_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, October 11, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 4

ஏன்? எதற்கு? எப்படி?..... 4

நாம் நடக்க நம்முடைய கால்கள்தான் பயன்படுகின்றது என்பதை நம்ம வீட்டு சின்ன குழந்தையும் சொல்லிவிடும். வீட்டின் முற்றத்தில் வெளக்கெண்ணை கொட்டிவிடுகின்றது. தாத்தா அவசரமாக நடந்து வருகின்றார், கொட்டிய வெளக்கெண்ணையில் அவர் கால் பட்டதும் நடக்க முடியாமல் வலுக்கி விழுந்துவிடுகின்றார்.
நம்முடைய சிந்தனைக்கு! தாத்தாவிற்கு கால்கள் இருந்தும் வெளக்கெண்ணையின் மேல் பட்டதும் ஏன் நடக்கமுடியாமல் வலுக்கி விழுகின்றார்?

மேற்கண்ட தாத்தா சம்பவத்தில் கால்கள் இருந்தாலும் நடக்கமுடியாமல் போனதிலிருந்து நாம் நடக்க வேறு ஏதோ ஒன்று பயனாகின்றது என்றும் அவற்றை வெளக்கெண்ணை தடுப்பதால்தான் தாத்தாவால் நடக்க முடியாமல் போகின்றது என்பதையும் புரிந்துக்கொள்ள முடிகின்றது. அப்படி நடக்க பயனாகும் ஒன்றை உராய்வு (Friction) என்று அழக்கப்படுகின்றது. உராய்வு என்றால் என்ன? அவை நடக்க எப்படி பயனழிக்கின்றது?
இரண்டு தளங்கள் அல்லது பரப்புகள் ஒன்றோடு ஒன்று உராயந்து நகரும் பொழுது உருவாகும் எதிர் விசைதான் "உராய்வு" என்று அழைக்கின்றோம். அப்படி ஏற்படும் உராய்வால் வெப்பம் வெளியாகின்றது. அதாவது விஞ்ஞானத்தில் இயக்காற்றல் வெப்பாற்றலாக மாற்றப்படுகின்றது. பரப்பின் அணுக்கூறு மற்றும் அடர்த்தியை பொருத்து உராய்வு மாறுப்படுகின்றது.

முதல் படியை மிதித்து அழுத்தினால்தான் இரண்டாம் படிக்கே செல்லமுடியும். முதல் படியில் கிடைக்கும் உராய்வு விசைதான் நாம் இரண்டாம் படிக்கு செல்ல உதவியா இருக்கின்றது. இந்த உராய்வு செயல்பட வேண்டும் என்றால் பூமியின் ஈர்ப்பு சக்தியும் துணையாகின்றது. சந்திரனில் ஈர்ப்பு சக்தி இல்லாததால் விண்வெளி வீரர்கள் சந்திரனில் பறந்து பறந்து நடப்பதுபோல தெரிகின்றது.

மனிதனின் முயற்சியில் முக்கியமான ஒன்று தூரத்தை கடக்கும் நேரத்தை குறைத்தல். இதுதான் மனிதனின் வெற்றியும் சவாலும். வேகம் அதிகப்படுத்தும்பொழுது உராய்வு விசையும் நேர் விகிதத்தில் உயர்கின்றது. அதனால் வெளிப்படும் வெப்பமும் அதிகமாகின்றது. அதே போல நடக்க எந்த அளவிற்கு உராய்வு பயணாகின்றதோ அதைவிட வேகமாக நடக்க அல்லது செல்ல உராய்வு தடையாகவும் இருக்கின்றது. இப்படிப்பட்ட தடைகளை வேல்வதினால் மனிதன் தன் தூரத்தை கடக்க வெற்றிக்கொள்கின்றான். உராய்வை குறைக்க அல்லது தேவையான அளவு கட்டுப்படுத்த இளகிகள் தேவையாகின்றது. அப்படிப்பட்ட இளகிகள் உயவு இளகிகள் எனப்படுகின்றது. உயவு இளகிகளாக கிரீஸ்(மசகு), உயவுநெய்களாக மசகெண்ணெய் (Lubricants ) பயனாகின்றது. மேலும் உராய்வை குறைக்க Bearing (தாங்கிகள்) மற்றும் உருளை தாக்கிகள் (Ball Bearing) பயனாகின்றது.

