_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, May 29, 2009

ஒடுக்கி நசுக்கப்படுவதேன்?..

உலகமயமாக்களில் ஏற்பட்ட வாணிப சூழலில் உலகம் இதுவரை எட்டாத பொருளியல் மந்தநிலையை சந்தித்துக்கொண்டுள்ளதை எல்லோரும் அறிந்ததே. இதில் அமெரிக்கா 90% ஆட்டம் கண்டுள்ளது. இந்தியாவின் வர்த்தகம் பெரும்பகுதி உள்நாட்டு வாணிபத்தை நம்பியுள்ளதால் இந்த பொருளியல் மந்தத்தின் தாக்கம் இல்லை என்று சொல்லும் அளவிற்கே உள்ளது.

இந்த பொருளியல் மந்தசூழலில் தனியார் மற்றும் கார்ப்ரேட் நிர்வணங்கள் பாதிக்கும் என்று அந்தந்த நாட்டு அரசு பாதிக்கப்படும் நிர்வாகத்திற்கு சலுகைகளும் உதவிகளும் செய்து மீட்டெடுக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. மேலும் நிர்வாகம் சம்பளக்குறைப்பு, சலுகைகளை எடுத்தல், வேலைப்பழுவை அதிகப்படுத்துதல் மற்றும் ஆட்குறைப்பு செய்கின்றது . இப்படி செய்து சாமானியனின் தலையில் சுமையை வைக்கின்றது. கடன் அட்டையின் கவர்ச்சி திட்டதினால் பாதிப்புக்கு ஆளான சாமானியனுக்கு இந்த சுமை தற்கொலையை தேடும் அளவிலே உள்ளது.மேலும் சில இடங்களில் இப்படிப்பட்ட தற்கொலைகள் நடந்துள்ளதை பார்க்கும்பொழுது நிர்வாகம் அரசு சலுகையை தவறாக பயன்படுத்துகின்றதா? என்ற எண்ணம் தோன்றுவதில் ஞாயம் இருக்கதான் செய்கின்றது.

ஆக குறைந்த பொருளியல் மந்தநிலையை தொட்டுவிட்டோமா? இல்லை இன்னும் கடக்கவேண்டியுள்ளதா? என்று தெரியாத சூழல்தான் இன் று இருக்கின்றது. பல தனியார் மற்றும் கார்ப்ரேட் நிர்வாகம் பொருளியல் மந்தநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சம்பளக்குறைப்பு மற்றும் ஒருவரின் வேலைப்பழுவை அதிகப்படுத்துதல் போன்றவைகளை செயல்படுத்துகின்றது. மேலும் சில இடங்களில் ஆட்குறைப்பும் நடைபெறுகின்றது. இதனால் கிடைக்கும் நிதியில் நிர்வாகம் பாராமரிப்பு பணிகளை செய்கின்றது. இதேபோல் சாமானியன் மேலும் மேலும் நசுக்கப்பட வேண்டிய சூழலே இருக்கின்றது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையேற்றதால் விலைப்பொருள்கள் விலையும் ஏற்றம் கண்டது. பின் கச்சா எண்ணெய் காணாத விலை குறைந்தாலும், விலைவாசியோ அதே நிலையில்தான் இருக்கின்றது குறைவதில்லை. அதே போல்தான் நிர்வாகம் நல்ல நிலையில் இருக்கும்பொழுது சாமானியனுக்கு எதுவும் கொடுத்துவிடவில்லை. ஆனால் பொருளியியல் மந்தநிலையில் மட்டும் சம்பளக்குறைப்பை முன்வைக்கின்றது. இந்த மந்தநிலை சரியாகும்பொழுது நிர்வாகம் சாமானியனை கண்டுக்கொள்ளாது. தற்பொழுது வர்த்தகம் ஏற்ற நிலையில் உள்ளதாக தெரிகின்றது, ஆனாலும் தொழிலாளிகளிடம் கொடுத்த சுமைகள் அப்படியே வைத்துவிட்டு லாபத்தை மட்டுமே நிர்வாகம் குறிவைக்கின்றது.

இன்றைய சூழலில் சாமானியனுக்கு ஒரு வேண்டுகோள் கடன் அட்டையை முறையாக பயன்படுத்துங்கள். கவர்ச்சி திட்டங்களை பார்த்து ஏமாற்றம் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..........
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

27 comments:

பழமைபேசி said...

எப்பவும் நாமதான் நிதானமா இருக்கணும்... கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கஞ் சொல்லி என்ன செய்யுறது? வெகு காசு பணம் ஏற்கனவே போயிடுச்சே?!

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...

எப்பவும் நாமதான் நிதானமா இருக்கணும்... கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கஞ் சொல்லி என்ன செய்யுறது? வெகு காசு பணம் ஏற்கனவே போயிடுச்சே?!//
வணக்கம் நண்பா,
மீதம் உள்ளதையாவது பிடித்து வைக்கலாமே நண்பா...

