ஏன்? எதற்கு? எப்படி?.....
ஓடுகின்ற பேருந்திலிருந்து இறங்கினால் நாமும் சிறிது தூரம் ஓடிய பின்னர்தான் நிற்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே பேருந்தின் வேகம் அதிகமாக இருந்தால் நம்மால் இறங்க முடியுமா?
நாம் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் புகைவண்டியில் பிரயாணம் செய்துக்கொண்டுள்ளோம். புகைவண்டியுடன் நாமும் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் வேகத்தை நம்மால் உணரமுடிவதில்லை ஏன்?
அதே புகைவண்டியில் உற்கார்ந்த நிலையில் ஒரு ஆப்பிளை எடுத்து மேலே தூக்கிப்போட்டு பிடிக்கின்றோம். நாம் புகைவண்டியுடன் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக்கொண்டுள்ளோம், ஆனால் ஆப்பிளை தூக்கிப்போடும் பொழுது புகைவண்டிக்கும் ஆப்பிளுக்கும் தொடர்பில்லை அப்படியிருந்தும் ஆப்பிள் நம் கையை வந்தடைவது எப்படி? ஆப்பிளை 80 கிலோமீட்டர் வேகத்திலா தூக்கிபோட்டோம்?
அதே புகைவண்டியில் பிரயாணம் செய்யும் பொழுது நம் மேல் ஒரு "ஈ" உற்காருகின்றது நாம் அதை விரட்டினால் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று உட்காருகின்றது. "ஈ " 80 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தா பக்கத்தில் உள்ளவரிடம் சென்றடைகின்றது?...
ஒரு விண்கலம் பூமிலிருந்து 380 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை சுற்றிவரும்பொழுது அந்த விண்கலம் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகின்றது. விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெளியே வர முற்பட்டால் அவரின் நிலை என்ன?
அப்படி சில சமயம் பணியின் காரணமாக விண்வெளி வீரர்கள் வெளியில் வருவதும் உண்டு அவற்றிக்கு விண்வெளி உலா என்று சொல்கின்றனர். முதல் முதலில் ரஷ்ய வீரர் அலெக்சேய் லியானோவ் என்பவர் 1965 ல் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதன் பிறகு பலர் இந்த உலாவில் ஈடுபடுகின்றனர். விண்வெளி வீரர் விண்கலத்திலுருந்து வெளியே வந்தாலும் அவரும் ஒரு விண்கலம் போல அதே வேகத்தில் பூமியை சுற்றுவார். மாறாக பூமியை நோக்கி கீழே விழமாட்டார். விண்வெளி உலாவின் போது வீரர்கள் அதற்கான சிறப்பு உடை அணிந்திருப்பார்கள். அதே போல் விண்கலத்திற்கும் அவருக்கும் நீண்ட குழாயுடன் இணைந்தவராக இருப்பார். சில சமயம் இணைப்பு இல்லாமலும் செல்வதும் உண்டு அதற்காக ஒரு அழுத்தமான காற்று அடைக்கப்பட்ட சிலிண்டரை தன் முதுகில் கட்டி வைத்துருப்பார்கள். அந்த சிலிண்டரில் சிறு துளை வழியாக காற்றை பீச்சி வலது, இடது என போகவேண்டிய இடத்திற்கு செல்கின்றனர். மேலும் சுவாசக் காற்றையும் வைத்துருப்பார்.
விண்வெளியில் வீண்வெளி வீரர்களுக்கு கால்களிருந்தும் நடக்க முடிவதில்லையே ஏன்? பூமியில் நடப்பதற்கு கால் மட்டும் போதுமா? தரையில் எண்ணெய் கொட்டியிருந்தால் அவற்றில் மேல் நடக்க முடிவதில்லை ஏன்?
இது போன்ற சிந்தனைகள் வந்தாலும் வரலாம்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
Thursday, September 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
ஏன்? எல்லாம் சொல்லிவிட்டு இது போன்ற சிந்தனைகள் வந்தாலும் வரலாம் என சந்தேகம் ஏன்? அதான் வந்து விட்டதே!!!
விடையறிந்த வினாக்கள்....
//ஆப்பிளை 80 கிலோமீட்டர் வேகத்திலா தூக்கிபோட்டோம்?
அதே புகைவண்டியில் பிரயாணம் செய்யும் பொழுது நம் மேல் ஒரு "ஈ" உற்காருகின்றது நாம் அதை விரட்டினால் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று உட்காருகின்றது. "ஈ " 80 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தா பக்கத்தில் உள்ளவரிடம் சென்றடைகின்றது?//
இதெல்லாம் அடைபட்ட அறையில் நிகழும், ரயினுள் நிகழும், ரயிலுக்கு மேலே (டாப்) அமர்ந்து செல்லும் போது ஈ உட்கார முடியாது :)
// தமிழரசி said...
