_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, October 2, 2009

கலந்துக் கட்டிய கதம்பம்...

கலந்துக் கட்டிய கதம்பம்...

வணக்கம்! இரண்டு வாரக் காலம் இணையம் பக்கம் வராததால் பல விடயங்கள் என் பார்வையில் படாமலே போய்விட்டது. இருந்தாலும் இந்தியா சென்றதால் நான் பார்த்த, ரசித்த, சந்தித்த பல விடயங்கள் மகிழ்ச்சியை கொடுத்தது. அவற்றையெல்லாம் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. அதே போல் வேலையின் பளு மற்றும் நேரமின்மையால் சிலர் அழைத்த தொடர் இடுகையும் தொடர முடியாமல் போனதிற்கு வருந்துகின்றேன். இளமைக்கால பள்ளிக்கூட அனுபவங்களை எழுத சொல்லிய தோழி தமிழரசி எழுத்தோசை அவர்களுக்கு என் நன்றி. காலம் கிடைக்கும் பொழுது தோடர்கின்றேன். அதே போல் நண்பர் டாகடர் SUREஷ் பழனியிலிருந்து (கனவுகளே) அவர்கள் அழைத்த a,b,c,d தொடர் இடுகைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் எனது சொந்த மண்ணுக்கு சென்று வர வாழ்த்துகளை அள்ளி வழங்கிய நண்பர்களையும் நினைவு கூறுகின்றேன். நண்பர் கோவி.கண்ணன் அவர்கள் எனது பத்தாண்டு மணநாள் வாழ்த்துகளை சுவரொட்டி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.அவர்களுக்கு நன்றி!. அவற்றில் எனக்கு வாழ்த்துகள் கூறியுள்ள அணைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். அதே போல் நண்பர் கதிர் ஈரோடு அவர்கள் வழங்கிய
[விதைப்போம் அன்பை விருதுகள் மூலம்] scrumptious blog விருதிற்கு பணிவான நன்றி.

பரந்து விரிந்துகிடக்கும் உலகில் பாரதத்தை நினைத்தால் மனதில் ஒரு மனநிறைவு வரத்தான் செய்கின்றது. பல முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி கண்ணில் படும் அபார வளர்ச்சிகளை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஏழ்மையின் மத்தியிலும் மனிதன் முகத்தில் மகிழ்ச்சி இருக்கின்றது என்றால் அது இந்திய நாடு என்றால் மிகையாகாது. இந்த முறை எனது ஊரை பார்க்கின்ற பொழுது தூர்ந்து போன வாய்க்கால் தூர்வாரப்பட்டிருந்தது. அந்த கட்டளை வாய்க்காலில் நீர் ததும்பி செல்லும்பொழுது தூர்வாரிய தமிழக அரசிற்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. ஆனாலும் பல்லிளிக்கும் சாலைகளை பார்க்கின்ற பொழுது அந்த மகிழ்ச்சியில் கறைபடிகின்றது என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதேபோல் நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தும் பணியிடங்களில் எந்த விதமான பாதுக்காப்பு விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதும் மனதை ரணப்படுத்துகின்றது. நீண்ட பெரும் நெடுஞ்சாலைகளை பார்கின்றபொழுது மகிழ்ச்சியும் நாம் வளர்கின்றோம் என்ற நம்பிக்கையும் தெரிகின்றது. திருச்சியில் ஐ டி பார்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக துணை முதல்வர் மூ.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கயுள்ளார் என்ற செய்தியும் உள்ளது. 2010 முடிவில் எல்லா வேலைகள் முடிக்கப்படும் என்று எல்காட் நிறுவனம் சொல்லியுள்ளது.


சங்கம் வளர்த்த மதுரையில் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நண்பர்களுடன் பழகி பேசும் வாய்ப்புகள் கிடைத்தது. சீனா ஐயாவை பார்க்க முடியாமல் போனது ஒரு ஏமாற்றமே. தருமி ஐயாவிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் அனைத்து நண்பர்களுடம் பேசியதில் இன்னும் அந்த மகிழ்ச்சியின் ஈரம் காயவில்லை. சந்திபின் புகைப்படங்கள் தருமி ஐயா தளத்தில் காணலாம். மேலும் புகைப்படங்களை பார்க்க சுட்டியை தட்டவும் மதுரையில் ஒரு சந்திப்பு அறிய புகைப்படம். சந்திப்பு 29-09-2009 ஞாயிற்று கிழமை மாலை நான்கு மணியளவில் அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் நடைப்பெற்றது.

சந்திப்பின் காணோளி பகிர்வு:புகைப்பட காட்சியமைப்பு:


36 comments:

கோவி.கண்ணன் said...

