_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, April 29, 2011

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

ஏழை என்றால் என்ன? வறுமை கோடு எப்படி கணக்கிடுகின்றார்கள்? ஏழை ஏழையாக இருபதன் காரணம்தான் என்ன?

இந்தியா மற்றும் சீனாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது(நன்றி தினதந்தி). இந்தியாவில் ஒரு நாளைக்கு வருமானம் ரூபாய் 50 க்கும் குறைவாக இருந்தால் அவன் ஏழை என்று உலக வங்கி கணக்கிடுகின்றது. அப்படி பார்த்தால் 30லிருந்து 40 விழுக்காடு மக்கள் இன்னும் தன்னிறைவு அடையாமல் இருக்கின்றார்கள். இன்னும் இது அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை நம்மை சிந்தனைகுள்ளாக்கியுள்ளது. ஏழை ஏழையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும். தனிமனிதனின் சேம்பேறித்தனமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த வறுமை அதிகரிக்க வாய்புள்ள இடங்கள் என்ன? உணவு பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் பற்றாகுறை, அதன் தொடர்பில் உள்ள கச்சா எண்ணெய் விலையேற்றமாகும். கடந்த இரண்டு மாதங்களாக உணவு பொருளிகள் விலையேற்றம் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் ஏழைகளின் விழுக்காடு அதிகரிக்கும் என்ற எச்சரிக்கைதான் நம்மை சிந்திக்கவைக்கின்றது.

ஒரு நாட்டின் பணவீக்கம் அந்த நாட்டின் வறுமையை எந்த அளவிற்கு கட்டுபடுத்தும்? புள்ளியல் அளவில் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் உண்மையில் வறுமை போக்க வழியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியானால் உணவு பொருள்களின் உற்பத்தி அதிகப்படுத்த வேண்டும். அதைவிட மிக முக்கியம் அந்த உணவு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல செலவும் குறைவாக இருக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலையும் கட்டுப்பாடாக இருந்தால்தான் அதும் சாத்தியம்.

ஒரு நாட்டின் மக்கள் சோம்பேறிகளாக இருந்தால் அந்த நாட்டின் வளமும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கிபோகும். அரசும் மக்களை மறைமுகமாக உழைக்க கட்டாயப்படுத்த வேண்டும். இலவசம் மற்றும் மானியங்களை தவிற்த்து வேலைக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். வேலைக்கேற்ற கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். இதையெல்லம் செய்யாமல் இலவசங்களை மட்டுமே நம்பியிருந்தால் நாளை நம் நாடு ஏழையாகதான் இருக்கும்..............

பணம், பொருள் எல்லாம் ஒரே இடத்தில் சேரும் நிலையை கட்டாயம் கண்காணிக்க வேண்டும். முறையற்ற சொத்து குவிப்பு தண்டனைக்கு உற்படுத்த வேண்டும்.

இந்த மண் மண்ணின் மைந்தனுக்குதான்,... தனி ஒருவனுக்கு அல்ல!

சிந்தனைக்கு
ஆ.ஞானசேகரன்..

19 comments:

sakthi said...

நண்பரே வணக்கம் ,
நல்ல பகிர்வு அருமை .உலகத்திலேயே அதிக பணக்காரர்கள் வாழும் நாடு நம் நாடு .சிவாஜி படத்தில் ரஜினி சொல்வது போல் richer gets more rich ,poor gets more poor .முழு பணமும் அரசியல் வாதிகள் கையில் உள்ளது உதாரணம் spectrum ஊழல் .இப்படி பல கல்மாடிகள் இருக்கும் வரை ஏழை ஏழையாக இருக்க வேண்டியது தான் .
நட்புடன் ,
கோவை சக்தி

ஆ.ஞானசேகரன் said...

வ்ணக்கம் சக்தி

நீங்கள் சொல்வதும் உண்மை
மிக்க நன்றிங்க

S.Gnanasekar said...

