சென்றமுறை திருச்சிக்கு சென்றபொழுது என் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றேன். அவர் வீட்டில் அப்பொழுதுதான் BSNL Broadband எடுத்திருந்தார். நண்பரின் பையன் மடிக்கணனிக்கு BSNL அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட wireless network ADSL router மூலம் தொடர்புக்கு முயற்சி செய்துபார்த்து முடியாமல் என்னிடம் கேட்டார். அதற்கான setting எனக்கும் தெரியவில்லை பின் திருச்சியில் இருக்கும் BSNL அலுவலகதிற்கு என் நண்பருடன் சென்றேன். அங்கு பார்த்த வாசகம் என்னை கவர்ந்தது. உடனே என் அலைபேசி புகைப்பட சாதனத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். புகைப்படம் தெளிவாக வரவில்லை இருப்பினும் அதன் வரிசையை கீழேக் கொடுத்துள்ளேன்.
நமது வாடிக்கையாளர்
நமது நிலையத்திற்கு வருகை தருபவர்கள்
வாடிக்கையாளரே மிகவும் முக்கியமானவர்
அவர் நம்மை சார்திருக்கவில்லை
நாம் அவரை சார்ந்துள்ளோம்.
அவர் நமது வேலைக்கு இடையூராக இல்லை
அவர் நமது வேலையின் உயிர் நாடி
அவர் நமது தொழிலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல
அவர் நம்து தொழிலின் ஒரு பகுதி
நாம் அவருக்கு பணிபுரிவதன் மூலம் அவருக்கு
எந்த ஒரு பயனும் செய்வதில்லை
மாறாக நாம் அவருக்கு சேவை செய்ய
அவர் நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளார்.
-மகாத்மா காந்தியடிகள்
மேற்கண்ட வாசகம் என்னை கவர்ந்தது மட்டுமில்லை மகிழச்செய்தது. பின் அங்கு இருக்கும் அலுவலரை அனுகி எங்கள் சந்தேகங்களை கேட்டோம். அதற்கு அவர் இதை Techinical support க்கு தொடர்புக் கொள்ளுங்கள் என்று தொலைபேசி எண்ணும் கொடுத்தார். பின்னர் அந்த எண்ணுக்கு தொடர்புக் கொண்டோம், அவர்கள் எதுவும் சொல்லாமல் உங்கள் அருகில் உள்ள Engeneer ஐ தொடர்புக்கொண்டு சரிசெய்துக்கொள்ளவும் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு BSNL அலுவலகத்தில் பார்த்து படித்த வாசகம் கண்முன் ஓடியது (நமது வாடிக்கையாளர்கள்..........................)
அதன் பின் ஒரு நண்பர் மூலம் சரிசெய்தாகிவிட்டது. தற்பொழுது இணையத்தில் பார்த்தபொழுது அதற்கான செயல்முறை விளக்கம் கிடைத்தது அதைப்பார்க்க சுட்டியை சுட்டவும்
என்னைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் தேவைகளை நிர்வாகம் இன்னும் பூர்த்திச்செய்யவேண்டும் என்றே தோன்றுகின்றது.
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்
35 comments:
ஆமாம்...
//பழமைபேசி said...
ஆமாம்...//
வணக்கம் நண்பா..
These wordings of Mahathmaa Gandhi is present in many top brass organisations.You are righ abt BSNL personal.
நேற்று கூட இந்த வாசகத்தை ஒரு நகலெடுக்கும் கடையில் வாசித்தேன்
நான் சென்றிருந்த வேலைக்கு அங்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் அந்த வாசகத்தை அர்த்தப் படுத்துவதாய் இருந்தது. நீங்கள் பார்த்தது ஒரு அரசு துறையில் அங்கு எப்பவுமே அறிக்கைகள் மட்டுமே விடப்படும் நீங்கள் அதை நம்பிவிட்டிங்களோ.
பெயரளவிற்கு மட்டுமே பல அலுவலகங்களில் இது போன்ற அறிவிப்பு இருக்கிறது.
