_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, February 2, 2010

கடவுள் வாழ்கின்றார் (றா?)

கடவுள் வாழ்கின்றார் (றா?)


ஆதி மனிதன் கொண்டுவந்த எத்தனையோ பழக்கங்கள் நம்மை விட்டு விழகினாலும், கடவுளும் கடவுளைப்பற்றிய நம்பிக்கையும் நின்றுவிடவில்லை. உண்மையில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? ம்ம்ம்ம்... இருக்கின்றார் மக்களின் மனங்களில் இருக்கின்றார். மக்கள் நம்பும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார். இதன் தொடர்புள்ள மற்றொரு என் இடுகை கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம்...

மெற்கண்ட சுட்டியையும் படித்துவிட்டு வந்திருப்பீர்கள், நீங்களே சொல்லுங்கள் கடவுள் வாழ்கின்றாரா? இல்லையா? அதற்கு முன் எல்லொருக்கும் தெரிந்த ஒரு சிறிய கதை. ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களுக்கு சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று. குரு தம் சீடர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கின்றார். அப்பொழுது சீடர்களிடம் சில அறிவுரைகளையும் சொல்கின்றார். " நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வைக்கவேண்டும் ஏனெனில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார் எனவே அந்த உயிர்களிடம் அன்பு வைப்பவர்கள் கடவுளிடம் அன்பானவர்களாக இருப்பார்கள்" என்றார். சீடர்களும் தங்களுக்கு தெரிந்தவரை தலையை ஆட்டிவைத்தார்கள். குருகுலத்திலிருந்து கோவில் சிறிது தொலைவில் இருந்தது. சீடர்கள் அனைவரும் காலையில் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்கின்றார்கள். அப்பொழுது எதிரில் ஒரு யானைப்பாகன் " ஓடுங்கள்... ஓடுகங்கள் யானை மதம் கொண்டு வருகின்றது " என்று சொல்லிக்கொண்டே ஓடுகின்றான். எல்லா சீடர்களும் அதை கேட்டதும் ஓடிவிடுகின்றார்கள். ஆனால் ஒருவன் மட்டும் ஓடாமல் இருந்தான், மதம் கொண்ட யானையும் வந்தது யானை அவனை ஒரு சுற்று சுற்றி வீசி எரிந்தது.

மயக்க நிலையில் அவனை மற்ற சீடர்கள் தம் குருவிடம் தூக்கி சென்றார்கள். குருவும்
அவனுக்கு வைத்தியம் செய்தார், அவன் மயக்க நிலை தெளிந்ததும் குரு அவனிடம் " யானை வருவதை அறிந்ததும் எல்லா மாணவர்களும் ஒடிவிட்டார்கள் ஏன் நீ மட்டும் ஓடவில்லை" என்று கேட்டார். அவன் " குருவே நீங்கள்தான் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வாழ்கின்றார் அவைகளிடம் அன்பு செய்யுங்கள் என்று சொன்னீர்கள் அதுதான் நான் ஓடவில்லை" என்றான்.... அதற்கு குரு " யானை பாகன் எச்சரிக்கை செய்தான் இல்லையா! அவனிடத்திலும் கடவுள் இருக்கின்றாரே, ஏன் அவன் சொல்வதை ஏற்கவில்லை" என்று கேட்டார்.

மேற்கண்ட கதையில் இப்படியும் சொல்லலாம்: "இருக்கின்ற கடவுள் அந்த யானைக்கு மதம் பிடிக்காமல் வைத்திருக்கலாமே?"

அதேபோல் கடவுளின் நம்பிக்கையில் இருக்கும் வாதங்கள் நின்றுவிடவில்லை. வாதங்களில் எந்த அளவிற்கு உண்மை உணரப்படுகின்றதோ. அந்த அளவிற்கு எதிர்வாதங்களிலும் உண்மை இருக்கதான் செய்கின்றது. வெறும் வாத சாட்சியங்களை வைத்துக்கொண்டு கடவுள் வாழ்கின்றார் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

என்னை பொருத்தவரை மனிதனின் தேடல்களும் ஆசைகளும் இருக்கும் வரை கடவுளின் மேல் இருக்கும் நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட மனிதன் மனங்களில் அவன் காணாத கடவுள் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றார்.

"நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதால் அங்கு எதுவும் இல்லை என்று சொல்லவும் முடியவில்லை. நாம் நம்புவதால் இல்லாத ஒன்று இருக்கு என்றும் சொல்வதிற்கில்லை".... காணாத ஒன்றை நம்பும் மனிதன் காணும் மனிதனிடம் என்று அன்பு வைகின்றானோ அன்றே கடவுள் வாழ்கின்றார்.......

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

22 comments:

கோவி.கண்ணன் said...

:) நீங்களும் கடவுள் ஆராய்ச்சியா ?

சுனாமி போன்ற பேரிடறில் உறவினர்களை இழந்தவர்களிடம் தான் கடவுள் இருக்காரா இல்லையானு கேட்கனும்.

CorTexT (Old) said...

