_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, October 19, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 5

ஏன்? எதற்கு? எப்படி?..... 5

நாம் தூரத்தில் செல்கின்றவரை சத்தமிட்டு அழைக்கின்றோம். சத்தமிட்டு அழைத்தால் அவர் திரும்புகின்றாரோ இல்லையொ ஒருவரை தொட்டு கூப்பிட்டால் கண்டிப்பாக திரும்புவார். ஆமங்க அதுதான் தொடும் உணர்வின் சிறப்பு. இப்படிப்பட்ட உணர்வை கொடுப்பது நமது உடம்பை போர்த்திருக்கும் தோல். தோலில் உள்ள மிக நுண்ணிய உணர்வு ஏற்பிகள் (sensory receptors)தான் இந்த உணர்வை கொடுக்கின்றது. தொடுதல், அழுந்த தொடுதல் (அதனால் ஏற்படும் வலி), அழுத்தம், வெப்பம், குளிர்ச்சி போன்றவற்றை உடன்க்குடன் மூளைக்கு அனுப்பி வைப்பதுதான் இந்த ஏற்பிகளின் வேலை.

இந்த ஏற்பிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் உணர்வுகளும் அதிகமாக இருக்கும். விரல் நுணி, உதடு, காது மடல் போன்ற இடங்களில் இந்த ஏற்பிகள் திரளாக இருப்பதால் தொடும் உணர்வும் அதிகமாக இருக்கும். நீரின் சூட்டை அறிய விரலில்தான் தொட்டு பார்க்கின்றோம். உதட்டின் உணர்வை காதலர்கள் புரிந்துக்கொண்டதால்தான் முத்தங்கள் பரிமாறப்படுகின்றது.

ஒருவனை என்னதான் திட்டினாலும் உணர்வற்றவனாக இருந்தால், அவனுக்கு தோல் தடிமம் என்று சொல்லுகின்றோம். அந்த அளவிற்கு உணர்வுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது தோல் தொடு உணர்வு. தோலுக்கு மட்டும் இந்த தொடும் உணர்வு இல்லை என்றால் உயிர் உள்ளவன் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிருக்கும். உயிரோடு கலந்தே இருப்பதே இந்த தொடும் உணர்வு. ஒருவரோடு ஒருவர் கட்டி பிடிப்பதால் வரும் உணர்வுகளுக்கு இணையான இன்பம் இருக்க முடியாது என்றே கூறலாம். பிரிந்தவர் கூடினால் உடனே கட்டி பிடித்து அன்பை பகிர்ந்துக்கொள்கின்றனர்.

மனிதனுக்கு இணையான ரோபோக்களுக்கு இந்த தொடும் உணர்வுதான் இல்லாமல் இருக்கும். அதையும் சமீபத்தில் சோனி நிறுவனம் தொடும் உணர்வோடு ரோபோக்களை தயாரித்துள்ளனர். தொட்டால் திரும்பி பார்க்குமாம். மெல்லிய இழைகளால் தோலை போல போர்த்தி தயாரித்துள்ளார்களாம். வரும் காலங்களில் நாம் ரோபோக்களோடு போட்டியிட வேண்டி வருமோ என்னவோ?

விலங்குகளுக்கு மட்டும்தான் இந்த தொடு உணர்வு இருக்கின்றதா? தாவரங்களுக்கும் இந்த உணர்வு இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள். தொட்டால் சினுங்கி இலையை தொட்டால் சுறுங்கிக்கொள்ளும்.

தோலை பாதுக்காப்பாக வைத்துக்கொண்டாலே உடலின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தோலில் உணர்வுகள் இல்லாமல் போனால் நோய்க்காண அறிகுறிகள்தான். ஒருவகை வைரஸ்சால் உண்டாக்கும் நோய்தான் தொழுநோய். உணர்வற்ற தோல்களில் உண்டாகும் புண்களால் உடலை அலங்கோலமாக்கிவிடும். இது ஒரு தொற்று நோய் வகையை சேர்ந்ததே. இதற்கு முறையான மருத்துவம் பலனை அழிக்கும். அரசு சுகாதார மையங்களில் இதற்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இப்படிப்பட்ட தொடும் உணர்வு செல்கள் வயிற்றில் உள்ள குடல் மற்றும் இறைப்பைகளுக்கு கிடையாது. குடலின் மேற்பறப்பில்தான் குறைந்த அளவில் ஏற்பிகள் இருக்கின்றது. குடல் மற்றும் இறைப்பைகளில் உணர்வு செல்கள் இருந்தால் எப்படி உணரப்படும்? நாம் உண்ணும் உணவு செல்லும் உணர்வை கொடுக்கும். குடிக்கும் நீர் செல்லும் இடமெல்லாம் உணரப்படும். இது நமக்கு ஒரு வித சங்கடங்களை கொடுக்கும் எனவே இயற்கையாகவே உணர்வு செல்கள் குடலில் இல்லாமல் இருக்கின்றது.
முடி, நகங்களுக்கு உணர்வு ஏற்பிகள் கிடையாது. அதனால் இவற்றை வெட்டினாலும் வலிக்காது. முதுகில் ஏற்பி செல்கள் குறைவாக இருக்கும் அதனால்தான் செல்லமாக வலியிள்ளாமல் அடிக்க முதுகில் அடிப்பார்கள்.

