_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, November 30, 2009

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 4

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 4

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டுங்கள்
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்.....
மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 2

மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... பகுதி 3

மேலே உள்ள சுட்டிகளில் பார்கின்றபொழுது மூடப்பழக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது பயமும், தேவைக்கு அதிகமான ஆசைகளும் என்று தெரிகின்றது. அதே போல எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன் என்ற மெத்தன போக்கும் உண்டு. பின்னர் நமக்கு என்ன?/ எவனோ?/ எப்படியோ? செய்கின்றான் என்ற சுயநலமும் ஒரு காரணமாக அமைகின்றது.

இன்றைய மனிதனை என்னதான் அறிவியல் வளர்த்தாலும் தேவையில்லா மூடப்பழக்கங்கள் மனதை பாதிக்கத்தான் செய்கின்றது. அதற்கு முன்பே கூறியது போல மரபியியல் பண்பும் ஒரு காரணமாககூட இருக்கலாம். இப்படிப்பட்ட மனபோக்கை மாற்ற முறையான பயிற்சி தேவை என்பதை மட்டும் மறக்க முடியாது.

வீட்டை விட்டு வெளியில் போகும்பொழுது எங்கே போகின்றாய்? என்று கேட்டால் போகின்ற செயல் நல்லபடியாக நடக்காது என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கு. இப்படி ஒரு பழக்கம் தெரியாதவரை உன்னையும் என்னையும் பாதிக்க போவதில்லை ஆனால் இந்த ஒரு நம்பிக்கை தெரிந்துவிட்டால் (மனதில் பதிந்துவிட்டால்) அதனை எதிர்க்க மனதில் திடம் இல்லாமல் போகின்றதே ஏன்? போகின்ற செயல் நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற ஆசை. அப்படி ஏதேனும் தவறு நடக்குமோ என்ற பயம். எல்லோரும் நம்புகின்றார்களே நாமும் நம்புவதால் என்ன ஆகபோகின்றது என்ற மெத்தன போக்கு. இப்படியே சின்ன சின்ன மூடப்பழக்கங்களை இந்த சமுகத்திற்கு நம் முன்னோர்கள் விட்டு சென்றது ஏராலம்.

எனக்கு தெரிந்த ஒருவர் எப்பொழுதுமே ஜாதகம், ஜோசியம் என்ற மனப்போக்கில் இருப்பார். நான் அவரை "ஏன்யா இந்த காலத்திலும் இப்படி இருக்க? என்று கேட்பேன்". அதற்கு அவர் "அவர்கள் சொல்வது உண்மையோ பொய்யோ என் மனதிற்கு ஆறுதல் தருகின்றது அதனால் நம்புகின்றேன்" என்று வியாக்கானம் சொல்லுவார். இப்படிப்பட்டவர்களை என்ன சொல்லி திருத்தமுடியும். நடிகர் ரஜினி சார் ஒரு படத்தில் "சாவுகின்ற காலம் தெரிந்தால் வாழுகின்ற காலம் நரகம்" என்று சொல்லுவார். அதேபோல ஜொசியம், ஜாதகம் உண்மையாகவே இருந்தாலும் அதை முன்னரே தெரிந்துக்கொண்டு வாழுகின்ற காலத்தை நரகமாக்கிக்கொள்ளும் மனிதர்களை என்னவென்று சொல்லுவது. இப்படிப்பட்ட மனிதர்கள் தன்னுடைய கையாலாகாத தனத்தை தன் பிள்ளைகள் மூலம் மூடப்பழக்கம் என்ற விதைகளை உலகில் தெளித்துவிட்டு செல்கின்றார்கள். விதைகள் முளைத்து இன்று ஆலமரங்களாக இருக்கின்றது.

