_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, November 10, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....

மற்ற விலங்குகளை விட மனிதன் சிறப்புமிக்க உயிர். அவனிடன் நல்லது எது? கெட்டது எது? என பகுத்தாய்ந்து செயல்படும் திறன் அவனுக்கு மட்டுமே உள்ளது. ஒருவரின் அறிவுக்கும் அவன் கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நம்பிக்கை என்பது அறிவு சார்ந்த விடயமா? சென்ற பகுதியில் பின்னூட்டமாக ஷண்முகப்ரியன் ஐயா பின் வருமாறு கூறினார். "
ஷண்முகப்ரியன் said... நம்பிக்கை என்பதே ஒன்றைப் பற்றி முழுக்க அறியாமல் இருக்கும் போது நாம் கொள்ளும் உணர்வு.அறிவுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை,ஞானம். இதனை அறியவே முடியாது என்ற அறிவின் உச்சத்தில் பிறப்பது 'trust'. அறியாமையில் பிறப்பது ‘belief'."

ஷண்முகப்ரியன் ஐயா சொல்வதிலிருந்து ஒன்றைப்பற்றி முழுமையாக அறியாமல் கொள்ளும் உணர்வுக்கு நம்பிக்கை என்றால் அறியாதவற்றை அறிந்துக்கொண்டால் அந்த நம்பிகைகளிலிருந்து விடுபட முடியம் என்பது சரிதானே. அப்படி எல்லாவற்றையும் நம்மால் அறிந்துக்கொள்ள முடிகின்றதா? நம் அறிவுக்கு எட்டிய வரை அறிந்துக்கொள்கின்றோம். அதற்கு அப்பால் என்ன இருக்கின்றது? என்ற கேள்வியும் அதற்கான தேடல்களும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றது. இந்த தேடல்கள் இருக்கும் வரை நாம் நம் உணர்வில் கொண்டிருக்கும் நம்பிக்கைகளும் தொடரும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. தேடல்களும் நின்றுவிட போவதில்லை அதனோடு இருக்கும் நம்பிக்கையும் தொடருமா? என்ற கேள்வியையும் நம்மோடு வைக்கின்றது.

சாதாரணமாக கைகுழந்தைகள் இரவு நேரங்களில் சின்ன சின்ன உடல் உபாதைகளினால் அழுகும். பல வேலைகளின் அந்த குழந்தை ஏன் அழுகின்றது என்பதை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. இதுபோன்ற சமயங்களில் பெரியவர்கள் குழந்தைக்கு கண்திஸ்டி பட்டுள்ளது என்று சொல்லி திஸ்டியை போக்க சுற்றிப்போடுதல் என்ற ஒன்றை செய்வார்கள். இதுபோன்ற சமயங்களில் பகுத்தறிவான தந்தைகள் தடுப்பதில்லை மாறாக எனக்கு நம்பிக்கையில்லை வேண்டும் என்றால் நீங்கள் உங்களின் நம்பிக்கைக்காக செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள். எப்படியாவது குழந்தை அழுவது நின்றால் போதும் என்ற ஆசைகளால் ஏற்படும் நம்பிக்கைதான் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இதற்கு சமமான மற்றொரு என் இடுகை இதையும் படியுங்கள் கானல்நீர் தேடும் தாகம்... மனிதன் வாழும்
சமூகம் பாசம் பந்தம் என்ற பிணைப்பில் உள்ளது. ஒரு பகுத்தறிவாதி சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தவும் அதனால் ஏற்படும் பாதகங்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றான். ஆனால் தன்னை சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அதற்கு உடன் படாதவனாகின்றான் என்பதை அந்த இடுகை சொல்லும்.