வேர்க்காத இடம் உதடு.
வலிக்காத இடம் முடியும் நகமும்.
எலும்பு இல்லா இடம் நாக்கு, மூக்கு, காதுமடல்.
அழகு கொடுப்பது தோல்,
அணைத்தால் கிடைப்பது அன்பு.
தொடும் உணர்ச்சி இல்லாதவன் பிணத்திற்கு சமமானவன் ஆவான்.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

50 comments:

ஷண்முகப்ரியன் said...

முதுகில் ஏற்பி செல்கள் குறைவாக இருக்கும் அதனால்தான் செல்லமாக வலியிள்ளாமல் அடிக்க முதுகில் அடிப்பார்கள்.//

இவை அனைத்துமே எனக்குப் புதிய தகவலகள்.நன்றி ஞானம்.
இதையெல்லாம் எங்கு படித்தீர்கள்?

ஆ.ஞானசேகரன் said...

[[ ஷண்முகப்ரியன் said...

முதுகில் ஏற்பி செல்கள் குறைவாக இருக்கும் அதனால்தான் செல்லமாக வலியிள்ளாமல் அடிக்க முதுகில் அடிப்பார்கள்.//

இவை அனைத்துமே எனக்குப் புதிய தகவலகள்.நன்றி ஞானம்.
இதையெல்லாம் எங்கு படித்தீர்கள்?]]

மிக்க நன்றி! சார்.... படித்ததில் கொஞ்சம் ஞாபகம் உள்ளவைகள்தான். பகிர்ந்துக்கொள்ள(பதிந்துக்கொள்ள) ஆசை.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்பவர்களுக்கு உணர்வு செல்கள் இருக்குமா தல..,

சி. கருணாகரசு said...

தங்களின் படைப்பு உணர்ச்சிமிக்க படைப்பு... படமும் அப்படித்தான் போடுறிங்க வாழ்த்துக்கள் நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

[[ SUREஷ் (பழனியிலிருந்து) said...

பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்பவர்களுக்கு உணர்வு செல்கள் இருக்குமா தல..,]]

வணக்கம் டாக்டர்,...
இருக்கு என்பதால்தானே கட்டி பிடிக்கின்றார்கள்...

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

தங்களின் படைப்பு உணர்ச்சிமிக்க படைப்பு... படமும் அப்படித்தான் போடுறிங்க வாழ்த்துக்கள் நண்பா.//

வாங்க நண்பா,... மிக்க நன்றிங்க

கிரி said...

ஞானசேகரன் சுவாராசியமாக இருந்தது :-)

கதிர் - ஈரோடு said...

ஏற்பி செல்கள் பற்றி எளிமையாக அறிந்து கொண்டேன்

நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// கிரி said...

ஞானசேகரன் சுவாராசியமாக இருந்தது :-)//

வாங்க கிரி நலமா?
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// கதிர் - ஈரோடு said...

ஏற்பி செல்கள் பற்றி எளிமையாக அறிந்து கொண்டேன்

நன்றி//

வணக்கம் தோழரே... மிக்க நன்றிங்க

..:: Mãstän ::.. said...

போட்டா சூப்பரு :)

பதிவும் நல்லாருக்கு :D

ஆ.ஞானசேகரன் said...

//.:: Mãstän ::.. said...

போட்டா சூப்பரு :)

பதிவும் நல்லாருக்கு :D//

வாங்க நண்பரே,... உங்களின் வருகையும் கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்...

வினோத்கெளதம் said...

புதிய தகவல்களுக்கு நன்றிகள்.

