_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, June 2, 2009

நெஞ்சே! பொறுப்பதில்லை ஏன்?

சென்ற பதிவு முடிவில் நான் சொன்னது "தவறு என்று தெரிந்தும் அதையே செய்யுறது எவ்வளவு தப்பு?... ஆனா அதை நாம் செஞ்சுக்கொண்டே இருக்கின்றோம் அது ஏன்?" பல தவறுகளை நாம் திரும்ப திரும்ப செய்தாலும் நான் பார்த்த ஒன்னு இங்கே நெஞ்சு பொறுக்காமல் உங்களுடன் ஒரு பகிர்வு...

சென்ற முறை இந்தியா செல்கின்றபொழுது,
என் தேசத்து மண்ணையும் என் மனைவி மக்களையும்..
காணும் ஆயிரம் கனவுகளுடன் திருச்சி விமானநிலைம் அடைந்தேன்.
01-05-2009 அன்றுதான் கோடை வெயில் சுட்டெரித்தாலும்;
மண்ணைத் தோட்ட மகிழ்ச்சியில் நெஞ்சம் குளிர்கின்றது.
கடவுசீட்டை கையில் எடுத்து வரிசையில் நிற்கையில்;
வெளியில் நிற்கும் மனைவி பிள்ளைகளின் எண்ணங்கள் எனக்கு...

காட்டாற்று வெள்ளம் போல வெளியில் வரும் எண்ணங்களின் மகிழ்ச்சி.
ம்ம்ம்ம் ஓடி வரும் மகளை தூக்கி முத்தமிட்டு ;
என் பையனின் கையை இருக பிடித்தேன்.
வாஞ்சையுடன் என் மனைவி என் அருகில் வந்ததும்
கண்களில் ஆயிரமாயிரம்..........

என் மனைவி, மகன் மற்றும் என் மகள் மூவர்மட்டுமே வாடகை சொகுசுந்து (Taxi) எடுத்து வந்திருந்தனர். நாங்கள் நால்வரும் என்வீட்டுக்கு செல்கின்றோம். OFT அண்ணாநகர் செல்லும் வழியில் புதுக்கோட்டை திருச்சி ரோடு ஒரு சோதனைச் சாவுடி இருக்கும். சோதனைச் சாவுடியில் எப்பொழுதாவது (பதற்ற சூழல் உள்ள பொழுது) சோதிப்பார்கள். பதற்றமான சூழலில் சோதனை நடத்துவார்களோ இல்லையோ, வெளிநாட்டு விமானம் வரும் நேரங்களில் ருசி
யோடு இருப்பார்கள். அதேபோல் அன்றும், என்னிடம் எந்த விதமான பொருள்களும் இல்லை (கைபை மற்றும் மடிக்கணனி மட்டுமே இருந்தது) . என் தந்தை வயதில் உள்ள ஒரு காவலாளி (போலீஸ்) எங்கள் வண்டியை ஓரமாக நிற்க சொன்னார். வண்டியும் திருச்சி நாங்களும் திருச்சிதான் இருந்தாலும் விமானம் வந்த நேரம் அதனால் ருசித்துப்பார்த்தார். ஓட்டுனரை தனியாக அழைத்து " காசு வாங்கி கொடு " என்று அவர் காதில் ஓதினார். இதுபோல் பலமுறை நடந்துள்ளது இதுபோன்ற சமயத்தில் நான் வாதிடுவதால் ஓட்டுனர் என்னை அழைக்கவில்லை. நானும் பிள்ளைகளை பார்த்த மகிழ்ச்சியில் வண்டியிலேயே இருந்துவிட்டேன். அவரின் நேரத்தை வீணாக்க விரும்பாமல் அவரே 20 ரூபாய் கொடுத்துவிட்டு வந்துவிட்டார் . எனக்குள் ஆயிரம் "இந்தியன்" ஆயிரம் "அன்னியன்" வந்துசென்றனர்.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரு கடத்தலோ அல்லது ஒரு சட்டவிரோத செயலோ நடந்துவிடவில்லை. இருப்பினும் அந்த இந்திய பிரசை, நம் நாட்டின் காவலாளி வாங்கிய கையூட்டுக்கு (லஞ்சம்) அர்த்தம்தான் என்ன? அந்த ஈன செயலுக்கு சொல்லும் விளக்கம்தான் என்ன?

