_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, September 7, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 2

ஏன்? எதற்கு? எப்படி?..... 2

உலகத்தில் எல்லா இடங்களிலும் பொதிந்து கிடக்குதுன்னா அது ஆற்றல்(energy) தாங்க. இந்த ஆற்றலைதான் கர்ப்பனையில் கடவுள் என்று சொல்லுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். சுற்றி சுற்றி கடவுளைப் பற்றி சொல்லும்பொழுது இந்த ஆற்றலில்தான் வந்து முடிப்பார்கள். ஆற்றலை மனிதன் எப்பொழுது புரிந்துக்கொண்டு பயன்படுத்தினானோ அன்றுதான் விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஆச்சரியமாகியது. இயற்பியலில் ஆற்றல் என்று சொல்லுவார்கள் இதை எளிதாக சொல்லவேண்டும் என்றால் "சுறுசுறுப்புடன் செயற்படுதல்" என கொள்ளலாம்.

ஆற்றல் பல வகைகளில் இருக்கின்றது. உதாரணமாக
நிலையாற்றல்
இயக்கயாற்றல்
வெப்ப ஆற்றல்
ஒலி ஆற்றல்
ஒளி ஆற்றல்
அணு ஆற்றல்
அணுகரு ஆற்றல்
வேதியாற்றல்
என இப்படி பலவகை ஆற்றல்களாக பொதிந்து கிடக்கின்றது. இப்படி பட்ட ஆற்றலை புரிந்துக்கொண்டால்தான் நாம் நம்முடைய தேவைகளுக்கு முறையாக பயன்படுத்தலாம், இது எல்லோருக்கும் தெரியும் என்றாலும் அதைப்பற்றி மேலும் மேலும் சொல்லிக்கொள்வதில்தான் விஞ்ஞான வளர்ச்சியே இருக்கு. அதுதான் இந்த "ஏன்? எதற்கு? எப்படி?.... " கொஞ்சம் அலுப்பாக இருந்தாலும் சொல்லிக்கொள்வோம் என்றுதான் இந்த இரண்டாவது பகுதியை தொடர்கின்றேன்.

ஆற்றலை பற்றியது "ஆற்றலை ஆக்கவொ அழிக்கவோ முடியாது, ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்." இந்த கோட்பாட்டை மனிதன் புரிந்துக்கொண்டதன் விளைவாகத்தான் பல கண்டுபிடிப்புகள் உருவாகின என்றால் மிகையாகாது. உதாரணமாக இயக்காற்றலை மின் ஆற்றலாக மாற்றியதன் விளைவு "டைனமோ" உருவானது. மின்னாற்றலை இயக்காற்றலாக மாற்றியதன் விளைவு "மோட்டார்" உருவானது. இப்படி பல கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டுள்ளது.

இப்பொழுது நாம் "ஏன்? எதற்கு? எப்படி?.." தொடருக்கு வருவோம். ஒரு காப்பர் கம்பியால் சுற்றப்பட்ட ஆர்முச்சூர் காந்த புலத்தில் சுழற்றப்பட்டால் காப்பர் கம்பி வழியாக மின்சாரம் வெளிப்படும். அதாவது இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இதுதான் டைனமோ என்று சொல்லுகின்றோம். அதேபோல் சில மாற்றங்கள் செய்து காந்த புலத்தில் உள்ள அந்த காப்பர் கம்பியால் சுற்றப்பட்ட ஆர்முச்சூரில் கம்பியின் வழியாக மின்சாரம் செலுத்தப்பட்டால் ஆர்முச்சூர் சுற்றும். அதாவது மின் ஆற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இதுதான் மோட்டார் என்று சொல்லுகின்றோம்.

கீழே உள்ள படத்தை பார்க்கவும்...
[படம்]

ஒரு மோட்டாரும் ஒரு டைனமோவும் ஒரே அச்சியில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் இடையில் ஒரு விசிரியும் இணைக்கப்பட்டுள்ளது. டைனமோவில் வெளிப்படும் மின்சாரத்தை மோட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது விசிரியை கையால் சுற்றிவிடப்படுகின்றது. அதன் அச்சியில் உள்ள டைனமோவும் சுற்றி மின்சாரத்தை வெளிப்படுத்தும். மின்சாரம் அதனுடம் இணைத்த மோட்டாரை சுற்ற வைக்கும். மோட்டார் சுற்றும் பொழுது விசிரியும் டைனமோவும் சுற்றும். அதேபோல் டைனமோவில் மின்சாரம் வெளிப்படும். இந்த சுற்றில் விசிரியானது தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்குமா? இருக்காதா? ஏன்?...................... அப்படி தொடர்ந்து சுற்றாது என்றால் ஏன்?.................