எனக்கு தெரிந்து "ஏன்?" என்று கேட்ககூடிய ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. அப்படி "ஏன்?" என்ற கேள்வியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்காமல் இருந்துவிட்டால் அந்த" ஏன்?" க்கு பின்னால் இருக்கும் குறிபோல வாழ்க்கையும் வலைந்து போய்விடும். பல மூடப்பழக்கங்கள் இந்த "ஏன்?" என்ற கேள்வியை கேட்காமலே இருந்ததால்தான் இன்று மனிதன் அந்த பழக்கங்களுக்கு பின்னால் செல்லவேண்டியுள்ளது. இன்றாவது அந்த கேள்வியை கேட்டுப்பாருங்கள் எப்படியும் ஒரு மூடப்பழக்கமாவது அற்றுப்போய்விடும்.

(புகைப்படம் நன்றி தமிழ் ஓவியா)

மூடப்பழக்கம் என்பது மக்களின் கலாச்சரத்துடன் ஒன்றி ஒழிந்துக்கொண்டுள்ளது. அப்படி ஒழிந்துக்கொண்டுள்ளதால் அப்படிப்பட்ட பழக்கங்களை விடுவதும் சாதாரண விடயமும் இல்லை. தாலிக்கட்டுதல் என்பது நமது சமுகத்தில் இருக்கும் பழக்கம் இதை மாற்றங்கள் செய்யமுடிமே ஒழிய மறுக்க முடியாது. பெரியார் இயக்கத்தினர் தாலிக்கட்டுதலை எதிர்கின்றார்கள் அப்படிப்பட்ட இயக்கத்தினரால்தான் பெரியார் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார்கள். அங்கேயும் "ஏன்" என்ற கேள்விக்கு பதில் குழப்பமாகதான் இருக்கும். நமது கலாச்சாரமும் அறிவிற்கு அப்பாற்பட்ட பழக்கங்களை கொண்டுள்ளது. அவற்றையெல்லாம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் மனம் ஏற்றுகொள்கின்றது.

மூடப்பழக்கங்களை எந்த அளவிற்கு சிலர் நம்புகின்றார்களோ அதை போல சிலர் வன்முறையாக மூடப்பழங்களை எதிர்ப்பதும் அறிவற்ற செயலாகதான் இருக்கும். அவரவர்களே "ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது.

இன்னும் இதைப்பற்றி சிந்திப்போம் (உங்களுக்கு தெரிந்தவற்றையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!)
ஆ.ஞானசேகரன்.

25 comments:

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைக்கிற இடுகை.

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைக்கிற இடுகை.//

வணக்கம்ங்க மிக்க நன்றிங்க

ரோஸ்விக் said...

//மூடப்பழக்கங்களை எந்த அளவிற்கு சிலர் நம்புகின்றார்களோ அதை போல சிலர் வன்முறையாக மூடப்பழங்களை எதிர்ப்பதும் அறிவற்ற செயலாகதான் இருக்கும். அவரவர்களே "ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது.//

சூப்பரப்பு....அடிச்சு நொறுக்குங்க...:-) மிக அருமை. வாழ்த்துக்கள்.

மாதேவி said...

"ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது."

அருமையான கருத்துடன் கூடிய பதிவு.சிந்திப்போம்.

CorTexT (Old) said...

//தாலிக்கட்டுதல் என்பது நமது சமுகத்தில் இருக்கும் பழக்கம் இதை மாற்றங்கள் செய்யமுடிமே ஒழிய மறுக்க முடியாது. பெரியார் இயக்கத்தினர் தாலிக்கட்டுதலை எதிர்கின்றார்கள் அப்படிப்பட்ட இயக்கத்தினரால்தான் பெரியார் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார்கள். //

சிலைக்கு மாலை அணிவிப்பதலில் என்ன குறை கண்டீர்கள். அது கடந்து வந்த பாதைகளை நினைவு படுத்தும், சிலவற்றை கொண்டாடும் விடயம். தாலி என்பது ஆண்களால், பெண்களுக்கு மட்டுமே இடப்படும் ஒன்று. பெண் விடுதலை காணும் போது, அவற்றை அணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்குவதும் முக்கியம் தான் (இரண்டு பேருக்கும் மோதிரம் என்பது போன்றவை கூட நன்று தான்).