அவர் யார்? நம்மை போன்ற ஒருவனின் தந்தை. ஒரு மனைவிக்கு கணவனானவர். இப்படி ஏதோ ஒரு உறவுக்குள் சணிக்ககூடியவர். யாருக்காக அவர் அப்படிச் செய்கின்றார்? இப்படி வாங்கிய காசில் வாங்கும் பூவூக்கும் அல்வாக்கும் காத்திருக்கின்றாரா இவரின் மனைவி. இல்லை அந்த காசில் வாங்கிய பேனாவில்தான் இவரின் பிள்ளை பரிச்சை எழுதுகின்றார்களா?. கொஞ்சம் யோசிங்கள் கையூட்டு வாங்கும் தனிநபர் வேறு யாரும் இல்லை. நம்மில் ஒருவனின் தந்தை; நம்மில் ஒருவரின் கணவர்; நம்மில் ஒருவரின் மாமா; நம்மில் ஒருவரின் தம்பியோ அண்ணனோ இப்படி நம்மில் ஒருவரால் செய்யும் தவற்றை ஏன்
அங்கிகாரம் கொடுக்கின்றோம்? ஒரு தவற்றை தவறு என்று தெரிந்தும் செய்வது எதனால்? அந்த தவற்றை நான், நாம் ஏற்றுகொள்வதும் எதனால்?

'கையூட்டு(லஞ்சம்) வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்' என்று பலகையிலும், சொல் அளவிலும் வைத்துக்கொண்டு வாழும் வாழ்க்கையின் அர்த்தம் வேண்டி...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

49 comments:

பழமைபேசி said...

தலை நல்லா இருக்கு...ஆனா பிழை திருத்தம் செய்யணும்...

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...

தலை நல்லா இருக்கு...ஆனா பிழை திருத்தம் செய்யணும்...//

நன்றி நண்பா...

ரங்குடு said...

இதுக்குப் பேர் லஞ்சமில்லை தலிவா.

இதுதான் பயக்க வயக்கம்.

நீங்களெல்லாம் ஜாலியாக வெளிநாடு போய் சம்பாரிச்சுட்டு வருவீங்க. இங்கே 10 ரூவா வித்த கத்திரிக்காய் இன்னிக்கு 50 / 60 ன்னு விக்கிது. என்னப் போல பெருசுங்க அரசு சம்பளத்தில் எப்படி மருவாதியாய் வாழறது?

நாங்க உங்க மாதிரி ஆளுங்க கிட்டே இப்படிக் கேட்டு வாங்குறதிலே தப்பே கெடையாது.

யாரயும் எதிர்பார்க்காம வசதியோட வாழறதுக்கு நாங்க என்ன கலைஞர் குடும்பமா? ஜெயலலிதாவின் உறவினரா? இல்ல சோனியாவின் பிள்ளைகளா?

நானோ, எனது புள்ளிங்களோ ஏதோ சொன்னீங்களே சொகுசுந்தோ என்னவோ என்னிக்காவது போயிருப்போமா?

இந்தியாவில் இருப்பது கம்யூனிசமோ, சோசியலிசமோ அல்ல. கடைந்தெடுத்த ஏமாற்றிசம். இது அமெரிக்க முதலாளியிசத்தை விடக் கொடுமையானது.

1000 அன்னியன் வந்தாலும் திருத்த முடியாது.

நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம்.

நசரேயன் said...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டா திருட்டை ஒழிக்க முடியாது

சொல்லரசன் said...

இப்படி வாங்கிய காசில் வாங்கும் பூவூக்கும் அல்வாக்கும் காத்திருக்கின்றாரா இவரின் மனைவி.

நல்ல சவுக்கடி

கையூட்டு(லஞ்சம்) வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்'

லஞ்சம் வாங்குபவரை விட கொடுபவருக்கு அதிக தண்ட‌னை என்று சட்டம்
வரவேண்டும்.அப்போதுதான் லஞ்சம் வாங்குபவர்கள் காட்டி
கொடுக்கபடுவார்கள்.

ஷண்முகப்ரியன் said...

