மனிதனைத்தேடி.........
மனிதன் கவுளை சார்ந்து வாழப் பழகிக்கொண்டானா? இல்லை கடவுள் மனிதனை சார்ந்துள்ளதா? இதன் பதில்கள் இன்னும் தெளிவடையாமலே இருக்கின்றது. பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற சமய நூல்களும் அறநூல்களும் மனிதனை நெறிப்படுத்த தொகுக்கப்பட்டவைகள்தான்.
ஒருவனுக்கு நல்ல வெளிநாட்டு நிருவணத்தில் வேலைக்கிடைக்கின்றது. அதன் மகிழ்ச்சியை வணங்கிய இறைவனிடம் பகிர்ந்துக்கொள்கின்றான். "சர்வ வல்லமைப்படைத்த இறைவா எனக்கு கணனி பற்றிய அறிவும் எனக்கில்லை, வேலையை பற்றிய அனுபவமும் எனக்கில்லை இருந்தாலும் இந்த வேலை எனக்கு கிடைக்கும் என்று உம்மையையே நம்பியிருந்தேன். எனது நம்பிக்கையும் உன் ஆசிர்வாதமும் இருந்ததால் அந்த வேலை எனக்கே கிடைத்தது" என்று சொல்லி நன்றியை கடவுளிடம் ஆணந்த கண்ணீருடன் சொல்லியுள்ளான். ஆம் கடவுளின் கருணையிருந்தால் எல்லாம் நடக்கும்.......
மனிதன்: எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவனுக்கு தன்னை விசுவாசிக்கின்றான் என்ற ஒரு காரணத்தால் அந்த வேலையை அவனுக்கே கொடுக்கும் இறைவனை என்ன சொல்ல வேண்டும்? எல்லா தகுதியும் இருந்தும் தன் மீது இருக்கும் நம்பிக்கையை மட்டும் நம்பி வந்த ஒருவனுக்கு அந்த வேலை பறிக்கப்படுவதை என்னவென்று சொல்வது?... உங்களின் வாக்கின்படி இப்படிப்பட்ட இறைவன் ஞாயமற்றவரா இருக்கின்றாரா?.
தன் மகன் நோயினால் அவதிப்படுகின்றான், மருத்துவரிடம் அழைத்துச்செல்ல அவனிடம் காசு இல்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கேட்டுப்பார்க்கின்றான் காசு கிடைக்கவில்லை. தன் மகனின் நிலையை பார்த்து கண்ணீருடன் "இறைவா என் மகன் நோயினால் அவதிப்படுகின்றான் என்னிடம் காசு இல்லை எப்படியாவது மருத்துவரிடம் அழைத்துச்செல்ல காசு கொடுக்கவும்" என்று வேண்டுகின்றான். கடைசியில் மகன் இறந்துவிடுகின்றான்.
சார்வ வல்லமைப் படைத்த இறைவனிடம் "என் மகனை குணப்படுத்து இறைவா" என்று விசுவாசத்துடன் அவன் வேண்டியிருந்தால் அவனின் விசுவாசம் குணப்படுத்திருக்கும். ஆனால் அவனோ இறைவா எனக்கு காசுகொடு என்று வேண்டி தன் மகனையே இழந்துவிட்டான்.... உண்மையான விசுவாசிகளை கடவுள் கைவிடமாட்டார். அவனின் விசுவாசம் அவன் மகனை காப்பாற்றவில்லை.
மனிதன்: சர்வ வல்லமைப் படைத்த இறைவன் ஏன் அவன் மகனுக்கு நோயைக் கொடுக்க வேண்டும்?
