_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, July 27, 2010

எல்லாம் தெரிந்தாலும்!.......

எல்லாம் தெரிந்தாலும்!.......

(படம் இடுகைக்கு தொடர்பில்லை)

மின்னஞ்சலில் படித்த ஒரு கதை .... தன்னுடை நண்பரை தேடி ஒருவர் அவர் வீட்டிற்கு செல்கின்றார். அந்த நண்பரோ வெளியில் சென்றுவிட்டார், அவரின் பாட்டி மட்டும் இருந்தார். அவர் பாட்டியிடம் நண்பரே பற்றி கேட்கிறார். நண்பர் வெளியில் சென்று விட்டதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் நாற்காலியில் அமர செய்துவிட்டு தேனீர் எடுத்து வர பாட்டி சென்று விடுகின்றார்.... அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு முன் உள்ள சிறு மேசையில் சில பாதாம் பருப்பு தட்டில் இருந்தது. அவர் அவற்றில் ஒன்றை வாயில் போட்டு சாப்பிட்டார். சுவையாய் இருந்தது எனவே மற்றொன்றை வாயில் போட்டார்.... இப்படியே எல்லாவற்றையும் முடித்துவிட்டார். பாட்டி வந்ததும் " பாட்டி இங்கிருந்த பாதாம் சுவையாய் இருந்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன்" என்றார். பாட்டியோ " பரவாயில்லை தம்பி நான் தான் சாக்லைட் சாப்பிடும்பொழுது பல் இல்லாததால் பாதாம் பருப்பை மட்டும் துப்பி வைத்திருந்தேன், நல்ல வேலை வீனாகாமல் நீ சாப்பிட்டுவிட்டாய்" என்றார். அவருக்கு என்னவோ போல ஆகிவிட்டது.

மேல் சொன்ன கதை ஒரு சின்ன காமடியோடு முடிந்தது பரவாயில்லை. இது போல தன்னுடைய நண்பனை தேடி அவன் வேலை செய்யும் இடத்திருக்கு சென்றான். நண்பர் வெளியில் சென்றுள்ளதால் காத்திருக்க வேண்டிருந்தது. வந்த கலைப்பு தாகமாக இருந்ததால் அருகில் இருந்த தண்ணிர் வைத்திருக்கும் கண்ணாடி குடுவையை எடுத்து மலமலவென்று குடித்துவிடுகின்றார். பிறகுதான் தெரிந்தது அவன் குடித்தது தண்ணீர் இல்லை "தின்னர்".... பின்னர் உயிருக்கு போராடி பிழைத்துவிட்டார்.....
நமக்கு தெரிந்தவையாக இருக்கலாம்.... இருந்தாலும் நமக்கு பழக்கமில்லாத இடத்தில் கேட்டு செய்வதுதான் பாதுகாப்பு என்பது மேற்கண்ட நிகழ்வு தெளிவுப்படுத்துகின்றது.

" எல்லாம் தெரிந்திருந்தாலும் கேட்டு செய்வதினால் எந்த கெடுதலுமில்லையே!"


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

25 comments:

அன்புடன் நான் said...

வாங்க நண்பா.... வணக்கம்.
நான் தான் முதல்ல....

இதோ படிச்சிட்டு வரேன்.

அன்புடன் நான் said...

முதல்ல சிரிப்பா இருந்தாலும் பின்னால சொன்ன விடயம் மிக உண்மை.
எங்குமே நிதானம்.... தேவை.

பகிர்வு நல்ல பாடம்.

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

வாங்க நண்பா.... வணக்கம்.
நான் தான் முதல்ல....

இதோ படிச்சிட்டு வரேன்.//

வணக்கம் நண்பா,.... நலமா?

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

முதல்ல சிரிப்பா இருந்தாலும் பின்னால சொன்ன விடயம் மிக உண்மை.
எங்குமே நிதானம்.... தேவை.

பகிர்வு நல்ல பாடம்.//


மிக்க நன்றி நண்பா.....

அனபுடன்
ஆ.ஞானசேகரன்

தேவன் மாயம் said...

நம் வீட்டிலேயே ப்ளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் போல் இருந்தால் தெரியாமல் எடுத்துக் குடித்து விடக் கூடாது!!

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

நம் வீட்டிலேயே ப்ளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் போல் இருந்தால் தெரியாமல் எடுத்துக் குடித்து விடக் கூடாது!!//


உண்மைதான் டாக்டர்.... மிக்க நன்றிங்க

வால்பையன் said...

பாதம் பருப்பு சரி!

தின்னர் குடிக்கும் போது கூடவா தெரியல!?

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

பாதம் பருப்பு சரி!

தின்னர் குடிக்கும் போது கூடவா தெரியல!?//

அவசரத்தில் அன்னாக்க குடித்தால் அப்படிதான்.....