லஞ்சம் வாங்குபவரை விட கொடுபவருக்கு அதிக தண்ட‌னை என்று சட்டம்
வரவேண்டும்.அப்போதுதான் லஞ்சம் வாங்குபவர்கள் காட்டி
கொடுக்கபடுவார்கள்.//

இதனை நான் மனப் பூர்வமாக வழிமொழிகிறேன்.

’’ஆவதும் நம்மாலே,அழிவதும் நம்மாலே’’

RajK said...

இதுக்கே நெஞ்சு பொருக்கலனா எப்படி? பிஞ்சியிலேயே வாழ்வை தொலைக்கும் உள்ளங்களை எல்லாம் கொஞ்சம் யோசித்து பாருங்கள். இந்த உலகம், எந்த ஞாய தர்ம அடிப்படையிலும் உருவாக்கப்பட வில்லை. அடுத்த பறவை கூட்டில் முட்டையிட்டு விட்டு சொகுசு வாழ்கை நடத்தும் குக்கூ பறவையை பற்றி யாரிடம் முறையிட? அல்லது, பால்முகம் மாறாத மான்குட்டியை கதற கதற கொல்லும் சிங்கத்தை யாரிடம் சொல்லி ஞாயம் கேட்க? - அது அதன் குட்டிகளின் பிழைப்பிற்காக போராடுகின்றது. மனிதனும் அதே குட்டையிலிருந்து வந்தவனே. ஆனாலும், மனிதன் ஞாயத்திற்காக போராடுகின்றான் - அதில் ஒரளவு வெற்றி பெற்றிருக்கின்றான் என்றே சொல்ல வேண்டும்; ஆனாலும் அவன் கடக்க வேண்டிய தூரம் இன்னும் மிகப் பெரிது. அதற்கு அறிவு பார்வை வேண்டும்; பழைய பஞ்சாங்கத்தையெல்லாம் தூக்கி எறிய வேண்டும்.

ரங்குடு அண்ணாச்சி... அடுத்தவரிடம் பிடிங்கி வாழ்வதில் தான், மருவாதியாய் வாழறதா? யாரும் ஜாலியாக வெளிநாடு போய் சம்பாரிச்சுட்டும் இல்லை; யாரும் யாருக்காகவும் தூக்கி கொடுக்கவும் இல்லை. உங்கள் குறைகளுக்கெல்லாம் அடுத்தவரை குற்றம் சொல்லுவதை விட்டுவிடுங்கள். லஞ்சத்திற்கு வெட்டி ஞாயம் பேசாதீர்கள். நாளை உங்கள் பிள்ளைகளாவது மருவாதியாய் வாழ வழி கிடைக்கும்.

முன்பை காட்டிலும்... மற்ற பல பின் தங்கிய நாடுகளை காட்டிலும்... இந்திய முன்னேறி கொண்டு தான் உள்ளது. ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது. கெட்ட அரசியல்வாதிகளால், ஜனநாயகத்தில் நம்பிக்கையை இழக்க வேண்டாம். இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக போராடுங்கள். நாளை உங்கள் பிள்ளைகளாவது நலமாக இருக்கும்.

ஆ.முத்துராமலிங்கம் said...

உங்கள் ஆதங்கம் அப்படியே வெளிபடுகின்றது. முதலில் சந்தோசமான தருணங்களை நெகிழ்வுடன் ஆரம்பித்து பின் கையூட்டு பெரும் கொடுக்கும் நபர்களை சவுக்கால விலாசி விட்டீரகள், |அவர் யார்?| என்று ஆரம்பிக்கும் கேள்விகள் சிந்தனை வெளிச்சம் மிகச் சரியான கேள்விகள்.

அன்புடன் அருணா said...

மிக நல்ல பதிவு!!

அன்புடன் அருணா said...

காற்றாட்று
பொருக்காமல்
நடத்துவார்கலோ
மெற்கண்ட
யாருக்கா
அங்கிகாரம்
திருத்தி விடுங்களேன்!

புதியவன் said...

//இப்படி வாங்கிய காசில் வாங்கும் பூவூக்கும் அல்வாக்கும் காத்திருக்கின்றாரா இவரின் மனைவி. இல்லை அந்த காசில் வாங்கிய பேனாவில்தான் இவரின் பிள்ளை பரிச்சை எழுதுகின்றார்களா?. //

நியாயமான கேள்வி தான் பதில் சொல்ல யார் இருக்கிறார்கள்

ஆதவா said...