பகவத் கீதையை படித்தறிந்த ஒருவன் தான் படித்தவற்றை அரசனிடம் விளக்கி சொன்னால் அரசன் காசுக்கொடுப்பான் என்று அரசனிடம் செல்கின்றான். அரசனிடம் சென்று " மன்னா நான் பகவத் கீதையை நன்றாக படித்துணர்ந்தவன் நான் உங்களுக்கு அவற்றை பற்றி விளக்கி சொல்கின்றேன்" என்றான். அரசன் அவனை பார்த்து " உன்னை பார்த்தால் நன்றாக படித்தவனாக தெரியவில்லை மீண்டும் நன்றாக படித்துவிட்டு வா! பின்னர் உன்னிடம் கேட்கின்றேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டார். அவனும் வேறு வழியில்லாமல் மீண்டும் கீதையை படிக்கின்றான்... பின்னர் ஒரு நாள் அரசனிடம் சென்று கேட்டான் அன்றும் அரசன் அதேதான் சொல்லி அனுப்பிவிட்டார். அவனோ சலிக்காமல் மீண்டும் பகவத் கீதையை படிக்கின்றான். இப்படியாக மூன்று நான்குமுறை படித்த பின் கீதையை உணருகின்றான். இப்பொழுது அவனுக்கு கீதையைப்பற்றி உணர்வு நன்றாக இருக்கின்றது ஆனால் அவன் அரசனிடம் செல்லவில்லை... நீண்ட நாள்களுக்கு பின் அரசனுக்கு நினைவு வருகின்றது.. தன்னிடம் மூன்று நான்கு முறை வந்து கீதைப்பற்றி விளக்க வந்தவர் ஏன் காணவில்லை என்று தேடி அவன் இருப்பிடம் செல்கின்றான். அரசன் அவனை வணங்கி " நீங்கள் எனக்கு கீதையைப்பற்றி விளக்கம் சொல்லிக்கொடுங்கள்" என்று கேட்கின்றார்..
பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவற்றில் சொல்லப்பற்றிருக்கும் நீதிகளை ஒருவன் படித்துணர்ந்தால் பொருளை பற்றிய ஆசை, புகழைப் பற்றிய ஆசை, பதவியை பற்றி ஆசையில்லாதவனாக இருப்பான். அப்படிப்பட்ட நிலைதான் பற்று அற்ற நிலை. அந்த நிலையை அவன் உணர்ந்ததால்தான் கடைசியில் அவன் அரசனின் காசுக்காக மீண்டும் செல்லவில்லை. அந்த நிலையை அறிந்ததால் அரசனும் அவனிடம் வந்து கீதையைப்பற்றி விளக்கம் கேட்டார்.
மனிதன்: அந்த பற்று அற்ற நிலையில் உள்ள மனிதன்தான் இறைவன்... கடவுளை தேடி நீ எங்கேயும் செல்ல தேவையில்லை உன்னில் இருக்கும் நல்ல குணங்களை உணர்ந்தாளே நீயே கடவுள்தான். இதைதான் மத நூல்களும், அறநூல்களும் சொல்கின்றது. அதை உணராத மனிதன்தான் பொருளுக்காக, புகழுக்காக, பதவிக்காக தேடித்தேடி எங்கேயோ அழைகின்றான். உனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்தால் நீயே அந்த நாடகத்தின் நாயகனாக இருப்பாய். நீ தேடிப்போகும் இறைவன் உனக்கு கொடுத்த பாத்திரத்தை உணர்ந்தாளே நீயே மனிதனாவாய். மகனாக மகளாக, தாயாக தந்தையாக, தாத்தா பாட்டியாக.... இப்படி கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து எவன் நடக்கின்றானோ...... அவனே இறைவன்!...... அவனே மனிதன்!....
அன்புடன்
ஆ.ஞானசேகரன்...
Friday, February 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
வித்தியாசமான பார்வை. கடவுள் இருக்காரா என்ற கேள்விக்கு நல்ல விளக்கமும் கூட
அருமையான விளக்கம்.
// jothi said...
வித்தியாசமான பார்வை. கடவுள் இருக்காரா என்ற கேள்விக்கு நல்ல விளக்கமும் கூட//
மிக்க நன்றிங்க
// ராமலக்ஷ்மி said...
அருமையான விளக்கம்.//
நன்றியும் மகிழ்ச்சியும்....
ஞானம்...முந்தைய பதிவில் சொன்னதுபோலவே அன்பும் அமைதியும் நிறைவாய் இருக்கும் இடத்தில் இறைவனைக் காணலாம்.அவரிடமிருந்து எல்லாமே பெற்றுக்கொள்ளலாம்.
// ஹேமா said...
ஞானம்...முந்தைய பதிவில் சொன்னதுபோலவே அன்பும் அமைதியும் நிறைவாய் இருக்கும் இடத்தில் இறைவனைக் காணலாம்.அவரிடமிருந்து எல்லாமே பெற்றுக்கொள்ளலாம்.//
உங்களின் கருத்துரைக்கும் நம்பிக்கைக்கும் வாழ்த்துகள் ஹேமா...