நம்பிக்கையும் மூடநம்பிக்கைகளும் மனிதனின் சமூக கட்டுப்பாடுகளுக்குள் அடங்கியவை. அப்படிப்பட்ட நம்பிக்கைகள் ஒரு சிலரை மட்டும் வஞ்சிக்கும் விதமாகவும், ஒரு சிலரை மட்டும் பாதிப்புக்கு ஆழ்படுத்துவதும் தான் மிக கொடுமையாக சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட மூடப்பழக்கங்களைதான் பெரியார் போன்ற சமூக சிற்பிகள் எதிர்த்து வந்தனர். சமுக பழக்கங்கள் சில நல்ல நோக்கில் சொல்லப்பட்ட பழக்கங்கள் நாளாடைவில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்காமலே விட்டு சென்றதான் பயனாக இன்று அது மூடப்பழக்கங்களாக உருவெடுக்கின்றது. அவைகளை அவ்வப்பொழுது உருவாகும் சமுக சிற்பிகளால் கழையப்படுகின்றது. மூடப்பழக்கங்களில் சில இரவில் வேப்பமரத்தில் பேய் இருக்கும் என்றும். இரவில் வீட்டை கூட்டி வெளியில் குப்பையை போட்டால் ஸ்ரீதேவி வெளியில் சென்றுவிடுவாள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் இவற்றில் உண்மைநிலை வேறு.


பயம் என்பது மனித உணர்வுகளில் ஒன்றுதான். இதுதான் மூடப்பழக்கங்களின் ஆணிவேராக இருக்கின்றது. சிறுவயதில் ஏற்படும் சின்ன சின்ன பயம்தான் வளர்ந்த பின் மனிதனை மூடப்பழக்கங்களை எதிர்க்கும் திரணியற்றவனாய் ஆக்கிவிடுகின்றது. இந்த பயம் இருக்கின்றவரை மனிதன் மனம் ஏதோ ஒன்றை நம்ப தயாராய்கின்றது. சிறுவயதில் பெற்றோர்கள், வளரும் சுற்றுசூழல், பின் அவனின் சமூகம் இந்த பயத்தை கற்றுக்கொடுக்கின்றது. இப்படி ஏற்படும் பயம் மூளையில் பதிய வைக்கப்படுகின்றது. அப்படி பதிந்துள்ள நகல்கள் எதோ ஒன்றுக்கு பொருந்தி பயத்தையும், அதனை சார்ந்த மூடநம்பிக்கைக்கு ஏற்றவனாய் ஆக்கிவிடுகின்றது. இப்படி ஏற்படும் நம்பிக்கைகளுக்கு அவனிடம் கொண்டுள்ள பகுத்தறிவும் பயனற்றவையாக இருக்கின்றது.

குழந்தைகளின் சூழல் அவர்களின் வளர்ப்பு முறைகளை கட்டுப்படுத்த பெற்றோர்கள் "அங்கே போகாதே பூச்சாண்டி வரும், இங்கே போகாதே யானை கண்ணன் வருவான்" என்று சொல்லிவிடுவதும். பயத்திற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றது. பெற்றோர்கள் இல்லாவிட்டால் இந்த சமுகமும் சொல்லித் தந்துவிடுகின்றது. இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் வரை நம்மோடு கலந்திருக்கும் மூடநம்பிக்கைகளை வேரெடுக்க முடியாது. அப்படியே செய்யும் சின்ன சின்ன மாற்றங்களும் தற்காலிகமாகவே இருக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம்
ஆ.ஞானசேகரன்.

46 comments:

ராமலக்ஷ்மி said...

//சில நல்ல நோக்கில் சொல்லப்பட்ட பழக்கங்கள் நாளாடைவில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்காமலே விட்டு சென்றதான் பயனாக இன்று அது மூடப்பழக்கங்களாக உருவெடுக்கின்றது. //

மிகச் சரி. சான்றோர் சொன்னதை கேள்வி கேட்காமல் பின் பற்ற வேண்டும் என்றும் சொல்லிக் கொள்வார்கள். நல்ல பதிவு ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

[[ராமலக்ஷ்மி said...

//சில நல்ல நோக்கில் சொல்லப்பட்ட பழக்கங்கள் நாளாடைவில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்காமலே விட்டு சென்றதான் பயனாக இன்று அது மூடப்பழக்கங்களாக உருவெடுக்கின்றது. //

மிகச் சரி. சான்றோர் சொன்னதை கேள்வி கேட்காமல் பின் பற்ற வேண்டும் என்றும் சொல்லிக் கொள்வார்கள். நல்ல பதிவு ஞானசேகரன்.]]

மிக்க நன்றிங்க

குறை ஒன்றும் இல்லை !!! said...