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?
நீண்ட இடைவெளியில் நல்ல பகிர்வு
மக்கள் உழைக்க வேண்டும் என்ற என்னம் நிறையப்பேருக்கு இல்லை நீங்கள் கூருவதுபோல் மக்கள் சோம்பேறிகளாக இருந்தால், இலவசங்களை மட்டுமே நம்பியிருத்தல், சில குடும்பங்கள் மட்டும் எல்லா தொழில்களையும் கையகப்படுத்தினால் நம் நாட்டு மக்கள் ஏழையாகதான் இருப்பார்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//S.Gnanasekar said...

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?
நீண்ட இடைவெளியில் நல்ல பகிர்வு
மக்கள் உழைக்க வேண்டும் என்ற என்னம் நிறையப்பேருக்கு இல்லை நீங்கள் கூருவதுபோல் மக்கள் சோம்பேறிகளாக இருந்தால், இலவசங்களை மட்டுமே நம்பியிருத்தல், சில குடும்பங்கள் மட்டும் எல்லா தொழில்களையும் கையகப்படுத்தினால் நம் நாட்டு மக்கள் ஏழையாகதான் இருப்பார்கள்.//


வணக்கம் ஐயா,...
நீங்கள் சொல்வதிபோல சில குடும்பங்கள் மட்டுமே எல்லா தொழிகளையும் கையகப்படுத்தும் நிலையுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்
மிக்க நன்றி ஐயா

சத்ரியன் said...

என் அன்பு நண்பன் ஞானம்,

நம்ம நாட்டுல (தமிழ் நாட்டைச் சொன்னேன்) ஏரி வேலை அப்படின்னு ஒன்னை ஆரம்பிச்சி, உழைப்பாளிகளை ஒட்டு மொத்தமா சோம்பேரிகளாக்கி விட்டுட்டாய்ங்க. விவசாய வேலைக்கு ஆள் கூப்பிட்டா, “ஏரி வேலைக்கு போயி ஒருமணி நேரம் உக்காந்துட்டு வந்தா 100 ரூவா குடுக்குறாக, உன் தோட்டத்துக்கு வேலைக்கு வந்தா இன்னைக்கெல்லாம் நாயா வேலை செய்யனும்”-னு சொல்லி வர மறுக்கறாங்க.

விவசாயம் செய்யாட்டி உணவு எப்படி சாமி வரும்.?

வெளையிறது கொஞ்சம். வெலை அதிகமாகத்தானே செய்யும்?

ஆ.ஞானசேகரன் said...

//சத்ரியன் said...

என் அன்பு நண்பன் ஞானம்,

நம்ம நாட்டுல (தமிழ் நாட்டைச் சொன்னேன்) ஏரி வேலை அப்படின்னு ஒன்னை ஆரம்பிச்சி, உழைப்பாளிகளை ஒட்டு மொத்தமா சோம்பேரிகளாக்கி விட்டுட்டாய்ங்க. விவசாய வேலைக்கு ஆள் கூப்பிட்டா, “ஏரி வேலைக்கு போயி ஒருமணி நேரம் உக்காந்துட்டு வந்தா 100 ரூவா குடுக்குறாக, உன் தோட்டத்துக்கு வேலைக்கு வந்தா இன்னைக்கெல்லாம் நாயா வேலை செய்யனும்”-னு சொல்லி வர மறுக்கறாங்க.

விவசாயம் செய்யாட்டி உணவு எப்படி சாமி வரும்.?

வெளையிறது கொஞ்சம். வெலை அதிகமாகத்தானே செய்யும்?//

வணக்கம் சத்ரியன்
//விவசாயம் செய்யாட்டி உணவு எப்படி சாமி வரும்.?//

ம்ம்ம் அதுதான் பிரச்சனையே.... இன்னும் பத்தாண்டில் உணவு பஞ்சம் உலகத்தில தலைவிரித்தாடும் என்று சொல்லுகின்றார்கள்.... எவன் காதில விழுகின்றது,.... காசைதான் திங்கனும்....

மிக்க நன்றி நண்பா..

CorTexT said...