உயரமான இடத்தில் குவளை வடிவில் நீர்தொட்டிகள் கட்டி வைத்து குடிநீர்க்கு பயன்படுத்தி வருகின்றோம். இதில் நிலத்தடி நீரை மோட்டாரை இயங்க வைத்து உயரமான தொட்டியில் நீர் நிரப்பி வைக்கப்படுகின்றது. பின்னார் குடி நீருக்காக திறந்து விடப்படுகின்றது. இதை இயற்பியலில் சொன்னால் மின் ஆற்றல் மோட்டாரை இயக்க வைத்து, இயக்க ஆற்றல் நிலையாற்றலாக நீரை தொட்டியில் வைக்கப்படுகின்றது. பின்னர் நிலையாற்றல் இயக்க ஆற்றலாக குடிநீருக்காக திறந்து விடப்படுகின்றது.

[படம்]

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்றால் நிலத்தில் உள்ள நீரை ஏன் உயரமான தோட்டியில் மோட்டார் கொண்டு நிரப்பி பின்னர் குடிநீருக்காக அனுப்பபடுகின்றது. நேரடியாக மோட்டர் கொண்டு நீரை வினியோகம் செய்யலாமே. ஏன் அப்படி செய்யவில்லை? தொட்டியில் நிரப்பி பின் வினியோகிப்பதால் என்ன லாபம்?

கீழே உள்ள படத்தை பார்க்கவும்
[படம்]
சாதாரணமாக நீர் தொட்டிகள் குவளை வடிவில் வைக்கப்படும். சில இடங்களில் கூம்பு வடிவில் நீர் தோட்டிகள் வைக்கபடுகின்றது. இந்த கூம்பு வடிவ நீர் தொட்டிகளினால் என்ன அதிக லாபம்? அந்த லாபம் எதனால் ஏற்படுகின்றது?

இது போன்ற சிந்தனைகள் வந்தாலும் வரலாம்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
..

46 comments:

பழமைபேசி said...

அப்படிப் போடுங்க... அறிவியல் இடுகை... தொடருங்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// பழமைபேசி said...

அப்படிப் போடுங்க... அறிவியல் இடுகை... தொடருங்கள்!//

வாங்க நண்பா,... மிக்க நன்றிங்க

ஹேமா said...

ஞானம் மூளையைக் கசக்கிப் பிழிஞ்சு எடுக்கிறீங்க.நல்ல விடயங்கள்.
யோசிக்க வைக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம் மூளையைக் கசக்கிப் பிழிஞ்சு எடுக்கிறீங்க.நல்ல விடயங்கள்.
யோசிக்க வைக்கிறது.//


வாங்க ஹேமா, தெரிந்ததில் திருப்பிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் அவ்வளவே,....

அப்பாவி முரு said...

யாருமே பதில் சொல்லலையே...

அதான் கயமையோ?

Anonymous said...

சேகர் என்னை அறிவாலியாக்க முயற்சிக்காதீங்க.....

புதுமுயற்சி நல்லாயிருக்குப்பா...

Raju said...

யப்பா, கொஞ்ச நேரம் ஒரு Physics Class ல உக்காந்த ஃபீலிங்..!

CorTexT (Old) said...

நன்றாக உள்ளது!

இயற்கையில் நாம் நினைக்கும் பல விதிகள் உண்மையில் நிலையான விதிகள் அல்ல. உதாரணமாக, காலம் நிலையானதும் அல்ல; அது முன்னோக்கி மட்டுமே செல்லக்கூடியதும் அல்ல. பல விதிகள் ஏதேச்சையாக நிகழ்ந்த (பெரு வெடிப்பின் போது), நம் உலகிற்கு (Known Universe) மட்டுமே பொருந்துவதாக இருக்கலாம். மற்ற உலகங்களில் (String Theory எனப்படும் இழை நியதியின் படி, பல இணை-உலகங்கள் இருக்கலாம்) அவ்விதிகள் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கலாம். ஆனால், ஒரு சில விதிகள் மிக மிக அடிப்படையாகத் தெரிகின்றது. அதில் ஒன்று: ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. மேலும் ஒன்று: எண்ட்ரப்பி எனப்படும் இயல்பாற்றல் பற்றிய வெப்ப-இயக்கவியலின் இரண்டாம் விதி. இது கார்னாட் இயந்திரம் (Carnot Engine) பற்றி விளக்கத்திலிருந்து அறியப்பட்ட ஒன்று. அதுவே மோட்டார்-டைனமோ-சுற்று போன்ற பலவற்றிக்கு அடிப்படையான பதில் தருகின்றது. அதுவே உலகின் முடிவைப் பற்றியும் அறிந்துகொள்ள உதவுகின்றது.