//பழு// பளு.
//பல்லிழிக்கும் // பல்லிளிக்கும்
//நிர்வனம் // நிருவனம்
//முறன்பாடுகள்// முரண்பாடுகள்

****

தமிழகம் சென்று வந்ததில் புத்துணர்ச்சி பெற்றிருப்பீர்கள். தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

/ கோவி.கண்ணன் said...

//பழு// பளு.
//பல்லிழிக்கும் // பல்லிளிக்கும்
//நிர்வனம் // நிருவனம்
//முறன்பாடுகள்// முரண்பாடுகள்

****

தமிழகம் சென்று வந்ததில் புத்துணர்ச்சி பெற்றிருப்பீர்கள். தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி//

மிக்க நன்றிங்க கண்ணன்... பிழைகளையும் திருத்திவிட்டாச்சு....

ராமலக்ஷ்மி said...

இந்திய பயண விவரத்துடன் இணையப் பக்கம் வந்தாயிற்று மறுபடியும். தொடரட்டும் இனிதாக இனி வலைப் பயணம்:)! வாழ்த்துக்கள் ஞானசேகரன்!

@ கோவிகண்ணன்,
////நிர்வனம் // நிருவனம்//

நிறுவனம் என்பதே சரி:)!

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

இந்திய பயண விவரத்துடன் இணையப் பக்கம் வந்தாயிற்று மறுபடியும். தொடரட்டும் இனிதாக இனி வலைப் பயணம்:)! வாழ்த்துக்கள் ஞானசேகரன்!

@ கோவிகண்ணன்,
////நிர்வனம் // நிருவனம்//

நிறுவனம் என்பதே சரி:)!//

வணக்கம் மிக்க நன்றிங்க

ஜெரி ஈசானந்தா. said...

கலக்கல் கதம்பம், நன்றி ஞான சேகரன்.

தருமி said...

பறவைகளின் ஒலிகள் ... அழகு!

ஆ.ஞானசேகரன் said...

//ஜெரி ஈசானந்தா. said...

கலக்கல் கதம்பம், நன்றி ஞான சேகரன்.//


மிக்க நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

// தருமி said...

பறவைகளின் ஒலிகள் ... அழகு!//

வணக்கம் ஐயா,..
உங்களை சந்தித்ததில் மகழ்ச்சியே!

Anonymous said...

ஆமாங்க நம்ம நாடு நம்ம நாடு தான்......

//ஏழ்மையின் மத்தியிலும் மனிதன் முகத்தில் மகிழ்ச்சி இருக்கின்றது என்றால் அது இந்திய நாடு என்றால் மிகையாகாது.//

ஆமாங்க இந்த பதிவில் இந்த வரிகள் மிகவும் கவர்ந்தது என்னை..

புகைபடத்தில் வால் பையனை மட்டும் தாங்க தெரியும்...

ஆ.ஞானசேகரன் said...

// தமிழரசி said...

ஆமாங்க நம்ம நாடு நம்ம நாடு தான்......

//ஏழ்மையின் மத்தியிலும் மனிதன் முகத்தில் மகிழ்ச்சி இருக்கின்றது என்றால் அது இந்திய நாடு என்றால் மிகையாகாது.//

ஆமாங்க இந்த பதிவில் இந்த வரிகள் மிகவும் கவர்ந்தது என்னை..

புகைபடத்தில் வால் பையனை மட்டும் தாங்க தெரியும்...//

வாங்க தமிழ்,..
முடிந்தால் படத்தில் பெயர் எழுத முயற்சிக்கின்றேன்..

மிக்க நன்றிங்க

காமராஜ் said...

வாருங்கள் எங்கள் அன்புத்தோழா, தமிழ்நாட்டுக்கு
வரும்போது எங்கோ போனது போலவும் சிங்கப்பூர் போய்விட்ட நீ இப்போது எங்களருகில் இருப்பது போலவும் எவ்வளவு விந்தையான வலையுலகம். மதுரை வந்திருந்தாயா நண்பா ?

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))))

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...

வாருங்கள் எங்கள் அன்புத்தோழா, தமிழ்நாட்டுக்கு
வரும்போது எங்கோ போனது போலவும் சிங்கப்பூர் போய்விட்ட நீ இப்போது எங்களருகில் இருப்பது போலவும் எவ்வளவு விந்தையான வலையுலகம். மதுரை வந்திருந்தாயா நண்பா ?//

வணக்கம் தோழரே.. ஆம் நண்பா நீங்கள் சொல்வதை போல் இது ஒரு விந்தையான வலையுலகம்தான்.. நண்பர்கள் வேண்டுகோள்கிணங்க மதுரை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டேன்.... அடுத்த முறை உங்களை சந்திக்க முடிமா? தோழரே....

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))))//

வணக்கம் கார்த்திகை பாண்டியன்... மதுரை நண்பர்களை கேட்டதாக கூறவும்..

