அதேபோல் சில நாட்களுக்கு பின் முல்லா அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் "முன்பு கொடுத்ததை விட பெரிய பானை ஒன்று இரவல் கொடுக்க முடியுமா?" என்று கேட்டார். பக்கத்துவீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றை கொடுத்தார். பல நாட்கள் ஆகியும் முல்லா பானையை திருப்பி தரவில்லை. பின் தயங்கி தயங்கி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையை திருப்பி கேட்டார். " அத ஏன் கேக்கறீக அந்த பானை நேற்றுதான் செத்து போச்சு" என்றார் முல்லா. கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் "என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா? பானை எப்படி செத்து போகும் " என்று கோபமுற்றார். அதற்கு முல்லா " பானை குட்டி போட்டதை நம்பு பொழுது ஏன் செத்து போனதை நம்பமுடியாது? " என்று முல்லா கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்றுவிட்டார்......ஆமங்க பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கின்றோமோ அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புங்கோ.... அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே செய்யுறது எவ்வளவு தப்பு?... ஆனா அதை நாம் செஞ்சுக்கொண்டே இருக்கின்றோமே ஏன்? அதை பற்றி அடுத்த பதிவுல பாக்கலாங்க.....
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.



45 comments:
:-) நல்ல கதை தெரிந்த கதைனாலும் சுவையாய் இருந்தது
ஆமாங்க, நானும் சமீபத்துல எங்கயோ வாசிச்சேன்!
நமக்க ஒரு பானை இருந்தா குரியர் பண்ணிவிடுங்க!
நல்ல நீதிக்கதை...
வாழ்த்துக்கள்..
ஆமங்க பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கின்றோமோ அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புங்கோகதை ஏற்கெனவே அறிந்து இருந்தாலும் அதற்கான விளக்கம் அருமை
இப்படித்தான் போரசையில் பல பொய்களை நம்பி ஏமாந்து இருக்கிறாம்,பணத்தை இழந்தும் இருக்கிறாம்.
//thevanmayam said...
நமக்க ஒரு பானை இருந்தா குரியர் பண்ணிவிடுங்க!//
டாக்டர் சார் நீங்க எந்த பானையை சொல்கிறீங்கோ!!!
ரொம்பநாள என்னிடம்ஒரு பா...இருக்குதுன்னு திருச்சியில் சொன்னரே
அதையா?
சின்ன வயசுல நான் ரொம்ப விரும்பி படிக்கும் கதைகள்..
இப்பொழுதும் தான்...
ஞாபகப்படுத்தியதற்கு நன்றி...
அன்பின் ஞானசேகரன்
முல்லா கதைகள் படிப்பதற்கு மிகவும் நல்ல நகைச்சுவைக் கதைகள் - ஒரு நீதியும் இருக்கும். நல்வாழ்த்துகள்
சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த்து இந்த நீதிக்கதை....
முல்லா கதை நகைசுவையோடு சிந்தனையும் தூண்டுகிறது
// Suresh said...
:-) நல்ல கதை தெரிந்த கதைனாலும் சுவையாய் இருந்தது//
வாங்க சுரெஷ், நன்றிமா...
//பழமைபேசி said...
ஆமாங்க, நானும் சமீபத்துல எங்கயோ வாசிச்சேன்!//
வணக்கம் நண்பா....
// thevanmayam said...
நமக்க ஒரு பானை இருந்தா குரியர் பண்ணிவிடுங்க!//
வணக்கம் தேவன் சார்,
அப்போ நீங்க ரெண்டு பானையா தருவீங்களா சார்?
//அடியார் said...
நல்ல நீதிக்கதை...
வாழ்த்துக்கள்..//
வங்க அடியார், மிக்க நன்றி
//சொல்லரசன் said...
ஆமங்க பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கின்றோமோ அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புங்கோகதை ஏற்கெனவே அறிந்து இருந்தாலும் அதற்கான விளக்கம் அருமை
இப்படித்தான் போரசையில் பல பொய்களை நம்பி ஏமாந்து இருக்கிறாம்,பணத்தை இழந்தும் இருக்கிறாம்.//
வணக்கம் சொல்லரசன், உங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி
///டாக்டர் சார் நீங்க எந்த பானையை சொல்கிறீங்கோ!!!
ரொம்பநாள என்னிடம்ஒரு பா...இருக்குதுன்னு திருச்சியில் சொன்னரே
அதையா?///
எனக்கு புரியலயே
// வேத்தியன் said...
சின்ன வயசுல நான் ரொம்ப விரும்பி படிக்கும் கதைகள்..
இப்பொழுதும் தான்...
ஞாபகப்படுத்தியதற்கு நன்றி...//
மிக்க நன்றி நண்பா
// cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்
முல்லா கதைகள் படிப்பதற்கு மிகவும் நல்ல நகைச்சுவைக் கதைகள் - ஒரு நீதியும் இருக்கும். நல்வாழ்த்துகள்//
வணக்கம் சீனா ஐயா,
உங்களின் வருகை எனக்கு ம்கிழ்ச்சி
// தமிழரசி said...
சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த்து இந்த நீதிக்கதை....//
வாங்க தமிழரசி... மிக்க நன்றிங்க
//Suresh Kumar said...
முல்லா கதை நகைசுவையோடு சிந்தனையும் தூண்டுகிறது//
நன்றி நண்பா...
///டாக்டர் சார் நீங்க எந்த பானையை சொல்கிறீங்கோ!!!