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்று பல அரசு அலுவலகங்களில் விளம்பரப்படுத்திருத்தியிருப்பார்கள். அதுபோலத்தான் இதுவும்.
(நண்பா, பதிவில் எழுத்துப்பிழைகள் உள்ளது. சரி செய்யுங்கள். அப்புறம், ‘இவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்‘ என்று சரியாக்குங்கள்)
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வெறும் போர்டாக இல்லாமல் இதை உண்மையாக பின்பற்றினால் சந்தோஷமே
போர்டு ஆர்வக்கோளாறில் யாராவது மாட்டி வைப்பாங்க!!
நம்ம ஊரில் அதெல்லாம் பின்பற்றமாட்டாங்க!
//Muniappan Pakkangal said...
These wordings of Mahathmaa Gandhi is present in many top brass organisations.You are righ abt BSNL personal//
நன்றி சார்
சார் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய எ கலப்பை பயன்படுத்திப்பாருங்கள்
எ கலப்பை பற்றி விவரங்கள் பிகேபி சார் பக்கத்தில் உள்ளது சுட்டிப்பார்க்கவும்
//ஆ.முத்துராமலிங்கம் said...
நேற்று கூட இந்த வாசகத்தை ஒரு நகலெடுக்கும் கடையில் வாசித்தேன்
நான் சென்றிருந்த வேலைக்கு அங்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் அந்த வாசகத்தை அர்த்தப் படுத்துவதாய் இருந்தது. நீங்கள் பார்த்தது ஒரு அரசு துறையில் அங்கு எப்பவுமே அறிக்கைகள் மட்டுமே விடப்படும் நீங்கள் அதை நம்பிவிட்டிங்களோ.//
வணக்கம் ஆ.முத்துராமலிங்கம் வருத்தப்படவேண்டிய ஒன்று மாற்றங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்கின்றார்கள்
// "அகநாழிகை" said...
பெயரளவிற்கு மட்டுமே பல அலுவலகங்களில் இது போன்ற அறிவிப்பு இருக்கிறது.
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்று பல அரசு அலுவலகங்களில் விளம்பரப்படுத்திருத்தியிருப்பார்கள். அதுபோலத்தான் இதுவும்.
(நண்பா, பதிவில் எழுத்துப்பிழைகள் உள்ளது. சரி செய்யுங்கள். அப்புறம், ‘இவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்‘ என்று சரியாக்குங்கள்)
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//
வாங்க வாசு, எழுத்துப்பிழைகளை குறைக்க முயற்சிக்கின்றேன்.. மிக்க நன்றி நண்பா....
நல்ல பதிவு...
நல்ல வரிகள்...
//கார்த்திகைப் பாண்டியன் said...
வெறும் போர்டாக இல்லாமல் இதை உண்மையாக பின்பற்றினால் சந்தோஷமே//
வாங்க கார்த்திகைப் பாண்டியன்..
//thevanmayam said...
போர்டு ஆர்வக்கோளாறில் யாராவது மாட்டி வைப்பாங்க!!//
//thevanmayam said...
நம்ம ஊரில் அதெல்லாம் பின்பற்றமாட்டாங்க!//
வாங்க டாக்டர் சார் வணக்கம்...
வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். காலத்தின் கட்டாயத்தில் மாறும் என்றே எதிர்ப்பார்க்கின்றேன்..
இப்படி பல இடங்களில் எழுதி வைப்பதுண்டு... குறிப்பாக, அரசு அலுவலகங்களை மட்டும் நம்பிவிடாதீர்கள்.. நான் ஏர்டெல் ப்ராட்பேண்ட் வைத்திருந்தேன்.. சரியான சர்வீஸ்.. கூப்பிட்டவுடன் ஓடி வருவார்கள். வாடிக்கையாளர்களிடம் அன்பாக பேசுவார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், BSNL இணைப்பு வாங்கச் சென்றிருந்தேன். ரொம்பவும் சிரமப்பட்டு விட்டேன்..... பிறகு வாங்கவேயில்லை!!!