//தனிமனிதனின் சேம்பேறித்தனமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.//
இந்த குழந்தைகளின் நிலை அவர்களின் சேம்பேறித்தனம் என்கின்றீர்களா? இல்லை, பெத்தவர்கள் விட்டுவிட்டார்களா? மற்ற விலங்குகள் கூட பெத்த குழந்தைகளை விட்டுவிடுவதில்லையே?

//ஒரு நாட்டின் மக்கள் சோம்பேறிகளாக இருந்தால் அந்த நாட்டின் வளமும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கிபோகும்.//
எந்த விலங்குகளையாவது சோம்பேறிகளாக பார்த்திருக்கின்றீர்களா? சாப்பாட்டை தேடாதவன், தன் குழந்தைகளை வாழவைக்க தவறியவன், எப்படி வாழ்ந்து கொண்டிருக்க முடியும்?

//வேலைக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்//
அது எங்கிருந்து வரும்? அரசு, அரசியல்வாதிகள் சரியில்லை என்கின்றீர்கள். பிறகு அவர்களையே அனைத்தையும் நடத்த சொல்கின்றீர்கள்.

நீங்கள் கருதும் தீர்வுகள் 5 பேருள்ள ஒரு குடும்பத்திற்கோ, 100 பேருள்ள ஒரு கம்பெனிக்கோ பொருந்தலாம். இது ஒரு பெரிய நாட்டுகெல்லாம் பொருந்தாது. அதற்கு பொருளாதாரம் (micro, macro) பற்றி ஆராய வேண்டும். வெற்றிக்கான ஆதாரங்களை தேட வேண்டும். நம் நாட்டிலுள்ள அவலங்கள் பலநூற்றாண்டுகளாக நாம் விதைத்த விதை (http://icortext.blogspot.com/2011/03/blog-post_29.html). அதிலிருந்து மீள்வதற்கு பல்வேறு சமூக, பொருளாதார மாற்றங்கள் தேவை.

//இலவசங்களை மட்டுமே நம்பியிருந்தால்...//
மிக அவசியமான உணவு, உடை, இடம் கொடுப்பது வளர்ந்த நாடுகளிலும் உண்டு. இலவச TV கொடுப்பது சரியான மாங்கா மடத்தனம்.

ராஜ நடராஜன் said...

இலவசத்தை நிறுத்துவதா!எல்லோரும் ஓடி வாங்க!இங்கே கழக ஆட்சிகளுக்கு எதிரானவர் ஒருத்தர் மாட்டிகிட்டார்:)

ராஜ நடராஜன் said...

//அதைவிட மிக முக்கியம் அந்த உணவு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல செலவும் குறைவாக இருக்க வேண்டும். //

வாஜ்பாய் ஆட்சியின் போது நெல் உற்பத்தியில் இந்தியா சுயபூர்த்தியாக நிறைவடைந்தும் பட்டினிச் சாவுகள் இந்தியாவில் என்பது ஆச்சரியமாய் இருந்தது.மத்திய அரசு அரிசியை மாநிலங்களுக்கு விநியோகம் செய்ய தயாராக இருந்தும் மாநில அரசுகள் அதனை தமது செலவில் கொண்டு வர முயற்சி செய்யவில்லை.காரணம் என்ன தெரியுமா?Lack of proper road for distribution.

பொருள் உற்பத்தி விலையை விட அதன் இதர செலவுகள் அதிகமானால் அந்த வியாபாரம் படுத்துக்கும் என்பது பொருளாதார அடிப்படை.நம்மிடம் அடிப்படைக் கட்டமைப்புகளின் முக்கியமான சாலை வசதிகள் இல்லை.அப்புறம் எங்கே செலவைக் குறைக்கிறது?

ஆ.ஞானசேகரன் said...

