_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, December 8, 2008

நாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்!....

நாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்!....

நான் படித்துகொண்டிருக்கும் பருவத்தில், 7-ம் வகுப்பு என்று நினைக்கின்றேன், எனது பள்ளி அருகில் ஒரு பெரியவர் ஒரு சிறிய துணிப்பையில் அரிசி குருனை எடுத்து வருவார். அந்த அரிசியை தான் போகும்மிடத்தில் உள்ள எறும்பு புற்றுகளில் அரிசி சிறிது பொட்டுக்கொண்டே செல்வார். சிறுதுளி அரிசியானாலும் இதனால் பல உயிர்களுக்கு உணவு கிடைத்துவிடுகின்றது. ஒரே நாளில் பல ஆயிரம் உயிர்களுக்கு உணவளித்த புண்ணியம் கிடைத்துவிடுகின்றது.

இதை பார்த்த நான் நாமும் இதேபோல் செய்யலாம் என்று நினைத்தேன். பள்ளிக்கு போகும்போது சட்டை பையில் கொஞ்சம் அரிசியை எடுத்துகொள்வேன், நடந்து போகும் பாதையில் எறும்பு, கரையான் கூட்டத்தை பார்த்தால் கொஞ்சம் அரிசியை போட்டுவிட்டு செல்வென். இப்படி பல தினங்கள் செய்துள்ளேன்.

ஒருநாள் என் விஞ்ஞான ஆசிரியர் உணவு வட்டம் பற்றி பாடம் எடுத்தார். இயற்கையின் சுழற்சியையும் உயிரணங்களின் உணவு பழக்கம் மற்றும் உணவு வட்டம் ஒரு சுழற்சியையும் விளக்கினார். ஒன்றின் அழிவு ஒன்றின் உணவாகின்றது, இப்படிதான் உணவின் வட்டம் சுழற்சியாகின்றது என்பதை உணர்த்தினார். புல்லின் அழிவு ஆட்டின் உணவு, ஆட்டின் அழிவு மனிதனின் உணவு, மனிதனின் அழிவு புல்லிற்கு உரமாகின்றது. இப்படி புல் மீண்டும் உணவாகின்றது... இந்த சுழற்சியின் பாதிப்பு இயற்கையை பாதிக்கும் என்று தோன்றுகின்றது.

எனக்கு நான் எறும்புக்கு உணவழிப்பதில் எதோ ஒரு குறை இருப்பதாக தோன்றியது. வீட்டு விலங்குகளை தவிர்த்து மற்ற விலங்குகளின் வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு உணவை தேடுவதும் பின் உண்பதும்தான். செயற்கையாக உணவழிப்பதின் மூலம் அவற்றின் இயற்கையான வாழ்கையை தடுப்பதாக தோன்றியது. மேலும் உணவுவட்டத்தில் தடுப்பு ஏற்ப்பட்டால் இயற்கை செய்யும் உயிர்களின் சமன்படுத்துதலில் பெரிய பாதிப்பு உண்டாகும் என்றே தோன்றியதால் அன்றிலிருந்து நான் எறும்புக்கு அரிசி கொடுப்பதை தவிற்த்தேன்.

மத்தேயு-6:26.(பைபிள்) ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?..... மேற்கண்ட பைபிள் எடுத்துகாட்டு கூட இயற்கையில் அவற்றிக்கு உணவுகள் இருப்பதாகவே சொல்கின்றது. இந்த உணவு வட்டம் மனிதனால் சிதைக்க படுமேயானால் கண்டிப்பாக பாதிப்பை சந்திக்கலாம் என்றே எனக்கு தோன்றியது.

இதேபோல் நான் வேலைசெய்யும் இடத்தில் தேனீர் இடைவேளையில் இரண்டு புறா வரும் அவற்றிக்கு சிலர் தான் சாப்பிடும் பண் மற்றும் பதார்த்தங்களை புறாகளுக்கு போடுவார்கள். தினமும் அதே நேரத்தில் வரும் சாப்பிடும்.... இந்த புறாக்கள் மற்ற புறாக்களைப் போல் இல்லாமல் சோம்பலாக சக்தியின்றி தெரிய ஆரம்பித்தது. சிலதினங்களுக்கு பின் அதை காணவில்லை. என்னை பொருத்தவரை மற்ற புறாக்களைபோல் மழைக்காலம் வேயில்காலம் போன்ற நாட்களில் உணவிற்காக போராட பழக்கம் இல்லததால் உணவுக்கிடைக்காமல் இறந்திருக்ககூடும் என்றே தோன்றுகின்றது. நாம் உணவு போட்டு பழக்கப்படுத்தி அவற்றை இயற்கையிலிருந்து பிரித்ததால் வந்த கொடுமை என்று என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது....

மேற்க்கூறிய என் கருத்துகள் முரன்பாடாக தோன்றலாம், சிறிது யோசித்தால் உண்மை புலப்படும். தான் அடைகாத்து ஈண்ட கோழிக்குச்சுகளை கொத்தி விரட்டி தானே இறைதேட ஆயித்தப்படுத்துமே தாய் கோழி, அதைதான் இங்கு சொல்கின்றேன்.

நாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்!...
இயற்கையாக இருக்கும்வரை பூமி சுற்றிக்கொண்டே இருக்கும்!...

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

10 comments:

CorTexT (Old) said...

ஆனால், நாமும் இயற்கையின் ஒரு அங்கமே! - இங்க தான் நிக்கிறான் சந்திரன் :-)

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...
ஆனால், நாமும் இயற்கையின் ஒரு அங்கமே! - இங்க தான் நிக்கிறான் சந்திரன் //
உண்மைதான், நாமும் இயற்கையின் அங்கம்தான், ஆனால் சிந்திக்கும் சக்தி படைத்தவர்கள்....நன்றி ராஜ்

கோவி.கண்ணன் said...

//மனிதனின் அழிவு புல்லிற்கு உரமாகின்றது//

உங்க வசதிக்கு ஏற்றவாறு சொல்லிட்டிங்க, மனிதனை விலங்குகளும் சாப்பிடும்.

உணவு சுழற்சி பற்றி பேசும் நாம் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து பேசக் கூடாது :)

ஆ.ஞானசேகரன் said...

/////மனிதனின் அழிவு புல்லிற்கு உரமாகின்றது//

உங்க வசதிக்கு ஏற்றவாறு சொல்லிட்டிங்க, மனிதனை விலங்குகளும் சாப்பிடும்.
//

வசதிக்காக சொல்லவில்லை வட்டத்தை சுருக்கிடேன் சொல்லவசதிகாக..மனிதனை விலங்குகள் சாப்பிடுவதும் ஒரு சமன் படுத்துதல்தான் என்று நினைக்கின்றேன் சார்.... கருத்துரைக்கு நன்றி கண்ணன் சார்.

CorTexT (Old) said...

//உண்மைதான், நாமும் இயற்கையின் அங்கம்தான், ஆனால் சிந்திக்கும் சக்தி படைத்தவர்கள்....//

என்ன பறவைகள் கூடு கட்டுகின்றன. நாம் Twin Towers கட்டிவிட்டோம்.

நீங்கள் சொல்ல வரும் சேதி புரிகிறது. நான், சும்மா ஒரு விதாண்டா வாதத்திற்கு சொல்லுகின்றேன் :-)

ஆ.ஞானசேகரன் said...

//என்ன பறவைகள் கூடு கட்டுகின்றன. நாம் Twin Towers கட்டிவிட்டோம்.//

பறவைகள் கூட்டை அழிப்பதில்லை, மனிதனோ குண்டுவைத்து தகர்ப்பான்.. தன் சுயநலத்திற்காக

CorTexT (Old) said...

//பறவைகள் கூட்டை அழிப்பதில்லை, மனிதனோ குண்டுவைத்து தகர்ப்பான்.. தன் சுயநலத்திற்காக//

சுயநலம் உயிரின் உயிர்நாடி - இது பரிமானம்.

குண்டுவைப்பது மடத்தனம்... இது சிந்திக்கும் மனிதனின் மடத்தனம்... கண்மூடித்தனமாக சிலவற்றை நம்பும் மடத்தனம்.

ஆ.ஞானசேகரன் said...

//சுயநலம் உயிரின் உயிர்நாடி - இது பரிமானம்.

குண்டுவைப்பது மடத்தனம்... இது சிந்திக்கும் மனிதனின் மடத்தனம்... கண்மூடித்தனமாக சிலவற்றை நம்பும் மடத்தனம்.//

Good.... நன்று

வனம் said...

வணக்கம்

நானும் உங்களின் இந்த வரிகளைப்பற்றி யோசித்து இருக்கின்றேன்
\\
போராட பழக்கம் இல்லததால் உணவுக்கிடைக்காமல் இறந்திருக்ககூடும் என்றே தோன்றுகின்றது.
\\

ஆம் இது உண்மை

ஆனால் மனிதன் ரோம்ப காலத்திற்கு முன்பே இந்த கட்டுப்பாடுகளை மீறிவிட்டதாகவே தெறிகிறது எடுத்துக்காட்டாக நம் குடும்ப அமைப்பே அப்படித்தான் இருக்கின்றது

தகுதி இல்லாதவர்களுக்கும் எல்லாம் கிடைக்கும்படியான மட்டுறுத்தல்கள்தான் குடும்ப அமைப்பின் அடிநாதமாக இருக்கும்

நன்றி

இராஜராஜன்

ஆ.ஞானசேகரன் said...

//வனம் said... ஆனால் மனிதன் ரோம்ப காலத்திற்கு முன்பே இந்த கட்டுப்பாடுகளை மீறிவிட்டதாகவே தெறிகிறது எடுத்துக்காட்டாக நம் குடும்ப அமைப்பே அப்படித்தான் இருக்கின்றது

தகுதி இல்லாதவர்களுக்கும் எல்லாம் கிடைக்கும்படியான மட்டுறுத்தல்கள்தான் குடும்ப அமைப்பின் அடிநாதமாக இருக்கும்//

வணக்கம்
இராஜராஜன் சார்...உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி... உங்களின் கருத்தையும் அமோதிக்கின்றேன்...