ஏன்? எல்லாம் சொல்லிவிட்டு இது போன்ற சிந்தனைகள் வந்தாலும் வரலாம் என சந்தேகம் ஏன்? அதான் வந்து விட்டதே!!!
விடையறிந்த வினாக்கள்....//
வாங்க தமிழ் விடையறிந்த வினாக்களை அசைப்போடுவதிலும் இன்பமே
[[ கோவி.கண்ணன் said...
//ஆப்பிளை 80 கிலோமீட்டர் வேகத்திலா தூக்கிபோட்டோம்?
அதே புகைவண்டியில் பிரயாணம் செய்யும் பொழுது நம் மேல் ஒரு "ஈ" உற்காருகின்றது நாம் அதை விரட்டினால் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று உட்காருகின்றது. "ஈ " 80 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தா பக்கத்தில் உள்ளவரிடம் சென்றடைகின்றது?//
இதெல்லாம் அடைபட்ட அறையில் நிகழும், ரயினுள் நிகழும், ரயிலுக்கு மேலே (டாப்) அமர்ந்து செல்லும் போது ஈ உட்கார முடியாது :)]]
வணக்கம் கண்ணன் சரியா பாண்ட் பிடிச்சிட்டீங்க புறவிசைகள் இருப்பதால் ரயிலுக்கு மேலே ஈ உட்கார முடியவில்லை...
விண்கலத்தில் மேல் விண்வெளி வீரர்கள் உலா வருவது விண்வெளியில் புறவிசைகள் இல்லமைதான்....
நீங்கள் என்ன கேள்வியின் நாயகனோ? உங்கள் அனைத்து கேள்விகளுக்கான விளக்கங்களை பதில்-நாயகன் நீயூட்டன் தன் மூன்று விதிகள் மற்றும் ஒரு புவியீர்ப்பு விசை (Gravity) சமன்பாடு மூலம் அளித்துள்ளார். ஆனால் அவரின் புவியீர்ப்பு விசையின் சமன்பாடு தோராயமானதே (ராக்கெட் அனுப்புவதற்கும், நிலாவிற்கு சென்று வருவதற்கும் அது போதுமானது!). ஐன்ஸ்டீனின் பொது-சார்பியல் சமன்பாடு இன்னும் துல்லியமானதானாலும், மிகச்சிறிய அணுக்கூறு-அளவு-பொருட்களில் (Subatomic Particles) அது தோற்றுப்போய்கின்றது. குவாண்டம் விசையியலில் (Quantum Mechanics) இதற்கு ஒரு தியரி உண்டு. பெரிய ஆட்ரான் மோதுவி (Large Hadron Collider அல்லது LHC) ஆராய்ச்சியின் ஒரு முக்கிய பகுதி அதற்கான ஆதாரத்தை தேடுவது. அப்பொழுது நமக்கு ஐன்ஸ்டீனின் கனவான ஒரு ஐக்கிய நியதி (Unified Theory), உலகிலுள்ள அனைத்தையும் விளக்க ஒரு எளிய சமன்பாடு தெரியும். அப்பொழுதும் சிலருக்கு சனி-கிரகத்தால் சனி பிடிக்கலாம்!
// RajK said...
நீங்கள் என்ன கேள்வியின் நாயகனோ? உங்கள் அனைத்து கேள்விகளுக்கான விளக்கங்களை பதில்-நாயகன் நீயூட்டன் தன் மூன்று விதிகள் மற்றும் ஒரு புவியீர்ப்பு விசை (Gravity) சமன்பாடு மூலம் அளித்துள்ளார். ஆனால் அவரின் புவியீர்ப்பு விசையின் சமன்பாடு தோராயமானதே (ராக்கெட் அனுப்புவதற்கும், நிலாவிற்கு சென்று வருவதற்கும் அது போதுமானது!). ஐன்ஸ்டீனின் பொது-சார்பியல் சமன்பாடு இன்னும் துல்லியமானதானாலும், மிகச்சிறிய அணுக்கூறு-அளவு-பொருட்களில் (Subatomic Particles) அது தோற்றுப்போய்கின்றது. குவாண்டம் விசையியலில் (Quantum Mechanics) இதற்கு ஒரு தியரி உண்டு. பெரிய ஆட்ரான் மோதுவி (Large Hadron Collider அல்லது LHC) ஆராய்ச்சியின் ஒரு முக்கிய பகுதி அதற்கான ஆதாரத்தை தேடுவது. அப்பொழுது நமக்கு ஐன்ஸ்டீனின் கனவான ஒரு ஐக்கிய நியதி (Unified Theory), உலகிலுள்ள அனைத்தையும் விளக்க ஒரு எளிய சமன்பாடு தெரியும். அப்பொழுதும் சிலருக்கு சனி-கிரகத்தால் சனி பிடிக்கலாம்!//
ம்ம்ம்ம் மிக்க நன்றி ராஜ்
கடவுளின் பொருள் ஆராய்ச்சியா! தொடர் பதிவுக்கு வரவும்!!