ஹாஹா..... சார்.... நீங்க சாமானியரைப் பத்தி எழுதும்பொழுதே நினைத்தேன். நீங்க அந்நியன் டைப் என்று.

எனக்கு நினைவு தெரிந்து பெரிய அளவில் (நூறுக்கும் மேல்) லஞ்சம் கொடுத்ததே இல்லை... அதுவும் கூட கட்டாயத்தின் பேரில்தான். வேறவழியில்லை... எனும்பொழுது.

ஒருசமயம் அவசரமாகச் சென்றுகொண்டிருக்கும் பொழுது, ஒரு போலிஸ் நூறு ரூபாய் கேட்டான். எனக்கு அப்பொழுது நூறு ரூபாயைக் காட்டிலும் அந்த அவசரவேலையே பெரியதாக இருந்தது. அதனால் கொஞ்சம் தயங்கி தயங்கி கொடுத்தேன். (உடனே கொடுத்துவிட்டால் மேலும் கேட்பார்கள்)

சில்லறைகளை (4 ஒரு ரூபாய்) மட்டுமே லஞ்சமாகக் கொடுத்த அனுபவம் உண்டு!!!!

போலீஸ்காரய்ங்களே.... சில்லறைத்தனமா இறங்கிட்டீங்களே!!!!

ஆ.முத்துராமலிங்கம் said...

ஆதவா said...

போலீஸ்காரய்ங்களே.... சில்லறைத்தனமா இறங்கிட்டீங்களே!!!!//

ஆதவா நீங்களாவது நாண்கு ரூபாய் கொடுத்தி இருக்கீங்க, ஆனா சென்னையில் பாரிமுனையில் தள்ளுவண்டிக் காரணிடமும், மாட்டுவண்டிக் காரர்களிடமும் 2 ரூபா பிச்சக் காசா வாங்குவாங்க பாருங்க.. இந்த கொடுமையா எங்க சொல்லுரது.

ஆ.ஞானசேகரன் said...

//ரங்குடு said...

இதுக்குப் பேர் லஞ்சமில்லை தலிவா.
இதுதான் பயக்க வயக்கம். ...............................இந்தியாவில் இருப்பது கம்யூனிசமோ, சோசியலிசமோ அல்ல. கடைந்தெடுத்த ஏமாற்றிசம். இது அமெரிக்க முதலாளியிசத்தை விடக் கொடுமையானது.

1000 அன்னியன் வந்தாலும் திருத்த முடியாது.

நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம்.//

வாங்க ரங்குடு, வணக்கம்
நல்ல சப்பை கட்டுபோல இருக்கே.
RajK உங்களுக்கான பதிலை சொல்லியிருக்கின்றார். செய்யுறது தப்பு அதுல வியாக்கியானம் ரொம்ப நல்லாவே இருக்கு சார். காருல போரவனிடம் சைக்கிள்ல போரவன் புடுங்கினா தப்பில்லையா? சைக்கிளில் போர உங்களிடம் நடந்து போரவன் புடுங்கினா தப்பில்லைதானே? என் சார் உங்க சப்பைக்கட்டு. கடமையை செய்ய சம்பளம் இருக்கு, பத்தல்னா போராடு அத விட்டுட்டு எழியோரிடம் புடுங்கினா எப்படி? ரொம்ப நல்லா இருக்கு சார்......

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டா திருட்டை ஒழிக்க முடியாது//

வாங்க நசரேயன்.... மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...

இப்படி வாங்கிய காசில் வாங்கும் பூவூக்கும் அல்வாக்கும் காத்திருக்கின்றாரா இவரின் மனைவி.

நல்ல சவுக்கடி

கையூட்டு(லஞ்சம்) வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்'

Blogger சொல்லரசன் said...

இப்படி வாங்கிய காசில் வாங்கும் பூவூக்கும் அல்வாக்கும் காத்திருக்கின்றாரா இவரின் மனைவி.

