_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, November 20, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மேலேயுள்ள சுட்டிகளில் மூடப்பழக்கங்கள் பற்றிக்கொள்ள நம்மை ஆட்கொள்ளும் பயமும் அதன் மீது கொண்ட அறியாமையாலும் வருகின்றது என்பதை பார்த்தோம். அதேபோல் மனிதனிடம் உள்ள அதிகமான ஆசைகளாலும் அதன் மேல் கொண்டுள்ள ஈப்பாலும் மனிதனை மூடப்பழக்கங்களுக்கு கொண்டுச் செல்கின்றது. என்னை பொருத்தவரை எப்படிப்பட்ட மூடப்பழக்கங்கள் இருக்கின்றது என்று ஆராய்வதை விட ஏன் மனிதனை இந்த பழக்கம் கவ்விக்கொள்கின்றது என்று ஆராயவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த தொடர் தொடங்கினேன்.

மனிதனின் அறிவிற்கு முரனாண பழக்கங்கள் ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரன், சிறியவர் பெரியவர் என பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் இருக்கின்றது என்பதுதான் இதில் ஒரு குழப்பம். இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அறிவு சார்ந்த விடயமா? அல்லது அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வா? என்ற குழப்பங்கள்தான் மீதம் வெளிப்படுகின்றது.

ஒன்றைப் பற்றி நாம் முழுமையாக அறியாமல் இருக்கும் வரை இந்த நம்பிக்கையின் நாடியும் அடங்க மறுக்கின்றது. அதே போல் "பயம்" என்பது மனிதனின் வளரும் சூழ்நிலைகளால் வருகின்றனவா? அல்லது பாரம்பரிய செல்களால் கடந்து வந்துள்ளதா? என்ற ஆய்வின் முடிவின் கைகளில் இந்த நம்பிக்கையும் இருக்கின்றது. பிறந்ததிலிருந்து ஒவ்வொன்றாக கற்று வருகின்றோம் நாம் அறியா ஒன்றை அறியும் வரை அதன் மேல் உள்ள பயமும் நம்மை விட்டு நீக்கிவிடுவதில்லை. அதனை பற்றி அறிந்த பின் அந்த பயம் மட்டும் மூளையில் பிரதி எடுத்து வைத்துக்கொள்கின்றது. பின்னர் அதேபோல் அல்லது அதனை ஒத்த நிகழ்வுகள் வரும் பொழுது அந்த பயமும் படமெடுக்கின்றது என்பதுதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது. எத்தனை சீர்திருத்த வாதிகள் தோன்றினாலும் இந்த மூடப்பழக்கங்கள் அழிந்தபாடில்லை ஏன்?

பெண்களுக்கு கல்வியறிவு வளர்க்க வேண்டும் அப்படி பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான நம் சமூகம் இந்த மூடப்பழக்கங்களிலிருந்து விடுபடும் என்று பெரியார் சொன்னார். உண்மைதான், இன்றை நிலையில் படிக்காத பெண்களை விட படித்த பெண்களிடம் இப்படிப்பட்ட மூடப்பழக்கம் அதிகமாகவும் மிக சாதுர்த்தியமாகவும் இருப்பதை உணரமுடிகின்றது. இந்த நாளில் இந்த விரதம் இருந்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று பட்டியல் போட்டுடல்லாவா சொல்லுகின்றார்கள். அப்படியே தன் கணவன் குடுப்பத்தரையுமல்லவா தன்வயப்படுத்தியுள்ளார்கள். இவற்கெல்லாம் அவர்களிடம் உள்ள ஆசைகள்தான் காரணம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தன் குடும்பத்தினரிடம் உள்ள பற்று அதுவே ஆசைகளாக வந்தடைவதன் காரணமே இப்படிப்பட்ட மூடப்பழக்கங்களுக்கு வித்தாக அமைந்துவிடுகின்றது.