CorTexT

//மற்ற விலங்குகள் கூட பெத்த குழந்தைகளை விட்டுவிடுவதில்லையே?//
சமூக அவலம்(கேவலம்) தனிமனித ஒழுக்கம் இல்லாது போனதால் இதுபோல இருக்கின்றது


//எந்த விலங்குகளையாவது சோம்பேறிகளாக பார்த்திருக்கின்றீர்களா? //
மனிதன் இருக்கின்றான்


//அது எங்கிருந்து வரும்? அரசு, அரசியல்வாதிகள் சரியில்லை என்கின்றீர்கள். பிறகு அவர்களையே அனைத்தையும் நடத்த சொல்கின்றீர்கள்.//
அரசியல்வாதிகள் நம்மில் ஒருவந்தானே.. மாற்றங்களை நம்மிருந்து தொடங்கலாம்


///அதற்கு பொருளாதாரம் (micro, macro) பற்றி ஆராய வேண்டும். வெற்றிக்கான ஆதாரங்களை தேட வேண்டும். நம் நாட்டிலுள்ள அவலங்கள் பலநூற்றாண்டுகளாக நாம் விதைத்த விதை (http://icortext.blogspot.com/2011/03/blog-post_29.html). அதிலிருந்து மீள்வதற்கு பல்வேறு சமூக, பொருளாதார மாற்றங்கள் தேவை.///


ஆம்ம்ம்ம்ம்
நல்ல கருத்து பறிமாற்றத்திற்கு நன்றி CorTexT

ஆ.ஞானசேகரன் said...

// ராஜ நடராஜன் said...

இலவசத்தை நிறுத்துவதா!எல்லோரும் ஓடி வாங்க!இங்கே கழக ஆட்சிகளுக்கு எதிரானவர் ஒருத்தர் மாட்டிகிட்டார்:)//

எனக்கு கிடைக்கவில்லை என்ற வயிற்றெரிச்சல்தான்ங்க......


///வாஜ்பாய் ஆட்சியின் போது நெல் உற்பத்தியில் இந்தியா சுயபூர்த்தியாக நிறைவடைந்தும் பட்டினிச் சாவுகள் இந்தியாவில் என்பது ஆச்சரியமாய் இருந்தது.மத்திய அரசு அரிசியை மாநிலங்களுக்கு விநியோகம் செய்ய தயாராக இருந்தும் மாநில அரசுகள் அதனை தமது செலவில் கொண்டு வர முயற்சி செய்யவில்லை.காரணம் என்ன தெரியுமா?Lack of proper road for distribution.

பொருள் உற்பத்தி விலையை விட அதன் இதர செலவுகள் அதிகமானால் அந்த வியாபாரம் படுத்துக்கும் என்பது பொருளாதார அடிப்படை.நம்மிடம் அடிப்படைக் கட்டமைப்புகளின் முக்கியமான சாலை வசதிகள் இல்லை.அப்புறம் எங்கே செலவைக் குறைக்கிறது?///

சரியா சொல்லிபுட்டீங்க நன்றி தலைவரே

CorTexT said...

//சமூக அவலம்(கேவலம்) தனிமனித ஒழுக்கம் இல்லாது போனதால் இதுபோல இருக்கின்றது//

வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் பெத்த பிள்ளைகளை விட்டுவிடுவதில்லை, அவர்கள் தனிமனித ஒழுக்கத்துடன் இருக்கின்றார்கள், நம் நாட்டில் அது இல்லை, என்கின்றீர்களா? ஒரு விலங்கின் அடிப்படை உணர்ச்சியான பெத்த பாசம், நம் நாட்டு மக்களுக்கு இல்லை என்கின்றீர்களா?

//மனிதன் இருக்கின்றான்//

வேலை தேடும் பலருக்கே இங்கே வேலை இல்லாத போது, சோம்பேறியாக இருக்கும் சிலரால் நாட்டின் பொருளாதாரம் போச்சு என்கின்றீர்களா?

//அரசியல்வாதிகள் நம்மில் ஒருவந்தானே.. மாற்றங்களை நம்மிருந்து தொடங்கலாம்//

அப்படியெனில், இனிமேல் அரசியல்வாதிகளை திட்டாதீர்கள், மக்களை திட்டுங்கள், உங்களையே/நம்மையே திட்டிகொள்ளுங்கள். நம் ஆற்றலை சரியான இடத்தில் செலுத்தலாம் அல்லவா?