உங்கள் எண்ணங்கள் பல எல்லைகள் கடப்பது மகிழ்ச்சி !!!!

S.A. நவாஸுதீன் said...

//சில நல்ல நோக்கில் சொல்லப்பட்ட பழக்கங்கள் நாளாடைவில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்காமலே விட்டு சென்றதான் பயனாக இன்று அது மூடப்பழக்கங்களாக உருவெடுக்கின்றது.//

மிகச்சரி நண்பா!. இதில் இன்னொன்றும் உண்டு. ஒரு சாரார் தங்களின் பிழைப்புக்காக எளிய மக்களை ஏமாற்றி ஏற்படுத்திய சில பழக்கங்கள்/முறைகள் இன்றும் தொன்றுதொட்டு முன்னோர்கள் செய்ததால் நாமும் செய்வோம் என்று வழக்கில் உள்ளது

Anbu said...

நல்ல பதிவு அண்ணா

S.Gnanasekar said...

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..
மனிதனுக்கு நம்பிக்கை அவசியம்.
அந்த நம்பிக்கையை கண்மூடிதனம் சிலர் பேச்சை கேட்டு ஆய்ந்து ஆராயமல் நடப்பது மூடநம்பிக்கை.
இன்னும் ஒன்றை நாம் கவனிக்கனும் நமது முன்னேர்கள் ஒரு விசயத்தை (அறிவியல்) சொல்லும்போது எப்படி சொன்னால் நாம் அதை கடைப்பிடிப்போம் என்பதை தெரிந்து கொண்டு சொன்னார்கள் அதை நாம் தப்பாக புரிந்து கொண்டு மூடப்பழக்கங்களில் பின்பற்ற ஆரம்பிக்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட (வேப்பமரம்) எல்லாவற்றிளும் அறிவியல் இருக்கு.
சோ.ஞானசேகர்..

காமராஜ் said...

அருமை என் அன்புத்தோழா. நெடுநாள் பார்க்காமல்போன ஏக்கம் மேவுகிறது. அன்பும் வணக்கமும்.

கபிலன் said...

அருமையான பதிவு !

வளர்ந்த நாடுகளிலும் இப்படித் தாங்க.

பெரும்பாலான விமானங்களில் 13 ஆம் நம்பர் இருக்கையே இருக்காதுங்க...இதை எல்லாம் என்ன சொல்றது சொல்லுங்க..?

கலையரசன் said...

சிந்திச்சி என்ன பண்ண? எதாவது இம்ப்ளிமண்ட் பண்ணணும் பாசு!!

வலசு - வேலணை said...

மூடப்பழக்கவழக்கங்களைச் சொல்லி அது என்ன நோக்கத்திற்காக ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் இக்காலத்திற்கு அவை பயனற்றவை என்பதையும் அடுத்து வரும் தொடர்களில் விளங்கப்படுத்துங்கள் ஞானசேகரன்

கலகலப்ரியா said...

:((... எனக்கும் நிறைய பயங்கள் உண்டு... அவ்வ்வ்வ்... நல்ல பதிவுங்க..

வால்பையன் said...

மூட பழக்கங்களுக்கு பயம் ஒரு காரணமாக இருந்தாலும்,
அவன் செய்யுறான் அதனால் நானும் செய்யுறேன் என்ற காரணமேயில்லாத ஒரு காரணமும் உண்டு!

வால்பையன் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...

உங்கள் எண்ணங்கள் பல எல்லைகள் கடப்பது மகிழ்ச்சி !!!!//

ரொம்ப கடந்து எதிரி நாட்டில் மாட்டிக்கபோறாரு!