நல்ல சவுக்கடி

கையூட்டு(லஞ்சம்) வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்'

லஞ்சம் வாங்குபவரை விட கொடுபவருக்கு அதிக தண்ட‌னை என்று சட்டம்
வரவேண்டும்.அப்போதுதான் லஞ்சம் வாங்குபவர்கள் காட்டி
கொடுக்கபடுவார்கள்.அப்போதுதான் லஞ்சம் வாங்குபவர்கள் காட்டி
கொடுக்கபடுவார்கள்.//

வாங்க சொல்லரசன் உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி...

நீங்கள் சொல்வதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.. கடமையை மீற கொடுக்கும் லஞ்சத்தைவிட கடமையை செய்ய வாங்கும் லஞ்சம்தாம் அதிகமா இருக்கு...

ஆ.ஞானசேகரன் said...

//ஷண்முகப்ரியன் said...

லஞ்சம் வாங்குபவரை விட கொடுபவருக்கு அதிக தண்ட‌னை என்று சட்டம்
வரவேண்டும்.அப்போதுதான் லஞ்சம் வாங்குபவர்கள் காட்டி
கொடுக்கபடுவார்கள்.//

இதனை நான் மனப் பூர்வமாக வழிமொழிகிறேன்.

’’ஆவதும் நம்மாலே,அழிவதும் நம்மாலே’’//

வணக்கம் சார்.. நானும்தான் வழிமொழிகின்றேன்.. ஆனால் நம் நாட்டின் சட்டம் மிக நல்லதுதான் அதன் நடைமுறையில்தான் பழவீகினம் இருக்கு... மிக்க நன்றி சார்..

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

இதுக்கே நெஞ்சு பொருக்கலனா எப்படி? பிஞ்சியிலேயே வாழ்வை தொலைக்கும் உள்ளங்களை எல்லாம் கொஞ்சம் யோசித்து பாருங்கள்........................//

வாங்க ராஜ் உங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு மிக்க நன்றிப்பா!!!!

ஆ.ஞானசேகரன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...

உங்கள் ஆதங்கம் அப்படியே வெளிபடுகின்றது. முதலில் சந்தோசமான தருணங்களை நெகிழ்வுடன் ஆரம்பித்து பின் கையூட்டு பெரும் கொடுக்கும் நபர்களை சவுக்கால விலாசி விட்டீரகள், |அவர் யார்?| என்று ஆரம்பிக்கும் கேள்விகள் சிந்தனை வெளிச்சம் மிகச் சரியான கேள்விகள்.//

வணக்கம் நண்பா... மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...

மிக நல்ல பதிவு!!//

வணக்கம் தோழி,
மிக்க நன்றி.. பிழைகளையும் மாற்றிவிட்டேன் நன்றி

ஆ.ஞானசேகரன் said...

/// புதியவன் said...

//இப்படி வாங்கிய காசில் வாங்கும் பூவூக்கும் அல்வாக்கும் காத்திருக்கின்றாரா இவரின் மனைவி. இல்லை அந்த காசில் வாங்கிய பேனாவில்தான் இவரின் பிள்ளை பரிச்சை எழுதுகின்றார்களா?. //

நியாயமான கேள்வி தான் பதில் சொல்ல யார் இருக்கிறார்கள்//

மிக்க நன்றி புதியவன்

ஆ.ஞானசேகரன் said...

// ஆதவா said...

ஹாஹா..... சார்.... நீங்க சாமானியரைப் பத்தி எழுதும்பொழுதே நினைத்தேன். நீங்க அந்நியன் டைப் என்று...................>//


வணக்கம் ஆதவா,
சொல்லாரசன் சொல்வதைபோல் லஞ்சம் கொடுப்பதும் குற்றம்தான். நம்முடைய அவசர தேவைகளுக்கு கொடுப்பதால் நாமும் அதற்கு துணையாகியுள்ளோம்.. இதை தடுக்க சட்டம் மட்டும் போதாது, சட்டத்தை முறையாக பயன்படுத்தும்பொழுதான் சரியாக இருக்கும். கொடுப்பதால் தண்டனை என்றால் பொய் வழக்குகள்தான் இருக்கும்.... நன்றி ஆதவா

ஆ.ஞானசேகரன் said...

/// ஆ.முத்துராமலிங்கம் said...

ஆதவா said...