மிக்க நன்றிமா
\\அந்த பற்று அற்ற நிலையில் உள்ள மனிதன்தான் இறைவன்... கடவுளை தேடி நீ எங்கேயும் செல்ல தேவையில்லை உன்னில் இருக்கும் நல்ல குணங்களை உணர்ந்தாலே நீயே கடவுள்தான். \\
இரண்டே வரிகளில் உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள்
வாழ்த்துகள்
[[ நிகழ்காலத்தில்... said...
\\அந்த பற்று அற்ற நிலையில் உள்ள மனிதன்தான் இறைவன்... கடவுளை தேடி நீ எங்கேயும் செல்ல தேவையில்லை உன்னில் இருக்கும் நல்ல குணங்களை உணர்ந்தாலே நீயே கடவுள்தான். \\
இரண்டே வரிகளில் உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள்
வாழ்த்துகள்]]
மிக்க நன்றி நண்பா
நல்ல தேடல்.புது விளக்கம்!
// அன்புடன் அருணா said...
நல்ல தேடல்.புது விளக்கம்!//
நன்றிங்க அருணா,... உங்களின் வருகை மகிழ்ச்சி.
தசாவதாரத்தில் ஆரம்பித்து அன்பே சிவத்தில் முடித்துள்ளீர்கள். இடையே, புத்தரையும் இடுக்கியுள்ளீர்கள்.
மறைமுகமாக, புனித நூல்கள் எனப்படும் சில அக்கால பொது அறிவையும் அதனுடன் பெரும்பான்மையான உதாவாதவற்றையும், கேடுகளையும் கொண்டவற்றிக்கு அபிசேகமும் செய்துள்ளீர்கள். இவை திருகுறளுக்கு கூட இணையற்றவை அல்ல. ஏனோ தெரியவில்லை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அறிவை இன்றும் குப்பை கூட்டி கொண்டுள்ளனர். வாழ்வியலையும், மனவியலையும் அக்குவேறாக அலசும், மானிடத்தை அடுத்த உயர்நிலைக்கு கொண்டு செல்லும் பல நல்ல புத்தங்கள் இன்று உண்டு; கண்டு கொள்க!
///உனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்தால்...///
கடவுளை தேடுவதும்..., பொருளுக்காக, புகழுக்காக, பதவிக்காக தேடித்தேடி அழைவதும் தான் அவனுடைய பாத்திரம் என்றால் என்ன செய்ய போகின்றீர்கள்? உன் பாத்திரம் என்னவென்று உங்களுக்கு எப்படி தெரியும்? அல்லது, உன் பாத்திரம் இல்லாது வேறொன்றை தான் உங்களால் செய்ய முடியுமா?
///உன்னில் இருக்கும் நல்ல குணங்களை உணர்ந்தாளே நீயே கடவுள்தான்.///
உணர்ந்தாளே... - எங்கிருந்து வருகின்றது அந்த உணர்வு? நீங்கள் நல்லதாக நினைக்கும் குணங்கள் அவனிடம் இல்லையென்றால் என்ன செய்ய போகின்றீர்கள்? ஒருவன் திருடனாக, கொலைகாரனாக,... ஆக யார் காரணம்? அவனுடைய ஜீன்கள் மற்றும் சூழ்நிலை. இதை தாண்டியவன், இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவன்.
///பற்று அற்ற நிலையில் உள்ள மனிதன்தான் இறைவன்///
///மகனாக மகளாக, தாயாக தந்தையாக, தாத்தா பாட்டியாக....இப்படி கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து எவன் நடக்கின்றானோ...... அவனே இறைவன்!///
இந்த இரண்டிற்கும் உள்ள முரண்பாடு தெரிகின்றதா? உங்கள் பதிவில், பழைய சித்தாத்தங்களில் உள்ள அதே குழப்பங்கள் தான் தெரிகின்றது. தெளிவாக நிதானமாக யோசித்து பாருங்கள்.
[[RajK said...
தசாவதாரத்தில் ஆரம்பித்து அன்பே சிவத்தில் முடித்துள்ளீர்கள். இடையே, புத்தரையும் இடுக்கியுள்ளீர்கள்.
