_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, November 7, 2009

என்னையும் அழைத்த தொடர் விளையாட்டு.....

என்னையும் அழைத்த தொடர் விளையாட்டு....

எப்படியோ பதிவர்கள் சோர்வை போக்கும் விதமாக அவ்வப்பொழுது ஏதாவது ஒரு தொடர் விளையாட்டு வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பதிவர்களும் ஆர்வம் குறையாமல் கலந்துக்கொள்வது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. இதில்
எனக்கு இன்னும் கொஞ்சம் சிந்தனைகள் தூண்டும்படியாக இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணங்கள் உண்டு. அதே போல் ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் தலைப்புகள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. இருப்பினும் பலரின் பார்வையில் ஒரு தலைப்பின் கீழ் பார்க்கும்பொழுது அதுவும் சிறப்பாகதான் இருக்கு. முதலில் இப்படிப்பட்ட தொடரை தவிற்த்து விடலாம் என்ற எண்ணம் தோன்றினாலும் பலரின் கருத்துகளுடன் நம் கருத்து எப்படியிருக்கு என்ற ஆசைகளுடன் நானும் கலந்துக்கொள்கின்றேன்.

நண்பர் உழவன் (Uzhavan) உழவனின் உளறல்கள், வலையுலக தம்பி அன்பு மதி OPEN HEART யும் "தீபாவளி சிறப்பு பதிவு 2009" அழைப்பை கொடுத்துள்ளனர். இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும். எனக்கும் தீபாவளிக்கும் உள்ள தூரம் அதிகம் என்றே நினைக்கின்றேன். பொதுவாக திருவிழாக்களில் ஈடுப்பாடு இல்லாதவனாக இருக்கின்றேன் (தற்பொழுது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுடன் இருப்பதுண்டு). எனவே இங்கு கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பொய்யாகதான் பதில் சொல்லவேண்டி வரும். இருந்தாலும் சிலது உங்களுக்காக நான்ன்ன்ன்ன்ன்ன்......



1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஏதும் இல்லை. நான் நானாக வாழ்ந்துக்கொண்டுள்ள சாதாரணமானவன். திருச்சியிலிருந்து பிழைப்புக்காக சிங்கப்பூரில் வேலைசெய்துக்கொண்டுள்ளேன். பார்த்ததில் உணர்ந்ததில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இந்த வலைப்பூ.....

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
நினைவில் இருக்கும் அளவிற்கு எந்த ஈடுப்பாடும் இல்லை.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சிங்கப்பூரில்,

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
சிங்கப்பூர் அரசு தீபாவளி கொண்டாடும் விதமாக அரசு விடுமுறை அளித்துள்ளது. பட்டாசுகள் வெடிக்க அரசு தடையுள்ளது ஆனால் மத்தாப்பு மட்டும் கொழுத்தி மகிழலாம். இங்குள்ள ஒரு பகுதி குட்டி இந்தியா (Little India) தீபாவளி சிறப்புக்காக வண்ணத் தோரணங்கள், வண்ண விளக்குகளுடன் பார்க்க சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இந்த அளவிற்கு இந்திய பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது ஒரு மகிழ்ச்சியான விடயம்தான்.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
மன்னிக்கவும், அந்த அளவிற்கு ஈடுப்பாடு இல்லை.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
நண்பர் வீட்டில் கிடைத்த விருந்தில் பலகாரம் சாப்பிட்டேன்.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
ஈடுப்பாடு இல்லாததால் தவிற்த்துவிட்டேன்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல்நாள் இரவுப்பணி முடிந்ததும் மறுநாள் தூக்கம். முடிந்ததும் நண்பர் அழைப்பில் சிறிது உணவு......

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
வாய்ப்பு கிடைத்தால் செய்வதுண்டு.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
இப்படியே சென்றால் அடுத்த வருடம் தீபாவளி வந்துவிடும் எனவே என்னோடு முடித்துவிட்டேன்.