ஆற்றலை பற்றிய நம் மிகப்பெரிய அறிவு, ஐன்ஸ்டீனின் E = mc^2. இதன்படி ஒவ்வொரு பொருளின் உள்ளும் மிகப்பெரிய அளவில் ஆற்றல் பொதிந்துள்ளது (பொருளே ஆற்றல் தான்). அதன்படியே சூரியன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் அணுக்கருச்-சேர்க்கை முறையில் பொருளிலிருந்து ஒளி ஆற்றலை வெளியிடுகின்றன. அதன்படியே அணுக்கரு-பிளவு மூலம் அணு மின் நிலையங்கள் இயங்குகின்றன. வரும்காலங்களில் அணுக்கருச்-சேர்க்கை முறையில் அணு மின் நிலையங்கள் உருவாகும் (பாதுகாப்பானது; சுற்று சூழலை மாசுபடுத்தாதது). அதுவே நம் எதிர்கால ஆற்றல் மூலமாக இருக்கும்.

ஈரோடு கதிர் said...

நைஸ்

கார்த்திகைப் பாண்டியன் said...

அறிவியல் ரீதியா இதற்கான விடைகளையும் கொஞ்சம் கண்டு பிடிச்சு சொல்லுங்க தலைவரே..

ஆ.ஞானசேகரன் said...

//அப்பாவி முரு said...

யாருமே பதில் சொல்லலையே...

அதான் கயமையோ?//

அட நீங்களாவது சொல்லியிருக்காலாம்..

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

சேகர் என்னை அறிவாலியாக்க முயற்சிக்காதீங்க.....

புதுமுயற்சி நல்லாயிருக்குப்பா...//

வாங்க தமிழ்,.. முயற்சியில் ஏதாவது பலன் இருக்கா?

ஆ.ஞானசேகரன் said...

// ராஜு.. said...

யப்பா, கொஞ்ச நேரம் ஒரு Physics Class ல உக்காந்த ஃபீலிங்..!//

வணக்கம் ராஜு,... கொஞ்சம் சிந்தித்து பார்க்கலாம் என்றுதான்..

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

நன்றாக உள்ளது!

இயற்கையில் நாம் நினைக்கும் பல விதிகள் உண்மையில் நிலையான விதிகள் அல்ல. உதாரணமாக, காலம் நிலையானதும் அல்ல; அது முன்னோக்கி மட்டுமே செல்லக்கூடியதும் அல்ல. பல விதிகள் ஏதேச்சையாக நிகழ்ந்த (பெரு வெடிப்பின் போது), நம் உலகிற்கு (Known Universe) மட்டுமே பொருந்துவதாக இருக்கலாம். மற்ற உலகங்களில் (String Theory எனப்படும் இழை நியதியின் படி, பல இணை-உலகங்கள் இருக்கலாம்) அவ்விதிகள் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கலாம். ஆனால், ஒரு சில விதிகள் மிக மிக அடிப்படையாகத் தெரிகின்றது. அதில் ஒன்று: ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. மேலும் ஒன்று: எண்ட்ரப்பி எனப்படும் இயல்பாற்றல் பற்றிய வெப்ப-இயக்கவியலின் இரண்டாம் விதி. இது கார்னாட் இயந்திரம் (Carnot Engine) பற்றி விளக்கத்திலிருந்து அறியப்பட்ட ஒன்று. அதுவே மோட்டார்-டைனமோ-சுற்று போன்ற பலவற்றிக்கு அடிப்படையான பதில் தருகின்றது. அதுவே உலகின் முடிவைப் பற்றியும் அறிந்துகொள்ள உதவுகின்றது.