ஆ.ஞானசேகரன் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
உங்கள் எண்ணங்கள் பல எல்லைகள் கடப்பது மகிழ்ச்சி !!!!//

வாங்க நண்பா, மிக்க மகிழ்ச்சி... வெகுநாளாய் காணவில்லை வேலை பழு என்று நினைக்கின்றேன்... நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

[[S.A. நவாஸுதீன் said...
//சில நல்ல நோக்கில் சொல்லப்பட்ட பழக்கங்கள் நாளாடைவில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்காமலே விட்டு சென்றதான் பயனாக இன்று அது மூடப்பழக்கங்களாக உருவெடுக்கின்றது.//

மிகச்சரி நண்பா!. இதில் இன்னொன்றும் உண்டு. ஒரு சாரார் தங்களின் பிழைப்புக்காக எளிய மக்களை ஏமாற்றி ஏற்படுத்திய சில பழக்கங்கள்/முறைகள் இன்றும் தொன்றுதொட்டு முன்னோர்கள் செய்ததால் நாமும் செய்வோம் என்று வழக்கில் உள்ளது]]

உண்மைதான் நண்பா,... நாம் ஏமாற தயாராய் இருக்கின்றபொழுது என்னத்த சொல்ல போங்க... இதில் நம்முடைய ஆசைகளு இருக்கு.. அதை அடுத்த இடுகையில் பேசலாம் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

[[Anbu said...
நல்ல பதிவு அண்ணா]]நன்றி தம்பி...

அன்புடன் அருணா said...

/பயம்தான் மூடப்பழக்கங்களின் ஆணிவேராக இருக்கின்றது./
100% உண்மை!நல்ல பதிவு!

ஆ.ஞானசேகரன் said...

[[S.Gnanasekar said...
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..
மனிதனுக்கு நம்பிக்கை அவசியம்.
அந்த நம்பிக்கையை கண்மூடிதனம் சிலர் பேச்சை கேட்டு ஆய்ந்து ஆராயமல் நடப்பது மூடநம்பிக்கை.
இன்னும் ஒன்றை நாம் கவனிக்கனும் நமது முன்னேர்கள் ஒரு விசயத்தை (அறிவியல்) சொல்லும்போது எப்படி சொன்னால் நாம் அதை கடைப்பிடிப்போம் என்பதை தெரிந்து கொண்டு சொன்னார்கள் அதை நாம் தப்பாக புரிந்து கொண்டு மூடப்பழக்கங்களில் பின்பற்ற ஆரம்பிக்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட (வேப்பமரம்) எல்லாவற்றிளும் அறிவியல் இருக்கு.
சோ.ஞானசேகர்..]]
சரியா சொன்னீங்க ஐயா,... அப்பொழுது மக்களின் அறிவுக்கு ஏற்றவாறு சொல்லியுள்ளவைகளை. இன்றைய அறிவுக்கு நாம் ஏன் சிந்திக்கவில்லை என்றுதான் தெரியவில்லை... அதற்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு இருக்கா என்ற சிந்தனையில் தோன்றியதுதான் இந்த் இடுகை... மிக்க நன்றி ஐயா

ஆ.ஞானசேகரன் said...

[[காமராஜ் said...
அருமை என் அன்புத்தோழா. நெடுநாள் பார்க்காமல்போன ஏக்கம் மேவுகிறது. அன்பும் வணக்கமும்.]]

வணக்கம் தோழரே... வருக்கைக்கு மகிழ்ச்சி...

ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

[[கபிலன் said...
அருமையான பதிவு !

வளர்ந்த நாடுகளிலும் இப்படித் தாங்க.

பெரும்பாலான விமானங்களில் 13 ஆம் நம்பர் இருக்கையே இருக்காதுங்க...இதை எல்லாம் என்ன சொல்றது சொல்லுங்க..?]]

வணக்கம் நண்பரே... இது ஒரு மூடநம்பிக்கைதான் என்று தெரிந்தும் ஏன் அதை மனம் மீற மறுக்கின்றது என்றுதான் என் எண்ணங்கள். அது மூடநம்பிக்கை என்று அறிய மனிதன் பகுத்தறிவு சொல்லுகின்றது. ஆனால் மூளை ஏற்க மறுக்கின்றதே ஏன்???? மிக்க நன்றி நண்பா... மீண்டும் சந்திப்போம்..

ஆ.ஞானசேகரன் said...

[[கலையரசன் said...
சிந்திச்சி என்ன பண்ண? எதாவது இம்ப்ளிமண்ட் பண்ணணும் பாசு!!]]


நீங்கள் சொல்லுவதும் சரிதான்.. முதலில் சிந்தித்து செயல்படுவோம்..

ஆ.ஞானசேகரன் said...