//மூடப்பழக்கங்களை எந்த அளவிற்கு சிலர் நம்புகின்றார்களோ அதை போல சிலர் வன்முறையாக மூடப்பழங்களை எதிர்ப்பதும் அறிவற்ற செயலாகதான் இருக்கும்.//

வன்முறை எப்பொழுதுமே தவறுதான். ஆனால், வன்மையாக கண்டிப்பது சில நேரங்களில், சில விடயங்களில் முக்கியம் தான். ஏனென்றால், மனிதன் ஒரு சமூக விலங்கு. சில விடயங்களில் நம்மையும், நம் குழந்தைகளையும், சந்ததிகளையும் பெரிதாக பாதிக்கின்றது. அது நாம் எப்படி பட்ட சமூகத்தில் வாழ நினைக்கின்றோம், எப்படி பட்ட சமூகத்தை உருவாக்க நினைக்கின்றோம் என்பதை பொருத்தது.

ஆ.ஞானசேகரன் said...

[[ரோஸ்விக் said...

//மூடப்பழக்கங்களை எந்த அளவிற்கு சிலர் நம்புகின்றார்களோ அதை போல சிலர் வன்முறையாக மூடப்பழங்களை எதிர்ப்பதும் அறிவற்ற செயலாகதான் இருக்கும். அவரவர்களே "ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது.//

சூப்பரப்பு....அடிச்சு நொறுக்குங்க...:-) மிக அருமை. வாழ்த்துக்கள்.]]

வாங்க ரோஸ்விக்
மிக்க நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

// மாதேவி said...

"ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது."

அருமையான கருத்துடன் கூடிய பதிவு.சிந்திப்போம்.//

வணக்கம் மாதவி,..
கண்டிப்பாக சிந்திப்போம்

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...

//தாலிக்கட்டுதல் என்பது நமது சமுகத்தில் இருக்கும் பழக்கம் இதை மாற்றங்கள் செய்யமுடிமே ஒழிய மறுக்க முடியாது. பெரியார் இயக்கத்தினர் தாலிக்கட்டுதலை எதிர்கின்றார்கள் அப்படிப்பட்ட இயக்கத்தினரால்தான் பெரியார் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார்கள். //

சிலைக்கு மாலை அணிவிப்பதலில் என்ன குறை கண்டீர்கள். அது கடந்து வந்த பாதைகளை நினைவு படுத்தும், சிலவற்றை கொண்டாடும் விடயம். தாலி என்பது ஆண்களால், பெண்களுக்கு மட்டுமே இடப்படும் ஒன்று. பெண் விடுதலை காணும் போது, அவற்றை அணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்குவதும் முக்கியம் தான் (இரண்டு பேருக்கும் மோதிரம் என்பது போன்றவை கூட நன்று தான்).]]

மாற்றங்கள் தேவைப்படலாம்... ஆனால் திருமணம் என்ற நிகழ்வை ஏற்றுகொள்ளதானே வேண்டும்.
அதுபோல கடந்துவ்ந்த பாதைகளை நினைவுகூற மாலை அணிவித்தல் என்பதும் அறிவுக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும் மனம் ஏற்றுகொள்ள்கின்றது என்றுதான் நானும் கூறுகின்றேன்.

[[ //மூடப்பழக்கங்களை எந்த அளவிற்கு சிலர் நம்புகின்றார்களோ அதை போல சிலர் வன்முறையாக மூடப்பழங்களை எதிர்ப்பதும் அறிவற்ற செயலாகதான் இருக்கும்.//

வன்முறை எப்பொழுதுமே தவறுதான். ஆனால், வன்மையாக கண்டிப்பது சில நேரங்களில், சில விடயங்களில் முக்கியம் தான். ஏனென்றால், மனிதன் ஒரு சமூக விலங்கு. சில விடயங்களில் நம்மையும், நம் குழந்தைகளையும், சந்ததிகளையும் பெரிதாக பாதிக்கின்றது. அது நாம் எப்படி பட்ட சமூகத்தில் வாழ நினைக்கின்றோம், எப்படி பட்ட சமூகத்தை உருவாக்க நினைக்கின்றோம் என்பதை பொருத்தது.]]

மூடப்பழங்கங்களை எதிர்ப்பதே சமூக பழக்கமாக மாற்ற வேண்டாம். அவரவர் மாறினால் ஒழிய பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.