ஆற்றலை பற்றிய நம் மிகப்பெரிய அறிவு, ஐன்ஸ்டீனின் E = mc^2. இதன்படி ஒவ்வொரு பொருளின் உள்ளும் மிகப்பெரிய அளவில் ஆற்றல் பொதிந்துள்ளது (பொருளே ஆற்றல் தான்). அதன்படியே சூரியன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் அணுக்கருச்-சேர்க்கை முறையில் பொருளிலிருந்து ஒளி ஆற்றலை வெளியிடுகின்றன. அதன்படியே அணுக்கரு-பிளவு மூலம் அணு மின் நிலையங்கள் இயங்குகின்றன. வரும்காலங்களில் அணுக்கருச்-சேர்க்கை முறையில் அணு மின் நிலையங்கள் உருவாகும் (பாதுகாப்பானது; சுற்று சூழலை மாசுபடுத்தாதது). அதுவே நம் எதிர்கால ஆற்றல் மூலமாக இருக்கும்.//


மிக பெரிய கருத்துரை மிக அழகு,... கேடகப்பட்ட சந்தேகங்களுக்கும் அறிவியல் ரீதியா.. விளக்கம் சொல்லுங்கள்.. மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// கதிர் - ஈரோடு said...

நைஸ்//

மிக்க நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

அறிவியல் ரீதியா இதற்கான விடைகளையும் கொஞ்சம் கண்டு பிடிச்சு சொல்லுங்க தலைவரே..//

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன்,.. பின்னூட்டத்தில் சொல்லுவார்கள் என்று எதிர்ப்பார்த்தேன். நீங்களாவது சொல்லியிருக்கலாம்....

குடந்தை அன்புமணி said...

அதானே... யாராவது பின்னூட்டத்தில் பதில் சொல்லுங்கப்பா...

ஞானசேகரன் சார்...
குருவிகள். ப்ளாக்ஸ்பாட். காம். சென்று பாருங்கள். அவர்களிடமே கேள்விகளும் கேட்கலாம்...

சூர்யா ௧ண்ணன் said...

பெரிய கருத்துரை மிக அழகு,
மிக்க நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

அதானே... யாராவது பின்னூட்டத்தில் பதில் சொல்லுங்கப்பா...

ஞானசேகரன் சார்...
குருவிகள். ப்ளாக்ஸ்பாட். காம். சென்று பாருங்கள். அவர்களிடமே கேள்விகளும் கேட்கலாம்...//

மிக்க நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

// சூர்யா ௧ண்ணன் said...

பெரிய கருத்துரை மிக அழகு,
மிக்க நன்றி//

பாராட்டுகளுக்கு நன்றிப்பா

ஆ.ஞானசேகரன் said...

// mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் தங்களின் இந்த செய்தி முன்னணி இடுகையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்//


நன்றி

CorTexT (Old) said...

இவற்றை எளிய பொது அறிவு கொண்டே விளக்க முடியும்.

மோட்டார்-டைனமோ-சுற்று (வெளியிலிருந்து ஆற்றலை பெறாத பட்சத்தில்) தொடர்ந்து இயங்காது; ஏனெனில் ஆற்றலை ஒன்றிலிருந்து மற்றொன்றிக்கு 100% முழுவதுமாக மாற்ற முடியாது; அதாவது சில ஆற்றல் வீணாகப்போகும். இதற்கு பொறியிலில் குறை (Engineering Problems) மட்டுமே காரணம் அல்ல. அதுவே எண்ட்ரப்பி எனப்படும் இயல்பாற்றல் பற்றிய வெப்ப-இயக்கவியலின் இரண்டாம் விதி. ஆழ்ந்த விளக்கத்திற்கு கார்னாட் இயந்திரம் (Carnot Engine) பற்றி அறிந்து கொள்ளவும்.

உயரமான இடத்தில் நீர்தொட்டிகள் வைப்பதில் பல பொறியில் காரணங்கள் (Engineering Reasons) உண்டு. ஊருக்கே நிலத்தடிநீரை நேரடியாக அனுப்புவதற்கு அதிக-அளவு உடனடி மின் ஆற்றல் தேவை; மேலும் பயன்பாட்டிற்கு ஏற்ப அதை கட்டுபடுத்த வேண்டும். அதற்கு பதில் சீராக நீரை உயர-நீர்தொட்டில் சேகரித்து கொண்டு எளிதாக வினியோகிகலாம். கூம்பு-வடிவ-நீர்த்-தொட்டிகள் அனைத்து நீரின் கனத்தையும் ஒரு குறிய இடத்தில் இடுவதால் (center of gavity), நீரின் அழுத்தை அதிகப்படுத்தும்.

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

இவற்றை எளிய பொது அறிவு கொண்டே விளக்க முடியும்.