போலீஸ்காரய்ங்களே.... சில்லறைத்தனமா இறங்கிட்டீங்களே!!!!//

ஆதவா நீங்களாவது நாண்கு ரூபாய் கொடுத்தி இருக்கீங்க, ஆனா சென்னையில் பாரிமுனையில் தள்ளுவண்டிக் காரணிடமும், மாட்டுவண்டிக் காரர்களிடமும் 2 ரூபா பிச்சக் காசா வாங்குவாங்க பாருங்க.. இந்த கொடுமையா எங்க சொல்லுரது.///

இதை பார்க்கும்பொழுதுதான் கோபம் அதிகமாகின்றது. லஞ்சம் வாங்குவதை ஒரு தொழிளாகவே செய்கின்றார்கள்.... ம்ம்ம்ம்ம்ம்ம்

வேத்தியன் said...

என்ன செய்வது நண்பா???

இது இந்தியாவில் மட்டுமல்ல..
இங்கும் தான்...

இவர்கள் கேட்பதற்குக் காரணம் பொதுமக்கள் தான்..
அவர்கள் கொடுத்துப் பழக்கியதால் தான் கேட்கிறார்கள்...

அவர்களுக்கு எல்லாம் புரிய வைப்பதென்பது ரொம்ப கஷ்டம்...

வருத்தம் தான்...

ஆ.ஞானசேகரன் said...

/// வேத்தியன் said...

என்ன செய்வது நண்பா???

இது இந்தியாவில் மட்டுமல்ல..
இங்கும் தான்...

இவர்கள் கேட்பதற்குக் காரணம் பொதுமக்கள் தான்..
அவர்கள் கொடுத்துப் பழக்கியதால் தான் கேட்கிறார்கள்...

அவர்களுக்கு எல்லாம் புரிய வைப்பதென்பது ரொம்ப கஷ்டம்...

வருத்தம் தான்...///

வணக்கம் வேத்தியன்...
இந்தியாவில் மட்டும்தான் கடமையை செய்ய லஞ்சம் கொடுக்கப்படுகின்றது.

சமீபத்தில் நடந்த கணிப்பின்படி லஞ்சத்தில் முதலிடத்தில் இருப்பது RDO அலுவலம் இரண்டாவதாக போலீஸ் மூன்றாவதாக மின்துறை...

ம்ம்ம் என்று மாறுமோ.....

கார்த்திகைப் பாண்டியன் said...

இதில் மக்களின் தப்பும் உள்ளது நண்பா.. வேலை சீக்கிரம் ஆகா வேண்டும் என்பதால் லஞ்சம் கொடுத்து பழக்குவதும் தப்புத்தானே.. இப்போது கொடுப்பவன் நிறுத்தினால் கூட வாங்குபவன் நிறுத்த மாட்டான்.. சுய ஒழுக்கம் மட்டுமே இதற்கான தீர்வு என நினைக்கிறேன்

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
இதில் மக்களின் தப்பும் உள்ளது நண்பா.. வேலை சீக்கிரம் ஆகா வேண்டும் என்பதால் லஞ்சம் கொடுத்து பழக்குவதும் தப்புத்தானே.. இப்போது கொடுப்பவன் நிறுத்தினால் கூட வாங்குபவன் நிறுத்த மாட்டான்.. சுய ஒழுக்கம் மட்டுமே இதற்கான தீர்வு என நினைக்கிறேன்//

உண்மைதான் நண்பா! கடமையை செய்ய எதுக்கு கையூட்டு? அதுதான் பிரச்சனையே ,,
மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்

தமிழரசி said...

அன்னியன் மாதிரி ஐந்து பைசாவுக்கும் குரல் எழுப்பலாம் என்ன செய்ய அவசர உலகம் அமான்னுஷ்யத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறது....

20ரூபாய் லஞ்சமா? அல்பத்தனம் என்று நினைக்கும் போதோ 4 ரூபாய் லஞ்சம்....என்னக் கொடுமை சார் இது......

பொங்கி எழும் நாம் தீயை குறைத்தால் அடங்கும் பால் போலாகி விடுவது தான் நம்மோட பலவீனம்....பலம் வரும் வரை அடி வாங்குவோம்....


