ஏன்? எதற்கு? எப்படி?..... 7
நிறத்தினாலே உலகம் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதை பற்றி எல்லோருக்கும் தெரியும். கருப்பர்கள் வெள்ளையர்கள் என்ற பாகுபாடு நிலை இன்றுவரை நின்றபாடில்லை. எண்ணற்ற போராட்டங்கள் இந்த நிறத்தினால் வந்துள்ளது, வந்துக்கொண்டே இருக்கின்றது என்றே சொல்லலாம். ம்ம்ம்ம்... அது சரி நிறம் என்றால் என்ன? அந்த நிறம் அந்த நிறமாக இருக்க காரணம் என்ன?
முதலில் ஒரு பொருள் இருக்கின்றது அது எப்படி நமக்கு தெரிகின்றது? கண்ணிருந்தால் தெரிகின்றது. கண் இருந்தால் மட்டும் போதுமா? அப்படியென்றால் இருட்டில் அந்த பொருள் தெரியவில்லையே ஏன்? ஆக ஒரு பொருள் நம் கண்ணுக்கு தெரியவேண்டும் என்றால் அங்கே ஒளி வேண்டும், அதாவது வெளிச்சம் வேண்டும். உலகில் ஒளியின் முதன்மையான ஆதாரம் சூரியன். மேஜையின் மீது பேனா இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். இப்பொழுது ஒளியானது அந்த பேனா மீது பட்டு எதிரொளிக்கப்படுகின்றது. அப்படி எதிரொளிக்கும் ஒளி நம்முடைய கண்ணை அடையும் பொழுது அந்த பேனா நம் கண்ணுக்கு தெரிகின்றது. அதை மூளை பேனாவாக உணர்த்துகின்றது. இவற்றை பற்றிய மற்றொரு என் இடுகை விளக்கமான விளக்கு...
பேனாவின் மீது படும் ஒளி அதன் விலகல் மற்றும் உட்கவரும் தன்மையை பொருத்து அதன் நிறம் மற்றும் உருவம் தெரிகின்றது. சூரிய ஒளி ஏழு நிறங்களின் கூட்டு ஆனால் நமக்கு வெள்ளை நிறமாக தெரிகின்றது. முதன்மையான நிறம் என்றால் அது சிகப்பு, பச்சை, நீலம். மற்ற நிறங்கள் இந்த மூன்றின் கூட்டு சேர்க்கைகளால் ஆனவை. மேலும் முக்கிய நிறங்கள் ஏழு ஆகும் அவை 1.சிகப்பு 2.ஆரஞ்சு 3.மஞ்சள் 4.பச்சை 5.நீலம் 6.இண்டிகா(இளநீலம்) 7. ஊதா என்பன.
இந்த எழு நிறங்களின் கூட்டு வெள்ளையாக இருக்கும். இவற்றை பின் வரும் படத்தில் உள்ளது போல ஒரு வட்ட வடிவ அட்டையில் ஏழு நிறங்களையும் சமபாகங்களாக வரைந்துக்கொண்டு மையத்தில் துளையிட்டு பென்சிலால் வேகமாக சுற்று, இப்பொழுது வெள்ளை நிறமாக தெரியும். ஆக நிறங்களின் கூட்டு என்பது வெள்ளையாக இருக்கும். கருப்பு என்பது நிறமே இல்லை என்றே சொல்லலாம்.
(படம்)
இப்பொழுது மேஜையில் மீது உள்ள பேனா சிகப்பாக தெரிகின்றது என்று வைத்துக்கொண்டால் அந்த பேனா சிகப்பாக தெரிவதற்கு காரணம் என்ன? வெள்ளை நிற ஒளி பேனாவின் மீது பட்டு எதிரோளிக்கும் பொழுது எல்லா நிறங்களையும் அந்த பேனா உட்கவர்ந்து கொண்டு சிகப்பு ஒளியை மட்டும் வெளியிடுகின்றது. அப்படி வெளியிடும் ஒளி நம் கண்ணை அடையும் பொழுது அது சிகப்பாக தெரிகின்றது. எல்லா ஒளியையும் வெளியிட்டால் அது வெள்ளையாகவும், எல்லா ஒளியையும் உட்கவர்ந்து கொண்டால் அது கருப்பாகவும் தெரியும். ஒருவர் வெள்ளையாக இருந்தால் உண்மையில் அவர் எந்த நிறத்தையும் உட்கவரவில்லை என்றுதான் அர்த்தம். எல்லா நிறங்களையும் தனக்குள் வைத்துள்ளவர்கள்தான் கருப்பாக இருக்கின்றனர். உடல் கருப்பாகவும் மனம் வெள்ளையாகவும் உள்ளவர்களே சிறப்பானவர்கள் என சொல்லலாமா!