மோட்டார்-டைனமோ-சுற்று (வெளியிலிருந்து ஆற்றலை பெறாத பட்சத்தில்) தொடர்ந்து இயங்காது; ஏனெனில் ஆற்றலை ஒன்றிலிருந்து மற்றொன்றிக்கு 100% முழுவதுமாக மாற்ற முடியாது; அதாவது சில ஆற்றல் வீணாகப்போகும். இதற்கு பொறியிலில் குறை (Engineering Problems) மட்டுமே காரணம் அல்ல. அதுவே எண்ட்ரப்பி எனப்படும் இயல்பாற்றல் பற்றிய வெப்ப-இயக்கவியலின் இரண்டாம் விதி. ஆழ்ந்த விளக்கத்திற்கு கார்னாட் இயந்திரம் (Carnot Engine) பற்றி அறிந்து கொள்ளவும்.

உயரமான இடத்தில் நீர்தொட்டிகள் வைப்பதில் பல பொறியில் காரணங்கள் (Engineering Reasons) உண்டு. ஊருக்கே நிலத்தடிநீரை நேரடியாக அனுப்புவதற்கு அதிக-அளவு உடனடி மின் ஆற்றல் தேவை; மேலும் பயன்பாட்டிற்கு ஏற்ப அதை கட்டுபடுத்த வேண்டும். அதற்கு பதில் சீராக நீரை உயர-நீர்தொட்டில் சேகரித்து கொண்டு எளிதாக வினியோகிகலாம். கூம்பு-வடிவ-நீர்த்-தொட்டிகள் அனைத்து நீரின் கனத்தையும் ஒரு குறிய இடத்தில் இடுவதால் (center of gavity), நீரின் அழுத்தை அதிகப்படுத்தும்.//

சரியான பதிலை எளிமையாக விளக்கியதற்கு மிக்க நன்றிபா...

ஆ.ஞானசேகரன் said...

//RajK said...

இவற்றை எளிய பொது அறிவு கொண்டே விளக்க முடியும்.

மோட்டார்-டைனமோ-சுற்று (வெளியிலிருந்து ஆற்றலை பெறாத பட்சத்தில்) தொடர்ந்து இயங்காது; ஏனெனில் ஆற்றலை ஒன்றிலிருந்து மற்றொன்றிக்கு 100% முழுவதுமாக மாற்ற முடியாது; அதாவது சில ஆற்றல் வீணாகப்போகும். //

ஆற்றல் எவ்வாறு எல்லாம் வீணாக வாய்புள்ளது? அதை தடுக்க முடியுமா?

வால்பையன் said...

தொடர்ந்துஎழுதுங்க!

S.A. நவாஸுதீன் said...

உருப்படியான விஷயங்கள் எழுதுறதுல நீங்க ஒரு ஆள் நண்பா. தொடர்ந்து எழுதுங்க.

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

தொடர்ந்துஎழுதுங்க!//

மிக்க நன்றி நண்பா,.. உங்களை போன்றோர் கொடுக்கும் ஊக்கமே எனக்கு பலம்....

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

உருப்படியான விஷயங்கள் எழுதுறதுல நீங்க ஒரு ஆள் நண்பா. தொடர்ந்து எழுதுங்க.//

உங்களின் மனம்திறந்த பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா,... உங்களின் ஊக்கமும் எனக்கு தேவை.

Admin said...

உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

அன்புடன் அருணா said...

தெரிந்ததில் திருப்பிப்பார்க்க ஒரு நல்ல சந்தர்ப்பம்.....It increases the pressure of water due to centre of gravity...right?

CorTexT (Old) said...

//It increases the pressure of water due to centre of gravity...right?//

As the weight of whole tank water focuses on its centre of gravity, it increases the water pressure. நீர்தொட்டியுள்ள மொத்த நீரின் கனமும், அதன் புவியீர்ப்பு மையத்தை நோக்கி குவிக்கப்படுவதால், அது நீரின் அழுத்தை அதிகப்படுத்துகின்றது.

//ஆற்றல் எவ்வாறு எல்லாம் வீணாக வாய்புள்ளது? அதை தடுக்க முடியுமா?//

முக்கியமாக உராய்வினாலும் (mechanical resistance) மற்றும் மின் தடையுனாலும் (electric resistance) வெப்ப ஆற்றலாக வீணாகும். அதை முற்றிலும் தடுக்க முடியாது; ஆனால் குறைக்க முடியும். ஒரு இயந்திரத்தின் திறனை 99.9999...% க்கு வடிவமைக்கலாம். ஆனால் 100% க்கு முடியாது. அதைத்தான் கார்னாட் என்பவர் ஒரு அறிமுறை-இயந்திரத்தை (theoritical engine) கொண்டு நிருபித்தார்.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நல்ல பகிர்வு........

