Dog show மற்றும் இந்திய நாய்களின் தனித்தன்மை...
நான் ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து விமானம் வழியாக சென்னைக்கு ஆப்பில் பழம் எடுத்து வந்தேன். சுங்க அதிகாரிகள் அவற்றை பார்த்துவிட்டு " சார் பழத்தை சாப்பிட்டதும் விதைகளை எரித்து விடுங்கள்" என்று கூறினார். பின்னர் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் " நம் நாட்டின் நலன் கருதி எரித்து விடுங்கள் நம் நாட்டு சூழலை கெடுத்துவிடும் அதே போல நம் நாட்டின் தனி தன்மையையும் பாழ்படும் என்றார்". அவர் கூறிய விளக்கம் என்னை சிந்திக்க வைத்தது. அன்று முதல் நான் பழங்களை எடுத்து வருவதில்லை. ( இன்று உலகமயமாக்கலில் எல்லாம் கலந்துவிட்டது என்பது ஒரு வருத்தமான விடயம். இந்திய நாட்டின் தனி தன்மையும் அழிந்தே வருகின்றது என்பதும் உண்மை).
அதே போலதான் வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள், நம் நாட்டு நாய்களின் தனித்தன்மையை அழிக்கும் நிலையில் உள்ளது. நம் முன்னோர்கள் நாய்களை வேட்டைக்காகவும், காவலுக்காகவும் மேலும் அழகுக்காகவும் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் பழங்கால கல்வெட்டுகளில் காணமுடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் நாய்களை தங்களுடன் வளர்த்து வந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.
நமது மன்னர்கள் நாய்களை வேட்டைக்காகவும் காவலுக்காகவும் வளர்த்து வந்துள்ளார்கள். அப்படி மன்னர்கள் வழிவந்த நாய்களில் ஒன்று ராஜபாளையம் நாய்கள். அப்படி அரிகிவரும் நாய் இனத்தை பாதுக்காக்கும் எண்ணம் இல்லாத நமது அரசு, வெளிநாடுகளிருந்து நாய்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கின்றது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நாய் விருது காட்சியில் சிலர் அதற்கான எதிர்ப்பையும் முன் வைத்தார்கள்.
ஆதி மனிதன் காடுகளின் சுற்றி திரிந்து கண்டதை திண்று வாழ்ந்த காலங்களுக்கு பின் என்று விவசாயம் செய்ய கற்றுக்கொண்டானோ அன்று முதல் தனித்தனி குழுக்காளாக வாழ ஆரம்பித்தான். அப்பொழுது தன் குழுவில் சேர்த்துக்கொண்ட முதல் பிராணி நாய்தான் என்றும் சொல்லப்படுகின்றது.
வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்களுக்கு லட்சகணக்கில் செலவு செய்கின்றார்கள். இப்படிப்பட்ட நாய்களை வளர்ப்பதால் ஒரு அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றார்கள். அதற்காக வெளிநாட்டு பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள். அந்த நாய்களுக்கு பயிற்சி கொடுக்க சிறப்பு பணியாளர்களும் உள்ளார்கள்.
நம்நாட்டில் சிறப்புமிக்க நாய்கள் இருக்கின்றது. அப்படிபட்ட அரிய நாய்கள் இன்று கலப்பினங்களாக இருக்கின்றது. கலப்பினங்களின் நன்மைகள் சில நேரங்களில் இருக்கலாம் ஆனால் அந்த நாயின் தனிதன்மை கெட்டுபோகும். வெளிநாடுகளிலிருந்து நாய்களை இறக்குமதி செய்யும் எண்ணங்களை விட்டுவிட்டு அரிகிவரும் நம்நாட்டு நாய்களை பாதுகாக்கலாமே!. ஒருவகை இந்திய நாய்களுக்கு ஆஸ்திரியாவில் மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. அங்கு விவசாயம் செய்பவர்கள் வளர்க்கின்றார்களாம்.
அரிகிவரும் நாய் இனத்தை கண்டுபிடித்து பாதுகாப்போம்...
வெளிநாட்டு நாய்களின் மேல் இருக்கும் மோகத்தை விட்டுவிட்டு நம் நாட்டு நாய்களின் தனிதன்மையை வெளிகொணர்வோம்...
நம் நாட்டு நாய்களுக்காக விருது காட்சியும் நடத்துவோம்.....