ஆ.சுதா said...

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையேற்றதால் விலைப்பொருள்கள் விலையும் ஏற்றம் கண்டது. பின் கச்சா எண்ணெய் காணாத விலை குறைந்தாலும், விலைவாசியோ அதே நிலையில்தான் இருக்கின்றது குறைவதில்லை. அதே போல்தான் நிர்வாகம் நல்ல நிலையில் இருக்கும்பொழுது சாமானியனுக்கு எதுவும் கொடுத்துவிடவில்லை. ஆனால் பொருளியியல் மந்தநிலையில் மட்டும் சம்பளக்குறைப்பை முன்வைக்கின்றது. இந்த மந்தநிலை சரியாகும்பொழுது நிர்வாகம் சாமானியனை கண்டுக்கொள்ளாது. தற்பொழுது வர்த்தகம் ஏற்ற நிலையில் உள்ளதாக தெரிகின்றது, ஆனாலும் தொழிலாளிகளிடம் கொடுத்த சுமைகள் அப்படியே வைத்துவிட்டு லாபத்தை மட்டுமே நிர்வாகம் குறிவைக்கின்றது.//

நல்லா அலசியிருக்கீங்க ஞானசேகரன்.
இப்போதைக்கு எங்கும் இது பெரும் பிரச்சனையா எழுந்து நிர்ப்பது மோசமான சூழல்.

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் sai
நல்லா அலசியிருக்கீங்க ஞானசேகரன்.
இப்போதைக்கு எங்கும் இது பெரும் பிரச்சனையா எழுந்து நிர்ப்பது மோசமான சூழல்.//

அலசல் மட்டும் இல்லை நண்பா, அனுபவம் சொல்லுகின்றது..

மிக்க நன்றி நண்பா

தேவன் மாயம் said...

கடன் அட்டையின் கவர்ச்சி திட்டதினால் பாதிப்புக்கு ஆளான சாமானியனுக்கு இந்த சுமை தற்கொலையை தேடும் அளவிலே உள்ளது///

ஏற்கெனவே நாட்டைக்கடனாளி ஆக்கிவிட்டனர் அரசியல்வாதிகள்!
ஒவ்வொரு மனிதனையும் கடனாளி ஆக்குகிறார்கள் கடனட்டைக்காரர்கள்!

பொருளாதார மேதைகள் ஹார்வர்டில் படித்தாலென்ன? தங்கப்பதக்கம் வாங்கினாலென்ன?--சாதாரண அறிவு இல்லாத இவர்கள் முட்டாள்களே!!

வினோத் கெளதம் said...

//பல தனியார் மற்றும் கார்ப்ரேட் நிர்வாகம் பொருளியல் மந்தநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சம்பளக்குறைப்பு மற்றும் ஒருவரின் வேலைப்பழுவை அதிகப்படுத்துதல் போன்றவைகளை செயல்படுத்துகின்றது//

உண்மை தான் நண்பரே..இதில் எந்த எந்த உண்மையில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பது தெரியவில்லை..ஆனால் எல்லா கம்பனியும் இது தான் சாக்கு என்று இது போன்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டு இருக்கின்றன..

வேத்தியன் said...

பயனுள்ள பதிவுங்க...

நல்ல பகிர்வு...

Suresh Kumar said...

இன்றைய சூழலில் சாமானியனுக்கு ஒரு வேண்டுகோள் கடன் அட்டையை முறையாக பயன்படுத்துங்கள். கவர்ச்சி திட்டங்களை பார்த்து ஏமாற்றம் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.......... //////////////

நல்ல கருத்து ஆனால நம்மால் கவர்ச்சி திட்டங்களுக்கு மயங்காமல் இருக்க முடியாதே நண்பா

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

உண்மைதான் கவர்ச்சிக்கு மக்கள் மயங்கும் வரை ஏமாற்றுபவர்கள் வலம் வந்து கொண்டுதான் இருப்பார்கள்.மக்களாய் பார்த்து திருந்தினால் ஒழிய வேறு ஒன்றும் செய்ய முடியாது.நல்ல பதிவு.

CorTexT (Old) said...

Credit Card-க்கு கடன் அட்டை என்பது தவறான அர்த்ததையும், அதனால் தவறான பழக்கத்தையும் கொடுக்கின்றது. அதற்கு "நன்நம்பிக்கை அட்டை" (நம்பிக்கை பேரில் கடன் தரும் அட்டை) என்பது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அது நுகர்வோர் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட ஒன்று - ஏமாற்று பொருளை முறையிடலாம்; மேலும், அதிகமாக பணம் கையில் வைத்து கொள்ள தேவையில்லை. அதை கடன் அட்டையாக பயன்படுத்தினால், பேப்பே தான்!

