_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, February 8, 2009

சொர்க்கம் என் கைகளில்!...

சொர்க்கம் என் கைகளில்!...
பாட்டினா கதை சொல்லனும், அப்படிதான் என் பாட்டியும் அப்ப அப்ப கதை சொல்லுவாங்க இல்லை கதை சொல்ல சொல்லி அடம் பிடிப்பேன்... என் பாட்டி கதை சொல்லனும்னா நான் ங்ங்ங்ங்.. சொல்லனும். நான் ங்ங்ங்ங்.. சொல்லனா நான் தூங்கிடேனு அர்த்தம். எப்பவும் இப்படிதான் என் கதை கேட்கும் நேரம். பாட்டி சொன்ன கதைனா நல்லதங்காள் கதை, அர்ச்சந்திரன் கதை அப்பறம் சாமி கதைகள். சாமி கதைனா நான் கொஞ்சம் ங்ங்ங்ங்... அதிகமா சொல்லுவேன். சாமிக்கு நல்லது செய்யுறவுங்களதான் புடிக்கும் என்று சொல்லும் பாட்டியிடம் நான் எப்பவும் கேட்கும் கேள்வி தப்பு செஞ்சா என்ன பன்னும் சாமி கேட்பேன். தப்பு பன்னுறவுங்களை சாமி அவுங்க இறந்த பிறகு நரகத்தில் போடுவார்கள் என்பாள். எப்பவும் நல்லது செய்தால் நாம் சொர்க்கத்திற்கு போகாலாம் என்றும் சொல்லுவாள் என் பாட்டி....

எனக்கு நரகம்னா பயம் அதிகம் ஏனா நரகத்தைப்பற்றி பாட்டி சொன்ன விபரதான். தப்பு பன்னுனவுங்களுக்கு நரகத்தில தண்டனை கொடுப்பார்களாம். தப்பு ஏற்றமாதிரி கொதிக்கும் எண்ணையில் போட்டு தாளிப்பது, கொடிய மிருகங்களை ஏவி விடுவது, உடல் உறுப்புகளை முண்டமாக்குவது, பசி, நோய் என எல்லா வகை துன்பங்கள் கொடுப்பார்களாம். எனக்கு பயம் வரும் ஆனா ஒன்னும் புரியாது. அப்போ சொர்க்கதில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்பேன், பாட்டி அதற்கு சொர்கத்தில பசி இருக்காது, நோய் இருக்காது, எந்த கடினமும் இருக்காது கடவுளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று கூறுவார்...

இப்படிதான் நரகம் அப்பறம் சொர்க்கம் என்று கானாத ஒன்றை நாம் நம்பும்படி இன்னமும் காலம் கடத்திக்கொண்டே இருக்கின்றோம். அப்பறம் சில கேள்விகள் என் மனதில் தோன்றிய காலங்கள் அர்ச்சந்திரன் மாதிரி உண்மை பேசி எந்த துண்பதிலும் நல்லதே செய்து காத்திருந்த சொர்க்கம் என்னா என்றால் பசி இல்லா உலகம் உழைபே இல்லா உலகமுனு நினைச்சா! புரியலங்க ...... இந்த பூமியை விட சிறந்த சொர்க்கம் இருக்கா என்னால ஒத்துக்க முடியலங்க! இதுதான் சொர்க்கமா தோனுது. எனக்கு பசிக்கனும் அதனால உழைக்கனும் இதுல கிடைக்குற மகிழ்சியை பாட்டி சொன்ன சொர்க்கத்தில இருக்கா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இப்படி சொர்க்கமா இருக்குற பூமியை சொர்க்கமாவே இருக்க நாம தாங்க நல்லது பன்னனும். இந்த சொர்க்கத்தை விட்டு விட்டு எங்கேயோ இருக்கா இல்லையா என்று தெரியா சொர்க்கத்தை காண இந்த வாழ்நாள் எல்லாம் தேடிகொண்டே இருப்பதுதான் தெரியலங்க.

நல்லது பன்னனும் என்பதில் எனக்கு எந்த வித கருத்து வேறுபாடு இல்லை. அதற்காக பகுத்தறிவை வீணடிக்கனுமா? என்பதில்தான் என் கேள்வி. ஒவ்வொறு வலியும் நமக்கும் தெரியனும், அந்த வலி நம்மால் மற்றவர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்வதுதான் நாம் காணும் சொர்க்கம் நம் கைகளில். நாமக்கு பசிக்கனும் பசிக்காக உழைக்கனும் என்பதே சொர்க்கம் அதற்காக மற்றவனை அழிக்கனும் என்பதில்தான் நரகத்தை நம்ம பூமிக்கு விட்டு செல்கின்றோம்.
போதை பொருள் கடத்துவது மகா பெரிய குற்றம் எல்லா நாடுகளிலும் சட்டம் கடுமையாக தண்டனை கொடுக்கப்படுகின்றது. அதனால் கட்டுப்படுத்த முடிகின்றதே தவிற முழுமையாக தடுக்க முடியவில்லை. இதேதான் நரகத்தின் பயமும், இந்த நரகத்தின் பயம் கண்டிப்பாக மனிதனை பயம் கொள்ள வைக்க முடியாது. நம் அருகில் உள்ள சொர்கத்தை அனுபவிக்க சொல்லிக் கொடுத்தாலே போதும் தவறுகள் திருத்தப்படலாம். இந்த சொர்க்க பூமியில் எல்லோரும் மகிழ்ச்சியுடம் வாழ முடியும் என்பதே என் எண்ணங்கள். பூமியின் உணர்வுகள் புசிக்க கற்றுகொண்டால் சொர்க்கத்தை தேடி செல்ல வேண்டியதில்லை சொர்க்கம் நம் கைகளில் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதே எண்ணங்கள்!.......

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,...
ஆ.ஞானசேகரன்.

2 comments:

வால்பையன் said...

//பூமியின் உணர்வுகள் புசிக்க கற்றுகொண்டால் சொர்க்கத்தை தேடி செல்ல வேண்டியதில்லை சொர்க்கம் நம் கைகளில் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதே எண்ணங்கள்!.......//

உண்மை

உண்மை பேசுவது,
நேர்மையாக இருப்பது போன்ற தனிமனித ஒழுக்கங்கள் சொர்க்கத்திற்கு போக அல்ல, இந்த பூமியை சொர்க்கமாக்க!

ஆ.ஞானசேகரன் said...

//உண்மை

உண்மை பேசுவது,
நேர்மையாக இருப்பது போன்ற தனிமனித ஒழுக்கங்கள் சொர்க்கத்திற்கு போக அல்ல, இந்த பூமியை சொர்க்கமாக்க!//

நன்றி

நன்றி வால்பையன் கருத்துக்கும் வருகைக்கும்!!!!!