என்னைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் தேவைகளை நிர்வாகம் இன்னும் பூர்த்திச்செய்யவேண்டும் என்றே தோன்றுகின்றது ///////////////
எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது
// ஆதவா said...
இப்படி பல இடங்களில் எழுதி வைப்பதுண்டு... குறிப்பாக, அரசு அலுவலகங்களை மட்டும் நம்பிவிடாதீர்கள்.. நான் ஏர்டெல் ப்ராட்பேண்ட் வைத்திருந்தேன்.. சரியான சர்வீஸ்.. கூப்பிட்டவுடன் ஓடி வருவார்கள். வாடிக்கையாளர்களிடம் அன்பாக பேசுவார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், BSNL இணைப்பு வாங்கச் சென்றிருந்தேன். ரொம்பவும் சிரமப்பட்டு விட்டேன்..... பிறகு வாங்கவேயில்லை!!!
//
உங்களின் அனுபவ கருத்திற்கு மிக்க நன்றி ஆதவா..
//Suresh Kumar said...
என்னைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் தேவைகளை நிர்வாகம் இன்னும் பூர்த்திச்செய்யவேண்டும் என்றே தோன்றுகின்றது ///////////////
எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது//
வணக்கம் சுரேஷ்.. வருகைக்கு மிக்க நன்றி
காந்தியை பலகைகளிலும்,சமாதிகளிலும் பூட்டி வைத்துப் பல வருடங்கள் ஆகி விட்டனவே ஞானசேகரன்.
நல்ல பதிவு..
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.
{முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள்
வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
நம்ம பக்கமும் வாங்க..
எங்களுக்கு இதெல்லாம் பழகிப்போச்சு ஞானசேகரன். சில கடைகளில் மட்டும்தான் அப்படி எதிர்பார்க்கலாம். பகிர்வுக்கு நன்றி!
//ஷண்முகப்ரியன் said...
காந்தியை பலகைகளிலும்,சமாதிகளிலும் பூட்டி வைத்துப் பல வருடங்கள் ஆகி விட்டனவே ஞானசேகரன்.//
நீங்கள் சொல்வதும் சரிதான் சார்.. ஒரு வாடிக்கையாளரின் குறைந்த பச்ச தீர்வைக்கூட கொடுக்கமுடியாத நிர்வாகம் எதற்காக என்றுதான் புரியவில்லை.... காலத்தின் கட்டாயத்தில் ஒரு நாள் மாறும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்குண்டு... மிக்க நன்றி சார்..
// கலையரசன் said...
நல்ல பதிவு..
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.
{முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள்
வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
நம்ம பக்கமும் வாங்க..//
உங்களிம் முதல் வருகை என்னை மகிழச்செய்கின்றது கலையரசன்... மிக்க நன்றி..
//குடந்தை அன்புமணி said...
எங்களுக்கு இதெல்லாம் பழகிப்போச்சு ஞானசேகரன். சில கடைகளில் மட்டும்தான் அப்படி எதிர்பார்க்கலாம். பகிர்வுக்கு நன்றி!//
வாங்க குடந்தை அன்புமணி...
உண்மைதான் நாமும் கொஞ்சம் கேட்காமா விட்டா சரியில்லை என்றே தோன்றுகின்றது.. காலத்தின் கட்டாயம் ஒரு நாள் மாற்றம் வரும்...
எழுத்துக்கள் எல்லாம் ஏற்புடையது அல்ல போலும்...எண்ணங்கள் எல்லாம் வண்ணங்கள் கண்டு விட்டால் வளம் மட்டும் தானே...இதற்கு தலை சாய்க்குமா சமுதாயம்.....
//தமிழரசி said...
எழுத்துக்கள் எல்லாம் ஏற்புடையது அல்ல போலும்...எண்ணங்கள் எல்லாம் வண்ணங்கள் கண்டு விட்டால் வளம் மட்டும் தானே...இதற்கு தலை சாய்க்குமா சமுதாயம்.....//
வாங்க தமிழரசி உங்கள் முதல் வருகைக்கு நன்றி.. நீங்கள் கூறுவதும் உண்மையானாலும். நாம் எழுதி கிருக்குவதும் அப்படிதானோ!...