ஆ.ஞானசேகரன் said...

// வினோத்கெளதம் said...

புதிய தகவல்களுக்கு நன்றிகள்.//

வாங்க நன்றிங்க கெளதம்

S.A. நவாஸுதீன் said...

அருமையான தகவல் சார்.

\\குடல் மற்றும் இறைப்பைகளில் உணர்வு செல்கள் இருந்தால் எப்படி உணரப்படும்? நாம் உண்ணும் உணவு செல்லும் உணர்வை கொடுக்கும். குடிக்கும் நீர் செல்லும் இடமெல்லாம் உணரப்படும். இது நமக்கு ஒரு வித சங்கடங்களை கொடுக்கும் எனவே இயற்கையாகவே உணர்வு செல்கள் குடலில் இல்லாமல் இருக்கின்றது.//

அழகா சொல்லி இருக்கீங்க நண்பா!.

அன்புடன் அருணா said...

நல்ல சிந்தனை!

Suresh Kumar said...

அருமையான தகவல்கள் மிக்க நன்றி நண்பா

வால்பையன் said...

நமக்கு இருக்கும் ஆறரிவில் ஒன்று தான் தொடு உணர்வு அறிவு!

உடலின் வெளிபுற அனைத்து பகுதிகளும் தொடு உணர்வு பெற்றிருக்கும்!
அதிகமாக சூரியஒளி படாத இடங்களில் கூச்சம் அதிகமாக இருக்கும்!

திகழ் said...

நல்ல இடுகை

பயனுள்ள செய்திகள் அழகுத்தமிழில் அருமையாக எழுதி வருகின்றீர்கள்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குங்க.

தொடு உணர்வு - அற்புதம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

சுவாரசியமான பகிர்வு நண்பா..

தீப்பெட்டி said...

நல்ல தகவல்கள்.. எளிமைப் படுத்தி தந்தமைக்கு நன்றி பாஸ்..

" உழவன் " " Uzhavan " said...

எருமை மாட்டுல மழை பேஞ்ச மாதிரினும் சொல்லுவாங்க..
 
தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள்.

ஆ.ஞானசேகரன் said...

[[S.A. நவாஸுதீன் said...

அருமையான தகவல் சார்.

\\குடல் மற்றும் இறைப்பைகளில் உணர்வு செல்கள் இருந்தால் எப்படி உணரப்படும்? நாம் உண்ணும் உணவு செல்லும் உணர்வை கொடுக்கும். குடிக்கும் நீர் செல்லும் இடமெல்லாம் உணரப்படும். இது நமக்கு ஒரு வித சங்கடங்களை கொடுக்கும் எனவே இயற்கையாகவே உணர்வு செல்கள் குடலில் இல்லாமல் இருக்கின்றது.//

அழகா சொல்லி இருக்கீங்க நண்பா!.]]


உங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பா!

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...

நல்ல சிந்தனை!//

வணக்கம் அருணா,.. மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...

அருமையான தகவல்கள் மிக்க நன்றி நண்பா//

வணக்கம் சுரேஷ் குமார் மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

நமக்கு இருக்கும் ஆறரிவில் ஒன்று தான் தொடு உணர்வு அறிவு!

உடலின் வெளிபுற அனைத்து பகுதிகளும் தொடு உணர்வு பெற்றிருக்கும்!
அதிகமாக சூரியஒளி படாத இடங்களில் கூச்சம் அதிகமாக இருக்கும்!//

உண்மைதான் தோழா... மிக்க நன்றி நண்பா!

ஆ.ஞானசேகரன் said...

// திகழ் said...

நல்ல இடுகை

பயனுள்ள செய்திகள் அழகுத்தமிழில் அருமையாக எழுதி வருகின்றீர்கள்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்//

உங்களின் ஊக்கமும் பாராட்டுகளும் என்னை மகிழசெய்கின்றது நண்பா... மிக்க நன்றிங்க
அன்பில்
ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

// இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குங்க.

தொடு உணர்வு - அற்புதம்.//

வாங்க நண்பா,.... நன்றி நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

சுவாரசியமான பகிர்வு நண்பா..//

வாங்க கார்த்திகைப் பாண்டியன்... மிக்க மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

// தீப்பெட்டி said...

நல்ல தகவல்கள்.. எளிமைப் படுத்தி தந்தமைக்கு நன்றி பாஸ்..//

வணக்கம் பாஸ் உங்களின் ஊக்கத்திற்கு நன்றிமா

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...