"வண்டி உருண்டோட அச்சாணி தேவை" வட்டத்தையும் உருளையும் மனிதன் பயன்படுத்த கற்றுக்கொண்ட பின் கடக்கும் தூரத்தின் நேரம் குறைந்தது என்று மட்டும் இல்லாமல் சக்தியும் வீண் செலவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டது. மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டியின் சக்கரம் வண்டியின் அச்சாணியில் சுற்றும்பொழுது எற்படும் உராய்வை தடுக்கவும் உராய்வால் உண்டாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தவும் அச்சாணியில் வண்டி மை தடவப்படுகின்றது.
வண்டிமை எப்படி தயாரிக்கப்படுகின்றது? நெல் வைகோலில் எரிக்கப்பட்ட சாம்பலை எடுத்துகொண்டு அந்த சாம்பலை வெளக்கெண்ணெயில் குழப்பி தயாரிக்கப்படுகின்றது. அப்படி தயாரித்த வண்டி மையை சிறிய துணியை கொண்டு அச்சாணியில் சுற்றிவிடப்படுகின்றது. தற்பொழுது கிரிஸ் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வண்டிமை உராய்வையும் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகின்றது.

திடீர் என்று வானத்திலிருந்து வால் நட்சத்திரம் போன்று பூமியை நேக்கி வருதை பார்த்திருப்போம். ஆனால் அவைகள் பூமியை வந்தடைவதில்லை. உண்மையில் அவைகள் நட்சத்திரமோ அல்லது எரி குழம்போ இல்லை விண்ணில் சுற்றி திரியும் விண்கற்கள். எண்ணற்ற விண்கற்கள் விண்ணில் சுற்றிகொண்டு உள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அப்படிப்பட்ட விண்கற்கள் பல சமயம் தன் சுற்றுப்பாதையை விட்டு பூமியை நோக்கி வீசப்படும். பூமியை நோக்கி வீசப்பட்ட கற்கள் பூமியில் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு காற்றின் வளிமண்டலத்தை கடக்கும்பொழுது ஏற்படும் உராய்வின் காரணமாக அதிவெப்பம் உண்டாகி கற்கள் புஸ்பமாகின்றது. அதனால் ஒளிப்பிளம்பாக நமக்கு தெரிகின்றது. சிலசமயம் விண்கற்கள் பூமியை தாக்கி பெரிய பள்ளங்களையும் ஏற்படுத்துயுள்ளது.


ஆதிகால மனிதன் நெருப்பையும் அதன் பயன்பாட்டையும் அறிந்துக்கொண்ட பின் நெருப்பை உருவாக்கும் முயற்சியில் சிக்கிமுக்கி கல்லும் அதன் உராய்வினால் உண்டாகும் வெப்பத்தையும் பயன்படுத்திக்கொண்டான். சிக்கிமுக்கி கல்லை ஒன்றோடு ஒன்றை மோதி உரசும் பொழுது உண்டாகும் வெப்பத்தினால் நெருப்பை உண்டாக்கினான். அதே போல் மரச்சட்டத்தில் அழுத்தமாக உலோக கம்பியை சுற்றும்பொழுது உண்டாகும் வெப்பத்தில் பஞ்சை வைத்து நெருப்பை உண்டாக்கினான். உராய்வு இல்லையேல் நெருப்பை உருவாக்கும் தீப்பெட்டியும் இல்லைதான்.

உராய்வையும் அதன் பயன்பாட்டையும் முறையாக பயன்படுத்த கற்றுகொண்டதினால் மனிதன் விண்ணையும் மண்ணையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளான்.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

42 comments:

Muniappan Pakkangal said...

Nice scientific thedal Gnanaseharan.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... சூப்பரா சொல்லியிருக்கீங்க.

ஓவ்வொரு இடுகையும் மிக அழகு.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Nice scientific thedal Gnanaseharan.//

மிக்க நன்றி சார் உங்களை போன்றோரின் ஊக்கமே நல்ல இடுகைகளை எழுத தோன்றுகின்றது... மேலும் நன்றி..

ஆ.ஞானசேகரன் said...

// இராகவன் நைஜிரியா said...

அண்ணே... சூப்பரா சொல்லியிருக்கீங்க.

ஓவ்வொரு இடுகையும் மிக அழகு.//

நன்றி நன்றி! நண்பா.... உங்களின் பாராட்டுகளும் கருத்துரையும் என்னை மகிழசெய்கின்றது

கார்த்திகைப் பாண்டியன் said...