எல்லோரும் நல்லவர்களாக இருந்தால், எல்லோரும் தனிமனித ஒழுக்கத்துடன் இருந்தால், எல்லோரும் சோம்பேறிதனம் இல்லாமல் இருந்தால், எல்லாம் நன்றாக தான் இருக்கும். அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அது எந்த விதத்திலும் சாத்தியம் இல்லை. உலகம், நாடு, மக்கள் எல்லாம் நிறை குறைகளோடு பல்வேறு கலவையாக தான் உள்ளது. இத்தனை கோடி மக்களை அதிலுள்ள சிக்கலான பல்வேறு காரண காரியங்களை எல்லாம் எந்த விதத்திலும் நீங்கள் நினைப்பது போல் கட்டுபடுத்த முடியாது. அதற்கு சில தேவையான சூழ்நிலை மாற்றங்களை செய்தால், அதுவே அதற்கேற்ற படி மாறி கொள்ளும் - அதற்கேற்ப மக்களும் மாறி கொள்வர் - இது மட்டுமே சாத்தியம் - இது மட்டுமே நிலைத்த வளர்ச்சியை தரமுடியும்.

குடந்தை அன்புமணி said...

ஏழைகள் இருந்தால்தான் இலவசங்கள் தொடரும். இலவசங்கள் தொடர்ந்தால்தான் ஓட்டு விழும். இது அரசியல்வாதிகளின் கணக்காகிவிட்டது. இந்த நிலைக்கு படிப்படியாக மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.இதிலிருந்து மீள்வதெப்போ...
சேம்பேறியாக இருந்துவிட்டாக்க சோறு கிடைக்காது தம்பி... சுறுசுறுப்பில்லாம தூங்கிகிட்டிருந்தா துணியும் இருக்காது தம்பி...

அடுத்தவன் சொன்ன கசக்கும் அனுபவம் தரும்...

ஆ.ஞானசேகரன் said...

Blogger CorTexT

//ஒரு விலங்கின் அடிப்படை உணர்ச்சியான பெத்த பாசம், நம் நாட்டு மக்களுக்கு இல்லை என்கின்றீர்களா?//

சென்ற மூன்று தினங்களுக்கு முன் மணப்பாறை அருகே ஒரு சாக்கு பையில் பிறந்த குழந்தையை தூக்கி எரியப்பட்டு அழும் குரல் கேட்டு காப்பாற்றியுள்ளார்கள்......

///வேலை தேடும் பலருக்கே இங்கே வேலை இல்லாத போது, சோம்பேறியாக இருக்கும் சிலரால் நாட்டின் பொருளாதாரம் போச்சு என்கின்றீர்களா?///

வேலை இல்லை என்ற நிலை இன்று இல்லை அவன் தேடும் வேலை இல்லை என்றுதான் இருக்கின்றது. இருக்கின்ற வேலை செய்யவும் ஆல் இல்லை!!!!!!! இந்நிலைக்கு யார் பொருப்பாக்கலாம்?


///அப்படியெனில், இனிமேல் அரசியல்வாதிகளை திட்டாதீர்கள், மக்களை திட்டுங்கள், உங்களையே/நம்மையே திட்டிகொள்ளுங்கள். நம் ஆற்றலை சரியான இடத்தில் செலுத்தலாம் அல்லவா?///

அதுவும் சரிதான்

///எல்லோரும் நல்லவர்களாக இருந்தால், எல்லோரும் தனிமனித ஒழுக்கத்துடன் இருந்தால், எல்லோரும் சோம்பேறிதனம் இல்லாமல் இருந்தால், எல்லாம் நன்றாக தான் இருக்கும். அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அது எந்த விதத்திலும் சாத்தியம் இல்லை. உலகம், நாடு, மக்கள் எல்லாம் நிறை குறைகளோடு பல்வேறு கலவையாக தான் உள்ளது. இத்தனை கோடி மக்களை அதிலுள்ள சிக்கலான பல்வேறு காரண காரியங்களை எல்லாம் எந்த விதத்திலும் நீங்கள் நினைப்பது போல் கட்டுபடுத்த முடியாது. அதற்கு சில தேவையான சூழ்நிலை மாற்றங்களை செய்தால், அதுவே அதற்கேற்ற படி மாறி கொள்ளும் - அதற்கேற்ப மக்களும் மாறி கொள்வர் - இது மட்டுமே சாத்தியம் - இது மட்டுமே நிலைத்த வளர்ச்சியை தரமுடியும்.////


ஆம்ம்ம்ம்ம்ம்...