இதுவரை கண்டுள்ள ஆசைகளிலே மிக கொடூரமான ஆசைகளா இருப்பது பதவியாசை. ஒருவன் ஒரு பதவியை சுவைத்துவிட்டான் என்றால் அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுதரமாட்டான் என்பதுதான் வரலாறு சொன்ன பாடம். அந்த பதவிக்காக யாகங்கள் வைப்பது, பூஜைகள் செய்வது, ஏன் பலியிடுதல் செய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளை பலியிட்டால் நிரந்தரமாக பதவியில் இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டு அதற்காக யாகங்கள் நடத்தவும் செய்கின்றார்கள் என்ற செய்திகளை படிக்கின்ற பொழுது தலையே சுற்றுவதில் ஆச்சரியமில்லை. வயதான பின்னரும் இளம் நங்கையை மணம் முடித்தால் பதவியில் நீண்டு இருக்கலாம் என்று மணம் செய்தவர்களையும் வரலாறு பார்த்துள்ளது. இப்படிப்பட்ட மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது இந்த ஆசைகள்......

இவற்றிலிருந்து பார்கின்றபொழுது மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. அப்படி எல்லொரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்று சொல்லும் மூடப்பழக்கங்களைப்பற்றி தொடர்ந்து வரும் பகுதியில் சிந்திக்கலாம்.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம்
ஆ.ஞானசேகரன்.


27 comments:

சி. கருணாகரசு said...

பகுத்தறியும் சிந்தனையில் ஒரு தெளிவான கட்டுரை.

நான் மூட பழக்க வழக்கங்களை ஏற்பதில்லை அவ்வளவே... மற்றவரிடம் சொன்னால் அதை ஏற்க மறுக்கின்றார்கள்...என்னசெய்ய, அவரவர்களாக உணர்ந்தால்தான் உண்டு.

வாழ்த்துக்கள் நண்பா... தொடருங்க.

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

பகுத்தறியும் சிந்தனையில் ஒரு தெளிவான கட்டுரை.

நான் மூட பழக்க வழக்கங்களை ஏற்பதில்லை அவ்வளவே... மற்றவரிடம் சொன்னால் அதை ஏற்க மறுக்கின்றார்கள்...என்னசெய்ய, அவரவர்களாக உணர்ந்தால்தான் உண்டு.

வாழ்த்துக்கள் நண்பா... தொடருங்க.//


உங்களின் வருகை மகிழ்ச்சி
அவரவர்கள் உணரும் காலம் வருமா? அல்லது மீண்டும் அதே நிலைதானா? என்பதுதான் கேள்விகுறி

மிக்க் நன்றி நண்பா

பிரியமுடன்...வசந்த் said...

//மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது.//

கண்டிப்பா அதுமட்டும்தான் காரணம்..

ராமலக்ஷ்மி said...

//மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. //

சரியே, இரண்டுமேதான் காரணம். நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

[[ பிரியமுடன்...வசந்த் said...

//மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது.//

கண்டிப்பா அதுமட்டும்தான் காரணம்..]]

வாங்க வசந்த்... ம்ம்ம் ஆமாங்க முதலில் பயமும் ஒரு காரணமாக இருக்கு அடுத்து மெத்தன பொக்கும்

மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

[[ராமலக்ஷ்மி said...

//மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. //

சரியே, இரண்டுமேதான் காரணம். நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஞானசேகரன்.--]]

வணக்கம் நண்பா,...
உண்மையும் கூட... இப்படிப்பட்ட மூடப்பழக்கங்களினால் உண்டாகும் தீமைகள் சொல்லி தெரியவேண்டியதில்லை. இருப்பினும் நம்மோடு கலந்த இந்த தீதை வேரெடுக்க முடியாமல் இருப்பதேன்???? தேடலில் விடைக்கொடுங்க நண்பா>>.

மிக்க நன்றிபா

துளசி கோபால் said...

சாமி கூட ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சக்தி தருதாம்.

கடவுள் எல்லா இடத்திலும் இருக்காருன்னு நம்புனாப் போதாதாமே!

இதுலே விளக்கு வைக்க ஊத்தும் எண்ணெய்க்குக்கூட வெவ்வேற பலன்.

என்னமோ போங்க.....

ஆ.ஞானசேகரன் said...

[[ துளசி கோபால் said...

சாமி கூட ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சக்தி தருதாம்.

கடவுள் எல்லா இடத்திலும் இருக்காருன்னு நம்புனாப் போதாதாமே!

இதுலே விளக்கு வைக்க ஊத்தும் எண்ணெய்க்குக்கூட வெவ்வேற பலன்.

என்னமோ போங்க.....]]

வாங்க அம்மா,..
ம்ம்ம் அதே குழப்பம்தான் எனக்கும் என்னமோ போங்க... நம்மை நம்மாலும் புரிந்துக்கொள்ள முடியல,
மிக்க நன்றிமா...

வால்பையன் said...

சரி தான்!

பயமும், ஆசையும் தான்!

அது ரெண்டும் இல்லாதவங்க என்னை போல் நாத்திகர்களா இருக்காங்களே!

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

சரி தான்!

பயமும், ஆசையும் தான்!

அது ரெண்டும் இல்லாதவங்க என்னை போல் நாத்திகர்களா இருக்காங்களே!//

கடைசிவரை திடமாக இருக்க வாழ்த்துகள் நண்பா,... என் வாழ்த்துகள் உங்களை மகிழசெய்தாலே உங்கள் பிடிப்புகளில் சிறிது நகர்வதாய் எண்ணிக்கொள்ளுங்கள் நாத்திகர்கள் என்று சொல்லுபவர்களையும் நான் முழுமையாக நம்புவதில்லை என் அனுபவங்களில் பலரை பார்த்ததால் சொல்கின்றேன். எப்படியோ சக மனிதனை நீங்கள் வஞ்சிக்காதவரை என் ராயல் சலுட் உங்களுக்கே..

நன்றி நண்பா

Muniappan Pakkangal said...

Nice Gnanaseharan,itz greed for all this.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Nice Gnanaseharan,itz greed for all this.//

வணக்கம் சார். மிக்க நன்றிங்க

வினோத்கெளதம் said...

பதவி மோகம் கொண்டு மூட நம்பிக்கைகளில் திளைபவர்களை என்னவென்று சொல்லுவது..:(

நசரேயன் said...

அடுத்த பாகத்திக்கு காத்து இருக்கிறேன்

ஆ.ஞானசேகரன் said...

//வினோத்கெளதம் said...
பதவி மோகம் கொண்டு மூட நம்பிக்கைகளில் திளைபவர்களை என்னவென்று சொல்லுவது..:(//சொல்லிகொள்ள ஒன்றுமில்லை நண்பா,... அது அவர்களின் அழிவுப்பாதையாகவே இருக்கும்

ஆ.ஞானசேகரன் said...

//நசரேயன் said...
அடுத்த பாகத்திக்கு காத்து இருக்கிறேன்//மிக்க மகிழ்ச்சி நண்பா, வருகைக்கும் நன்றி

RAMYA said...

//
மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு.
//
ஆமாம் மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ஞானசேகரன்.

அடுத்தடுத்து எழுதுங்க!

ஆ.ஞானசேகரன் said...

[[RAMYA said...
//
மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு.
//
ஆமாம் மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ஞானசேகரன்.

அடுத்தடுத்து எழுதுங்க!]]

வாங்க ரம்யா,.. மிக்க நன்றிங்க‌

கலகலப்ரியா said...

v.good... keep it up gnanasekaran..!

ஆ.ஞானசேகரன் said...

// கலகலப்ரியா said...
v.good... keep it up gnanasekaran..!//


வாங்க ப்ரியா... மிக்க நன்றிங்க‌

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அருமையா சொல்லிகிட்டு வர்றீங்க நண்பா. பாராட்டுக்கள். தொடரட்டும் இத்தொடர். ஒருவரின் மனதில் சிறு மாற்றம் வந்தாலும் மிகப்பெரிய வெற்றியே.

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அருமையா சொல்லிகிட்டு வர்றீங்க நண்பா. பாராட்டுக்கள். தொடரட்டும் இத்தொடர். ஒருவரின் மனதில் சிறு மாற்றம் வந்தாலும் மிகப்பெரிய வெற்றியே.//


வணக்கம் நவாஸீதீன்
மிக்க நன்றிங்க,...

பின்னோக்கி said...

Excellent Article. In the future, you should publish this as a book.

ஆ.ஞானசேகரன் said...

// பின்னோக்கி said...
Excellent Article. In the future, you should publish this as a book//


மிக்க நன்றி நண்பா

பிரியமுடன் பிரபு said...

நல்ல சிந்தனை நண்பா

பலர் அதற்க்கு அடிமையாகிவிட்டார்கள்

என்ன செய்தாலும் மாறாது

பிரியமுடன் பிரபு said...

தொடருங்கள்

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...
நல்ல சிந்தனை நண்பா

பலர் அதற்க்கு அடிமையாகிவிட்டார்கள்

என்ன செய்தாலும் மாறாது//

உண்மைதான் நண்பா,... மிக்க நன்றிங்க‌