தெரிந்த விஷயங்கள்தான் என்றாலும் வித்தியாசமான சிந்தனையோடு அணுகி இருப்பது சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பா
ஞானம்,சமூகச் சிந்தனை,அறிவியல் சிந்தனை என்று ஓடுகிறீர்கள்.வேகக் கட்டுப்படு உண்டா !
தெரிந்தவைகள் என்றாலும் நல்ல சிந்தனைகள்
அந்த வேகம் எமது கையைவிட்டு வெளியேறும் அப்பிளுக்கும் இருக்கிறது.ரயில் சார்பாக அந்த வேகம் உணரப் பட முடியாது .ஆனால் புவி சார்பாக உணரப்படும்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
// தேவன் மாயம் said...
கடவுளின் பொருள் ஆராய்ச்சியா! தொடர் பதிவுக்கு வரவும்!!//
நன்றி தேவன் சார்
// S.A. நவாஸுதீன் said...
தெரிந்த விஷயங்கள்தான் என்றாலும் வித்தியாசமான சிந்தனையோடு அணுகி இருப்பது சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பா//
நன்றி நண்பா
//ஹேமா said...
ஞானம்,சமூகச் சிந்தனை,அறிவியல் சிந்தனை என்று ஓடுகிறீர்கள்.வேகக் கட்டுப்படு உண்டா !//
வாங்க ஹேமா, தேடுதலுக்கு ஏது கட்டுப்பாடும் தடையும்... நன்றி ஹேமா
// Suresh Kumar said...
தெரிந்தவைகள் என்றாலும் நல்ல சிந்தனைகள்//
வணக்கம் நண்பா,.. நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்ததா? வாழ்த்துகள் நண்பா
// பனையூரான் said...
அந்த வேகம் எமது கையைவிட்டு வெளியேறும் அப்பிளுக்கும் இருக்கிறது.ரயில் சார்பாக அந்த வேகம் உணரப் பட முடியாது .ஆனால் புவி சார்பாக உணரப்படும்.//
சரிதான் நண்பா,.. அப்பொருளில் ஏற்படும் உந்தம் ஆப்பில் நம்கையை அடைகின்றது.
// உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்//
வாழ்த்துகள்
பொதுப் பார்வையிலிருந்து... அறிவியல் பார்வை... அருமை நண்பா. தொடரட்டும் பயணம்.
// சி.கருணாகரசு said...
பொதுப் பார்வையிலிருந்து... அறிவியல் பார்வை... அருமை நண்பா. தொடரட்டும் பயணம்.//
வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்க
ரொம்ப யோசிக்கிறாங்கப்பா... நடக்கட்டும்... நடக்கட்டும்...
// குடந்தை அன்புமணி said...
ரொம்ப யோசிக்கிறாங்கப்பா... நடக்கட்டும்... நடக்கட்டும்..//
வாங்க நண்பா....
ஐன்ஸ்டனின் ' Theory of Relativity' இன் தொடக்கமே இங்குத்தானே! சூப்பர்! அப்படியே செல்லுங்கள், நாங்களும் கூட வருகிறோம்.
//M.S.E.R.K. said...
ஐன்ஸ்டனின் ' Theory of Relativity' இன் தொடக்கமே இங்குத்தானே! சூப்பர்! அப்படியே செல்லுங்கள், நாங்களும் கூட வருகிறோம்.//
சரியாக புரிந்துகொண்டு வருகின்றீகள் வாருங்கள் நண்பா....
பூமி ஏன் சுற்றுகிறது தெரியுமா?
சூரியன் இந்த அண்ட வெளியில் அசுர வேகத்தில் இடம்பெயருவதால் தான்.
நீருக்குள் நம்மாள் இட பெயர முடிகிறது, ஆனால் விண்வெளியில் முடிவதில்லை! காரணம் ஒரு விசையை முடுக்கி விடும் பொழுது அதன் எதிர்விசையை பயன்படுத்தி கொள்ளலாம், விண்வெளியில் முடுக்கிவிட எந்த விசையும் இல்லை!
காற்றுகூட!
செயற்கைகோள்கள் பூமியை சுற்ற புறவிசைகள் எதுவும் தேவையில்லை, சும்மா விட்டாலே அது சுத்த ஆரம்பித்துவிடும்!, காரணம் பூமி அசுர வேகத்தில் சூரியனை சுற்றுவதே!
ஏன்? ஏன்? ஏன்?
nallaa sinthikkireenga.. nadakkattu.. nadakkattu..
[[வால்பையன் said...
பூமி ஏன் சுற்றுகிறது தெரியுமா?
