியாமையுமே.//

நன்றி Anonymous

CorTexT (Old) said...

நண்பர் ஒருவர் முல்லாவிடம் கழுதை இரவல் கேட்டார். கொடுக்க மனம் இல்லாததால், தற்பொழுது கழுதை இங்கு இல்லை என்று பொய் சொன்னார், முல்லா. நண்பர் திரும்பி செல்லும் நேரம் பார்த்து, உள்ளிருந்த கழுதை கனைக்க ஆரம்பித்தது. நண்பர் கேட்டார், "கழுதை இல்லையென்றாயே... ஆனால் கழுதை கனைக்கிறதே?". அதற்கு முல்லா, "நான் சொல்வதை நம்ப வில்லை; கழுதையை நம்புகின்றாய். உனக்கெல்லாம் கழுதை கிடையாது", என்று நண்பரை அனுப்பி விட்டார்!

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...
நண்பர் ஒருவர் முல்லாவிடம் கழுதை இரவல் கேட்டார். கொடுக்க மனம் இல்லாததால், தற்பொழுது கழுதை இங்கு இல்லை என்று பொய் சொன்னார், முல்லா. நண்பர் திரும்பி செல்லும் நேரம் பார்த்து, உள்ளிருந்த கழுதை கனைக்க ஆரம்பித்தது. நண்பர் கேட்டார், "கழுதை இல்லையென்றாயே... ஆனால் கழுதை கனைக்கிறதே?". அதற்கு முல்லா, "நான் சொல்வதை நம்ப வில்லை; கழுதையை நம்புகின்றாய். உனக்கெல்லாம் கழுதை கிடையாது", என்று நண்பரை அனுப்பி விட்டார்!//

சூப்பரான முல்லாக் கதை

Subankan said...

அருமை அருமை

ஆ.ஞானசேகரன் said...

// Subankan said...
அருமை அருமை//
நன்றி சுபாங்கன்...