_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, May 5, 2011

பணவீக்கம் கட்டுப்படுத்த, ரெபோ ரேட் விகிதம் அதிகப்படுத்துதல்.....

பணவீக்கம் கட்டுப்படுத்த, ரெபோ ரேட் விகிதம் அதிகப்படுத்துதல்.....

இந்தியாவில் தற்பொழுது பணவீக்கம் அதிகமாக இருக்கின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பொருளாதாரம் படுத்துவிடும் எனவேதான் அறிஞர்கள் பலர் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று ரெபோ ரேட் விகிதங்களை அதிகப்படுத்துதல்... ரெபோ ரேட் விகிதம் அதிகப்படுத்தி எப்படி பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது?


முதலில் பணவீக்கம் என்றால் என்ன? பணவீக்கம் என்பது விலைவாசி ஏற்றம் இறக்கத்தை பொருத்தது. சென்ற ஆண்டு ஒரு பொருளை 100 ருபாய்க்கு வாக்கியதாக இருந்தால் அதே பொருள் இந்த ஆண்டின் விலை 120 ரூபாய்க்கு வாங்கினால் பணவீக்கம் 20 தாக இருக்கும். இன்றைய இந்தியாவின் பணவீக்கம் 8 லிருந்து 9 சதவிகமாக இருக்கின்றது. இந்தியாவை பொருத்தவரை இது அதிகம்தான், பொதுவாக நம் நாட்டின் பணவீகம் 4.5 ஆக இருந்தால் நல்ல பயனை கொடுக்கும். பணவீக்கம் பூச்சியமாக இருந்தால் நல்லதா? கண்டிப்பாக நல்லதில்லை.

2011-12 ஆம் நிதி ஆண்டிக்கான கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில் 'ரெபோ ரேட்' விகிதங்கள் 0.50 உயர்த்தப்படுள்ளது (நன்றி தினதந்தி). இதன் நோக்கம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல். பொதுவாக பணவீக்கம் ஏன் அதிமாகின்றது? ஒரு பொருளின் விலை ஏன் அதிகமாகின்றது? பொருளின் விலையை யார் நிர்ணயம் செய்வது?(இதைப்பற்றி இன்னும் எழுதவேண்டும் என்ற எண்ணம் உள்ளது). ஒரு பொருளின் விலை அந்த பொருளின் உற்பத்தி மற்றும் அந்த பொருளின் தேவையை பொருத்தது. அதைவிட மிக முக்கியம் சாமானியர்களின் வாங்கும் சக்தி. வாங்கும் சக்தி அதிமானால் அந்த பொருளின் கிராக்கி அதிகமாகின்றது, அதனால் விலையும் உயர்கின்றது. விலை உயர்வால் பணவீக்கம் உண்டாகின்றது. சாமானியர்களிடம் வாங்கும் சக்தி ஏன் அதிகமாகின்றது? பணபுழக்கம் அதிகமாக இருக்கின்றதால் வாங்கும் சக்தி அதிகமாகின்றது. பணபுழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்பதுதான் அறிஞர்களின் எண்ணம். ஆகவேதான் 'ரெபோ ரேட்' விகிதம் அதிகப்படுத்தியுள்ளார்கள்.

'ரெபோ ரேட்' விகிதம் அதிகப்படுத்துவதன் மூலம் வங்கியின் இருப்பு அதிகப்படுத்தும். வீடு, வாகன கடன் வட்டி அதிகமாகும். வங்கி சேமிப்பு மற்றும் ரோக்க சேமிப்பு (fixed deposit) வட்டி அதிகமாகும். ரோக்க சேமிப்புக்கு வட்டி அதிகப்படுத்துவதால் சாமானியர்கள் அதிகமாக சேமிக்க முன்வருவார்கள் அதனால் பணபுழக்கம் குறையும். இப்படி பணபுழக்கம் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை குறைக்கலாம் என்பதுதான் கணக்கு..... இப்படி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்டலாம் என்று கூறுகின்றார்கள்.....