மறைமுகமாக, புனித நூல்கள் எனப்படும் சில அக்கால பொது அறிவையும் அதனுடன் பெரும்பான்மையான உதாவாதவற்றையும், கேடுகளையும் கொண்டவற்றிக்கு அபிசேகமும் செய்துள்ளீர்கள். இவை திருகுறளுக்கு கூட இணையற்றவை அல்ல. ஏனோ தெரியவில்லை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அறிவை இன்றும் குப்பை கூட்டி கொண்டுள்ளனர். வாழ்வியலையும், மனவியலையும் அக்குவேறாக அலசும், மானிடத்தை அடுத்த உயர்நிலைக்கு கொண்டு செல்லும் பல நல்ல புத்தங்கள் இன்று உண்டு; கண்டு கொள்க!
///உனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்தால்...///
கடவுளை தேடுவதும்..., பொருளுக்காக, புகழுக்காக, பதவிக்காக தேடித்தேடி அழைவதும் தான் அவனுடைய பாத்திரம் என்றால் என்ன செய்ய போகின்றீர்கள்? உன் பாத்திரம் என்னவென்று உங்களுக்கு எப்படி தெரியும்? அல்லது, உன் பாத்திரம் இல்லாது வேறொன்றை தான் உங்களால் செய்ய முடியுமா?
///உன்னில் இருக்கும் நல்ல குணங்களை உணர்ந்தாளே நீயே கடவுள்தான்.///
உணர்ந்தாளே... - எங்கிருந்து வருகின்றது அந்த உணர்வு? நீங்கள் நல்லதாக நினைக்கும் குணங்கள் அவனிடம் இல்லையென்றால் என்ன செய்ய போகின்றீர்கள்? ஒருவன் திருடனாக, கொலைகாரனாக,... ஆக யார் காரணம்? அவனுடைய ஜீன்கள் மற்றும் சூழ்நிலை. இதை தாண்டியவன், இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவன்.
///பற்று அற்ற நிலையில் உள்ள மனிதன்தான் இறைவன்///
///மகனாக மகளாக, தாயாக தந்தையாக, தாத்தா பாட்டியாக....இப்படி கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து எவன் நடக்கின்றானோ...... அவனே இறைவன்!///
இந்த இரண்டிற்கும் உள்ள முரண்பாடு தெரிகின்றதா? உங்கள் பதிவில், பழைய சித்தாத்தங்களில் உள்ள அதே குழப்பங்கள் தான் தெரிகின்றது. தெளிவாக நிதானமாக யோசித்து பாருங்கள்.]]
உங்களின் அனேக கருத்துகளை ஏற்கின்றேன்.... என்நிலையும் அதேதான். இருப்பினும் என் கருத்தை சொல்வதைவிட அவர்கள் நிலையிலிருந்தே என் எண்ணங்களை பதிக்க வேண்டிய நிலை, அதைதான் இந்த இடுகையில் பதித்துள்ளேன்... முறன்பாடுள் உள்ளது,... புரியவைக்க வேண்டியதும் என்நிலை, அதைதான் செய்துள்ளேன்.... மிக்க நன்றி ராஜ்
மிகச்சிறப்பாக இருந்தது சேகர்..கைத்தட்டி பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.மெய்யாலுமே யோசிக்க வைக்கிறது...
// தமிழரசி said...
மிகச்சிறப்பாக இருந்தது சேகர்..கைத்தட்டி பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.மெய்யாலுமே யோசிக்க வைக்கிறது...///
வாங்க தமிழரசி..
நன்றியும் வாழ்த்துகளும்..
கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை எப்படி எல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது..நல்ல அலசல் தலைவரே..
// கார்த்திகைப் பாண்டியன் said...
கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை எப்படி எல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது..நல்ல அலசல் தலைவரே..
//
வணக்கம் தலைவரே,..
கடவுள் நம்பிக்கை என்பதைவிட,... கடவுளை சொல்லி ஏமாற்றுவதும், பிரிவினை ஏற்படுத்துவதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை..
நன்றி நண்பா
சிந்தனை சிறப்பு .....
”கடவுள்..... அவரவர் பார்வைக்கே கருத்து சொல்ல தோற்றவில்லை!”
பகிர்வுக்கு நன்றி.
patru atra nilai,nice gnanaseharan.
நல்ல குணங்களே கடவுள் என்று கூறியமைக்கு நன்றி ஞானசேகரன்
enna acchcu?pls call me.
Post a Comment