சூரியன் இந்த அண்ட வெளியில் அசுர வேகத்தில் இடம்பெயருவதால் தான்.]]
வாங்க நண்பா,.. கரைக்டா சொல்லுரீங்க நண்பா..
[[நீருக்குள் நம்மாள் இட பெயர முடிகிறது, ஆனால் விண்வெளியில் முடிவதில்லை! காரணம் ஒரு விசையை முடுக்கி விடும் பொழுது அதன் எதிர்விசையை பயன்படுத்தி கொள்ளலாம், விண்வெளியில் முடுக்கிவிட எந்த விசையும் இல்லை!
காற்றுகூட!]]
ஆமாங்க விண்வெளியில் எந்த விசையுமில்லா வேற்று இடம், எனவேதான் நீயூட்டன் முதல் விதிப்படி விண்கலம் பூமியை சீரான வேகத்தில் சுற்றிவிடப்படுகின்றது. எரிப்பொருள் தேவையும் இல்லை.
[[செயற்கைகோள்கள் பூமியை சுற்ற புறவிசைகள் எதுவும் தேவையில்லை, சும்மா விட்டாலே அது சுத்த ஆரம்பித்துவிடும்!, காரணம் பூமி அசுர வேகத்தில் சூரியனை சுற்றுவதே!]]
செயற்கை கோல் விண்வெளியில் பூமியை சுற்ற நீயுட்டன் முதல் விதி பயனாகின்றது. விண்வெளியில் எந்த புறவிசையும் இல்லாததால் இது சாத்தியம். நியூட்டன் முதல் விதி.. எந்த புறவிசை தாக்காத பச்சத்தில் ஒரு அசையா பொருள் அசையாமலும் அசையும் பொருள் தொடர்ந்து அசைந்தும் இருக்கும் என்பதே.. எனவே செயற்கை கோல் தொடர்ந்து அண்டத்தில் சுற்றுகின்றது.. நீண்ட கருத்து பறிமாற்றத்திற்கு நன்றி நண்பா
[[குறை ஒன்றும் இல்லை !!! said...
ஏன்? ஏன்? ஏன்?]]
ஏன்? என்ற கேள்வி இல்லாமல் தத்துவம் பிறப்பதில்லை அதானால்தான் இந்த ஏன்? மிக்க நன்றி நண்பா
//[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)//
வாங்க பித்தன், மிக்க நன்றிங்க
[[கலகலப்ரியா said...
nallaa sinthikkireenga.. nadakkattu.. nadakkattu..
]]
வாங்க தோழி.. சும்மா ஒரு சிந்தனைதான்... சிந்திக்காத மனம் துருயேரும் அதனால்தான் இந்த சிந்தனை... இந்த சிந்தனைகள் தொடரும்.... மிக்க நன்றிங்க
நல்ல சிந்தனைகள்
[[T.V.Radhakrishnan said...
நல்ல சிந்தனைகள்]]
மிக்க நன்றி நண்பா,... உஙகளின் முதல் வருகை மகிழ்ச்சியே
பல விடயங்களைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள், படிக்கத் தூண்டும் விதமாகவும் எழுதுகிறீர்கள். வாழ்த்ததுக்கள்.
// உமா said...
பல விடயங்களைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள், படிக்கத் தூண்டும் விதமாகவும் எழுதுகிறீர்கள். வாழ்த்ததுக்கள்.//
மிக்க நன்றிங்க... உங்களின் பாராட்டுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றது. நீங்கள் சொல்வது போல தொடர்ந்து எழுத உங்களின் ஊக்கம் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது... மீண்டும் நன்றி
பதில் தெரிந்த சிந்தனைகள்தான்....ஆனாலும் நல்லாருக்கு!
[[அன்புடன் அருணா said...
பதில் தெரிந்த சிந்தனைகள்தான்....ஆனாலும் நல்லாருக்கு!]]
மிக்க நன்றிங்க
நல்ல விஷயங்கள்....நல்ல சிந்தனை... உங்கள் பெயருக்கு ஏற்றப்படி தொடர்ந்து நல்ல பதிவுகளை தந்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுக்ள ஞானசேகரன்.
[[கடையம் ஆனந்த் said...
நல்ல விஷயங்கள்....நல்ல சிந்தனை... உங்கள் பெயருக்கு ஏற்றப்படி தொடர்ந்து நல்ல பதிவுகளை தந்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுக்ள ஞானசேகரன்.]]
வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க
இந்த சந்தேகங்கள் அனைவருக்கும் வந்து இருக்கும் என்றே நினைக்கிறேன்..
//கிரி said...
இந்த சந்தேகங்கள் அனைவருக்கும் வந்து இருக்கும் என்றே நினைக்கிறேன்..//
மிக்க நன்றி கிரி
Post a Comment