ஆ.ஞானசேகரன் said...

test

ஆ.ஞானசேகரன் said...

/// thevanmayam said...

கடன் அட்டையின் கவர்ச்சி திட்டதினால் பாதிப்புக்கு ஆளான சாமானியனுக்கு இந்த சுமை தற்கொலையை தேடும் அளவிலே உள்ளது///

ஏற்கெனவே நாட்டைக்கடனாளி ஆக்கிவிட்டனர் அரசியல்வாதிகள்!
ஒவ்வொரு மனிதனையும் கடனாளி ஆக்குகிறார்கள் கடனட்டைக்காரர்கள்!

பொருளாதார மேதைகள் ஹார்வர்டில் படித்தாலென்ன? தங்கப்பதக்கம் வாங்கினாலென்ன?--சாதாரண அறிவு இல்லாத இவர்கள் முட்டாள்களே!!///


வாங்க தேவன் சார்...

//சாதாரண அறிவு இல்லாத இவர்கள் முட்டாள்களே// என்ன பன்னுறதுங்க சில சமயங்களிம் கவர்ச்சிக்கு அடிமையாகிவிடுகின்றோம்...

மிக்க நன்றி சார்

ஆ.ஞானசேகரன் said...

//vinoth gowtham said...
உண்மை தான் நண்பரே..இதில் எந்த எந்த உண்மையில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பது தெரியவில்லை..ஆனால் எல்லா கம்பனியும் இது தான் சாக்கு என்று இது போன்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டு இருக்கின்றன..//

நிர்வாகம் சாமானியனின் தலையில் மிளகாய் அரைப்பதற்கு கற்றுகொண்டது... இதைதான் நிர்வாக திறமை என்று மார்புத் தட்டிக்கொள்வதுதான் கேவலமாக இருக்கு நண்பா!...

மிக்க நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

// வேத்தியன் said...

பயனுள்ள பதிவுங்க...

நல்ல பகிர்வு...//

நன்றி வேத்தியன்....

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...

இன்றைய சூழலில் சாமானியனுக்கு ஒரு வேண்டுகோள் கடன் அட்டையை முறையாக பயன்படுத்துங்கள். கவர்ச்சி திட்டங்களை பார்த்து ஏமாற்றம் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.......... //////////////

நல்ல கருத்து ஆனால நம்மால் கவர்ச்சி திட்டங்களுக்கு மயங்காமல் இருக்க முடியாதே நண்பா//

வாங்க நண்பா,... மயங்கினால் ஏமாற்றம், அதையும் தாங்கிக்கொள்ளதான் வேண்டும்..
நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

//முனைவர் சே.கல்பனா said...

உண்மைதான் கவர்ச்சிக்கு மக்கள் மயங்கும் வரை ஏமாற்றுபவர்கள் வலம் வந்து கொண்டுதான் இருப்பார்கள்.மக்களாய் பார்த்து திருந்தினால் ஒழிய வேறு ஒன்றும் செய்ய முடியாது.நல்ல பதிவு.//

மிக்க நன்றி அம்மா,....

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

Credit Card-க்கு கடன் அட்டை என்பது தவறான அர்த்ததையும், அதனால் தவறான பழக்கத்தையும் கொடுக்கின்றது. அதற்கு "நன்நம்பிக்கை அட்டை" (நம்பிக்கை பேரில் கடன் தரும் அட்டை) என்பது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அது நுகர்வோர் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட ஒன்று - ஏமாற்று பொருளை முறையிடலாம்; மேலும், அதிகமாக பணம் கையில் வைத்து கொள்ள தேவையில்லை. அதை கடன் அட்டையாக பயன்படுத்தினால், பேப்பே தான்!//

உண்மைதான் ராஜ் முறையாக பயன் படுத்தினால் நன்மைகள் பல.. அதை ஒரு போதையில் பயனாக்கும் பொழுதுதான் பிரச்சனை வருகின்றது.. இதில் நாமும் கவனமாக கையாழுவதும் முக்கியம்தான்...

நல்ல கருத்துக்கு நன்றிபா

ராஜ நடராஜன் said...

//பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையேற்றதால் விலைப்பொருள்கள் விலையும் ஏற்றம் கண்டது. பின் கச்சா எண்ணெய் காணாத விலை குறைந்தாலும், விலைவாசியோ அதே நிலையில்தான் இருக்கின்றது குறைவதில்லை.//

அதென்னமோ உண்மைதான்.மக்களும் முன்பு மாதிரி செலவும் செய்வதில்லை.மாறுதலா விலைவாசி குறைந்தா இன்னும் ஒரு வட்டம் சுற்றும்ன்னு பார்த்தா பொருளாதார மந்தம் அதன் வேகத்திலேயே நகர்கிறது.இது ஒருவேளை ஒரு வருட,இரண்டு வருட மந்தம்ன்னு முன்கணிப்பினால் வந்த வினையான்னும் தெரியலை.இரண்டு வருஷம்தானே சமாளிச்சிட்டமின்னா கீழ இருந்து மீண்டும் மேலே எழும் தொல்லை இருக்காது என்ற பொருளாதாரச் சிந்தனையோ என்னவோ?