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...
உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்//

உங்களின் அன்புக்கு மிக்க நன்றி நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

// உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்//

நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
தெரிந்ததில் திருப்பிப்பார்க்க ஒரு நல்ல சந்தர்ப்பம்.....It increases the pressure of water due to centre of gravity...right?//

சரிதான்... மிக்க நன்றிங்க.. ராஜ் அவர்கள் இன்னும் விளக்கமாக சொல்லியுள்ளார்... உங்களின் வருகை மகிழ்ச்சியே...

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...
//It increases the pressure of water due to centre of gravity...right?//

As the weight of whole tank water focuses on its centre of gravity, it increases the water pressure. நீர்தொட்டியுள்ள மொத்த நீரின் கனமும், அதன் புவியீர்ப்பு மையத்தை நோக்கி குவிக்கப்படுவதால், அது நீரின் அழுத்தை அதிகப்படுத்துகின்றது.

//ஆற்றல் எவ்வாறு எல்லாம் வீணாக வாய்புள்ளது? அதை தடுக்க முடியுமா?//

முக்கியமாக உராய்வினாலும் (mechanical resistance) மற்றும் மின் தடையுனாலும் (electric resistance) வெப்ப ஆற்றலாக வீணாகும். அதை முற்றிலும் தடுக்க முடியாது; ஆனால் குறைக்க முடியும். ஒரு இயந்திரத்தின் திறனை 99.9999...% க்கு வடிவமைக்கலாம். ஆனால் 100% க்கு முடியாது. அதைத்தான் கார்னாட் என்பவர் ஒரு அறிமுறை-இயந்திரத்தை (theoritical engine) கொண்டு நிருபித்தார்.]]


எளிமையான விதத்தில் அழகாக பதில் சொல்லியுள்ளீர்கள்.. பாராட்டுகள். மிக்க நன்றியும் ..

ஆ.ஞானசேகரன் said...

//முனைவர் சே.கல்பனா said...
நல்ல பகிர்வு........//


மிக்க நன்றிங்க‌

அன்புடன் நான் said...

ஆற்றலைப் பற்றி மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு நல்ல நினைவாற்றல், கற்கும் ஆற்றல், மேலும் கற்பிக்கும் ஆற்றல் இருப்பதை எண்ணி வியக்கிறேன் நண்பா. வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...
ஆற்றலைப் பற்றி மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு நல்ல நினைவாற்றல், கற்கும் ஆற்றல், மேலும் கற்பிக்கும் ஆற்றல் இருப்பதை எண்ணி வியக்கிறேன் நண்பா. வாழ்த்துக்கள்.//

உங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா,.. உங்களை போன்றோரின் ஊக்கத்தால் என்னால் எழுத முடிகின்றது. நன்றி நன்றி நன்றி

Muniappan Pakkangal said...

Ubayohamaana pathivu Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Ubayohamaana pathivu Gnanaseharan//

Thanks sir,..

Admin said...

நல்ல இடுகை பகிர்வுக்கு நன்றிகள்

ஆ.ஞானசேகரன் said...

//சந்ரு said...

நல்ல இடுகை பகிர்வுக்கு நன்றிகள்//

மிக்க நன்றி நண்பா

Unknown said...

அருமையா விளக்கிருக்கீங்க.

இப்படி அறிவியல் தொடர்/பதிவு அதிகமாக தமிழில் வரவேண்டும்.

தொடருங்கள். நாங்களும் தொடருகிறோம்.

ஆ.ஞானசேகரன் said...

//Mãstän said...
அருமையா விளக்கிருக்கீங்க.

இப்படி அறிவியல் தொடர்/பதிவு அதிகமாக தமிழில் வரவேண்டும்.

தொடருங்கள். நாங்களும் தொடருகிறோம்//


வாங்க நண்பரே,.. உங்களின் வருகை மிக்க மகிழ்ச்சி உங்களை போன்றவர்களின் ஊக்கம் மேலும் எழுத ஆர்வம் கொடுக்கும்.. மிக்க நன்றி நண்பரே!