உங்களின் நல்ல பகிர்வுக்கு நன்றிபா

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

நல்லதொரு சிந்தனை - ஏன் என்று கேடக வேண்டும் - ஆம் கேட்பதால் பல நன்மைகள் விளையும்.

மூட நம்பிக்கைகள் - பழக்கங்கள் - கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற வேண்டும் - உடனடியாக முடியாது - ஆனால் இத்தலைமுறை பலவற்றை மாற்றி விட்டது. இன்னும் மாறும்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

CorTexT (Old) said...

//திருமணம் என்ற நிகழ்வை ஏற்றுகொள்ளதானே வேண்டும். //

கமல்ஹாசன் போன்றோரை கேட்டால் அது தேவையில்லை என்பர். ஆனால், அதற்கு இச்சமூகத்தில் எளிய இடமில்லை தான். அது வேறு விடயம். அப்படியே அது அவசியமென்றாலும் அதை பெண்ணுக்கும் ஆணுக்கும் சரிநிகராக செய்ய வேண்டும். அதுதான் மாலைக்கும், தாலிக்கும் உள்ள வித்தியாசம். தாலியில் இன்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் புதைந்தே உள்ளன.

//கடந்துவ்ந்த பாதைகளை நினைவுகூற மாலை அணிவித்தல் என்பதும் அறிவுக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும் மனம் ஏற்றுகொள்ள்கின்றது//

மாலை அணிவித்தலுக்கு பதிலாக வேறு என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள். அவையும் உங்கள் தர்க்கத்தின்படி அதே முடிவுக்கு வரும். நீங்கள் உணர்ச்சி-பகுதியை (உள்-மனம்) மனம் என்றும் சிந்திக்கும்-பகுதியை (வெளி-மனம்) அறிவு என்றும் குறிக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். மொத்த மூளையின் செயல்பாடுதான் மனம் அதன் விளைவுதான் அறிவு. மாலை-அணிவித்தல் எந்தவகையிலும் அறிவுக்கு முரணானதோ, எதிரானதோ அல்ல. எப்படியாகிலும், இந்த பக்கமுள்ள கடுகு போன்ற விடயத்தையும், மூடநம்பிக்கைகளின் முழு பூசணிக்காயையும் ஒப்பிட்டு குழம்பிபோக வேண்டாம். பகுத்தறிவு என்பது நாம் எதை செய்கின்றோம் என்பதை விட, அதை ஏன், எதற்காக (நீங்கள் கூறும் அதே ஏன்) செய்கின்றோம் என்பதில் தான் உள்ளது!

CorTexT (Old) said...

//மூடப்பழங்கங்களை எதிர்ப்பதே சமூக பழக்கமாக மாற்ற வேண்டாம். அவரவர் மாறினால் ஒழிய பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.//

மூடநம்பிக்கைகள் சமூக விளைவு. அதனை களைய, பெரியாரின் இயக்கங்கள் போன்றவற்றின் மூலம் தான் அடையமுடியும். அப்படி பட்ட இயக்கம் தான் நமக்கு சுதந்திரம் பெற்று தந்தது, கருப்பரின அடிமையை களைந்தது. நீங்கள் இங்கு செய்து கொண்டிருப்பதும் அதே விழிப்புணர்ச்சி தான். உங்களின் இந்த விழிப்புணர்ச்சி குரலுக்கு உந்துதலையும், தைரியமும், அதற்கான சூழலையும் உருவாக்கியது அப்படிபட்ட இயக்கங்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். பூனை குறுக்கே போவது, வெளியில் போகும்பொழுது எங்கே போகின்றாய் என்பது போன்ற விடயங்களுக்கு வேண்டுமானால் இதுபோன்ற ஒருசில விழிப்புணர்ச்சி பதிவுகள் போதுமானதாக இருக்கலாம். ஆனால், பெண்களை நெருப்பில் தள்ளிய போது, சாதி கொண்டு கொத்தடிமைகளாக்கிய போது அதற்காக போராட வேண்டாமா?

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

நல்லதொரு சிந்தனை - ஏன் என்று கேடக வேண்டும் - ஆம் கேட்பதால் பல நன்மைகள் விளையும்.