பரிணாம வளர்ச்சியில் கேள்வி-அறிவை பெற்ற மனிதன், சில கேள்விகளுக்கு பதில் தெரியாத போது, அதை தெரியாது என்று ஒப்புக்கொள்ள மறுத்தபோது வந்த வினைதான் கடவுள். இன்று அது மதங்களாக வளர்ச்சி பெற்று மனித கலாச்சாரத்துடன் பின்னி பிணைந்துள்ளன.

கடவுள் என்பது ஒரு தருக்கப் பிழை (Logical Error). அதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், கடவுள் என்பது அது விளக்கும் தெரியாததை விட மிகத் தெரியாது. ஒரு புதிரை அதைவிட பெரிய புதிரை கொண்டு விளக்கு போல் நடக்கும் ஏமாற்று வித்தை! (இப்பொழுது ஒன்று பதிலாக இரண்டு புதிர்கள் நம் கையில்!). நன்கு ஆராய்ந்தால், கடவுள் பற்றிய அனைத்து கூற்றுகளிலும் தருக்கப் பிழைகள் இருக்கும். இதைப் பற்றிய பல தத்துவ-கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன.

அறிவியல் வளர்ச்சியால், ஆதி மனிதனின் கேள்விகளுக்கு இன்று நமக்கு பதில் தெரியும் (இன்றைய அடிப்படை அறிவியலின் கேள்விகள், ஆதிமனிதனும் கடவுளர்களும் அறியாத கேள்விகள்). உலகில் ஏன் நல்லது கெட்டது நடக்கின்றன, ஏன் சில நிகழ்வுகள் ஒழுங்காகவும் (கணிக்க முடிந்தும்) மற்றவை ஒழுங்கின்றியும் (கணிக்க முடியாமலும்) இருக்கின்றன என்பதை நாம் அறிந்துள்ளோம் (தெரியவில்லை என்றால், அறிந்து/கற்று கொள்ள முயலுங்கள்). இதைப் பற்றிய எனது பதிவு: கடவுள் உண்டு நிரூபணம்.

http://icortext.blogspot.com/2008/12/blog-post_02.html

வால்பையன் said...

குழப்பமெல்லாம் வேண்டாம்!

கடவுள் இருக்கிறார், பணக்காரர்கள் வீட்டில்!

ஆ.ஞானசேகரன் said...

[[ கோவி.கண்ணன் said...

:) நீங்களும் கடவுள் ஆராய்ச்சியா ?

சுனாமி போன்ற பேரிடறில் உறவினர்களை இழந்தவர்களிடம் தான் கடவுள் இருக்காரா இல்லையானு கேட்கனும்.]]

ம்ம்ம் ஆமங்க கண்ணன் ... வெறுத்தவர்கள் இல்லை என்று சொல்ல கூடும். இன்னும் எதிர்பார்ப்பு உள்ளவர்கள் இருக்கு என்றே நம்பகூடும்... ஆனாலும் அங்கேயும் குழப்பங்கள்தான்.

மிக்க நன்றிங்க கண்ணன்

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

பரிணாம வளர்ச்சியில் கேள்வி-அறிவை பெற்ற மனிதன், சில கேள்விகளுக்கு பதில் தெரியாத போது, அதை தெரியாது என்று ஒப்புக்கொள்ள மறுத்தபோது வந்த வினைதான் கடவுள். இன்று அது மதங்களாக வளர்ச்சி பெற்று மனித கலாச்சாரத்துடன் பின்னி பிணைந்துள்ளன.

கடவுள் என்பது ஒரு தருக்கப் பிழை (Logical Error). அதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், கடவுள் என்பது அது விளக்கும் தெரியாததை விட மிகத் தெரியாது. ஒரு புதிரை அதைவிட பெரிய புதிரை கொண்டு விளக்கு போல் நடக்கும் ஏமாற்று வித்தை! (இப்பொழுது ஒன்று பதிலாக இரண்டு புதிர்கள் நம் கையில்!). நன்கு ஆராய்ந்தால், கடவுள் பற்றிய அனைத்து கூற்றுகளிலும் தருக்கப் பிழைகள் இருக்கும். இதைப் பற்றிய பல தத்துவ-கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன.

அறிவியல் வளர்ச்சியால், ஆதி மனிதனின் கேள்விகளுக்கு இன்று நமக்கு பதில் தெரியும் (இன்றைய அடிப்படை அறிவியலின் கேள்விகள், ஆதிமனிதனும் கடவுளர்களும் அறியாத கேள்விகள்). உலகில் ஏன் நல்லது கெட்டது நடக்கின்றன, ஏன் சில நிகழ்வுகள் ஒழுங்காகவும் (கணிக்க முடிந்தும்) மற்றவை ஒழுங்கின்றியும் (கணிக்க முடியாமலும்) இருக்கின்றன என்பதை நாம் அறிந்துள்ளோம் (தெரியவில்லை என்றால், அறிந்து/கற்று கொள்ள முயலுங்கள்). இதைப் பற்றிய எனது பதிவு: கடவுள் உண்டு நிரூபணம்.

http://icortext.blogspot.com/2008/12/blog-post_02.html//


நீங்கள் கூறுவதும் உண்மைதான்... கேள்விக்கு விடைதெரிந்தும் தெரியாதுபோல் இருக்கின்றோம்... உங்கள் இடுகையும் படித்தேன் மிக்க நன்றி ராஜ்

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

குழப்பமெல்லாம் வேண்டாம்!

