
வலை நண்பர்களுக்கு வணக்கம்..
வேலையிடத்து பணியழுத்தம் காரணமாக, பல நாட்கள் இணையம் பக்கம் வரமுடியவில்லை வந்தாலும் பின்னூட்டமிட இயலாத நிலைக்கு வருந்துக்கின்றேன். அதுபோல வரும் 24/12/2009 முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தியா செல்ல இருப்பதால் (திருச்சி அண்ணாநகர்) உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் நேரம் கொடுக்க முடியாமைக்கு வருத்தமே ( திருச்சி பக்கம் வந்தால் குரல் கொடுங்கள் சந்திக்கலாம்). பகிர்ந்துக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தாலும் நினைவுகள் அனைத்தும் மனதினுள் வந்துசெல்கின்றது.
ஆங்கில வருடப் புத்தாண்டையும் , தமிழ் வருடப் புத்தாண்டையும்.... எதிர் நோக்கியுள்ளோம்
புதுவருட வாழ்த்துப்பா
புது மகளே! வருக வருக....
காட்டாற்று வெள்ளம் போல
கரைப்புரண்டு வருக!....
வரும் முன் நிற்க,
உன் வருகையின் நிமித்தம்.....
என் நண்பனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் உறவினனுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
என் மனைவி மக்களுக்கு
வாழ்த்துகள் சொல்லப்போவதில்லை...
மாறாக,....
உனக்கு மட்டுமே என் வாழ்த்துகள்!
வாழ்த்துகளோடு உன்முன்...
கனிவான எச்சரிக்கை!
பொங்கும் புதுபொழிவோடு
வருவாய் என்று தெரியும்,...
நீ! சாக்கரதை..
வெள்ளம் என்று புயல் என்றும்
உன்னை சரித்திரத்தில்
பதித்து விடலாம்....
சுனாமி என்று பூகம்பம் என்றும்
உன்னை பக்கங்களில்
நிறப்பி விடலாம்....
வந்தார்கள் சுட்டார்கள் என்றும்
உன்னைப் பற்றி
கலங்கம் படுத்தலாம்...
பசி வந்தது பஞ்சம் வந்தது என்றும்
உன் நினைவலைகளை
நசுக்கப்பட்டு விடலாம்....
நோய் வந்தது நொடி வந்தது என்றும்
உன் பெயர்மேல்
அச்சடிக்கப் படலாம்...
வாழ்த்துகள் இருந்துவிட்டு போகட்டும்
உனக்கு என் எச்சரிக்கை!....
வரலாற்று சுவடுகள் உன் நினைவுகளை
சொல்லவேண்டும்...
உன்னோடு உன் நினைவுகளும் இனிதாக
இருக்கவேண்டும்...
புதுமகளே! உனக்குதான்
என் வாழ்த்துகள்...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்