ஆக நிறம் என்பது ஒரு பொருளினால் வெளியிடப்படுகின்ற, தெளிக்கப்படுகின்ற, கடத்தப்படுகின்ற ஒளியின் காட்சி பதிவு என கொள்ளலாம். அதே போல் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு அலை நீளம் மற்றும் அதிர்வெண்கள் உண்டு அதை பொருத்துதான் அந்த நிறம் கடக்கும் தூரம் அமையும் அதைப்பற்றி பின்னொரு நாளில் பார்க்கலாம். மற்றொரு சிந்தனைக்கான கேள்வி அந்த நிறம் மற்றும் பொருளை மூளை எப்படி நிச்சம் செய்கின்றது?
மூளை அந்த பேனாவின் நிறம் சிகப்பு என நிச்சயம் செய்துவிட்டது. அதனால்தான் அந்த பேனாவின் நிறம் சிகப்பு என்று நாம் சொல்லுகின்றோம். அப்படி அந்த பேனாவின் நிறம் ஒருவருக்கு சரியாக தெரியாவிட்டாலும் அல்லது எல்லாமே ஒரே நிறமாக தெரிந்தாலும் அவற்றுக்கு நிறக்குருடு என்று சொல்லுகின்றோம். நிறக்குருடு மறபணு அடிப்படையினால் ஏற்பட்டாலும் சில சூழல்களில் மூளை,நரம்பு அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதியல் பொருள்களினாலும் ஏற்படுகின்றது. இரவு பணி அதிகம் பார்ப்பவர்களுக்கும் இந்நோய் வர வாய்ப்புள்ளதாகவும் சொல்லுகின்றார்கள். நிறக்குருடு குறையுள்ளவர்கள் சிலரால் நன்மைகளும் இருக்கின்றது. ஒரே நிறத்தை பார்ப்பவர்களாக உள்ளதால் குழப்பம் இல்லாமல் குறிபார்த்து சுட முடியும் அதே போல் இருட்டில் இருப்பவர்களை எளிதில் உணரவும் பார்க்கவும் முடியும். {கண்டிப்பாக நிறகுருடு உள்ளவர்கள் வாகனம் ஓட்ட கூடாது}.
மஞ்சள் நிறத்தின் அலை நீளம் மற்ற நிறங்களின் அலைநீளதிற்கு இடையில் உள்ளதால் மஞ்சள் நிறம் சுழபமாக கண்ணுக்கு தெரியும். அதனால் முக்கிய அறிவிப்பு பலகைகள் மஞ்சள் நிறத்தில் வைப்பார்கள். சோர்வாக இருப்பவர்களுக்கு அதனால்தான் பார்க்கும் பொழுது பார்வை மஞ்சளாக தெரியும் என்பார்கள்.
ஒரு வயதான தாத்தா ஒருவர் டாக்டரிடம் சென்று "டாக்டர் எனக்கு எதை பார்த்தாலும் மஞ்சளாகவே தெரிகின்றது ஒரே கலைப்பாக உள்ளது என்றார்" அதற்கு டாக்டர் "நல்லா சாப்பிட்டாயா " என்று கேட்டார். "சாப்பாடுதான் சரியாக சாப்பிட முடிவதில்லை" என்று தாத்தா சொன்னார். "யூரின் நன்றாக போகின்றதா? " என்று டாக்டர் கேட்டதும் தாத்தா " ம்ம்ம்ம் நன்றாக வெள்ளையாகதான் போகின்றது" என்றார். "பார்கின்றதெல்லாம் மஞ்சளா தெரியுதுனு சொன்னாயே யூரின் மட்டும் எப்படி வெள்ளையா தெரிந்தது" என்று டாக்டர் கேட்டதும் தாத்தா குழம்பியே போய்ட்டார்....(சும்மா ஒரு காமடிதான்)
மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.