மிக நல்ல கருத்துக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

///குடந்தை அன்புமணி said...

ஏழைகள் இருந்தால்தான் இலவசங்கள் தொடரும். இலவசங்கள் தொடர்ந்தால்தான் ஓட்டு விழும். இது அரசியல்வாதிகளின் கணக்காகிவிட்டது. இந்த நிலைக்கு படிப்படியாக மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.இதிலிருந்து மீள்வதெப்போ...
சேம்பேறியாக இருந்துவிட்டாக்க சோறு கிடைக்காது தம்பி... சுறுசுறுப்பில்லாம தூங்கிகிட்டிருந்தா துணியும் இருக்காது தம்பி...

அடுத்தவன் சொன்ன கசக்கும் அனுபவம் தரும்...///

வாங்க அன்பு நலமா?
மிக்க நன்றிங்க

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...

///////ஒரு நாட்டின் மக்கள் சோம்பேறிகளாக இருந்தால் அந்த நாட்டின் வளமும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கிபோகும். அரசும் மக்களை மறைமுகமாக உழைக்க கட்டாயப்படுத்த வேண்டும். இலவசம் மற்றும் மானியங்களை தவிற்த்து வேலைக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். வேலைக்கேற்ற கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். இதையெல்லம் செய்யாமல் இலவசங்களை மட்டுமே நம்பியிருந்தால் நாளை நம் நாடு ஏழையாகதான் இருக்கும்........////////////


நல்ல கருத்துக்களை முன் வைத்திருக்கும் பதிவு .
எதிர்பார்ப்போம் நமது எண்ணங்கள் விரைவில் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில்

ஆ.ஞானசேகரன் said...

//Blogger ! ♥ பனித்துளி சங்கர் ♥ ! நல்ல கருத்துக்களை முன் வைத்திருக்கும் பதிவு .
எதிர்பார்ப்போம் நமது எண்ணங்கள் விரைவில் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில்//

வணக்கம் நண்பா,...
மிக்க நன்றிங்க

அம்பாளடியாள் said...

பணம், பொருள் எல்லாம் ஒரே இடத்தில் சேரும் நிலையை கட்டாயம் கண்காணிக்க வேண்டும். முறையற்ற சொத்து குவிப்பு தண்டனைக்கு உற்படுத்த வேண்டும்
உண்மைதான் ஏழைகளுக்கும் ஒரு நல்ல எதிர்க்காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதர்க்கு இப்படியான ஒரு செயல்திட்டம் இருந்தால் இதுவும் நன்மைபயர்க்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி சகோதரரே பகிர்வுக்கு. வாழ்த்துக்கள்...........

ஆ.ஞானசேகரன் said...

[[அம்பாளடியாள் said...

பணம், பொருள் எல்லாம் ஒரே இடத்தில் சேரும் நிலையை கட்டாயம் கண்காணிக்க வேண்டும். முறையற்ற சொத்து குவிப்பு தண்டனைக்கு உற்படுத்த வேண்டும்
உண்மைதான் ஏழைகளுக்கும் ஒரு நல்ல எதிர்க்காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதர்க்கு இப்படியான ஒரு செயல்திட்டம் இருந்தால் இதுவும் நன்மைபயர்க்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி சகோதரரே பகிர்வுக்கு. வாழ்த்துக்கள்...........
]]

உங்களின் வருகை மகிழ்ச்சி சகோதரே.. மிக்க நன்றி