கதிர் - ஈரோடு said...

கலக்கல் கதம்பம்

காணொளி ரசித்தேன்

வால் தினமும் 200 இடுகை படிகிறாரா? கிரேட்

Suresh Kumar said...

நல்ல கதம்பம் இரண்டு வாரத்திற்கு பின்னர் வலைப்பதிவிற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி

S.Gnanasekar said...

ஒரு பதிவில் 6 பதிவை படிக்க வைத்து விட்டீர்கள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நன்பர் ஆர்.ஞானசேகரன் அவர்களே..
சோ.ஞானசேகர்..

ஆ.ஞானசேகரன் said...

// கதிர் - ஈரோடு said...

கலக்கல் கதம்பம்

காணொளி ரசித்தேன்

வால் தினமும் 200 இடுகை படிகிறாரா? கிரேட்//

வணக்கம் நண்பா,..
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நல்ல கதம்பம் இரண்டு வாரத்திற்கு பின்னர் வலைப்பதிவிற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி//

ம்ம்ம்... நன்றி நண்பா,..

ஆ.ஞானசேகரன் said...

// S.Gnanasekar said...

ஒரு பதிவில் 6 பதிவை படிக்க வைத்து விட்டீர்கள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நன்பர் ஆர்.ஞானசேகரன் அவர்களே..
சோ.ஞானசேகர்..//

வணக்கம் தோழரே..
நன்றிகள் பல

ஹேமா said...

வந்தாச்சா.சுகம்தானே !சந்தோஷமாகப் போச்சா விடுமுறை!பதிவு சரியா வாசிக்கல.நானும் ஒரு வார விடுப்பில் இன்றுதான் வந்திருக்கேன்.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
வந்தாச்சா.சுகம்தானே !சந்தோஷமாகப் போச்சா விடுமுறை!பதிவு சரியா வாசிக்கல.நானும் ஒரு வார விடுப்பில் இன்றுதான் வந்திருக்கேன்//

வாங்க ஹேமா... விடுமுறைநாட்கள் மிக மகிழ்ச்சியாக சென்றது. மீண்டும் உங்களுடன் பேசுவதிலும் மகிழ்ச்சியே. படித்துவிட்டு சொல்லுங்கள் மிக்க நன்றிங்க‌

செந்தழல் ரவி said...

கதம்பம்னாலே கலந்துகட்டினது தானே ? வீடியோவுக்கு நன்றி ஆ.ஞா..

சொல்லரசன் said...

நல்லதான் கட்டறிங்க கதம்பத்தை.

ஆ.ஞானசேகரன் said...

//செந்தழல் ரவி said...
கதம்பம்னாலே கலந்துகட்டினது தானே ? வீடியோவுக்கு நன்றி ஆ.ஞா..//

வணக்கம் நண்பா, வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லரசன் said...
நல்லதான் கட்டறிங்க கதம்பத்தை.//வணக்கம் சொல்லரசன், உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

♠ ராஜு ♠ said...

நல்லாருக்கு தலைவா..

♠ ராஜு ♠ said...

வீடியோ யூடியூப் லிங்க் கொடுத்தா, நல்லாருக்கும்.

S.A. நவாஸுதீன் said...

சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா?

என்ன நண்பா! ஊரில் எல்லோரும் நலம்தானே!

கதம்பம் நல்லா இருக்கு நண்பா

ஆ.ஞானசேகரன் said...

[[ ♠ ராஜு ♠ said...

நல்லாருக்கு தலைவா.]]

மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

[[♠ ராஜு ♠ said...

வீடியோ யூடியூப் லிங்க் கொடுத்தா, நல்லாருக்கும்.]]

அந்த விடியோவில் டபுல் கிளிக் பன்னுங்கோ யூ டியூப் க்கு சென்று விடும்.. நன்றி நண்பா


காணோளியை பார்க்க

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா?

என்ன நண்பா! ஊரில் எல்லோரும் நலம்தானே!

கதம்பம் நல்லா இருக்கு நண்பா//

எல்லோரும் நலம்
மிக்க நன்றி நண்பா

வலசு - வேலணை said...

//
சங்கம் வளர்த்த மதுரையில் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
//

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை :-)

ஆ.ஞானசேகரன் said...

[[வலசு - வேலணை said...
//
சங்கம் வளர்த்த மதுரையில் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
//

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை :-)]]

நன்றி நண்பா..

ராஜ நடராஜன் said...

பூக்களும்,வானமும் யார் கலைவண்ணம்?கண்ணைக் கவருகிறது.

ஆ.ஞானசேகரன் said...

[[ராஜ நடராஜன் said...
பூக்களும்,வானமும் யார் கலைவண்ணம்?கண்ணைக் கவருகிறது]]

வாங்க நண்பரே