பயனுள்ள தகவல்களை எளிமையா சொல்லி இருக்கீங்க நண்பா.. நல்லாயிருக்கு

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

பயனுள்ள தகவல்களை எளிமையா சொல்லி இருக்கீங்க நண்பா.. நல்லாயிருக்கு//

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன் மிக்க நன்றிபா..

தேவன் மாயம் said...

வண்டி மை தயாரிப்பது பற்றி இப்போதுதான் தெரிந்தது!!

தேவன் மாயம் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே!!

பின்னோக்கி said...

மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

தீப்பெட்டி said...

அறிவியல் விசயங்களை அருமையா எளிமைபடுத்தி எழுதுறீங்க பாஸ்..

ஆ.ஞானசேகரன் said...

//தேவன் மாயம் said...

வண்டி மை தயாரிப்பது பற்றி இப்போதுதான் தெரிந்தது!!//

மிக்க மகிழ்ச்சி டாக்டர்

//நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே!!//

நன்றி சார்...

ஆ.ஞானசேகரன் said...

// பின்னோக்கி said...

மிகவும் பயனுள்ள தகவல். நன்றி//

வாங்க பின்னோக்கி
ரொம்ப நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// தீப்பெட்டி said...

அறிவியல் விசயங்களை அருமையா எளிமைபடுத்தி எழுதுறீங்க பாஸ்..//

நன்றி நண்பா... அடிக்கடி வாங்க

S.A. நவாஸுதீன் said...

உராய்வு பற்றிய விளக்கம் அருமை நண்பா!

நல்ல பயனுள்ள பதிவுகள் மட்டுமே தருவதைக் கொள்கையாக கொண்டு அதைத் தொடர்ந்து கடைபிடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஈரோடு கதிர் said...

அருமையான விளக்கம் அதே சமயம் எளிமையாக

பாராட்டுகள்

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

உராய்வு பற்றிய விளக்கம் அருமை நண்பா!

நல்ல பயனுள்ள பதிவுகள் மட்டுமே தருவதைக் கொள்கையாக கொண்டு அதைத் தொடர்ந்து கடைபிடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.//

வாங்க நண்பா... மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

// கதிர் - ஈரோடு said...

அருமையான விளக்கம் அதே சமயம் எளிமையாக

பாராட்டுகள்//

வணக்கம் தோழரே! பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க

Suresh Kumar said...

உறைவை பற்றி கலக்கலா ஒரு பாடமே எடுத்துட்டீங்களே பாஸ் கலக்கல்

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...

உறைவை பற்றி கலக்கலா ஒரு பாடமே எடுத்துட்டீங்களே பாஸ் கலக்கல்//

வாங்க நண்பா,.... மிக்க நன்றிப்பா

butterfly Surya said...

எளிய தமிழில் அருமையான அறிவியல் விளக்கங்கள்.

தொடருங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// butterfly Surya said...

எளிய தமிழில் அருமையான அறிவியல் விளக்கங்கள்.

தொடருங்கள்.//

வாருங்கள் நண்பரே! உங்களின் வருகை ஆணந்தமே...

ஊடகன் said...

அருமையான ஆய்வு பதிவு .............
தொடருங்கள் நண்பரே.........

ஆ.ஞானசேகரன் said...

// ஊடகன் said...

அருமையான ஆய்வு பதிவு .............
தொடருங்கள் நண்பரே.........//

வாருங்கள் நண்பா... உங்களின் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது

ஹேமா said...

ஞானம்,பூமியோடுள்ள உராய்வு ,
மனதோடு உள்ள உராய்வு மனிதனை நிலைப்படுத்தி நிமிர்ந்து நிலைக்க வைக்கிறது.நல்ல பதிவும் அதன் விளக்கங்களும்.

Thenammai Lakshmanan said...

