பல் போனால் சொல் போச்சுனு சொல்லுவாங்க, ஆமாம் "சொல்லுனா" என்னாங்க? வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாமா!.... தமிழ் இலக்கணத்தில் சொல் என்பதை "ஒரு பொருளை கூறும் மொழிக்கூறு" என்று சொல்லுவதுண்டு. அதேபோல் சொல் என்பது ஒரு ஒலி வடிவம். இந்த ஒலி வடிவம் வாய்வழியில் உருவாகி காதுகளால் உணரப்படுகின்றது. அப்படியானால் மொழி என்பது என்ன? ஒலியையும் சைகைகளையும் மூலகூறுகளாக கொண்ட இலக்கணங்கள் அடங்கிய சொற்களை மொழி என்று கூறலாம்.
ஒலி என்பதை விஞ்ஞானம் எப்படி அழைக்கின்றது? ஒலி என்பது காதுகளால் கேட்டு உணரகூடிய அதிர்வுகளை குறிக்கும். அதாவது ஒலி என்பதை அழுத்தம் மாற்றம், துகள் நகர்வு அல்லது துகள்களின் திசை வேகம் என்று கூறலாம்.
ஒலி எவ்வாறு கடத்தப்படுகின்றது அல்லது பரவுகின்றது? ஒலி அலைகளாக கடக்கின்றது. அதாவது எல்லாத்திசைகளிலும் சரியான விகிதத்தில் அலைகளாக பரவுகின்றது. அந்த அலையில் வேகம் மற்றும் அதிர்வெண்ணை பொருத்து தூரம் கடக்கின்றது. ஒலி பரவ ஊடகம் தேவை, காற்று மற்றும் வாயுக்களில் நெட்டலைகளாக ஒலி பரவுகின்றது. சில உலோகம் மற்றும் திடப்பொருள்களிலும் பரவும் ஆனால் பொருளின் தன்மைகேற்ப அதன் வேகம் குறையும் (உதாரணமாக கண்ணாடியில் ஒலியின் வேகம் குறைவு). வெற்றிடத்தில் ஒலி அலைகள் பரவாது. ஆனால் மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஈரக்காற்றில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்.
ஒலி எவ்வாறு உருவாகின்றது? பொருள் அதிவுருவதால் ஒலி உண்டாகின்றது. முறுக்கப்பட்ட கம்பியில் உண்டாக்கப்படும் அதிர்வுகளால் வீணை மற்றும் வயலினில் ஒலி உருவாகின்றது. காற்று மூலகூறுகளில் அதிர்வால் புல்லாங்குழலில் ஒலி உருவாகின்றது. முறுக்கப்பட்ட கம்பி அதிர்வுகளை கைகளால் கட்டுப்படுத்தி இசையாக வெளியாகின்றது. காற்றின் அதிர்வை பூல்லாங்குழலின் துளைகளை கட்டுப்படுத்தப்பட்டு நாதம் உருவாக்கப்படுகின்றது.


குரல்வளையால் உருவாக்கிய ஒலி மற்றும் சொல்லை நாம் எவ்வாறு உணருகின்றோம்? அதாவது எப்படி கேட்கின்றோம்? காதுகளால் உணரப்படுகின்றது. பாலுட்டிகளுக்கு பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு காதுகள் உள்ளது. காதினுல் இருக்கும் திரவ குடத்தில் மிதக்கும் சுருள் போன்ற அமைப்புதான் குரல்வளையில் உருவாக்கப்பட்ட ஒலி அதிர்வுகளை உணர்ந்து அதன் ஒத்த அதிர்வுகளை மூளைக்கு அனுப்பி அதன் அதிர்வுகளை சொல்லாக மொழியாக நமக்கு மூளை உணர்த்துகின்றது.
இப்படிப்பட்ட ஒலி அதிர்வுகள்தான் நம்முடைய தொடர்பிற்கு மிகவும் பயனாக இருக்கின்றது. ஒலியின் அதிர்வுக்கு தகுந்த எழுத்துகளை உருவாக்கி எழுத்துகள் மூலமாகவும் செய்திகளை தொடர்புக்கொள்கின்றோம். மொழி என்பது தொடர்பிற்கு மட்டும் இல்லாது கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் ஊடகமாகவும் இருக்கு என்பதும் உண்மை.
மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........
இன்னும் செய்திகளுடன்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்