_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, February 9, 2009

சும்மானாச்சிக்கு!....

சும்மானாச்சிக்கு!....
நாம் பேசுர வார்த்தைகளில் பல வார்த்தைகள் தமிழில் இருக்கின்றதா? என்றால் இல்லைதான் அதற்காக அந்த வார்த்தைகளை பேசாமல் விட்டுவிட்டால் நாம் பேசுவது செயற்கையான தோற்றத்தை கொடுக்கும் என்பதே என் எண்ணங்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளில் "சும்மா"வும் ஒன்று இந்த சும்மா இல்லாமல் சும்மா எதையும் பேசுவது சும்மா சொல்லகூடாது பேசுவதே கடினம்தான். இப்படிதான் சென்றப்பதிவில் முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?... என்ற பதிவில் கொஞ்சம் குத்தலாக இருக்கட்டுமே என்று இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் என்று மெளனம் சாதித்த இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கம் எண்ணத்தில்தான் முத்துகுமாரர் நடந்த சம்பவம்
- என்று எழுதியதை பார்த்த நண்பர் ஒருவர் இந்த வார்த்தை பேச்சில் உள்ள தமிழாக உள்ளது இதற்கு பதிலாக சரியான தமிழ் சொல்லை பயன் படுத்தி இருக்கலாமே என்று கூறினார். அவர் கூற்று சரி என்றாலும், நான் அவரிடம் அந்த இடத்தில் கொஞ்சம் கடுமையாக இருக்க இந்த சும்மானாச்சிக்கும் இருந்தால் நல்லா இருக்கும் என்று சும்மானாச்சிக்கும் சும்மா போட்டுவிட்டேன் சும்மா இருக்கட்டுமே இந்த சும்மானாச்சிக்கும் என்றதும், அவரும் சும்மா போய்விட்டார். இப்படி பல வார்த்தைகளை சும்மா பயன் படுத்திதான் வருகின்றோம்.

இப்படிதான் கோவையில் இருக்கும் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டு இருக்கையில் " எச்சாதானே" இருக்கு என்னிடம் கொடுங்கள் என்றார்" எனக்கு முதலில் புரியவில்லை பிறகு எச்சா என்றால் அதிகமாகவா என்றேன். அவர் ஆம் என்றார், அது ஆங்கில வார்த்தை எக்ஸ்ட்ரா (extra) போல் உள்ளதே ஆங்கில வார்த்தை மறுவி வந்துள்ளத்தா? என்று கேட்டேன். தெரியவில்லை கோவையில் என் பாட்டி முதல் இந்த வார்த்தையை பயன் படுத்துகின்றோம் என்றார். அதை சரி பார்க்கும் எண்ணத்தில் மற்றொரு கோவை நண்பரிடம் நான் சென்று வேண்டும் என்றே, எச்சா எதாவது இருக்கா? என்று கேட்டேன், அவரும் இல்லை என்று சாதாரணமாக சொன்னதால் அந்த வார்த்தை அவர்களிடம் பழகியுள்ளதை புரிந்துக்கொள்ள முடிந்தது. மேலும் அவரிடம் எச்சா என்ற வார்த்தையை சரிப்பார்க்கதான் நான் கேட்டதாக சொன்னதும் அவர் என்னிடம் சில கேள்விகளாக விளக்கமும் சொன்னார். அதேபோல் காய்ச்சல் என்பது தமிழ் மொழி என்றால் ஜுரம் என்பது என்ன மொழி? மருத்துவமனை என்பது தமிழ் என்றால் ஆஸ்பத்திரி என்பது என்ன மொழி? .. என்று கேட்டதும் ம்ம்ம்ம்ம்ம் என்று தலையாட்டினேன்.

பிறகு எம்டன்மகன் எந்த மொழி என்று கேள்விகளுடன் ஒரு விளக்கமும் சொன்னார். எனக்கும் சரிதான் என்றே தோன்றியது. இரண்டாம் உலகபோரில் ஜெர்மன் நாட்டு சர்வாதிக்காரன் ஹிட்லர் தலைமையில் இந்தியாவின் கடலோரத்தில் M10என்ற நீர்முழ்கி கப்பல் காத்திருந்து அந்த கப்பலினால் இந்தியாவிற்கு எதேனும் ஆபத்தா? என்று நடுங்கிக் கொண்டு இருந்தார்களாம், பிறகு அந்த கப்பலால் ஆபத்தின்றி கப்பல் திரும்பி சென்று விட்டதாம். இந்த பயம்தான் பயன்காட்டும் அப்பாக்களுக்கு எம்டன் என்று கூறுகின்றார்கள். என்று கூறிய விளக்கமும் எனக்கு சரியாகத்தான் படுகின்றது. இதில் மாற்று விளக்கம் இருந்தால் ஆய்வாளர்கள் யாரேனும் சொன்னால் நலமாக இருக்கலாம்..

4 comments:

திகழ்மிளிர் said...

பல சொற்களை நினைவு படுத்திற்கு
நன்றிங்க

வாழ்த்துகள்

சும்மானாச்சி என்பது இன்னும் கிராமங்களில் வழக்கில் உள்ள சொல் தான். அது மட்டுமல்ல இந்த வாக்கியத்தில் (இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் ) அந்த சொல்லைப் பயன்படுத்தி காரணத்தால் அழுத்தம் எச்சாக இருப்பதைக் காட்டுகிறது.

ஆ.ஞானசேகரன் said...

//திகழ்மிளிர் said...
பல சொற்களை நினைவு படுத்திற்கு
நன்றிங்க

வாழ்த்துகள்

சும்மானாச்சி என்பது இன்னும் கிராமங்களில் வழக்கில் உள்ள சொல் தான். அது மட்டுமல்ல இந்த வாக்கியத்தில் (இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் ) அந்த சொல்லைப் பயன்படுத்தி காரணத்தால் அழுத்தம் எச்சாக இருப்பதைக் காட்டுகிறது.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!....அதேபோல் உங்களின் உங்களின் தமிழார்வமும் தெரிகின்றது...

சொல்லரசன் said...

உங்களுக்கு ஞானம் அதிகங்கோ

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...
உங்களுக்கு ஞானம் அதிகங்கோ
//
வணக்கம் சொல்லரசன், உங்கள் வருகை என் ஞானத்தை வல்லமையக்கட்டும்