ரொம்பநாள என்னிடம்ஒரு பா...இருக்குதுன்னு திருச்சியில் சொன்னரே
அதையா?///
//எனக்கு புரியலயே//
நல்ல ஞாபகபடுத்திபாருங்க புரியும் அந்த கருப்பு....
///சொல்லரசன் said...
///டாக்டர் சார் நீங்க எந்த பானையை சொல்கிறீங்கோ!!!
ரொம்பநாள என்னிடம்ஒரு பா...இருக்குதுன்னு திருச்சியில் சொன்னரே
அதையா?///
//எனக்கு புரியலயே//
நல்ல ஞாபகபடுத்திபாருங்க புரியும் அந்த கருப்பு....///
ம்ம்ம்ம் கொஞ்சம் கடினம்... வயசாகிவிட்டது போல ஞாபகம் குறையுது....
இங்க ஒரு அலாவுதீன் விளக்கு இருக்குது.அதுக்குள்ள ஒரு குட்டிச் சாத்தான் இருக்குது.அதுக்கு கொஞ்சம் சாம்பிராணி புகை போட்டு அனுப்பி விட முடியுமான்னு அந்த முல்லாகிட்ட கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.
இந்த கதையை முன்னமே படிச்சிருக்கேன். ஆனா இன்னும் பாதிகதை இருக்கும்.... ஞாபகமில்லை!!
பகிர்வுக்கு நன்றிங்க ஆ.ஞானசேகரன்
ஆமங்க பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கின்றோமோ அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புங்கோ.... //
நல்ல சிந்தனை கதையை போட்டு அமர்க்களப்படுத்திட்டீங்க! ஞானசேகரன்.
நல்ல விடயம் கொடுத்திருக்கீங்க,
அடுத்தப் பதிவை எதிர்பார்கின்றேன்.
நல்ல கதை.உங்கள் நீதி விளக்க்மும் நன்று,ஞானசேகரன்.//
// ராஜ நடராஜன் said...
இங்க ஒரு அலாவுதீன் விளக்கு இருக்குது.அதுக்குள்ள ஒரு குட்டிச் சாத்தான் இருக்குது.அதுக்கு கொஞ்சம் சாம்பிராணி புகை போட்டு அனுப்பி விட முடியுமான்னு அந்த முல்லாகிட்ட கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.//
வாங்க ராஜ நடராஜன்,... முல்லா இப்ப பிஸியாம்.....
//ஆதவா said...
இந்த கதையை முன்னமே படிச்சிருக்கேன். ஆனா இன்னும் பாதிகதை இருக்கும்.... ஞாபகமில்லை!!
பகிர்வுக்கு நன்றிங்க ஆ.ஞானசேகரன்//
நன்றி ஆதவா..
//ஆ.முத்துராமலிங்கம் said...
ஆமங்க பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கின்றோமோ அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புங்கோ.... //
நல்ல சிந்தனை கதையை போட்டு அமர்க்களப்படுத்திட்டீங்க! ஞானசேகரன்.
நல்ல விடயம் கொடுத்திருக்கீங்க,
அடுத்தப் பதிவை எதிர்பார்கின்றேன்.//
வாங்க நண்பா மிக்க நன்றி.. மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்..
// ஷண்முகப்ரியன் said...
நல்ல கதை.உங்கள் நீதி விளக்க்மும் நன்று,ஞானசேகரன்.//
வணக்கம் ஷண்முகப்ரியன் சார்....
ஆசை யாரை தான் விட்டது.
// கடையம் ஆனந்த் said...
ஆசை யாரை தான் விட்டது.//
வாங்க நண்பா..
Mullah kathai nalla irukku,thathuvathil.
// Muniappan Pakkangal said...
Mullah kathai nalla irukku,thathuvathil.//
மிக்க நன்றி சார்
"எந்த ஒரு அசாதாரணமான விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்!"
"Extraordinary claims require extraordinary evidence"
தெரிந்த கதை ஆனாலும் நல்லா கதை.. பகிர்ந்தமைக்கு நன்றி
கருத்தை கவர்ந்த கதை...
// RajK said...
"எந்த ஒரு அசாதாரணமான விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்!"
"Extraordinary claims require extraordinary evidence"
//
கருத்திற்கு நன்றி ராஜ்
//கார்த்திகைப் பாண்டியன் said...
தெரிந்த கதை ஆனாலும் நல்லா கதை.. பகிர்ந்தமைக்கு நன்றி//
//புதியவன் said...
கருத்தை கவர்ந்த கதை...//
நன்றி கார்த்திகைப் பாண்டியன், நன்றி புதியவன்
சிந்திக்க வைக்கும் கதை.நன்று
// முனைவர் சே.கல்பனா said...
சிந்திக்க வைக்கும் கதை.நன்று//
வணக்கம்ங்க, உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
இது தொடர்பான அடுத்த பதிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்..
// உழவன் " " Uzhavan " said...
இது தொடர்பான அடுத்த பதிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்..//
வாங்க நண்பா, அடுத்த பதிவுக்கு
கிளிக் பன்னவும்
அழகிய முறையில் உங்கள் கதை இருந்தால் நன்றாக இருக்கும் ஏன் முல்லாவை இழுக்கணும் ஏன் புசாரி கிடைக்க வில்லையா மததுவேசம் இல்லதாகுட்டி கதை இனி சொல்லும்
// farook abdulla said...
அழகிய முறையில் உங்கள் கதை இருந்தால் நன்றாக இருக்கும் ஏன் முல்லாவை இழுக்கணும் ஏன் புசாரி கிடைக்க வில்லையா மததுவேசம் இல்லதாகுட்டி கதை இனி சொல்லும்//
இது ஒரு நீதி கதைதானே
Post a Comment