Thursday, November 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
நல்ல சிந்தனைகள்
///வெள்ளை நிற ஒளி பேனாவின் மீது பட்டு எதிரோளிக்கும் பொழுது எல்லா நிறங்களையும் அந்த பேனா உட்கவர்ந்து கொண்டு சிகப்பு ஒளியை மட்டும் வெளியிடுகின்றது. ///
இதுபோன்று நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன் நண்பா. அருமையான பதிவு. ரொம்ப நன்றி
உங்களுக்கு ஓர் அழைப்பு
http://tamiluzhavan.blogspot.com/2009/11/blog-post.html
ஞானம் எந்த விஷயத்தையும் அதன் பிண்ணனி சொல்லிச் சுலபமாகச் சிந்திக்க வைக்கிறீர்கள்.நனறி.
// Suresh Kumar said...
நல்ல சிந்தனைகள்//
வணக்கம் மிக்க நன்றி நண்பா,...
[[ S.A. நவாஸுதீன் said...
///வெள்ளை நிற ஒளி பேனாவின் மீது பட்டு எதிரோளிக்கும் பொழுது எல்லா நிறங்களையும் அந்த பேனா உட்கவர்ந்து கொண்டு சிகப்பு ஒளியை மட்டும் வெளியிடுகின்றது. ///
இதுபோன்று நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன் நண்பா. அருமையான பதிவு. ரொம்ப நன்றி]]
வாங்க நண்பா,... மிக்க நன்றிபா
[[" உழவன் " " Uzhavan " said...
உங்களுக்கு ஓர் அழைப்பு
http://tamiluzhavan.blogspot.com/2009/11/blog-post.html]]
உங்கள் அன்பிற்கு நன்றிங்க உழவன்
// ஹேமா said...
ஞானம் எந்த விஷயத்தையும் அதன் பிண்ணனி சொல்லிச் சுலபமாகச் சிந்திக்க வைக்கிறீர்கள்.நனறி.//
உங்களின் சிறந்த பாராட்டுக்கு மகிழ்ச்சிங்க ஹேமா. அது உங்களால் மட்டுமே முடியும்...
உங்களின் பதிவுகள் எல்லம் நல்லயிருக்கு... :)
உங்கள் பதிவுகள் தவறாமல் இருக்க இன்று முதல் நான் உங்களை பின் தொடர்கின்றேன்.
வண்ணங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி
//ஆக நிறங்களின் கூட்டு என்பது வெள்ளையாக இருக்கும்//
புதிதாகத் தெரிந்து கொண்டேன் தல....கலக்குங்க. அருமையான இடுகை. :-)
உங்களுடைய பல பதிவு களையும் படித்தேன் .எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது .
எனக்கு உங்களிடம் ஒரு தகவலோ கேள்வியோ என்று வைத்துகொள்வோம்......அதாவது மனிதனை தாகும் பிரச்சனை அதாவது stress இதில் இருந்து மனதை எப்படி திருப்புவது .நம்மிடம் உதவி பிரவர்களே நம்மை ஏலனம் செய்வது பாராமுகமாக செல்வது போன்ற பிரச்சனைகள் மனதை விட்டு விலகுவதில்லை இதை விட்டு தள்ளுவது எப்படி ?யோக போன்றவைகளும் ச்ய்வதுண்டு .பதில்எழுதுங்கள்
//வேந்தன் said...
உங்களின் பதிவுகள் எல்லம் நல்லயிருக்கு... :)
உங்கள் பதிவுகள் தவறாமல் இருக்க இன்று முதல் நான் உங்களை பின் தொடர்கின்றேன்.//
மிக்க நன்றி வேந்தன்... எப்பொழுதும் சந்திப்போம்.... மிக்க மகிழ்ச்சி
//" உழவன் " " Uzhavan " said...
