"ஒனறுபட்ட முயற்சி ஒப்பில்லா வெற்றி!" என்ற சொல்லழகிற்கு எற்றது போல திருச்சி மாவட்டம் துப்பாக்கித்தொழிற்சாலை நண்பர்கள் ஒன்றுப்பட்ட முயற்சியாக மணடல அளவிளான கால்பந்து போட்டி 2011 ஆகஸ்டு 18 முதல் 21 வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் நேற்று (21.08.2011) நடைபெற்ற கடைசி நாள் இறுதி போட்டி ( JAMAL MOHAMED COLLEGE TRICHY ) ஜமால் முகமது கல்லூரி திருச்சி அணியும், (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணியும் மோதியது. அதற்கு முன் மூன்றாம் பரிசுக்காண போட்டி M.A.M. TIGER திருச்சி அணிக்கும், NATIONAL COLLEGE திருச்சி அணிக்கும் நடைபெற்று மூன்றாம் பரிசை M.A.M. TIGER திருச்சி அணி தட்டி சென்றது.
கடைசிநாள் பரிசளிப்பு விழாவிற்கு திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு பா.குமார் Bsc,. B.L., MP. அவர்களும் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு S.செந்தில் குமார் D.E.E.E., M.L.A. அவர்களும் மற்றும் கும்பகுடி திரு T. கோவிந்தராஜ் A.D.M.K. தலைவர் அவர்களும் விழாவை சிறப்பித்து பரிசுகளும் வழங்கினார்கள்.... விழா எதிர்பார்த்த அளவிற்கு மேல் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சியான விடயம். விழாவின்பொழுது "திரு பா.குமார் Bsc,. B.L., MP. அவர்கள் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு ஊக்கபடுத்தும் விதமாக எல்லா உதவிகளையும் கேளுங்கள் செய்ய நானும் இந்த அரசும் தயாராக இருக்கின்றது" என்று கூறினார்....
முதல் பரிசுக்காண இறுதி ஆட்டத்தில் தன்னை எதிர்த்து விளையாடிய (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணிணரை 2:1 என்ற புள்ளி கணக்கில் ( JAMAL MOHAMED COLLEGE TRICHY ) ஜமால் முகமது கல்லூரி திருச்சி அணி வெற்றிப்பெற்றது.
இரண்டாம் பரிசை (SPORTS HOSTEL TRICHY) விளையாட்டு விடுதி திருச்சி அணி தட்டி சென்றது....
மூன்றாம் பரிசு M.A.M. TIGER திருச்சி அணி எடுத்து சென்றது...
விழா சிறப்பாக அமைந்தது ரசிகர்கள்தான் முதல் காரணம்..... இருப்பினும் விழா குழுவினரின் உழைப்பை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.... மேலும் இது போன்ற கால் பந்து போட்டிகள் நடத்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்......
All Photos By
Lighthouse photo
Trichy-620026.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
மேலும் இந்த நான்கு நாள் நடைபெற்ற விளையாட்டுகளின் சிறப்பான புகைப்படம் இன்னும் சில தினத்தில் கண்டதும் சுட்டதும் என்ற தளத்தில் காணலாம்