என் பையனின் கையை இருக பிடித்தேன்.
வாஞ்சையுடன் என் மனைவி என் அருகில் வந்ததும்
கண்களில் ஆயிரமாயிரம்..........

ஏன் சேகர் இந்த............இதில் என்ன நிரப்பனும்......ஹைய்யோ உங்க வெட்கம் ரொம்ப அழகுப்பா...

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

அன்னியன் மாதிரி ஐந்து பைசாவுக்கும் குரல் எழுப்பலாம் என்ன செய்ய அவசர உலகம் அமான்னுஷ்யத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறது....

20ரூபாய் லஞ்சமா? அல்பத்தனம் என்று நினைக்கும் போதோ 4 ரூபாய் லஞ்சம்....என்னக் கொடுமை சார் இது......

பொங்கி எழும் நாம் தீயை குறைத்தால் அடங்கும் பால் போலாகி விடுவது தான் நம்மோட பலவீனம்....பலம் வரும் வரை அடி வாங்குவோம்....


என் பையனின் கையை இருக பிடித்தேன்.
வாஞ்சையுடன் என் மனைவி என் அருகில் வந்ததும்
கண்களில் ஆயிரமாயிரம்..........

ஏன் சேகர் இந்த............இதில் என்ன நிரப்பனும்......ஹைய்யோ உங்க வெட்கம் ரொம்ப அழகுப்பா...//


வாங்க தமிழரசி,
மிக்க நன்றிமா....

Anbu said...

மிக நல்ல பதிவு!!

நையாண்டி நைனா said...

சா......மி... நீங்க இவ்வளவு சீரியஸ் ஆளா....?

அப்படியே சும்மா விசயகாந்து சினிமாலே அடிக்கிற மாதிரி சொல்ட்டி சொல்ட்டி அடிச்சிருக்கீங்க...

இனி வரும் பதிவுகளிலும் சந்திக்கிறேன்.

ராம்.CM said...

நான் மனதில் நினைத்த கருத்தை தாங்கள் பதிவாக போட்டுவிட்டீர்கள். அருமை.

ஆ.ஞானசேகரன் said...

//Anbu said...
மிக நல்ல பதிவு!!//


மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//நையாண்டி நைனா said...
சா......மி... நீங்க இவ்வளவு சீரியஸ் ஆளா....?

அப்படியே சும்மா விசயகாந்து சினிமாலே அடிக்கிற மாதிரி சொல்ட்டி சொல்ட்டி அடிச்சிருக்கீங்க...

இனி வரும் பதிவுகளிலும் சந்திக்கிறேன்.
//
வாங்க சாமி நல்லா இருக்கிங்களா? மிக்க நன்றி நையாண்டி நைனா

ஆ.ஞானசேகரன் said...

//ராம்.CM said...
நான் மனதில் நினைத்த கருத்தை தாங்கள் பதிவாக போட்டுவிட்டீர்கள். அருமை.//


வணக்கம் ராம் சார்,
மிக்க நன்றி

thevanmayam said...

லஞ்சம் வாங்குபவரை விட கொடுபவருக்கு அதிக தண்ட‌னை என்று சட்டம்
வரவேண்டும்.அப்போதுதான் லஞ்சம் வாங்குபவர்கள் காட்டி
கொடுக்கபடுவார்கள்.//

உண்மைதான்!! பத்திரம் பதிவு, சாலை வரிவிதிக்குமிடம், ஆகிய இடங்களில் சந்தோசமாக பணம் கைமாறும்.

Muniappan Pakkangal said...

20 ruvaayaa,10 ruvaa thaan Gnanaseharan.This cann't be abolished since 'avanum vaangi pazhahittaan,ivanum kuduthu pazhahittaan '.

ஆ.ஞானசேகரன் said...