வலசு - வேலணை said...
//மூடப்பழக்கவழக்கங்களைச் சொல்லி அது என்ன நோக்கத்திற்காக ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் இக்காலத்திற்கு அவை பயனற்றவை என்பதையும் அடுத்து வரும் தொடர்களில் விளங்கப்படுத்துங்கள் ஞானசேகரன்//

வாங்க நண்பா,.. கண்டிப்பாக பார்க்கலாம்..

ஆ.ஞானசேகரன் said...

[[கலகலப்ரியா said...
:((... எனக்கும் நிறைய பயங்கள் உண்டு... அவ்வ்வ்வ்... நல்ல பதிவுங்க..]]வாங்க ப்ரியா,... மிக்க நன்றிங்க‌
பயமும் மூடப்பழக்கங்களுக்கு காரணமாதான் இருக்கு... பயம் போக்க பயற்சி செய்யுங்க ...

ஆ.ஞானசேகரன் said...

[[வால்பையன் said...
மூட பழக்கங்களுக்கு பயம் ஒரு காரணமாக இருந்தாலும்,
அவன் செய்யுறான் அதனால் நானும் செய்யுறேன் என்ற காரணமேயில்லாத ஒரு காரணமும் உண்டு]]


வாங்க வால்பையன்.. ம்ம்ம் ஆமாம்ங்க அதில் ஆசைகளும் ஒரு காரணம்தானே>..

ஆ.ஞானசேகரன் said...

[[வால்பையன் said...
//குறை ஒன்றும் இல்லை !!! said...

உங்கள் எண்ணங்கள் பல எல்லைகள் கடப்பது மகிழ்ச்சி !!!!//

ரொம்ப கடந்து எதிரி நாட்டில் மாட்டிக்கபோறாரு!]]

ஹா ஹா ஹா...... உங்களின் வருகை ஒரு கலக்கல்தான்

ஆ.ஞானசேகரன் said...

[[அன்புடன் அருணா said...
/பயம்தான் மூடப்பழக்கங்களின் ஆணிவேராக இருக்கின்றது./
100% உண்மை!நல்ல பதிவு!]]வணக்கம் அருணா... மிக்க நன்றிங்க... பயம் மட்டும் இல்லை அதனை தொடர்ந்து ஆசைகளும் என்றே தோன்றுகின்றது.. அதை பற்றி அடுத்த இடுகையில் பார்க்கலாம்..

வினோத்கெளதம் said...

மூட நம்பிக்கைகள் இல்லாத உலகம் வேண்டும்..

ரோஸ்விக் said...

அருமையான பதிவு. நமக்கு லாபம் என்பதில் தான் நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகளாக நாமும் மேற்கொண்டு, பிறர்மேலும் திணிக்கிறோம். அதில் ஒரு சில மிகவும் நம்ம்பமுடியாத அளவுக்கு உள்ளன.

ஆ.ஞானசேகரன் said...

[[வினோத்கெளதம் said...
மூட நம்பிக்கைகள் இல்லாத உலகம் வேண்டும்..]]

அது சாத்தியம் உண்டா என்பதுதான் சிக்கல்... மிக்க நண்பா

ஆ.ஞானசேகரன் said...

[[ரோஸ்விக் said...
அருமையான பதிவு. நமக்கு லாபம் என்பதில் தான் நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகளாக நாமும் மேற்கொண்டு, பிறர்மேலும் திணிக்கிறோம். அதில் ஒரு சில மிகவும் நம்ம்பமுடியாத அளவுக்கு உள்ளன.]]

வாங்க நண்பரெ... உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க‌

சந்ரு said...

மூடப்பழக்க, வழக்கங்கள் எம் மக்களிடையே நிறையவே இருக்கின்றன அவை இல்லாதொழிக்கப்பட வேண்டும். தொடருங்கள் நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

[[சந்ரு said...
மூடப்பழக்க, வழக்கங்கள் எம் மக்களிடையே நிறையவே இருக்கின்றன அவை இல்லாதொழிக்கப்பட வேண்டும். தொடருங்கள் நண்பா...]]

வாங்க சந்ரு,...
உங்களின் நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துகள்

ஹேமா said...