மூட நம்பிக்கைகள் - பழக்கங்கள் - கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற வேண்டும் - உடனடியாக முடியாது - ஆனால் இத்தலைமுறை பலவற்றை மாற்றி விட்டது. இன்னும் மாறும்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//

நீங்கள் சொல்வதும் உண்மைதான் ஐயா,.. மாற்றங்கள் தொடரட்டும் இன்னும் மாறவேண்டும் என்பதே எல்லோருடைய ஆசைகள்... நமக்குள் இருக்கும் சின்ன சின்ன மூடபழக்கங்கள் கூட மாறவேண்டும் என்பதே இந்த இடுகை.

மிக்க நன்றி ஐயா

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...

//திருமணம் என்ற நிகழ்வை ஏற்றுகொள்ளதானே வேண்டும். //

கமல்ஹாசன் போன்றோரை கேட்டால் அது தேவையில்லை என்பர். ஆனால், அதற்கு இச்சமூகத்தில் எளிய இடமில்லை தான். அது வேறு விடயம். அப்படியே அது அவசியமென்றாலும் அதை பெண்ணுக்கும் ஆணுக்கும் சரிநிகராக செய்ய வேண்டும். அதுதான் மாலைக்கும், தாலிக்கும் உள்ள வித்தியாசம். தாலியில் இன்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் புதைந்தே உள்ளன.]]

மாற்றங்கள் ஏற்றுகொள்ளதான் வேண்டும்,... அதுவே பின்னோக்கியாக இல்லை.

[[//கடந்துவ்ந்த பாதைகளை நினைவுகூற மாலை அணிவித்தல் என்பதும் அறிவுக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும் மனம் ஏற்றுகொள்ள்கின்றது//

மாலை அணிவித்தலுக்கு பதிலாக வேறு என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள். அவையும் உங்கள் தர்க்கத்தின்படி அதே முடிவுக்கு வரும். நீங்கள் உணர்ச்சி-பகுதியை (உள்-மனம்) மனம் என்றும் சிந்திக்கும்-பகுதியை (வெளி-மனம்) அறிவு என்றும் குறிக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். மொத்த மூளையின் செயல்பாடுதான் மனம் அதன் விளைவுதான் அறிவு. மாலை-அணிவித்தல் எந்தவகையிலும் அறிவுக்கு முரணானதோ, எதிரானதோ அல்ல. எப்படியாகிலும், இந்த பக்கமுள்ள கடுகு போன்ற விடயத்தையும், மூடநம்பிக்கைகளின் முழு பூசணிக்காயையும் ஒப்பிட்டு குழம்பிபோக வேண்டாம். பகுத்தறிவு என்பது நாம் எதை செய்கின்றோம் என்பதை விட, அதை ஏன், எதற்காக (நீங்கள் கூறும் அதே ஏன்) செய்கின்றோம் என்பதில் தான் உள்ளது!]]

மலையிடுவதை நான் குறை சொல்ல வரவில்லை பெண்ணடிமைக்கு தாலி கட்டும் பழக்கம் வேண்டாம் என்று கூறுவதைதான் சொல்கின்றேன்.. அதில் மாற்றங்கள் தேவைப்படலாம்.. அதற்காக பெண்ணடிமையை சொல்லவந்து ஆண்ணடிமைக்கு வித்தாக அமையவேண்டாமே!...

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...

//மூடப்பழங்கங்களை எதிர்ப்பதே சமூக பழக்கமாக மாற்ற வேண்டாம். அவரவர் மாறினால் ஒழிய பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.//