அன்புடன்...
ஆ.ஞானசேகரன்
Saturday, December 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
நல்ல பகிர்வு..
தலைப்பை பார்த்ததும் பயந்துபோனேன் பதிவை முழுவது வாசித்ததும்தான் புரிந்துகொண்டேன் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நாய்கள் பற்றி . பகிர்வுக்கு நன்றி
//வெறும்பய said...
நல்ல பகிர்வு..//
மிக்க நன்றி நண்பா
//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
தலைப்பை பார்த்ததும் பயந்துபோனேன் பதிவை முழுவது வாசித்ததும்தான் புரிந்துகொண்டேன் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நாய்கள் பற்றி . பகிர்வுக்கு நன்றி//
வணக்கம் நண்பா மிக்க நன்றிங்க
ஞான சேகர், அருமை,.. பொறுப்பான பதிவுகளை தொடருங்கள்
//jothi said...
ஞான சேகர், அருமை,.. பொறுப்பான பதிவுகளை தொடருங்கள்//
வணக்கம் நண்பா,...
மிக்க நன்றிங்க
நீங்கள் சொல்வது மிகச்சரி!
//தேவன் மாயம் said...
நீங்கள் சொல்வது மிகச்சரி!//
வணக்கம் டாக்டர்
மிக்க நன்றிங்க
கண்டதும் சுட்டதும் தளத்திற்கு மட்டுமே இவ்வளவு நாள் வந்தேன். அம்மா அப்பாவை மறந்துவிட்டேன். நாய்கள் குறித்த பதிவு ஆச்சர்யப்படுத்தியது.
//தமிழ் உதயம் said...
கண்டதும் சுட்டதும் தளத்திற்கு மட்டுமே இவ்வளவு நாள் வந்தேன். அம்மா அப்பாவை மறந்துவிட்டேன். நாய்கள் குறித்த பதிவு ஆச்சர்யப்படுத்தியது.//
வணக்கம் நண்பா... உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி
படங்களும் பகிர்வும் அருமை.
சிந்திக்க வைக்கும் பதிவு.
//ராமலக்ஷ்மி said...
படங்களும் பகிர்வும் அருமை.
சிந்திக்க வைக்கும் பதிவு.//
வணக்கம்
மிக்க நன்றிங்க
//வெளிநாட்டு நாய்களின் மேல் இருக்கும் மோகத்தை விட்டுவிட்டு நம் நாட்டு நாய்களின் தனிதன்மையை வெளிகொணர்வோம்...//
புதுசா யோசிச்சி இருக்கீங்க சேகர்.. நல்ல பகிர்வு.
நலமா? நீங்கள்.
[[ தமிழரசி said...
//வெளிநாட்டு நாய்களின் மேல் இருக்கும் மோகத்தை விட்டுவிட்டு நம் நாட்டு நாய்களின் தனிதன்மையை வெளிகொணர்வோம்...//
புதுசா யோசிச்சி இருக்கீங்க சேகர்.. நல்ல பகிர்வு.
நலமா? நீங்கள்]]
வணக்கம் தமிழ்
நான் நலம் நீங்கள் நலமா?
மிக்க நன்றிங்க
அருமையான பகிவு நண்பரே . நலமா ?
Nice post Gnanaseharan.I'm having a Kanni variety dog-a native one in my house.Plz refer my previous post Marshall-Amar Start for ur opinoin.
// Suresh Kumar said...
அருமையான பகிவு நண்பரே . நலமா ?//
வணக்கம் நண்பா,...
மிக்க நன்றிங்க
// Muniappan Pakkangal said...
Nice post Gnanaseharan.I'm having a Kanni variety dog-a native one in my house.Plz refer my previous post Marshall-Amar Start for ur opinoin.//
Thanks sir.. i will see your post
பகிர்வுக்கு நன்றி நண்பரே,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!
இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்......
//மாணவன் said...
பகிர்வுக்கு நன்றி நண்பரே,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!//
மிக்க நன்றி
உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்
ஞானியார், புத்தாண்டு வாழ்த்துகள்!
//பழமைபேசி said...
ஞானியார், புத்தாண்டு வாழ்த்துகள்!//
வணக்கம் நண்பா, உங்களுக்கும் இனிய புத்தாண்ண்டு வாழ்த்துகள்
Post a Comment