எருமை மாட்டுல மழை பேஞ்ச மாதிரினும் சொல்லுவாங்க..

தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள்.//

வணக்கம் உழவன் மிக்க மகிழ்ச்சிங்க>>>

வலசு - வேலணை said...

//
வரும் காலங்களில் நாம் ரோபோக்களோடு போட்டியிட வேண்டி வருமோ என்னவோ?
//
இப்போதுகூட ரோபோக்கள் மற்றும் இயந்திரங்கள் தொழிலாளர்களின் வயிற்றில் கைவைக்கத்தானே செய்கின்றன.

ஆ.ஞானசேகரன் said...

[[ வலசு - வேலணை said...

//
வரும் காலங்களில் நாம் ரோபோக்களோடு போட்டியிட வேண்டி வருமோ என்னவோ?
//
இப்போதுகூட ரோபோக்கள் மற்றும் இயந்திரங்கள் தொழிலாளர்களின் வயிற்றில் கைவைக்கத்தானே செய்கின்றன.]]


வாங்க நண்பா! நீங்கள் சொல்வதும் சரிதான்.... இன்னும் கொஞ்சம் மிச்சம்யுள்ளதையும் பிடிங்கிவிடுமோ என்ற பயம்தான்....

ஹேமா said...

ஞானம்,ஏன் எதற்கு எப்படி என்று எத்தனை சின்னச் சின்ன விஷயங்களாக இருந்தாலும் அறியாத விஷயங்களைத் தருகிறீர்கள்.
சந்தோஷமாக இருக்கிறது.

வேர்க்காத இடம் உதடு என்று ஒரு பாடலில் வருகிறதே !

Anbu said...

நல்ல சிந்தனை..நல்லா இருக்கு அண்ணே...

நிலாமதி said...

உங்கள் பதிவு மனதை தொட்டு செல்கிறது .நன்றி.

Anonymous said...

பொருப்பான பயனுள்ள பதிவுகளே சேகர் வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

[[ ஹேமா said...

ஞானம்,ஏன் எதற்கு எப்படி என்று எத்தனை சின்னச் சின்ன விஷயங்களாக இருந்தாலும் அறியாத விஷயங்களைத் தருகிறீர்கள்.
சந்தோஷமாக இருக்கிறது.

வேர்க்காத இடம் உதடு என்று ஒரு பாடலில் வருகிறதே !]]


மிக்க நன்றி ஹேமா..
ஆம் "மான் குட்டியே என்ற பாடலில் வருகின்றது"

ஆ.ஞானசேகரன் said...

// Anbu said...

நல்ல சிந்தனை..நல்லா இருக்கு அண்ணே...//


நன்றிபா,.. அப்படியே நட்சத்திர வாழ்த்துகள்...

ஆ.ஞானசேகரன் said...

//நிலாமதி said...

உங்கள் பதிவு மனதை தொட்டு செல்கிறது .நன்றி.//

உங்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கின்றது.. நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

பொருப்பான பயனுள்ள பதிவுகளே சேகர் வாழ்த்துக்கள்//


வாங்க தமிழ் மகிழ்ச்சியும் நன்றியும்...

Muniappan Pakkangal said...

Nalla pathivu Gnanaseharan,you are going in a nice path.So many things in Sensation.Good.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Nalla pathivu Gnanaseharan,you are going in a nice path.So many things in Sensation.Good.//
மிக்க நன்றி சார்

Vijay Anand said...

Very good posting.Keep more postings...

jackiesekar said...

புதிய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி...

சொல்லரசன் said...

அருமையான பதிவு ஞான்ஸ்,அந்த படத்தை பார்த்தால் தொடு உணர்ச்சிக்கு சம்பந்தபட்டது போல் இல்லையே!!!!!!!!!!!

ஆ.ஞானசேகரன் said...

// Vijay Anand said...

Very good posting.Keep more postings...//
மிக்க நன்றி நண்பா,... உங்களின் முதல் வருகை மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

// jackiesekar said...

புதிய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி...//

வாங்க மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...

அருமையான பதிவு ஞான்ஸ்,அந்த படத்தை பார்த்தால் தொடு உணர்ச்சிக்கு சம்பந்தபட்டது போல் இல்லையே!!!!!!!!!!!//

வணக்கம் சொல்லரசன்,...
படத்தில் பல உணர்ச்சிகள் உள்ளது. அதில் நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்வோமே! மிக்க நன்றிபா