கடவுள் இருக்கிறார், பணக்காரர்கள் வீட்டில்!//

ம்ம்ம் வாங்க வாலு,...
அவரும் அப்படிதானா?????????????

Radhakrishnan said...

மொத்த உலகமும் கடவுளை மறந்துவிட்டாலும் எவரேனும் ஒருவர் கடவுளைப் பற்றிப் பேசிக்கொண்டேதான் இருப்பார். ஆதலினால் கடவுள் இருக்கிறார்.

ஆ.ஞானசேகரன் said...

// V.Radhakrishnan said...

மொத்த உலகமும் கடவுளை மறந்துவிட்டாலும் எவரேனும் ஒருவர் கடவுளைப் பற்றிப் பேசிக்கொண்டேதான் இருப்பார். ஆதலினால் கடவுள் இருக்கிறார்.//


அடடா... இதுவும் நல்லாயிருக்கே!

எப்படியும் வாதங்கள் தொடர்கின்றது. அதுதான் இதன் சிறப்பு...

ஹேமா said...

அன்பும் மனிதமும் நிறைந்திருக்கும் மனிதனே கடவுள்.

தாரணி பிரியா said...

//காணாத ஒன்றை நம்பும் மனிதன் காணும் மனிதனிடம் என்று அன்பு வைகின்றானோ அன்றே கடவுள் வாழ்கின்றார்.......

//

ithuthan sari :)

நசரேயன் said...

//அப்படிப்பட்ட மனிதன் மனங்களில் அவன் காணாத கடவுள் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றார்.//

ம்ம்ம்ம்

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...

அன்பும் மனிதமும் நிறைந்திருக்கும் மனிதனே கடவுள்.//

வணக்கம் ஹேமா
உண்மையை உணர்ந்து சொல்லியுள்ளது தெரிகின்றது

ஆ.ஞானசேகரன் said...

// தாரணி பிரியா said...

//காணாத ஒன்றை நம்பும் மனிதன் காணும் மனிதனிடம் என்று அன்பு வைகின்றானோ அன்றே கடவுள் வாழ்கின்றார்.......

//

ithuthan sari :)//

வாங்க தாரணி பிரியா
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

/// நசரேயன் said...

//அப்படிப்பட்ட மனிதன் மனங்களில் அவன் காணாத கடவுள் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றார்.//

ம்ம்ம்ம்///

வாங்க நசரேயன்
வணக்கமுங்கோ..........

சத்ரியன் said...

ஞானம்,

நிறைய ஆராய்ச்சிப் பதிவுகள் எழுதுகின்றீர்கள்.... தொடரட்டும்.. வாதங்களும், பிரதிவாதங்களும்...!

"உழவன்" "Uzhavan" said...

இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.. தெரியலயே!! :-)

ஆ.ஞானசேகரன் said...

//சத்ரியன் said...
ஞானம்,

நிறைய ஆராய்ச்சிப் பதிவுகள் எழுதுகின்றீர்கள்.... தொடரட்டும்.. வாதங்களும், பிரதிவாதங்களும்//

வணக்கம்,.. சத்ரியன்
மிக்க நன்றிங்க... உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...
இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.. தெரியலயே!! :-)//



வணக்கம் நண்பா,... இந்த நிலைதான் இன்னும் கடவுளைப்பற்றிய நினைப்பு போகாமல் இருக்கு

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு நண்பரே..
எத்தனை காலங்கள் கடந்தாலும்..
கடவுள் இருக்கிறார்
இல்லை என்னும் வாதங்கள் ஓயாது..

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு நண்பரே..
எத்தனை காலங்கள் கடந்தாலும்..
கடவுள் இருக்கிறார்
இல்லை என்னும் வாதங்கள் ஓயாது..//

வணக்கம்ங்க
உங்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கின்றது.

S.Gnanasekar said...

கடவுள் இருக்கின்றார் மக்களின் மனங்களில் இருக்கின்றார். மக்கள் நம்பும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார். அதுதான் கூறிவிட்டீர்களே மனம்,நம்பிக்கை தான் கடவுள் என்று.

ஆ.ஞானசேகரன் said...

// S.Gnanasekar said...
கடவுள் இருக்கின்றார் மக்களின் மனங்களில் இருக்கின்றார். மக்கள் நம்பும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார். அதுதான் கூறிவிட்டீர்களே மனம்,நம்பிக்கை தான் கடவுள் என்று.//

மிக்க நன்றிங்க... என்ன கடவுளின் பெயரை சொல்லி தப்பு பன்னாம இருந்தா நல்லது.