ஞானசேகரன்
உங்கள் சிங்கை வலைப் பதிவர்கள் குழுமம் அருமை

என் எதற்கு எப்படியில் நெருப்பு பற்றிய தகவல்கள் நன்று

சிங்கை வலைப் பதிவர் செந்தில் நாதன் எப்படி இருக்கின்றார்

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானம்,பூமியோடுள்ள உராய்வு ,
மனதோடு உள்ள உராய்வு மனிதனை நிலைப்படுத்தி நிமிர்ந்து நிலைக்க வைக்கிறது.நல்ல பதிவும் அதன் விளக்கங்களும்.//

வணக்கம் ஹேமா.... மனதோடு கொண்ட உராய்வு மனிதன் காதல் வயப்படுகின்றான். உராய்வுகளோடு உரவாடி கொண்டுள்ளோம் தோழி. மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

// thenammailakshmanan said...
ஞானசேகரன்
உங்கள் சிங்கை வலைப் பதிவர்கள் குழுமம் அருமை//

வணக்கம் மிக்க நன்றிங்க‌

//என் எதற்கு எப்படியில் நெருப்பு பற்றிய தகவல்கள் நன்று //

மகிழ்ச்சி

//சிங்கை வலைப் பதிவர் செந்தில் நாதன் எப்படி இருக்கின்றார்//

சிங்கை நாதன் தற்பொழுது வீட்டில் இருக்கின்றார். உடல்நலம் தேறி வருகின்றார். மாற்று இதயத்திற்காக காத்து இருக்கின்றார்...

அன்புடன் அருணா said...

தெரிந்த தகவல்கள் தமிழில் இனனும் அழகு!

ஆ.ஞானசேகரன் said...

// அன்புடன் அருணா said...
தெரிந்த தகவல்கள் தமிழில் இனனும் அழகு!//

மிக்க நன்றிங்க..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இடுகை நன்று ஞானம்!

சிந்தனைகள் - விளக்கம்!

ஆ.ஞானசேகரன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
இடுகை நன்று ஞானம்!

சிந்தனைகள் - விளக்கம்!
//


மிக்க நன்றிங்க‌

பரிசல்காரன் said...

கருத்துகளும் அவற்றைச் சொன்ன விதமும் மிக நன்று.

வால்பையன் said...

இது பற்றி எட்டாங்கிளாஸில் கொஞ்சம் படித்த மாதிரி ஞாபகம் நண்பரே!
ஞாபகமூட்டலுக்கு நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

//பரிசல்காரன் said...
கருத்துகளும் அவற்றைச் சொன்ன விதமும் மிக நன்று.//

மிக்க நன்றி நண்பரே...

ஆ.ஞானசேகரன் said...

//வால்பையன் said...
இது பற்றி எட்டாங்கிளாஸில் கொஞ்சம் படித்த மாதிரி ஞாபகம் நண்பரே!
ஞாபகமூட்டலுக்கு நன்றி!//

வாங்க வால்பையன்.... தெரிந்தையும் பதிந்து வைக்கலாம் என்றே பதிந்தேன்.. உங்களின் வருகைக்கு நன்றிபா

உமா said...

நல்ல பல விடயங்களை எளிதாக அறியும் படி எழுதியுள்ளீர்கள். நன்றி, வாழ்த்துக்கள். என் மகன் இதைப் படித்துவிட்டு அது எப்படி இது எப்படின்னு பல கேள்விகள் கேட்கிறான். உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது. net ல் பதிலையும் தேடச் சொன்னேன். நன்றியும் வாழ்த்துகளும் மீண்டும்.

அன்புடன் நான் said...

நல்லா சொன்னிங்க நண்பா... என்னேட 10 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்போல. நன்றி தொடர்க.

சத்ரியன் said...

நல்லதொரு விளக்கப் பதிவு ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

//உமா said...
நல்ல பல விடயங்களை எளிதாக அறியும் படி எழுதியுள்ளீர்கள். நன்றி, வாழ்த்துக்கள். என் மகன் இதைப் படித்துவிட்டு அது எப்படி இது எப்படின்னு பல கேள்விகள் கேட்கிறான். உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது. net ல் பதிலையும் தேடச் சொன்னேன். நன்றியும் வாழ்த்துகளும் மீண்டும்.//

உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கு... மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...
நல்லா சொன்னிங்க நண்பா... என்னேட 10 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்போல. நன்றி தொடர்க.//


வணக்கம் நண்பா... மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//சத்ரியன் said...
நல்லதொரு விளக்கப் பதிவு ஞானசேகரன்.//



வாஙக் சத்ரியன்.. சரலின்பா எப்படியுள்ளார்கள்?

கையேடு said...

தொன்மையான அறிவியல் நுட்பங்களையும் நவீன நுட்பங்களையும் இணைத்து தர்ற விதம் வெகுவா கவருதுங்க. திரு. ஞானசேகரன்..