வாங்க நண்பா மிக்க நன்றிங்க

ஆதவா said...

இப்படித்தான் ஒருமுறை என் நண்பர், தண்ணீர் என்று நினைத்துக் கொண்டு டிஸ்டில்ட் நீரைக் குடித்துவிட்டார்..... ஒன்றும் ஆகவில்லை...........


இதைவிட, மண்னெண்ணை குடித்தவர்கள் வரலாறு உண்டு!!!


பகிர்வுக்கு நன்றிங்க

Balakumar Vijayaraman said...

தாகத்திலும் நிதானம் வேணும் தானே.

ஹேமா said...

ஐயோ...கவனமா இருக்கவேணும் !

உமா said...

படம் இடுக்கைக்கு தொடர்பில்லைன்னு போட்டுட்டீங்களே.
உங்கள் இடுக்கையை படிச்சிட்டு அது யோசிக்கிறாப்போல இல்ல இருக்கு.[தனியா யாருக்கோ காத்திருக்கிறது போல இருக்கு, மரத்தில எதையாவது கொத்தலாமோ வேணாமோன்னு யோசிக்குதோ?]

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...

இப்படித்தான் ஒருமுறை என் நண்பர், தண்ணீர் என்று நினைத்துக் கொண்டு டிஸ்டில்ட் நீரைக் குடித்துவிட்டார்..... ஒன்றும் ஆகவில்லை...........


இதைவிட, மண்னெண்ணை குடித்தவர்கள் வரலாறு உண்டு!!!


பகிர்வுக்கு நன்றிங்க///


வாங்க ஆதவா,...
வணக்கம் நீண்ட இடைவெளியில் வந்துள்ளீர்கள் மகிழ்ச்சி..

நீங்கள் சொல்வது உண்மைதான்... அப்படியே அருகில் உள்ள வால்பையனிடம் சொல்லிவிடுங்கள்... அவருக்குதான் சந்தேகம்

ஆ.ஞானசேகரன் said...

// வி.பாலகுமார் said...

தாகத்திலும் நிதானம் வேணும் தானே.//

வணக்கம் நண்பா,.... வருகைக்கு மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...

ஐயோ...கவனமா இருக்கவேணும் !//


ஆமாம்ங்க ஹேமா... அவசரப்படாதீங்க... மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...

படம் இடுக்கைக்கு தொடர்பில்லைன்னு போட்டுட்டீங்களே.
உங்கள் இடுக்கையை படிச்சிட்டு அது யோசிக்கிறாப்போல இல்ல இருக்கு.[தனியா யாருக்கோ காத்திருக்கிறது போல இருக்கு, மரத்தில எதையாவது கொத்தலாமோ வேணாமோன்னு யோசிக்குதோ?]//

வணக்கம் உமா,...
மிக்க நன்றிங்க.... நலமா உள்ளீர்களா?

அன்புடன் அருணா said...

ரொம்ப சரி!

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...

ரொம்ப சரி!//

வாங்க வாங்க... வணக்கம் அருணா,...

மிக்க நன்றிங்க

Muniappan Pakkangal said...

astiry with 2 msges.You've improved a lot Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

astiry with 2 msges.You've improved a lot Gnanaseharan.//

மிக்க நன்றி சார்... உங்களின் பாராட்டு என்னை நெகிழ செய்கின்றது...

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Thenammai Lakshmanan said...

அடடா ஞான சேகர்.. பயமா இருக்கே.. எதைப் பார்த்தாலும்..

ஆ.ஞானசேகரன் said...

// தேனம்மை லெக்ஷ்மணன் said...

அடடா ஞான சேகர்.. பயமா இருக்கே.. எதைப் பார்த்தாலும்..//

வாங்க... வணக்கம்..

உங்களின் வருகை மிக்க மகிழ்ச்சி

அரசூரான் said...

பதிவை படித்த முடிந்த பின் படத்த டைட்டிலோட பார்த்தா... ஒடிந்த அந்த மரக் கிளை பகுதி நீட்டிய காலைப் போல் உள்ளது... இருந்தாலும் நான்கு விரல்களை காணாவில்லை... குருவி தீவிரமாய் யோசிப்பது போல் உள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

// அரசூரான் said...

பதிவை படித்த முடிந்த பின் படத்த டைட்டிலோட பார்த்தா... ஒடிந்த அந்த மரக் கிளை பகுதி நீட்டிய காலைப் போல் உள்ளது... இருந்தாலும் நான்கு விரல்களை காணாவில்லை... குருவி தீவிரமாய் யோசிப்பது போல் உள்ளது//

வாங்க நண்பா, வணக்கம்
மிக்க நன்றிங்க