ஆ.ஞானசேகரன் said...

/// ராஜ நடராஜன் said...

//பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையேற்றதால் விலைப்பொருள்கள் விலையும் ஏற்றம் கண்டது. பின் கச்சா எண்ணெய் காணாத விலை குறைந்தாலும், விலைவாசியோ அதே நிலையில்தான் இருக்கின்றது குறைவதில்லை.//

அதென்னமோ உண்மைதான்.மக்களும் முன்பு மாதிரி செலவும் செய்வதில்லை.மாறுதலா விலைவாசி குறைந்தா இன்னும் ஒரு வட்டம் சுற்றும்ன்னு பார்த்தா பொருளாதார மந்தம் அதன் வேகத்திலேயே நகர்கிறது.இது ஒருவேளை ஒரு வருட,இரண்டு வருட மந்தம்ன்னு முன்கணிப்பினால் வந்த வினையான்னும் தெரியலை.இரண்டு வருஷம்தானே சமாளிச்சிட்டமின்னா கீழ இருந்து மீண்டும் மேலே எழும் தொல்லை இருக்காது என்ற பொருளாதாரச் சிந்தனையோ என்னவோ?///

வாங்க நண்பா,

உங்களின் கருத்துக்கும் மிக்க நன்றிகோ...

சொல்லரசன் said...

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையேற்றதால் விலைப்பொருள்கள் விலையும் ஏற்றம் கண்டது. பின் கச்சா எண்ணெய் காணாத விலை குறைந்தாலும், விலைவாசியோ அதே நிலையில்தான் இருக்கின்றது குறைவதில்லை.

உண்மைதான் ஞானசேகரன்,
ஏன் குறைக்கவில்லை என்று யார் கேட்பது? அப்படியே கேட்டாலும் உதிரிபாகம் விலைஏற்றம்,உற்பத்தி செலவு ஏற்றம் என்று சொல்வார்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான அலசல் நண்பா.. பொருளாதாரம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு இதேபோல மந்தமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்..

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையேற்றதால் விலைப்பொருள்கள் விலையும் ஏற்றம் கண்டது. பின் கச்சா எண்ணெய் காணாத விலை குறைந்தாலும், விலைவாசியோ அதே நிலையில்தான் இருக்கின்றது குறைவதில்லை.

உண்மைதான் ஞானசேகரன்,
ஏன் குறைக்கவில்லை என்று யார் கேட்பது? அப்படியே கேட்டாலும் உதிரிபாகம் விலைஏற்றம்,உற்பத்தி செலவு ஏற்றம் என்று சொல்வார்கள்//

வாங்க சொல்லரசன்.. நீங்கள் சொல்வதும் உண்மைதான்...

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான அலசல் நண்பா.. பொருளாதாரம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு இதேபோல மந்தமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்..//

இப்படியே சாமானியனை ஏய்க்க திட்டம் போட்டால் இரண்டு வருடம் பத்தாது என்றுதான் நினைக்கின்றேன்.. ஒபாமா சொல்வதை போல பொறுப்புடன் நடந்துகொண்டால்தானே!...

நந்தாகுமாரன் said...

இந்த கட்டிரையை விடுங்கள் இதை நான் படிக்கவேயில்லை ... அந்த photobucketஇல் உள்ள ஒளிப்படங்களை எல்லம் நீங்களா பிடித்தீர்கள் ... மிக அருமை ...

ஆ.ஞானசேகரன் said...

// Nundhaa said...

இந்த கட்டிரையை விடுங்கள் இதை நான் படிக்கவேயில்லை ... அந்த photobucketஇல் உள்ள ஒளிப்படங்களை எல்லம் நீங்களா பிடித்தீர்கள் ... மிக அருமை ...//

வாங்க நண்பா,
படங்கள் என்னுடைவைதான் நண்பரே.. முடிந்தால் கட்டுரையும் படித்துவிட்டு சொல்லுங்கள்..

ஸ்ரீ.... said...

சரியான திசையில் பயணிக்கும் பதிவு.இன்றைய நிலைக்கு இம்மாதிரிப் பதிவுகள் அவசியம்.

ஸ்ரீ....

ஆ.ஞானசேகரன் said...

// ஸ்ரீ.... said...

சரியான திசையில் பயணிக்கும் பதிவு.இன்றைய நிலைக்கு இம்மாதிரிப் பதிவுகள் அவசியம்.//

வணக்கம் ஸ்ரீ.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி...