வாடிக்கையாளர்களுக்கு ஒரு வேடிக்கை...
சென்றமுறை திருச்சிக்கு சென்றபொழுது என் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றேன். அவர் வீட்டில் அப்பொழுதுதான் BSNL Broadband எடுத்திருந்தார். நண்பரின் பையன் மடிக்கணனிக்கு BSNL அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட wireless network ADSL router மூலம் தொடர்புக்கு முயற்சி செய்துபார்த்து முடியாமல் என்னிடம் கேட்டார். அதற்கான setting எனக்கும் தெரியவில்லை பின் திருச்சியில் இருக்கும் BSNL அலுவலகதிற்கு என் நண்பருடன் சென்றேன். அங்கு பார்த்த வாசகம் என்னை கவர்ந்தது. உடனே என் அலைபேசி புகைப்பட சாதனத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். புகைப்படம் தெளிவாக வரவில்லை இருப்பினும் அதன் வரிசையை கீழேக் கொடுத்துள்ளேன்.

நமது வாடிக்கையாளர்
நமது நிலையத்திற்கு வருகை தருபவர்கள்
வாடிக்கையாளரே மிகவும் முக்கியமானவர்
அவர் நம்மை சார்திருக்கவில்லை
நாம் அவரை சார்ந்துள்ளோம்.
அவர் நமது வேலைக்கு இடையூராக இல்லை
அவர் நமது வேலையின் உயிர் நாடி
அவர் நமது தொழிலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல
அவர் நம்து தொழிலின் ஒரு பகுதி
நாம் அவருக்கு பணிபுரிவதன் மூலம் அவருக்கு
எந்த ஒரு பயனும் செய்வதில்லை
மாறாக நாம் அவருக்கு சேவை செய்ய
அவர் நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளார்.
-மகாத்மா காந்தியடிகள்
மேற்கண்ட வாசகம் என்னை கவர்ந்தது மட்டுமில்லை மகிழச்செய்தது. பின் அங்கு இருக்கும் அலுவலரை அனுகி எங்கள் சந்தேகங்களை கேட்டோம். அதற்கு அவர் இதை Techinical support க்கு தொடர்புக் கொள்ளுங்கள் என்று தொலைபேசி எண்ணும் கொடுத்தார். பின்னர் அந்த எண்ணுக்கு தொடர்புக் கொண்டோம், அவர்கள் எதுவும் சொல்லாமல் உங்கள் அருகில் உள்ள Engeneer ஐ தொடர்புக்கொண்டு சரிசெய்துக்கொள்ளவும் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு BSNL அலுவலகத்தில் பார்த்து படித்த வாசகம் கண்முன் ஓடியது (நமது வாடிக்கையாளர்கள்..........................)
அதன் பின் ஒரு நண்பர் மூலம் சரிசெய்தாகிவிட்டது. தற்பொழுது இணையத்தில் பார்த்தபொழுது அதற்கான செயல்முறை விளக்கம் கிடைத்தது அதைப்பார்க்க சுட்டியை சுட்டவும்
என்னைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் தேவைகளை நிர்வாகம் இன்னும் பூர்த்திச்செய்யவேண்டும் என்றே தோன்றுகின்றது.
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்