இப்படி ஒரு கணக்கு இருந்தாலும் உணவு பொருளின் பணவீக்கம் 10 சதவிகிதத்திற்கு மேல் இருப்பதாக கணக்கிடுகின்றார்கள். உணவு பொருளின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். மேலும் உணவு பொருள்கள் நாசமாவதை தடுக்க வேண்டும். கல்யாணம் போன்ற விழாக்களில் மட்டும் உணவு பொருள் நாசமாவது மிக மிக அதிகம். இந்த நாசம் நாட்டின் பொருளாதாரத்திற்கே ஒரு சவாலாக இருக்கின்றது. அதே போல் கச்சா எண்ணெய் விலையேற்றம் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது, இவற்றையும் நாம் கணக்கிட வேண்டும்......

மொத்தத்தில் பணபுழக்கம் குறைக்க வேண்டும் அதேபோல உற்பத்தியையும் அதிகப்படுத்தினால் நல்லது. இந்தியா ஒரு விவசாய நாடு இருந்தாலும் இன்னும் பத்தாண்டுகளில் உணவு பற்றாகுறை வரும் என்று கணகிடுகின்றார்கள். விவசாய வேலைக்கு ஆல் இல்லாததே முக்கிய காரணம் பின்னர் விளைப்பொருளுக்கு ஏற்ற விலையும் இல்லை என்பதுதான் அரசுக்கு தலைவலி. இது போன்ற சிக்கல்களை துள்ளியமாக கணக்கிட்டால்தான், நாளைய இந்தியாவின் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியும்........

எனக்கு தெரிந்த சின்ன சின்ன........... (தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்)
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

6 comments:

Mohamed Faaique said...

இவ்வலவு மேட்டர் இருக்கா? விலை அதிகரித்தல் நாட்டுக்கு நல்லதா? அல்லது, நான் தவராக [புரிந்து கொண்டேனா?

ஆ.ஞானசேகரன் said...

// Mohamed Faaique said...

இவ்வலவு மேட்டர் இருக்கா? விலை அதிகரித்தல் நாட்டுக்கு நல்லதா? அல்லது, நான் தவராக [புரிந்து கொண்டேனா?//

வணக்கம் நண்பா...
எதுவுமே கட்டுப்பாடாக இருத்தால் நல்லது.. விலைவாசியும் அப்படிதான்.. வாங்குபவர்களை மட்டும் கணக்கில்கொள்ளாமல் விற்பவர்களையும் கணக்கில் கொண்டுவந்தால்தான் பொருளியல் சரியாக இருக்கும்

மாணவன் said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)

ஆ.ஞானசேகரன் said...

// மாணவன் said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)//

மகிழ்ச்சியும் நன்றி நண்பா

CorTexT said...

பணவீக்கம் ஒரு பொருளாதார வினையூக்கி மாதிரி. நீங்கள் சொன்னது போல், அது ஓரளவு இருக்க வேண்டும். ஆனால், வினையூக்கியே வினையாகி போகாமல் பார்த்து கொள்ள வேண்டும். ரேட்-விகிதங்கள் போன்று பணவீக்கத்தை பல வழிகளில் கட்டுபடுத்தலாம். ஆனால், பணவீக்கம் (-)ஆக (எதிர்மறையாக) போனால், அதை கட்டுபடுத்துவது மிக கடினம் - நல்லவேளையாக அது (-)ஆக பொதுவாக செல்வதில்லை.