ஞானம்,தேவையான பதிவு.
மூடப்பழக்கம் என்று சொல்கிறீர்கள்.
உ+ம் =இரவில் வீடு கூட்டி அள்ளி வெளியே போடக்கூடாது என்றால்,
சிலசமயங்களில் எமக்குத் தேவையான சிறு பொருட்களும் குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும்.அன்றைய நாட்களில் விளக்கு வெளிச்சத்தில் கண்டுகொள்ள முடியாததால் அப்படிச் சொன்னார்களாம்.இது இப்படித்தானா ?இதைப்போல சில மூடப்பழக்கங்களுக்கு விளக்கம் தெரிந்தால் நல்லாயிருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம்,தேவையான பதிவு.
மூடப்பழக்கம் என்று சொல்கிறீர்கள்.
உ+ம் =இரவில் வீடு கூட்டி அள்ளி வெளியே போடக்கூடாது என்றால்,
சிலசமயங்களில் எமக்குத் தேவையான சிறு பொருட்களும் குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும்.அன்றைய நாட்களில் விளக்கு வெளிச்சத்தில் கண்டுகொள்ள முடியாததால் அப்படிச் சொன்னார்களாம்.இது இப்படித்தானா ?இதைப்போல சில மூடப்பழக்கங்களுக்கு விளக்கம் தெரிந்தால் நல்லாயிருக்கும்.//


வாங்க ஹேமா.. நீங்கள் சொல்லியதும் சரிதான்.. இது போல பல நல்ல செயல்கள் காரணம் தேடாமலே மூடப்பழக்கம் போல செய்யப்பட்டும் சொல்லப்பட்டும் வந்துள்ளது... முடிந்தால் வரிசைப்படுத்தி பார்க்கலாம்...

உங்களின் வருகை அழகு சேர்க்கின்றது ஹேமா! நன்றிமா....

பின்னோக்கி said...

மூட நம்பிக்கை மூளை வேலை செய்யாமல் மனது வேலை செய்யும் போது வருவது என நினைக்கிறேன்.
நானே பல தடவை என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத போது திருஷ்டி சுத்தி போட சொல்லியிருக்கிறேன், அவனுக்கு எப்படியாவது சரியானால் சரி என்ற எண்ணம் தான் காரணம். மற்றவர்களை படுத்தாத சில மூட நம்பிக்கைகள் ஒ.கே என்று தான் தோன்றுகிறது.

Suresh Kumar said...

அங்கே போகாதே பூச்சாண்டி வரும், இங்கே போகாதே யானை கண்ணன் வருவான்" என்று சொல்லிவிடுவதும். பயத்திற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றது. பெற்றோர்கள் இல்லாவிட்டால் இந்த சமுகமும் சொல்லித் தந்துவிடுகின்றது. இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் வரை நம்மோடு கலந்திருக்கும் மூடநம்பிக்கைகளை வேரெடுக்க முடியாது /////////////////////////


மூட நம்பிக்கைகள் மனிதனின் வாழ்வோடு ஒன்றி போன குருட்டு நம்பிக்கைகளாக ஆகி போனது . தன்னம்பிக்கை குறையும் பொது மூட நம்பிக்கை கூடுகிறது .

ஆ.ஞானசேகரன் said...

// பின்னோக்கி said...

மூட நம்பிக்கை மூளை வேலை செய்யாமல் மனது வேலை செய்யும் போது வருவது என நினைக்கிறேன்.
நானே பல தடவை என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத போது திருஷ்டி சுத்தி போட சொல்லியிருக்கிறேன், அவனுக்கு எப்படியாவது சரியானால் சரி என்ற எண்ணம் தான் காரணம். மற்றவர்களை படுத்தாத சில மூட நம்பிக்கைகள் ஒ.கே என்று தான் தோன்றுகிறது.//

வணக்கம் நண்பா,... இப்படிபட்ட பல மூடநம்பிக்கைகள் நமக்கே தெரியாமல் மறைந்து (மடிந்து) கிடக்கின்றது... அதையெல்லாம் கழை எடுப்பது முடியுமா? ம்ம்ம்ம்ம்ம்ம் தெரியவில்லை.....

