_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, May 19, 2009

அன்பு மக்களே! நம்பமுடியாத பதிவர் சந்திப்பு திருச்சியில்(13-05-2009)

அன்பு மக்களே! நம்பமுடியாத பதிவர் சந்திப்பு திருச்சியில்(13-05-2009)

அன்பு வலைப்பெரு நண்பர்களே! வணக்கம் வணக்கம்...
இரண்டு வார விடுமுறைக்குப்பின் உங்களை சந்திப்பதில் ஆணந்தம், அதற்குள் ஆதாரமற்ற தகவல்கள் நம்மை மனம் வெம்பச் செய்கின்றது. எப்படியானாலும் நம்முடைய உறவுகள் ரணப்படுவதை நம்மால் சீரணிக்க முடியாது......

இந்த இரண்டுவார விடுமுறையில் திருச்சியில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பில் கலந்துக்கொண்டு நண்பர்களை பார்த்து பழகியதில் இன்றுவரை என்னை மகிழச்செய்கின்றது. இந்த சந்திப்பை பற்றிய பதிவுகள் நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்துவிட்டார்கள்......
நண்பர் பொன் வாசுதேவன் அகநாழிகை வாழிப வயோதிக அன்பர்களே
நண்பர் கார்திகைப் பாண்டியன் பொன்னியின் செல்வன் பட்டையக் கிளப்பிய பதிவர் சந்திப்பு - நன்றி..!!!
நண்பர் டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி திருச்சி பதிவர் சந்திப்பு-படங்கள்!!

இருப்பினும் என் எண்ணங்களையும் பதிந்துவிடலாம் என்ற ஆசைகள்.. நண்பர் கார்த்திகைப் பாண்டியனும் நண்பர் சொல்லரசனும் என்னை இந்த பதிவர் சந்திப்புக்கு அலைபேசியில் அழைத்தார்கள். நண்பர் பொன். வாசுதேவன் மற்றும் ஆதவாவும் வருதாக கூறினார்கள். நானும் வருகின்றேன் என்றேன், எனக்காக திருச்சியில் 13-05-2009 அன்று சிறப்பாக ஏற்பாடு செய்து மேலும் ஒரு மகிழ்ச்சியை கொடுத்த நண்பர்களே நன்றிபா!!! கடைசி நேரத்தில் ஆதவா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலவில்லை என்று அலைபேசியில் சந்திப்பில் கலந்துக்கொண்ட அவரின் ஆர்வம் பாராட்டக்கூடியது. மேலும் நண்பர்கள் சக்கரை சுரேஷ், குமாரை நிலாவன் , நையாண்டி நைனா , ஆ.முத்துராமலிங்கம் தாங்கள் வர இயலாத சூழ்நிலையில் அலைபேசியில் தொடர்புக்கொண்டு வாழ்த்துகளை அள்ளி வழங்கினார்கள். அவர்களின் இந்த ஆர்வம் எல்லொரையும் மகிழ்வூட்டியது.

நண்பர் வாசுவும் நண்பர் கார்த்திகைப் பாண்டியனும் முதல்நாள் இரவே திருச்சி வந்து தங்கிவிடார்கள். அதன் பின் சொல்லரசன் , தமிழ் மதுரம் - கமல், தமிழ்த்துளி - டாக்டர் தேவன்மாயம், இளைய கவி - கணேஷ் குமார் இவருடன் அவர் நண்பரும் வந்திருந்தார். இவர்களின் இன்பவெள்ளத்தில் நானும் கலந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சிதான் போங்க!!!!!!! காலை 10 மணியளவில் தொடங்கிய சந்திப்பு மதிய உணவிற்குப் பின் மாலை 5 மணி வரை நீண்டதில் சலிப்பே வரவில்லை. மெல்போன் கமல் புதிதாக மணம்முடித்த மனைவியுடன் வந்ததால் உடன் சென்றுவிட்டார். மதிய உணவிற்கு பின்னர் நண்பர் கணேஷ் விடைப்பெற்றார். கடைசியாக மாலை 5 மணிக்கு எல்லோரும் பிரியா விடையில் அவரவர் வீடு சென்றோம். சந்திப்பில் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துக்கொண்டனர்,பின் பல விடயம் பேசப்பட்டது.

