திருச்சியில் இன்று (16.09.2011) தீ விபத்து.....
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில்யுள்ள ஹோட்டல் சித்திரா கட்டிடத்தில் இன்று (16.09.2011) மாலை 4.30 மணி அளவில் நான்காவது மாடியில் தீ ஏற்பட்டு புகை வெளிவரத் தொடங்கியது.. அதனை தொடர்ந்து தீயணைப்பு மையத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மாலை 4.45 முதல் இரவு 7.50 வரை போராடி அணைத்தனர். தீக்காண காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் கட்டத்தில் பழைய கட்டில் மற்றும் மெத்தைகள் இருந்ததால் தீ அணைப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. நான்காவது மாடி என்பதால் தீ அணைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அந்த அளவிற்கு வசதிகள் திருச்சி தீயணைப்பு மையத்தில் இல்லை என்றே தெரிகின்றது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி அணைத்தனர். அதில் ஒரு வீரர் 10 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டார், அவரின் சேவையின் காரணத்தாலும் தலை கவசம் அணிந்த காரணத்தாலும் அந்த விபத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்..... தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குடி நீர் வண்டிகளும் நீருக்காக பயன்படுத்தப்பட்டது.
தெரிந்துக்கொள்ள வேண்டியது.....
தீவிபத்தை தவிற்க முன்னேற்ப்படுகள் செய்யப்பட வேண்டும்..
தீயணைப்பு சிறு கருவிகள் பெரிய கட்டிடங்களில் பார்வையில் வைக்கப்பட வேண்டும்...
பெரிய கட்டிடங்களில் வாயில்கள் மற்றும் மாடிப்படிகள் வசதியாகவும் பார்வை படும்படியாகவும் இருக்க வேண்டும்...
தீயணைப்பு வண்டியுடன் மருத்துவ அம்புலன்ஸ்சும் வரவேண்டும்...
அவசர வழிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்....
மாடிக்கட்டிடங்களில் தீ வண்டி தண்ணீர் குழாய்கள் இணைக்க வசதியாக தண்ணீர் குழாய்கள் அமைத்தால் விபத்தை காப்பாற்ற வசதியாக இருக்கும்...
மேலும் புகைப்படங்கள் பார்வைக்காக..........
புகைப்படம் அணைத்தும் செல் போனில் எடுக்கப்பட்டது...
All Photos By
"Lighthouse photos"
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
Friday, September 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//CorTexT said...
Good information!//
ம்ம்ம்ம்ம்ம்....!
ஒரு பத்திரிக்கையாளன் போல தகவலை புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ஞானா வணக்கம் ,
உயிர் சேதம் இல்லாமல் போனதே அதுவரை கடவுளுக்கு நன்றி .பகிர்வு அருமை .நமக்கும் பத்திரிகையாளர் போல் ID CARD இருந்தால் உள்ளே பல விசயத்தில் அருகாமையில் படங்கள் எடுக்கலாம் .நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் .உங்கள் மூலமாக யாராவது முயற்சிக்கலாம் .பத்திரிகையாளர் சங்கத்தில் நம்மையும் சேர்த்துக்கொண்டால் நலம் யாராவது உதவுவார்களா ?
அன்புடன் ,
கோவை சக்தி
//! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
ஒரு பத்திரிக்கையாளன் போல தகவலை புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்//
வணக்கம் நண்பா....
மிக்க நன்றிங்க
// sakthi said...
ஞானா வணக்கம் ,
உயிர் சேதம் இல்லாமல் போனதே அதுவரை கடவுளுக்கு நன்றி .பகிர்வு அருமை .நமக்கும் பத்திரிகையாளர் போல் ID CARD இருந்தால் உள்ளே பல விசயத்தில் அருகாமையில் படங்கள் எடுக்கலாம் .நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் .உங்கள் மூலமாக யாராவது முயற்சிக்கலாம் .பத்திரிகையாளர் சங்கத்தில் நம்மையும் சேர்த்துக்கொண்டால் நலம் யாராவது உதவுவார்களா ?
அன்புடன் ,
கோவை சக்தி//
வாங்க சக்தி நலமா?
உங்களின் எண்ணம் எனக்கும்.. அப்படி ஒரு அனுமதி கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
நன்றிங்க சக்தி
Post a Comment