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

அங்கே போகாதே பூச்சாண்டி வரும், இங்கே போகாதே யானை கண்ணன் வருவான்" என்று சொல்லிவிடுவதும். பயத்திற்கு காரணமாய் அமைந்துவிடுகின்றது. பெற்றோர்கள் இல்லாவிட்டால் இந்த சமுகமும் சொல்லித் தந்துவிடுகின்றது. இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் வரை நம்மோடு கலந்திருக்கும் மூடநம்பிக்கைகளை வேரெடுக்க முடியாது /////////////////////////


மூட நம்பிக்கைகள் மனிதனின் வாழ்வோடு ஒன்றி போன குருட்டு நம்பிக்கைகளாக ஆகி போனது . தன்னம்பிக்கை குறையும் பொது மூட நம்பிக்கை கூடுகிறது .//

வணக்கம் சுரேஷ் குமார்,... நிங்கள் சொல்வதை போல் தன்னம்பிக்கை குறையும் பொழுது, அதை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசைகளாலும் மூடநம்பிக்கை நம்பபடுகின்றது. நன்றி நண்பா

" உழவன் " " Uzhavan " said...

சமூகத்திற்குத் தேவையான பல பதிவுகளை தொடர்ந்து வெளியிடுவது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தோழா

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...
சமூகத்திற்குத் தேவையான பல பதிவுகளை தொடர்ந்து வெளியிடுவது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தோழா//


வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க‌

தமிழரசி said...

தொடர்ந்து பயனுள்ள பதிவுகளாகவே அளித்து வருகிறீர்கள் சேகர் வாழ்த்துக்கள்..

tamiluthayam said...

வாழ்க்கையும், வாழ்ந்து பார்த்தலும் மிக மிக சுலபமானது. ஆனால் பல வித அவ நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகளால் நம்மை நாம் வதைத்து கொள்கிறோம். நாம் என்னத்தான் சொன்னாலும் மனிதர்களின் சில அடிப்படை குணத்தை மாற்ற முடியாது. அது "நீ என்ன சொல்றது. நா என்ன கேட்கறது." மற்றும் "நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா". மற்றும் சில பரிகாசங்கள். யார் சொன்னாலும் ஏற்று கொள்ளமாட்டேன் என்கிற பிடிவாத மனநிலை. அவர்களுக்கு நாம் நல்லது தான் சொல்கிறோம் என்பதை உணராத மனநிலை. அவர்களை அப்படியே விட்டு விடுவது நல்லது.

ஆ.ஞானசேகரன் said...

//தமிழரசி said...
தொடர்ந்து பயனுள்ள பதிவுகளாகவே அளித்து வருகிறீர்கள் சேகர் வாழ்த்துக்கள்..//

வணக்கம் தமிழ்... மிக்க நன்றிங்க.. உங்களின் வருகையும் வாழ்த்துகளும் எனக்கு ஊக்கமே..

ஆ.ஞானசேகரன் said...

// tamiluthayam said...
வாழ்க்கையும், வாழ்ந்து பார்த்தலும் மிக மிக சுலபமானது. ஆனால் பல வித அவ நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகளால் நம்மை நாம் வதைத்து கொள்கிறோம். நாம் என்னத்தான் சொன்னாலும் மனிதர்களின் சில அடிப்படை குணத்தை மாற்ற முடியாது. அது "நீ என்ன சொல்றது. நா என்ன கேட்கறது." மற்றும் "நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா". மற்றும் சில பரிகாசங்கள். யார் சொன்னாலும் ஏற்று கொள்ளமாட்டேன் என்கிற பிடிவாத மனநிலை. அவர்களுக்கு நாம் நல்லது தான் சொல்கிறோம் என்பதை உணராத மனநிலை. அவர்களை அப்படியே விட்டு விடுவது நல்லது.//

வணக்கம் நண்பரே!... அவர்களோடு போய்விடும் என்ற நிலையில் சொல்வதிற்கொன்றுமில்லை மற்றவர்களை சாரும் பொழுது பிரச்சனையாகின்றது... உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க‌

கடையம் ஆனந்த் said...

நல்லபதிவு, வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// கடையம் ஆனந்த் said...

நல்லபதிவு, வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா