_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, November 23, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 8

ஏன்? எதற்கு? எப்படி?..... 8

வலைமக்களே! மீண்டும் ஒரு ஏன்? எதற்கு? எப்படி?.... என்ற தலைப்பின் கீழ் சந்திப்பதில் மகிழ்ச்சி. மனிதர்களுக்குள் எழும் கேள்விகளை அனைவரோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. நமக்குள் இருக்கும் கேள்விகள்தானே ஆறாவது அறிவின் அடிநாதம். ஒவ்வொரு அறிவியல் கண்டுப்பிடிப்புக்களுக்கு பின்னால் இருப்பது இந்த கேள்விகள்தான். அப்படிப்பட்ட கேள்விகளின் பதிலாகத்தான் ஒவ்வொரு கண்டுப்பிடிப்புகளும் கிடைத்ததுள்ளது.(இன்றைய தமிழகத்தில் கேள்விகளை மனிதன் மனதிலிருந்து அப்பறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைத்தான் தொலைக்காட்சியும் அதன் தொடர் இம்சை நாடகங்களும். எந்த ஒரு கேள்வியையும் கேட்க திரணியிள்ளா உணர்வை வளர்ப்பதற்கு தொலைக்காட்சியின் சேவை பெரிதும் துணையாக நிற்கின்றது. நம்பிக்கையில்லை என்றால் தொடர்ந்து 24 மணிநேரமும் இரண்டு நாள் சூரிய தொலைக்காட்சியை பார்த்துவிட்டு உங்களின் மனதை கவணித்துப்பாருங்கள் புரிந்துவிடும் நாம் திரணியற்றவர்கள் என்பது இதைதான் அரசும் அசூர வேகத்தில் செய்துவருகின்றது).

மனிதனின் தேவையும் சாதகமான சூழ்நிலையும் கிடைக்கப்பெற்றால் அறிவியல் கண்டுப்பிடிப்புகள் வந்தடையும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிதான் எல்லா கண்டுப்பிடிப்புகளும் வந்துள்ளது என்றாலும் ஒரு சில கண்டுப்பிடிப்புகள் தற்காலிகமாக நடந்த நிகழ்வுகளாய் இருக்கும். அதுவும் நம்முடைய தேவையின் காரணமாகவே நம்மோடு வந்தடையும். ஆதிக்கால மனிதனின் முதன்மையான கண்டுப்பிடிப்பாக இருப்பது வட்டமும் அதன் அச்சு சார்ந்த சுழற்சியும் என்றால் மிகையாகாது. இந்த வட்டத்தின் பயன்பாடுகள் மட்டும் நம்மை அடையாமல் இருந்திருந்தால் இன்றைய வளர்ச்சியை நம்மால் எட்டிப்பார்க்கவே முடியாது.


வட்டம் என்பது என்ன? ஒரு துகள் ஒரு மையத்தை நோக்கி உள்ள விசையும் மற்றும் மையத்தை விலக்கி செல்லும் விசையும் சமமாக இருக்க அந்த துகள் சுற்றிவரும் பாதை வட்டம் என்று சொல்லலாம். அந்த மைத்திற்கும் துகளுக்கும் உள்ள தூரத்தை ஆரம் என்று சொல்லுகின்றோம். ( வண்டிச்சக்கரத்தின் கைகளை ஆரம் என்றே அழைக்கின்றோம்).

நாடேடியாக வாழ்ந்து வந்த மனிதன் சிறு சிறு கூட்டங்களாக இருப்பிடங்கள் அமைத்து வாழத்தொடங்கினான். இருப்பிடங்களின் தனக்கு தேவையான உணவுகளை சேமித்து வைத்துக்கொள்ளவும் பழகிக்கொண்டான். பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரங்களில் தரையில் போட்டு இழுத்து செல்லும் பழக்கம் இருந்தது. காலம் அவனுக்கு அறிவியல் கற்றுக்கொடுத்தது, இழுத்து செல்லும் பொருள்களுக்கிடையில் சிறு சிறு உருளை கட்டைகளை வைத்து இழுக்கும்பொழுது பளுக்குறைவாகவும் வேகமாகவும் இருப்பதை கண்டுக்கொண்டான். இதுதான் அவன் கண்ட மகிழ்ச்சியான கண்டுப்பிடிப்பு. அவனுக்கு கட்டைகளை எடுத்து வைக்க சிரமாகவும், அதற்காக ஒருவரும் தேவைப்பட்டது. அவனும் சிந்திக்க தொடங்கினான், ஆறாவது அறிவையும் பயன்படுத்த அன்றுதான் பழகிக்கொண்டான். கட்டைகளுக்கு பதிலாக அச்சுகளில் சுற்றிவரும் சக்கரம் ஒன்றை உருவாக்கினான். இதுதான் நம்முடைய காலசக்கரம் ஆரம்பமாக ஆதாரமாக இருந்தது.

எந்த ஒரு நேர் இயக்கங்களும் நம்மை விட்டு கடந்து சென்றுவிடும். ஆனால் வட்டம் சார்ந்த இயக்கம் மட்டுமே ஒர் இடத்தை நோக்கியே இருக்கும். இப்படிப்பட்ட வட்டம் சார்ந்த இயக்கத்தை மனிதன் தன் கைகளில் வைத்துக்கொண்டதன் விளைவாகத்தான். இன்றைய நாகரிகத்தை நம்மால் அடைய முடிந்தது. மனிதனின் இயக்கங்களுக்கு ஆதாரமாக இருப்பதே இந்த வட்டம்தான். நாம் வாழும் பூமியின் சுழற்சி ஆதாரமும் வட்டம்தான் என்பதிலிருந்தே தெரிகின்றது வட்டத்தின் முக்கியத்துவம். தொழிற்புரட்சிக்கு ஆதரவாக இருந்தது இந்த வட்டமும் வட்டம்சார்ந்த இயக்கங்களும்.


ஆர்க்டிக் வட்டம்: பூமி பந்தின் உலக நடுகோட்டில் வடதுருவத்தில் இருப்பதுதான் இந்த ஆர்க்டிக் வட்டம். இந்த பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் குறைவான மக்களே வாழ்கின்றனர். ஆர்க்டிக் வட்டத்திற்கு ஒத்ததாக தென் துருவப்பகுதியை அண்டார்டிக் வட்டம் என்று அழைக்கின்றோம். ஆர்க்டிக் வட்டத்தில் பெரும்பாலும் குளிர்ந்தே காணப்படுவதால் பனிப்பாறைகளாக உள்ளது.(தற்பொழுது பெருகி வரும் உலக வெப்பமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்).

ஆர்க்டிக் வட்டம் எட்டு நாடுகளை கடந்து செல்கின்றது. ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் உள்ளது. இது பெரும்பாலும் பனிக்கட்டிகளாகவே இருக்கும். ஆர்க்டிக் வட்டம் நார்வே, சுவீடன்,பின்லாந்த், ரஷ்யாவின் சிலபகுதி, கனடா,கிரீஸ்லாந்த்,ஐஸ்லாந்து,ஐக்கிய அமேரிக்கா போன்ற எட்டு நாடுகளை கடந்து வருகின்றது. இப்பகுதிகளில் எண்ணெய் வளங்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

49 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வட்டம், மாவட்டம் இதெல்லாம் பெரிய முக்கியமான பதவிகள் அல்லவா..,

ஆ.ஞானசேகரன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...

வட்டம், மாவட்டம் இதெல்லாம் பெரிய முக்கியமான பதவிகள் அல்லவா..,//

அந்த வட்டத்தின் ஆரம் பெரிதாக இருக்குமுனு நினைக்கின்றேன்... நீங்கள் எந்த வட்டம் டாக்டர்...

கலகலப்ரியா said...

பகிர்தலுக்கு நன்றி ஞானசேகரன்...! அருமை..!

ஆ.ஞானசேகரன் said...

// venkat said...

நல்ல பதிவு//

மகிழ்ச்சி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// கலகலப்ரியா said...

பகிர்தலுக்கு நன்றி ஞானசேகரன்...! அருமை..!//

வணக்கம் ப்ரியா மிக்க மகிழ்ச்சி

ப்ரியமுடன் வசந்த் said...

தெரியாத விஷயங்கள் சேகர்..

நல்ல விடயங்கள்...

இராகவன் நைஜிரியா said...

எல்லாம் சரி ... பள்ளிக்கூடத்தில் வட்டமா மார்க் வாங்கினா, வாத்தியாரும், அப்பாவும் முதுகில தவில் வாசிச்ச காரணம் என்னவா இருக்குங்க?

இராகவன் நைஜிரியா said...

// மனிதனின் தேவையும் சாதகமான சூழ்நிலையும் கிடைக்கப்பெற்றால் அறிவியல் கண்டுப்பிடிப்புகள் வந்தடையும் என்பது எல்லோருக்கும் தெரியும் //

அது சரிங்க... தேவைன்னா மனுஷனுக்கு எல்லாமே தோணும் அப்படின்னு சொல்ல வர்றீங்க..

CorTexT (Old) said...

வட்டம் என்பது கணித வடிவவியல் அமைப்பு. நீங்கள் கூறிய விடயங்கள் சக்கரத்தை பற்றியது. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான். பூமி சூரியனை நீள்வட்டத்தில் இரண்டு மையத்தில் ஒன்றை மையமாக கொண்டு சுற்றுகின்றது.

cheena (சீனா) said...

வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய பல்வேறு பாடங்களில் ஒன்று - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன்...வசந்த் said...

தெரியாத விஷயங்கள் சேகர்..

நல்ல விடயங்கள்.//

வாங்க வசந்த் மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// இராகவன் நைஜிரியா said...

எல்லாம் சரி ... பள்ளிக்கூடத்தில் வட்டமா மார்க் வாங்கினா, வாத்தியாரும், அப்பாவும் முதுகில தவில் வாசிச்ச காரணம் என்னவா இருக்குங்க?//

தவிலும் வட்ட வடிவமாக இருப்பதால் என்று நினைக்கின்றேன்.. நல்ல அனுபவம் ஹிஹிஹி...

[[// மனிதனின் தேவையும் சாதகமான சூழ்நிலையும் கிடைக்கப்பெற்றால் அறிவியல் கண்டுப்பிடிப்புகள் வந்தடையும் என்பது எல்லோருக்கும் தெரியும் //

அது சரிங்க... தேவைன்னா மனுஷனுக்கு எல்லாமே தோணும் அப்படின்னு சொல்ல வர்றீங்க..]]

அதேதாங்க இராகவன்...
மிக்க நன்றிங்க உங்களின் வருகை மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

வட்டம் என்பது கணித வடிவவியல் அமைப்பு. நீங்கள் கூறிய விடயங்கள் சக்கரத்தை பற்றியது. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான். பூமி சூரியனை நீள்வட்டத்தில் இரண்டு மையத்தில் ஒன்றை மையமாக கொண்டு சுற்றுகின்றது.//

தாங்களின் கருத்துரைக்கும், வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி ராஜ்..

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய பல்வேறு பாடங்களில் ஒன்று - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் ஞானசேகரன்///

மிக்க நன்றி ஐயா,...

thiyaa said...

அருமை

ஆ.ஞானசேகரன் said...

// தியாவின் பேனா said...

அருமை//

வணக்கம் உங்களின் முதல் வருகை மகிழ்ச்சியே... மிக்க நன்றிங்க

ரோஸ்விக் said...

வட்டம் வட்டமா...உலகம் சுற்றி காண்பிக்கும் வாலிபர் ஆகிட்டீங்க...
எல்லாம் புதிய தகவல்கள் தான்....நல்லா சுத்தி காமிங்க தல.....:-)

ஆ.ஞானசேகரன் said...

//ரோஸ்விக் said...

வட்டம் வட்டமா...உலகம் சுற்றி காண்பிக்கும் வாலிபர் ஆகிட்டீங்க...
எல்லாம் புதிய தகவல்கள் தான்....நல்லா சுத்தி காமிங்க தல.....:-)//


வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்க

குறை ஒன்றும் இல்லை !!! said...

பகிர்வினிற்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...

பகிர்வினிற்கு நன்றி//

வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்க

வால்பையன் said...

//ஆதிக்கால//

நடுவுல “க்” வரணுமா!?

வால்பையன் said...

வட்டத்தின் ஆரம்பம் உருண்டையாக இருக்கும்னு நினைக்கிறேன்!

S.A. நவாஸுதீன் said...

தெளிவான விளக்கம், நல்ல சிந்தனைகளுடன். அருமை.

தொடரட்டும் நண்பா உங்களின் இந்த மிகச்சிறந்தப் பணி.

ஆ.ஞானசேகரன் said...

[[ வால்பையன் said...

//ஆதிக்கால//

நடுவுல “க்” வரணுமா!?]]

நீங்கள் கேட்டதுதான் "க்" தேவையில்லை என்று தோன்றுகின்றது. ஆனாலும் சரியாக தெரியவில்லை... தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

வட்டத்தின் ஆரம்பம் உருண்டையாக இருக்கும்னு நினைக்கிறேன்!//

நீங்கள் சொன்னா சரியாதான் இருக்கும் தல.... நானும் அப்படிதான் நினைக்கின்றேன்..

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

தெளிவான விளக்கம், நல்ல சிந்தனைகளுடன். அருமை.

தொடரட்டும் நண்பா உங்களின் இந்த மிகச்சிறந்தப் பணி.//


வணக்கம் நவாஸீதீன்,..
உங்களின் பாராட்டுகள் அடிக்கடி கிடைப்பதில் மிகுந்த ஆணந்தம்

அஹோரி said...

//நம்பிக்கையில்லை என்றால் தொடர்ந்து 24 மணிநேரமும் இரண்டு நாள் சூரிய தொலைக்காட்சியை பார்த்துவிட்டு ...//

அவனுங்களுக்கு தெரிஞ்சத தான் அவனுங்க பண்ணுவானுக. கோச்சி கிட்டா எப்புடி ?

ஆ.ஞானசேகரன் said...

[[அஹோரி said...

//நம்பிக்கையில்லை என்றால் தொடர்ந்து 24 மணிநேரமும் இரண்டு நாள் சூரிய தொலைக்காட்சியை பார்த்துவிட்டு ...//

அவனுங்களுக்கு தெரிஞ்சத தான் அவனுங்க பண்ணுவானுக. கோச்சி கிட்டா எப்புடி ?]]

அரசும் அவனுங்களுக்கு ஆதரவாகவும், அவனுங்க அரசுக்கு ஆதரவாகவும் மக்களை திரணியிள்ளா புழுவாக மாற்ற திட்டம் தீட்டி செய்ல்படுகின்றதே! நாமதான் விழிப்புடன் இருக்கனும்...


மிக்க நன்றி நண்பா

"உழவன்" "Uzhavan" said...

வழமை போல் அருமை

ஹேமா said...

தெரியாத விஷயங்களைச் சொல்லி யோசிக்க வைக்கிறதே உங்க வேலையாப்போச்சு ஞானம்.நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...
வழமை போல் அருமை//


நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
தெரியாத விஷயங்களைச் சொல்லி யோசிக்க வைக்கிறதே உங்க வேலையாப்போச்சு ஞானம்.நன்றி.//


தெரிந்தாலும் சும்மா யோசிக்கலேமே ஹேமா,... மிக்க நன்றி ஹேமா,..

வினோத் கெளதம் said...

தொடருங்கள் நற்ப்பணியை..;)

அன்புடன் நான் said...

நேர்த்தியான கட்டுரை .... நல்லா எளிமையா இருக்கு தொடருங்க நண்பா , வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//வினோத்கெளதம் said...
தொடருங்கள் நற்ப்பணியை..;)//

மிக்க நன்றி நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
நேர்த்தியான கட்டுரை .... நல்லா எளிமையா இருக்கு தொடருங்க நண்பா , வாழ்த்துக்கள்.//


மிக்க நன்றி நண்பா.. மகிழ்ச்சி

Admin said...

பல விடயங்களை அறியக் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...
பல விடயங்களை அறியக் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றிகள்//


வருகைக்கு மகிழ்ச்சி நண்பா

ராமலக்ஷ்மி said...

// இதுதான் நம்முடைய காலசக்கரம் ஆரம்பமாக ஆதாரமாக இருந்தது.//

அழகாய் சொல்லியிருக்கீங்க. வட்டம் பற்றி பல விவரங்களை அறிய முடிந்தது. நல்ல பகிர்வு.

ஆ.ஞானசேகரன் said...

[[ ராமலக்ஷ்மி said...
// இதுதான் நம்முடைய காலசக்கரம் ஆரம்பமாக ஆதாரமாக இருந்தது.//

அழகாய் சொல்லியிருக்கீங்க. வட்டம் பற்றி பல விவரங்களை அறிய முடிந்தது. நல்ல பகிர்வு.]]

மிக்க நன்றிங்க,....

நசரேயன் said...

தொடர் நல்லா இருக்கு

ஆ.ஞானசேகரன் said...

// நசரேயன் said...

தொடர் நல்லா இருக்கு//


மிக்க நன்றி நண்பரே...

பா.ராஜாராம் said...

நேரமின்மை மற்றும் ஒரு நல்ல கட்டுரை வாசிக்கும் அவகாச குறைவு.இதுதான் சேகர்,எப்பவாவது வர நேர்கிறது.ஆனால் சேமித்து கொண்டு இருக்கிறேன்.ஆற அமர வாசிக்கவென.பார்க்கலாம்,

உங்கள் இந்த பகிரல் மட்டும் வாசித்திருக்கிறேன்.பழசு நிறைய இருக்கு வாசிக்கணும்.

செயல் படுங்கள் மக்கா!

Anonymous said...

psminaiyam.com
http://www.psminaiyam.com/
read and spread this to others
ihanks

ஆ.ஞானசேகரன் said...

/// பா.ராஜாராம் said...

நேரமின்மை மற்றும் ஒரு நல்ல கட்டுரை வாசிக்கும் அவகாச குறைவு.இதுதான் சேகர்,எப்பவாவது வர நேர்கிறது.ஆனால் சேமித்து கொண்டு இருக்கிறேன்.ஆற அமர வாசிக்கவென.பார்க்கலாம்,

உங்கள் இந்த பகிரல் மட்டும் வாசித்திருக்கிறேன்.பழசு நிறைய இருக்கு வாசிக்கணும்.

செயல் படுங்கள் மக்கா!///

வணக்கம் பா.ராஜாராம்.... நேரம் கிடைகின்ற பொழுது கண்டிப்பாக இந்த பக்கம் வாருங்கள்... மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// Anonymous said...

psminaiyam.com
http://www.psminaiyam.com/
read and spread this to others
ihanks///

உங்களின் பகிர்வுக்கு நன்றிங்க...

tamiluthayam said...

நல்ல சிந்தனையுடன் வந்த கட்டுரை. எங்களையும் சிந்திக்க வைத்தது.

ஆ.ஞானசேகரன் said...

// tamiluthayam said...

நல்ல சிந்தனையுடன் வந்த கட்டுரை. எங்களையும் சிந்திக்க வைத்தது.//


மிக்க மகிழ்ச்சிங்க

Anonymous said...

[p]Once you go shopping for the foodstuff for your diet, quit a minute and look to determine in the event the food that you have deliberate on your meals, in accordance towards the very low carb weight loss plan information that you've, will help you inside long run or in case you will wind up feeling worse than you need to do now . Either [url=http://www.uggoutletssalesuk.co.uk]cheap ugg boots[/url] way, they make their boots to a very high standard . This is very important for sports . Surrounding people do detect your approaches to life by your apparel and footwear . To allow you to wear barefoot is our basic purpose of designing the sheepskin boots, because we really hope that you can enjoy the warm and comfort brought by our boots . In the 2003- 04 season led by captain Shawn McEachern, Ilya Kovalchuk scored [url=http://www.suggbootsclearanceuk.co.uk]cheap ugg boots clearance sale[/url] eight goals in the first seven games . It is both soft and warm . They use this advantage to design theMen Nike Shox OZ Shoes which are distinct in their own ways,these shoes include a few similar features with other nike shox shoes.[/p][p]Internet retailers offer [url=http://www.uggoutletssalesuk.co.uk]ugg boots outlet uk

[/url] these boots in a variety of styles, colors and different sizes . Into the new century, Decker company invested $ 8 million to advertise on the market, and part celebrity UGG 3352 Mini Bailey Button Boots Chestnut appreciation has added, demand for UGG snow boots began to surge . It really is for pointless past too far to indicate a lengthy limb . [url=http://www.suggbootsclearanceuk.co.uk]cheap ugg boots uk sale[/url] articlesnatch . almost always attempt to maintain probably [url=http://www.uggoutletssalesuk.co.uk]ugg boots sale[/url] the most suitable and calming shoes and which is actually none other than uggs . A healthy diet should comprise plenty [url=http://www.uggoutletssalesuk.co.uk]cheap ugg boots uk[/url] of fresh fruits and vegetable, foods that are full off fiber content buy ugg boots, and foods that can be high in Omega-3 fatty acids . The third is the particular height, while I like the shorter boot for within jeans, it isn't something that might look OK with anything else, and [url=http://www.suggbootsclearanceuk.co.uk]ugg boots clearance sale[/url] certainly looks goofy on it's own . Endless uggs boots discount lover choose classic tall ugg boots 5803

UGG boots are delicate footwear made from [url=http://www.uggoutletssalesuk.co.uk]ugg boots outlet[/url] luxurious sheepskin ugg boots outlet rather than leather.[/p]