அடிப்படையில் பொருளாதாரம் என்பது வெறும் பண்டம் மாற்று முறையே - பொருள்களை, சேவைகளை (Service) ஒருவருக்கொருவர் மாற்றி கொள்ளுதல். இது ஒழுங்காக நடந்தால், ஒவ்வொருடைய வாழ்வும் பயனடைகின்றது. அதுவே பொருளாதார வளர்ச்சி. இதிலே பணம் ஒரு ஊடகமாக பயன்படுகின்றது. அதன் மதிப்பு பணபுழக்கம் எந்தளவு உள்ளது என்பதை பொருத்தது (எந்த அளவு நாம் அச்சிட்டு வெளியிடுகின்றோம்). பணபுழக்கம் அதிகமானால் பணவீக்கம் அதிகமாகும் - அதாவது பணத்தின் மதிப்பு குறையும். ஏனெனில் பணபுழக்கம் அதிகமாவதாலோ, குறைவதாலோ, அடிப்படையான பண்டம் மாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் சொன்னது போல், ஒன்றின் விலை அதன் உற்பத்தி மற்றும் தேவையை பொருத்தது. அந்த விலையை பணமாக நிர்ணயிக்கின்றோம். அது பணத்தின் மதிப்பை பொருத்தது. இங்கு, மக்களின் வாங்கும் சக்தி எப்படி உயருகின்றது? (அடிப்படையில் எல்லாம் பண்டம் மாற்றம் தானே) அதற்கு காரணம் பொருளாதார வளர்ச்சி.

ஆ.ஞானசேகரன் said...

//CorTexT said...

பணவீக்கம் ஒரு பொருளாதார வினையூக்கி மாதிரி. நீங்கள் சொன்னது போல், அது ஓரளவு இருக்க வேண்டும். ஆனால், வினையூக்கியே வினையாகி போகாமல் பார்த்து கொள்ள வேண்டும். ரேட்-விகிதங்கள் போன்று பணவீக்கத்தை பல வழிகளில் கட்டுபடுத்தலாம். ஆனால், பணவீக்கம் (-)ஆக (எதிர்மறையாக) போனால், அதை கட்டுபடுத்துவது மிக கடினம் - நல்லவேளையாக அது (-)ஆக பொதுவாக செல்வதில்லை.//

ம்ம்ம் உண்மைதான் பணவீக்கம் (-) ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சென்ற ஆண்டு இந்தியாவின் பணவீக்கம் பூச்சியத்தையும் தொட்டது அதுவும் ஆபத்தான நிலைதான்.///அடிப்படையில் பொருளாதாரம் என்பது வெறும் பண்டம் மாற்று முறையே - பொருள்களை, சேவைகளை (Service) ஒருவருக்கொருவர் மாற்றி கொள்ளுதல். இது ஒழுங்காக நடந்தால், ஒவ்வொருடைய வாழ்வும் பயனடைகின்றது. அதுவே பொருளாதார வளர்ச்சி. இதிலே பணம் ஒரு ஊடகமாக பயன்படுகின்றது. அதன் மதிப்பு பணபுழக்கம் எந்தளவு உள்ளது என்பதை பொருத்தது (எந்த அளவு நாம் அச்சிட்டு வெளியிடுகின்றோம்). பணபுழக்கம் அதிகமானால் பணவீக்கம் அதிகமாகும் - அதாவது பணத்தின் மதிப்பு குறையும். ஏனெனில் பணபுழக்கம் அதிகமாவதாலோ, குறைவதாலோ, அடிப்படையான பண்டம் மாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் சொன்னது போல், ஒன்றின் விலை அதன் உற்பத்தி மற்றும் தேவையை பொருத்தது. அந்த விலையை பணமாக நிர்ணயிக்கின்றோம். அது பணத்தின் மதிப்பை பொருத்தது. இங்கு, மக்களின் வாங்கும் சக்தி எப்படி உயருகின்றது? (அடிப்படையில் எல்லாம் பண்டம் மாற்றம் தானே) அதற்கு காரணம் பொருளாதார வளர்ச்சி.///

அடிப்படை பொருளாதாரம் பண்டம் மாற்றில்தான் இருக்கின்றது. அதிலும் மிக முக்கியமாக உணவு பொருளில் இருக்கின்றதை உணர வேண்டும். இந்த வருடம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ ரேட் அதிகபடுத்துகின்றார்கள். அது எந்த அளவிற்கு கட்டுப்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்...


மிக்க நன்றீஸ்....