ஹ்ம்ம் .....
இப்பொழுது எல்லாம் bsnl coporate சர்வீஸ் பிரைவேட் செக்டர் யை விட நல்ல இருக்கு
//MayVee said...
ஹ்ம்ம் .....
இப்பொழுது எல்லாம் bsnl coporate சர்வீஸ் பிரைவேட் செக்டர் யை விட நல்ல இருக்கு//
நன்றி நண்பா, நான் குறிப்பிடும் சம்பவம் தற்பொழுதுதான் நடந்தது. நல்ல சேவையை வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் எதிர்ப்பார்ப்பது வழக்கம்தானே. நீங்கள் சொல்வதுபோல் நல்ல சேவை இருந்தால் பராட்டாமல் இருக்கவும் முடியாது. நன்றி நண்பா..
//என்னைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் தேவைகளை நிர்வாகம் இன்னும் பூர்த்திச்செய்யவேண்டும் என்றே தோன்றுகின்றது.//
நிர்வாகத்தின் தேவைகளை பூர்த்திசெய்யும்நபர்களே அவர்களுக்கு வாடிக்கையாளர்கள்
//Blogger சொல்லரசன் said...
//என்னைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் தேவைகளை நிர்வாகம் இன்னும் பூர்த்திச்செய்யவேண்டும் என்றே தோன்றுகின்றது.//
நிர்வாகத்தின் தேவைகளை பூர்த்திசெய்யும்நபர்களே அவர்களுக்கு வாடிக்கையாளர்கள்//
நன்றி சொல்லரசன்
இதுபோல இங்கு ஆயரம் பார்க்கலாம் நண்பரே.. போனமுறை நான் மின்கட்டண தொகையைச் செலுத்த சென்றபோது அது மதிய உணவு இடைவேளை நேரம். அங்கு பார்த்தால், எல்லா மின்விசிறிகளூம் ஓடிக்கொண்டிருந்தன யாருமே இல்லாத அறையில். இதில் சுவற்றில் வேறு எழுதி ஒட்டிவைத்துள்ளனர் "Please switch off lights and fans when not in use" என்று.
Blogger " உழவன் " " Uzhavan " said...
இதுபோல இங்கு ஆயரம் பார்க்கலாம் நண்பரே.. போனமுறை //நான் மின்கட்டண தொகையைச் செலுத்த சென்றபோது அது மதிய உணவு இடைவேளை நேரம். அங்கு பார்த்தால், எல்லா மின்விசிறிகளூம் ஓடிக்கொண்டிருந்தன யாருமே இல்லாத அறையில். இதில் சுவற்றில் வேறு எழுதி ஒட்டிவைத்துள்ளனர் "Please switch off lights and fans when not in use" என்று.//
ஆகா... இதை எல்லாம் பார்க்கும் பொழுது நமக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கின்றது நண்பரே...
அன்பின் ஞானசேகரன்
மகாத்மாவின் பொன்மொழிகள் - வாடிக்கையாளர்களைப் பற்றிய பொன்மொழிகள் அரசு அலுவலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது விதி.
இருப்பினும் பி எஸ் என் எல்லைப் பொறுத்தவரை - சேவை நன்றாகவே இருக்கிறது. ஒரு குறையும் இல்லை. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஆன படியினாலும், அரசு இயந்திரங்களுக்கே உள்ள சிறு குறைபாடுகள் நீடிக்கிறபடியாலும் இன்னும் வாடிக்கையாளர்களை முழுவதுமாக திருப்திப் படுத்த இயலவில்லை.
வாடிக்கையாளர்களின் எண்ணங்களும் மாற வேண்டும்.
மிகவும் அருமையான பதிவு.
// Tamil Home Recipes said...
மிகவும் அருமையான பதிவு.//
வணக்கம் நன்றிங்க
Post a Comment