//thevanmayam said...
லஞ்சம் வாங்குபவரை விட கொடுபவருக்கு அதிக தண்ட‌னை என்று சட்டம்
வரவேண்டும்.அப்போதுதான் லஞ்சம் வாங்குபவர்கள் காட்டி
கொடுக்கபடுவார்கள்.//

உண்மைதான்!! பத்திரம் பதிவு, சாலை வரிவிதிக்குமிடம், ஆகிய இடங்களில் சந்தோசமாக பணம் கைமாறும்.//

வணக்கம் தேவன் சார்...
நீஙகள் கூறுவதும் உண்மைதான்... சட்டத்தைவிட சட்டத்தை முறைத்தவறி பயன்படுத்துவதுதான் பிரச்சனையே இருக்கு... அதனால் சட்டத்தைவிட சுய கட்டுப்பாடும் முக்கியம் என்பது என் எண்ணங்கள்

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
20 ruvaayaa,10 ruvaa thaan Gnanaseharan.This cann't be abolished since 'avanum vaangi pazhahittaan,ivanum kuduthu pazhahittaan //

வணக்கம் சார்..

வாங்குவதும் கொடுப்பதும் இருக்கட்டும்... கடமையை செய்ய ஏன் காசு கேட்கவேண்டும்? என்பதுதான் எனக்கு எரிச்சல்

கிரி said...

இதை போல சமயங்களில் வரும் எரிச்சல்...என்னமோ போங்க..

இவங்க எல்லாம் எப்போதும் திருந்த மாட்டார்கள் :-(

ஆ.ஞானசேகரன் said...

//கிரி said...

இதை போல சமயங்களில் வரும் எரிச்சல்...என்னமோ போங்க..

இவங்க எல்லாம் எப்போதும் திருந்த மாட்டார்கள் :-(//

வாங்க கிரி,

அதே எரிச்சலில்தான் இந்த பதிவு..
மாறனும் அல்லது மாத்தனும்

முனைவர் சே.கல்பனா said...

மனிதனாய் பார்த்து திருந்தினால் ஒழிய வேறு ஒன்றும் செய்யமுடியாது.

pukalini said...

அவராவது பரவாயில்லை. உள்ளுக்கேயே காசுப் பையைச் சோதிக்க ஒருத்தன் ஆசைப் பட்டான். கேட்டா தான் தான் பெரிசாம்.

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர் சே.கல்பனா said...

மனிதனாய் பார்த்து திருந்தினால் ஒழிய வேறு ஒன்றும் செய்யமுடியாது.//

வணக்கம் அம்மா,
குறைந்த பச்சம் கடமையை செய்ய லஞ்சம் கேட்காமல் இருந்தாலே போதும்
"திருந்தனும் என்ற ஆசைதான்"

ஆ.ஞானசேகரன் said...

// pukalini said...

அவராவது பரவாயில்லை. உள்ளுக்கேயே காசுப் பையைச் சோதிக்க ஒருத்தன் ஆசைப் பட்டான். கேட்டா தான் தான் பெரிசாம்.//

வணக்கம் நண்பா உங்களின் கருத்து புரியவில்லை

கடையம் ஆனந்த் said...

நல்ல பதிவு நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//Blogger கடையம் ஆனந்த் said...

நல்ல பதிவு நண்பா//

மிக்க நன்றி நண்பா

sakthi said...

'கையூட்டு(லஞ்சம்) வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்' என்று பலகையிலும், சொல் அளவிலும் வைத்துக்கொண்டு வாழும் வாழ்க்கையின் அர்த்தம் வேண்டி...

என்ன செய்ய சொல்றீங்க கையூட்டு தந்தா தானே வேலை நடக்குது.....

நல்ல பதிவு என் மனதில் நிறைய நாட்கள் எழுத வேண்டும் என நினைத்திருந்த விஷயம்....

பகிர்வுக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...

'கையூட்டு(லஞ்சம்) வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்' என்று பலகையிலும், சொல் அளவிலும் வைத்துக்கொண்டு வாழும் வாழ்க்கையின் அர்த்தம் வேண்டி...

என்ன செய்ய சொல்றீங்க கையூட்டு தந்தா தானே வேலை நடக்குது.....

நல்ல பதிவு என் மனதில் நிறைய நாட்கள் எழுத வேண்டும் என நினைத்திருந்த விஷயம்....

பகிர்வுக்கு நன்றி//


வணக்கம் சக்தி உங்களின் வருகை மகிழ்ச்சி... தவிற்க வேண்டிய ஒன்று அதை நடைமுறைப் படுத்த சட்டம் மட்டுமே போதாது நம்முடைய சுய கட்டுபாடும் வேண்டும்... மிக்க நன்றி நண்பரே