வண்ணங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி//
வணக்கம் உழவன்... மிக்க நன்றியும் மகிச்சியும்
[[ ரோஸ்விக் said...
//ஆக நிறங்களின் கூட்டு என்பது வெள்ளையாக இருக்கும்//
புதிதாகத் தெரிந்து கொண்டேன் தல....கலக்குங்க. அருமையான இடுகை. :-)]]
வணக்கம் ரோஸ்விக்... மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்
[[ malar said...
உங்களுடைய பல பதிவு களையும் படித்தேன் .எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது .
எனக்கு உங்களிடம் ஒரு தகவலோ கேள்வியோ என்று வைத்துகொள்வோம்......அதாவது மனிதனை தாகும் பிரச்சனை அதாவது stress இதில் இருந்து மனதை எப்படி திருப்புவது .நம்மிடம் உதவி பிரவர்களே நம்மை ஏலனம் செய்வது பாராமுகமாக செல்வது போன்ற பிரச்சனைகள் மனதை விட்டு விலகுவதில்லை இதை விட்டு தள்ளுவது எப்படி ?யோக போன்றவைகளும் ச்ய்வதுண்டு .பதில்எழுதுங்கள்]]
வணக்கம் மலர்... அருமையான கேள்விதான்... எல்லோரையும் இன்று வாட்டும் ஒரு பிரச்சனை மன உழச்சல்... நீங்கள் சொல்வதை போல் யோகாவும் நல்ல பயிற்சிதான். மகிழ்ச்சி என்பதே ஒரு விதமான பயிற்சிதானே.. நன்று சிந்தித்துகொண்டுள்ளேன்... மீண்டும் ஒரு நாள் பேசுவோம்.. மிக்க நன்றிங்க
அப்ப கருப்புதான் நல்ல கலர்ன்னு சொல்றீங்க. வெரிகுட். நல்ல உபயோகமான பதிவு.
வாழ்த்துக்கள்..நல்ல தகவல்கள் நிறைந்தது
//பின்னோக்கி said...
அப்ப கருப்புதான் நல்ல கலர்ன்னு சொல்றீங்க. வெரிகுட். நல்ல உபயோகமான பதிவு.//
வாங்க நண்பா,... மிக்க நன்றிங்க
//நசரேயன் said...
வாழ்த்துக்கள்..நல்ல தகவல்கள் நிறைந்தது//
மிக்க நன்றிஙக நசரேயன்
நல்ல சிந்தனைகள் தொடருங்கள் நண்பா...
[[சந்ரு said...
நல்ல சிந்தனைகள் தொடருங்கள் நண்பா...]]
வணக்கம் சந்ரு.... மிக்க நன்றிங்க
நல்ல பதிவு...ஒரு வேலை கொடுத்திருக்கிறேன்.வந்து பாருங்க...
நல்ல பதிவு. நிறைய விசயங்களை புதிதாய் தெரிந்து கொண்டேன். நன்றி
// அன்புடன் அருணா said...
நல்ல பதிவு...ஒரு வேலை கொடுத்திருக்கிறேன்.வந்து பாருங்க...//
மிக்க நன்றி... அன்பின் அழைப்பிற்கும் நன்றிங்க அருணா..
//தாரணி பிரியா said...
நல்ல பதிவு. நிறைய விசயங்களை புதிதாய் தெரிந்து கொண்டேன். நன்றி//
மிக்க நன்றிங்க ... மகிழ்ச்சி அடிக்கடி வந்து செல்லுங்கள்
இங்கு எழுத நினைத்ததை ஒரு பதிவாக (வண்ண ஆன்மீக உலகம்) இட்டுள்ளேன்.
http://icortext.blogspot.com/2009/11/blog-post_06.html
// RajK said...
இங்கு எழுத நினைத்ததை ஒரு பதிவாக (வண்ண ஆன்மீக உலகம்) இட்டுள்ளேன்.
http://icortext.blogspot.com/2009/11/blog-post_06.html//
படித்தேன் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி
Post a Comment