*************************************************************************************
மேலேயுள்ள புகைப்படம் நண்பர் பொன்.வாசுதேவன் அகநாழிகை இவரின் பேச்சு எளிமையாக இருந்தது, அதே போல் பார்வைக்கும் பழகுவதற்கும் நல்ல நண்பராக இருந்தார். சந்திப்பில் ஒரு கவிதையும் வாசித்தார். அவரைப்பற்றி அவரே கூறுகின்றார்.... பாருங்கள் காணொளியை.....
அதேபோல் நான் கேட்ட கேள்விக்காக (ஏன் கவிதைகளில் கடினமான சொற்கள் பாவிக்கின்றார்கள்?) ஒரு கவிதையும் சொல்லி விளக்கினார்; பழக்கத்தில் இல்லாததால்தான் அந்த சொற்கள் கடினமாக தெரிகின்றது என்றும் புரிந்துக்கொண்டால் எழிதுதான் என்றார்.

************************************************************************************


மேலேயுள்ள புகைப்படம் டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி , இவர் ஒரு மருத்துவர் காரைக்குடியை சேர்ந்தவர். நல்ல கலகலப்பாக பேசுகின்றார் அதேபோல் மற்றவர்களை பாராட்டுவதில் தயங்குவதில்லை.. அவரைப்பற்றி அவரே சொல்லுகின்றார் பாருங்கள் காணொளியை.......
***************************************************************************************

மேலேயுள்ள புகைப்படம் நண்பர் ஜேம்ஸ் சகாயராஜ் சொல்லரசன் திருச்சியில் வசித்தாலும் வேலை திருப்பூரில். அமைதியும் நிதானமும் உள்ள நண்பாராக காணப்பட்டார். பல முறை என்னுடன் அலைப்பேசியில் பேசியுள்ளார். அவரைப்பற்றி அவரே சொல்கின்றார் காணொளியில்

**************************************************************************************

மேலேயுள்ள புகைப்படம் நண்பர் மெல்ர்போன் கமல் தமிழ் மதுரம் இவர் ஒரு ஈழத்தமிழர் திருச்சியில் படிக்கும் தன்னுடைய முறைப்பெண்ணை மணம் முடித்துவிட்டு சந்திப்பில் தன் மனைவியுடன் வந்திருந்தார். இளையவர் வானொலி அறிப்பாளாராக பகுதிநேரம் பணியுடன் படிக்கின்றார். இவரைப்பற்றி இவரே; காணொளியை பார்க்கவும்....

*************************************************************************************

மேலேயுள்ள புகைப்படம் நண்பர் கார்த்திகைப் பாண்டியன் பொன்னியின் செல்வன் திருமணத்திற்காக காத்திருக்கும் கல்லூரி ஆசிரியர். நல்ல கலகலப்பான பட்டையை கிளப்பும் நண்பர். சந்திப்பில் காமடியுடன் பேசியவர், மிமிக்கிரி செய்ய கூடியவர் என்றே நினைக்கின்றேன். இவருடனும் அலைபேசியில் பலமுறை பேசியுள்ளேன். அஜித்தின் விசிரி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகின்றார். பழக நல்ல நண்பர்.... அவரைப்பற்றி அவரே சொல்கின்றார் காணொளியில்...
*************************************************************************************

மேலேயுள்ள படம் நண்பர் கணேஷ் குமார் இளைய கவி . இவர் தமிழ்துளியில் முக்கிய பொருப்பில் இருக்கின்றார். துருத்துருவென பேசி எல்லோரையும் மகிழச்செய்யும் நல்ல நண்பர். இவருடன் இவர் நண்பரும் வந்திருந்தார் அவர் புகைப்படம் கீழேயுள்ளது. தொழில் நுட்பக்கோளாறுக் காரணமாக அவரின் காணொளி எடுக்க முடியவில்லை.***********************************************************************************

என்னைப்பற்றி நான் சொல்லும்பொழுது காணொளி கருவி என் கையில் இருந்ததால் காணொளி பிடிக்கமுடியவில்லை. கமல் பதிவில் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன். முடிந்தவரை பகிந்துக்கொண்டேன் என்று நம்புகின்றென்.

அன்புடன்,
ஆ.ஞானசேகரன்

47 comments:

பழமைபேசி said...

ஆகா... நானே நேர்ல வந்து உங்களையெல்லாம் பார்த்த மாதிரி இருக்கு... நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...
ஆகா... நானே நேர்ல வந்து உங்களையெல்லாம் பார்த்த மாதிரி இருக்கு... நன்றி!//

வணக்கம் பழமை,
உங்கள் வருகை மகிழ்ச்சி நண்பா!

துளசி கோபால் said...

தூள் கிளப்பி இருக்கீங்க போல்!!!!!

கோவி.கண்ணன் said...

