வேண்டாம்! வேண்டாம்!.... சிதிக்க ஒரு துளி!
நேற்று புது டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பலி........ 76 பேர் படுகாயம். அதை பெருமையாக , "ஹர்கத் - அல் - ஜிகாதி இஸ்லாமி' என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
மேலும் நம் நாட்டில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகள் (நன்றி தினமலர்)
93 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.
1998 பிப்., 14: கோவையில் 11 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 200 பேர் காயம்.
1998 பிப்., 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி.
2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம்.
ஆக., 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜாவேரி பஜாரில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம்.
2005 அக்., : டில்லியின் மார்க்கெட் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி.
2006 மார்ச்: வாரணாசியில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவிலில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி.
2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயம்.
2006 செப்., : மாலேகான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி. 100 பேர் காயம்.
2007 பிப்., 19: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 66 பயணிகள் பலி.
2007 ஆக., : ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலி.
2008 மே 13: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் பலி.
ஜூலை 25: பெங்களூரு குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜூலை 26: ஆமதாபாத்தில்
நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 57 பேர் பலி.
செப்., 13: டில்லியில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.
அக்., 21: மணிப்பூரில் போலீஸ் கமாண் டோ காம்ப்ளக்சில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலி.
நவ., 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலி.
2010 பிப்., 13: புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலி.
2011 ஜூலை 13: மும்பை ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலி.
செப்., 7: டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி. 76 பேர் காயம்.
மக்கள் கருத்து: இப்படி பட்ட கோர சம்பவங்கள் கண்டிப்பாக கண்டிக்கக்கூடியது. அப்படி செய்த நாசகாரர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பல கோடி செலவு செய்து பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் மனிதபிமான அடிப்படையில் செய்து தரவேண்டும். அப்பொழுதுதான் உலக நாடுகள் நம்மை பாராட்டும்.... அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, மரண தண்டனை கண்டிப்பாக கொடுக்ககூடாது.... ஏனனில் "அவர்களால் மரணித்தவர்கள் அதிகம் இருக்க மேலும் எதற்கு மரணம்". இந்தியாவில் மரணதண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்... அந்த அதிகாரம் நாச வேலைக்காரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.......
வாழ்க ஜனநாயகம்!
வாழ்க பாரதம்!......
என்ன? கொடுமை சரவணன் சார்!................
ஆ.ஞானசேகரன்
Thursday, September 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
குற்றத்திற்கான தண்டனை மற்றும் மரணதண்டனை குறித்து உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
அன்புள்ள ஞானா,
தண்டனைகள் கடுமை ஆனால் தான் குற்றங்கள் குறையும் என்பது என் தனி கருத்து.மரண தண்டனை அவசியம் வேண்டும்.மரண தண்டனை இல்லாவிட்டால் பயம் மறைந்து போகும்
நட்புடன் ,
கோவை சக்தி
//sakthi said...
அன்புள்ள ஞானா,
தண்டனைகள் கடுமை ஆனால் தான் குற்றங்கள் குறையும் என்பது என் தனி கருத்து.மரண தண்டனை அவசியம் வேண்டும்.மரண தண்டனை இல்லாவிட்டால் பயம் மறைந்து போகும்
நட்புடன் ,
கோவை சக்தி//
உண்மைதான் சக்தி....
சின்ன தண்டிப்புகள் இல்லாமல் நாம் வளர்ந்ததே இல்லை...
Post a Comment