மூடநம்பிக்கைகள் சமூக விளைவு. அதனை களைய, பெரியாரின் இயக்கங்கள் போன்றவற்றின் மூலம் தான் அடையமுடியும். அப்படி பட்ட இயக்கம் தான் நமக்கு சுதந்திரம் பெற்று தந்தது, கருப்பரின அடிமையை களைந்தது. நீங்கள் இங்கு செய்து கொண்டிருப்பதும் அதே விழிப்புணர்ச்சி தான். உங்களின் இந்த விழிப்புணர்ச்சி குரலுக்கு உந்துதலையும், தைரியமும், அதற்கான சூழலையும் உருவாக்கியது அப்படிபட்ட இயக்கங்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். பூனை குறுக்கே போவது, வெளியில் போகும்பொழுது எங்கே போகின்றாய் என்பது போன்ற விடயங்களுக்கு வேண்டுமானால் இதுபோன்ற ஒருசில விழிப்புணர்ச்சி பதிவுகள் போதுமானதாக இருக்கலாம். ஆனால், பெண்களை நெருப்பில் தள்ளிய போது, சாதி கொண்டு கொத்தடிமைகளாக்கிய போது அதற்காக போராட வேண்டாமா?]]

கோடாலி எடுக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாக கோடாலிதான் எடுக்க வேண்டும் அதை நானும் வரவேற்கின்றேன்... வெட்டிய இடத்தில் மீண்டும் முளையிடாமல் இருக்க கழைக்காடு போதும் என்று நினைக்கின்றேன்...

வினோத் கெளதம் said...

யோசிக்க வைக்கும் இடுகை..

ஆ.ஞானசேகரன் said...

// வினோத்கெளதம் said...

யோசிக்க வைக்கும் இடுகை..//

நன்றி நண்பா,... யோசிப்போம்

கலகலப்ரியா said...

சிந்தனை தொடரட்டும்..! (தாலி + மாலை... தொடர்புபடுத்தி... ஏன் என்று கேட்டது அருமை.. தொன்றுதொட்டு வழங்குவது... என்று பதில் வரலாம்..=))

ஆ.ஞானசேகரன் said...

// கலகலப்ரியா said...

சிந்தனை தொடரட்டும்..! (தாலி + மாலை... தொடர்புபடுத்தி... ஏன் என்று கேட்டது அருமை.. தொன்றுதொட்டு வழங்குவது... என்று பதில் வரலாம்..=))//

வாங்க ப்ரியா,.. நன்றிமா

தொன்றுதொட்டு வந்தாலும் பிறரை துன்புருத்தாமல் பார்த்துக்கொள்ளலாம்...

வால்பையன் said...

இன்னைக்கு பெரியார் சிலைக்கு மாலை போடுவாங்க!

நாளைக்கு கோவில் கட்டுவாங்க!

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...
இன்னைக்கு பெரியார் சிலைக்கு மாலை போடுவாங்க!

நாளைக்கு கோவில் கட்டுவாங்க!//



வணக்கம் வால்பையன்,..

கண்டிப்பாக,... நானும் அதைதான் நினைக்கின்றேன்...

உமா said...

அவரவர்களே "ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது.//

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்பது சரிதான்.
பெரியார் என்றில்லை எல்லா சிலைகளுக்கும் மாலை அணிவிப்பது அரசியல் நாடகம். விளம்பர ஆசை.
மூட பழக்கங்கள் போக இன்னும் சில நூறு பெரியார்கள் வரவேண்டியுள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

[[// உமா said...
அவரவர்களே "ஏன்?" என்று கேட்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுசெல்ல முடியாது.//

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்பது சரிதான்.
பெரியார் என்றில்லை எல்லா சிலைகளுக்கும் மாலை அணிவிப்பது அரசியல் நாடகம். விளம்பர ஆசை.
மூட பழக்கங்கள் போக இன்னும் சில நூறு பெரியார்கள் வரவேண்டியுள்ளது.//]]

வாங்க உமா,
நீண்ட நாள்களுக்கு பின் வந்ததும் நச்சுன்னு நாலு வார்த்தை சொல்லி கலக்கிபுட்டீங்க மிக்க நன்றி உமா,..

பின்னோக்கி said...

நல்ல பதிவு.

பெரியார் சிலைக்கு மாலை :)
அருமையான கேள்விதான்.

ஆ.ஞானசேகரன் said...

//பின்னோக்கி said...
நல்ல பதிவு.

பெரியார் சிலைக்கு மாலை :)
அருமையான கேள்விதான்//

நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//நசரேயன் said...
நல்லா இருக்கு//
வணக்கம். நன்றி நண்பா,...