ஆணந்தம் > ஆனந்தம்
எல்லொரையும் > எல்லோரையும்

மகிழ்சூட்டியது.> மகிழ்ச்சியூட்டியது அல்லது மகிழ்வூட்டியது

எழிமையாக > எளிமையாக

நுற்பக்கோளாருக் > நுட்பக்கோளாறு

- இதை சரி செய்துவிடுங்கள்

*****

//மெல்போன் கமல் புதிதாக மணம்முடித்த மனைவியுடன் வந்ததால் உடன் சென்றுவிட்டார்.//

நீங்களெல்லாம் திருமணம் ஆனப் புதிதில் அறையை விட்டே வெளியே வரவில்லை என்று கேள்வி. மெல்போன் கமல் வந்து சென்றதற்கே பாராட்டனும் !
:)

புதியவன் said...

பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டது ஞானசேகரன்...

ஆ.முத்துராமலிங்கம் said...

பெரும் மகிழ்ச்சி நண்பரே!
எல்லோரையும் அருகில் இருந்து பார்த்து போலவே இருந்தது.
இதில் காணொளிதான் சிறப்பு.
ரொம்ப நல்ல பகிர்வு.

உங்களுடன் பேசியதில் மிகவும் சந்தோசம் நண்பரே!

----------------------------------

ஒரு சின்ன வருத்தமான விசயம் (எனக்கு) திடீரென என் வலைப்பூ அழிந்து விட்டதாக வருகின்றது அது ஏனென்று தெரியவில்லை. இது ஏனென்று தெரிந்தால் நண்பர்கள் உதவுமாறுக் கேட்டுக் கொள்கின்றேன்.
_________________________________

thevanmayam said...

என்ன அருமையா தொகுத்து இருக்கீங்க!!
ஞான்ஸ்!!! வெல்டன்!!

ஆதவா said...

என்னால் காணொளி காண இயலாவிடினும் உங்கள் பதிவு காண்பவர்களுக்கு அக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உணர்வு ஏற்படும்.

சந்திப்பு குறித்து எத்தனை பதிவுகள் போட்டாலும் மனம் சந்தோஷமாகவும், (கலந்து கொள்ளவியலா பொறாமையாலும்) துள்ளுக்கிறது..

திகழ்மிளிர் said...

மகிழ்ச்சியாக இருக்கிறது
நன்றிகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான தொகுப்பு.. என்னால காணொளிகளை பார்க்க முடியல.. பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி நண்பா..

குடந்தை அன்புமணி said...

தங்களின் பதிவர் சந்திப்பு படங்கள் கண்டேன். மிக்க நன்றி! காணொலி காணமுடியவில்லை.

ஆ.ஞானசேகரன் said...

// துளசி கோபால் said...
தூள் கிளப்பி இருக்கீங்க போல்!!!!!//

வணக்கம் அம்மா,
உங்களின் வருகை மகிழச்செய்கின்றது..

ஆ.ஞானசேகரன் said...

நன்றி கண்ணன்,
சரி செய்துவிட்டேன் மீண்டும் நன்றி.

//நீங்களெல்லாம் திருமணம் ஆனப் புதிதில் அறையை விட்டே வெளியே வரவில்லை என்று கேள்வி. மெல்போன் கமல் வந்து சென்றதற்கே பாராட்டனும் !
:)//

உண்மைதான் என்னை வெளியில் விடவில்லை, தாங்கள் எப்படி என்று சொல்லுங்களே? இது மூடநம்பிக்கையா இல்லை புது மனைவியின் பாதுகாப்பிற்கா? எதுவாயினும் மெல்போன் கமலுக்கு பாராட்டுகள்

ஆ.ஞானசேகரன் said...

//புதியவன் said...
பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டது ஞானசேகரன்...//

நன்றி புதியவன்

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
பெரும் மகிழ்ச்சி நண்பரே!
எல்லோரையும் அருகில் இருந்து பார்த்து போலவே இருந்தது.
இதில் காணொளிதான் சிறப்பு.
ரொம்ப நல்ல பகிர்வு.

உங்களுடன் பேசியதில் மிகவும் சந்தோசம் நண்பரே!//
நன்றி நண்பா, உங்களுடன் பேசியதில் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.. நன்றி நண்பா

//ஒரு சின்ன வருத்தமான விசயம் (எனக்கு) திடீரென என் வலைப்பூ அழிந்து விட்டதாக வருகின்றது அது ஏனென்று தெரியவில்லை. இது ஏனென்று தெரிந்தால் நண்பர்கள் உதவுமாறுக் கேட்டுக் கொள்கின்றேன்.//
தெருவிளக்கு எனக்கு தெரிகின்றது நண்பா, மறுபடியும் முயன்று பாருங்கள்

ஆ.ஞானசேகரன் said...

// thevanmayam said...
என்ன அருமையா தொகுத்து இருக்கீங்க!!
ஞான்ஸ்!!! வெல்டன்!!//

நன்றி சார்... பாராட்ட தவறவில்லை பாராட்டுகள்...

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
என்னால் காணொளி காண இயலாவிடினும் உங்கள் பதிவு காண்பவர்களுக்கு அக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உணர்வு ஏற்படும்.

சந்திப்பு குறித்து எத்தனை பதிவுகள் போட்டாலும் மனம் சந்தோஷமாகவும், (கலந்து கொள்ளவியலா பொறாமையாலும்) துள்ளுக்கிறது..//

வாங்க ஆதவா,
காணொளி மின்னஞ்சலில் அனுப்புகின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

//திகழ்மிளிர் said...
மகிழ்ச்சியாக இருக்கிறது
நன்றிகள்//

நன்றி நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அருமையான தொகுப்பு.. என்னால காணொளிகளை பார்க்க முடியல.. பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி நண்பா..//

வாங்க கார்த்திகை,
முடிந்தால் நாளை மின்னஞ்சலில் அனுப்புகின்றேன்..

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...
தங்களின் பதிவர் சந்திப்பு படங்கள் கண்டேன். மிக்க நன்றி! காணொலி காணமுடியவில்லை//

நன்றி நண்பா,
காணொளி மின்னஞ்சலில் அனுப்ப முயற்சிக்கின்றேன்

மின்னுது மின்னல் said...

video அருமை :)


வாழ்த்துக்கள்

அறிவிலி said...

அடடே, நம்ம ஊர்ல பதிவர் சந்திப்பா? அருமை.

ஷண்முகப்ரியன் said...

இனிமையான உங்கள் எல்லோரின் நட்பும் மேலும் மேலும் செழிக்க எனது வாழ்த்துக்கள்,அனைவருக்கும்,ஞானசேகரன்.

குப்பன்_யாஹூ said...

My wish is not for comparisan or ranking. But to be honest this meet looks like better than Chennai bloggers meet.(may be because of the number is less than 10).

It looks natural and thanks for your sincere efforts to make it in video.

This is what I was stressing with all bloggers.

My humble request is next time when u plan for a blogger meet, try to have a laptop with webcam faciltiy (gtalk or yaho msgr) and it could be interactive form all bloggers acrorss world.

vinoth gowtham said...

கான்னோளியை காணும் பொழுதே கண்களில் ஒளி.
அருமையான தொகுப்பு நண்பரே..

vinoth gowtham said...

//But to be honest this meet looks like better than Chennai bloggers meet.(may be because of the number is less than 10).//

Yes.. u r rite..

In chennai bloggers, most of them are keeping some distance between new bloggers bcoz of their egoistic..

They are keeping their friendship between their famous circle only.

உமா said...

புகைப்படமெல்லாம் இவ்வளவு அருமையா போட்டிருக்கீங்க உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிதந்திடுங்க. இன்னும் முழுமையாக பார்க்கவில்லை பிறகு பார்த்துவிட்டு கருத்து எழுதுகிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

// மின்னுது மின்னல் said...
video அருமை :)


வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

அறிவிலி said...
அடடே, நம்ம ஊர்ல பதிவர் சந்திப்பா? அருமை.

ஆமாங்க அறிவிலி...
வணக்கம்.. மற்றும் நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...
இனிமையான உங்கள் எல்லோரின் நட்பும் மேலும் மேலும் செழிக்க எனது வாழ்த்துக்கள்,அனைவருக்கும்,ஞானசேகரன்//

மிக்க நன்றி சார்..

ஆ.ஞானசேகரன் said...

//குப்பன்_யாஹூ said...
My wish is not for comparisan or ranking. But to be honest this meet looks like better than Chennai bloggers meet.(may be because of the number is less than 10).

It looks natural and thanks for your sincere efforts to make it in video.

This is what I was stressing with all bloggers.

My humble request is next time when u plan for a blogger meet, try to have a laptop with webcam faciltiy (gtalk or yaho msgr) and it could be interactive form all bloggers acrorss world.//

மிக்க நன்றி நண்பரே. மெலும் உங்கள் ஆலோசனையும் நன்றாக உள்ளது.. மீண்டும் நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// vinoth gowtham said...
கான்னோளியை காணும் பொழுதே கண்களில் ஒளி.
அருமையான தொகுப்பு நண்பரே..//

நன்றி நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

/// vinoth gowtham said...
//But to be honest this meet looks like better than Chennai bloggers meet.(may be because of the number is less than 10).//

Yes.. u r rite..

In chennai bloggers, most of them are keeping some distance between new bloggers bcoz of their egoistic..

They are keeping their friendship between their famous circle only.//

கவலைவிடுங்கள் நண்பா,
நம்மை பொல நண்பர்கள் பலர் நமக்காக இருக்கின்றார்கள்..

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...
புகைப்படமெல்லாம் இவ்வளவு அருமையா போட்டிருக்கீங்க உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிதந்திடுங்க. இன்னும் முழுமையாக பார்க்கவில்லை பிறகு பார்த்துவிட்டு கருத்து எழுதுகிறேன்.//

வாங்க உமா,
உங்களின் பாராட்டுக்கு நன்றி.
என்னால் முடிந்தவரை இட்டுள்ளேன், எனக்கு தெரிந்ததை நண்பர்களுடனும் பகிர்கின்றேன்... நன்றி உமா

சொல்லரசன் said...

ஞானசேகரன் சூப்பர்.பட்டையை கிளப்பிட்டீங்ககோ.
அடுத்தமுறை வாருங்கள் மாநாடே நடத்திவிடலாம்.

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...
ஞானசேகரன் சூப்பர்.பட்டையை கிளப்பிட்டீங்ககோ.
அடுத்தமுறை வாருங்கள் மாநாடே நடத்திவிடலாம்//

வணக்கம் சொல்லரசன்
எல்லாம் உங்களின் முயற்சிதான்..கண்டிப்பாக அடுத்தமுறை மாநாடுதான்..

உமா said...

ஞானசேகரன் அருமையா பதிவைப்போட்டிருக்கிறீர்கள்.கமலின் இலங்கைத்தமிழ் அழகாக இருந்தது. அகநாழிகை டாக்டர், சொல்லரசன் கார்த்திகைப்பாண்டியன் எல்லோரைப்பற்றியும் அவர்களே சொல்வது அவர்களோடு பேசியது போலிருந்தது.

பதிவர்களில் இப்படி அழகான குழுக்கள் இணைவது மகிழ்ச்சியானதுதான்.

நட்புடன்

தருமி said...

கலக்கலான பதிவா இருக்கே .. நடத்துங்க .. இதே போல் மதுரையிலும் ........

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...
ஞானசேகரன் அருமையா பதிவைப்போட்டிருக்கிறீர்கள்.கமலின் இலங்கைத்தமிழ் அழகாக இருந்தது. அகநாழிகை டாக்டர், சொல்லரசன் கார்த்திகைப்பாண்டியன் எல்லோரைப்பற்றியும் அவர்களே சொல்வது அவர்களோடு பேசியது போலிருந்தது.

பதிவர்களில் இப்படி அழகான குழுக்கள் இணைவது மகிழ்ச்சியானதுதான்.

நட்புடன்//

நன்றி உமா. அடுத்தமுறை நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.. எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்

ஆ.ஞானசேகரன் said...

//தருமி said...
கலக்கலான பதிவா இருக்கே .. நடத்துங்க .. இதே போல் மதுரையிலும் .....//


வணக்கம் தருமி ஐயா,
கண்டிப்பாக மதூரையிலும் இதேபோல் சந்திப்பு நடக்கனும்..
உங்கள் வருகை மகிழ்ச்சியாக இருக்கின்றது... நன்றி

" உழவன் " " Uzhavan " said...

எல்லோருடைய போட்டோக்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். அனைவருக்கும் ஒரு ஹலோ சொல்லிக்கிடுறேன் :-)

ஆ.ஞானசேகரன் said...

//" உழவன் " " Uzhavan " said...
எல்லோருடைய போட்டோக்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். அனைவருக்கும் ஒரு ஹலோ சொல்லிக்கிடுறேன் :-)//

வாங்க உழவன், வணக்கம்..
மிக்க நன்றிங்க‌

முனைவர் சே.கல்பனா said...

மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது.பொறாமையாகவும் உள்ளது.ம்..............

Muniappan Pakkangal said...

Nalla meet,nachch photos & kanoli.

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...
மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது.பொறாமையாகவும் உள்ளது.ம்..............//

வணக்கம் முனைவர் சே.கல்பனா..
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nalla meet,nachch photos & kanoli.//

நன்றி சார்...

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்