அடுத்த விளையாட்டுக்கு அழைத்திருப்பவர்கள்
தலைமை ஆசிரியை அருணா அன்புடன் அருணா அவர்களும் நம்ம டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி அவர்களும் பிடித்ததும் பிடிக்காததும் என்ற தலைப்பின் கீழ் அழைத்துள்ளனர். பிடிக்காதவர்களை சொல்லும் அளவிற்கு என்னிடம் துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு என்னிடம் புரிதலும் இல்லை என்று சொல்லிக்கொள்ள துணிச்சல் இருக்கு. இங்கு கொடுக்கப்பட்ட வினாக்கள் என்னை யோச்சிக்க வைக்கவில்லை. உண்மையில் எதைப்பற்றியும் சிந்தனை என்னிடம் முழுமையில்லை. நான் பார்த்த, உணர்ந்த விடயங்களை உங்களுடன் பகிந்துக்கொள்ளத்தான் இந்த வலைப்பூ தவிற என்னுடை திறமையை வெளிப்படுத்த இல்லை. இசை, இலக்கியம்,கலை போன்றதுறைகளில் வியாக்கியானம் சொல்லும் அளவிற்கு என்னிடம் ஆர்வமும் ஞானமும் இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே பிடித்தது பிடிக்காதது என்று சொல்லும் அளவிற்கு என்னால் செல்ல முடிவில்லை. இருந்தாலும் உங்களின் அன்பின் காரணமாக எல்லோரையும் போல பிடித்தவைகளை சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணங்களுடன் ஆ.ஞானசேகரன்.


1.அரசியல் தலைவர் : வம்பில் மாட்டிக்கொள்ள முடியாது...
கலைஞரிடம் பிடித்தது: தினம் ஒரு அறிக்கையிட்டு தொண்டர்களை அன்பில் கட்டிவைப்பது.
பிடிக்காதது: தினம் ஒரு அறிக்கையிட்டு மக்களை ஏமாற்றுவது.

செல்லி ஜெயலலிதாவிடம் பிடித்தது: அரசியலில் இருக்கும் மன உறுதி
பிடிக்காதது: மக்களுக்கு நல்லது செய்யும் வாய்ப்புகள் இருந்தும் செய்யாத உறுதி


2.எழுத்தாளர்:
எழுத்துக்களை பிடிக்கும், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு படிக்கவில்லை.

3.கவிஞர்:
மக்களைப்பற்றி சிந்தித்ததால் பட்டுக்கொட்டை கல்யாணசுந்தரம்.

4.இயக்குனர்:
பாக்கியராஜின் திரைக்கதை, இயக்கம் பற்றிய பாதிப்பு எனக்குண்டு.. அதன் வரிசையில் வரும் இயக்கங்கள் பிடிக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பதுண்டு. கமல் இயக்கிய விருமாண்டி பட இயக்கம் பாக்கியராஜ் பாதிப்பு இருப்பதாக தெரியும்.

5.நடிகர்:
பிடித்த படத்தில் நடித்த நடிகரை பிடிக்கும். பிடித்த படம் தனியாக சொல்லமுடியவில்லை.

6.நடிகை:
அழகான..........

7.இசையமைப்பாளர்:
பிடித்த இசை தாலாட்டு....... தாலாட்டு இசைப்பவர்

இந்த தொடர் அனேகமாக எல்லோரையும் அடைந்துவிட்டது. இருந்தாலும் ஒரு சிலரை அழைக்கலாம் என்ற எண்ணங்கள்

1.வானம் வெளித்த பின்னும் "ஹேமா".

2.உழவனின் உள்றல்கள் "உழவன்"

3.
Globetrotter "மலர்"

4.என் கனவில் தென்பட்டது "நசரேயன்"

5.பின்னோக்கி "பின்னோக்கி"


அன்புடன்
ஆ.ஞானசேகரன்
.

43 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா!

நீங்களும் போட்டாச்சா?

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா!

நீங்களும் போட்டாச்சா?//

ஆமாங்க.... அழைப்பிற்கு மரியாதைக்காக....

Anbu said...

நல்லா இருக்கு அண்ணே பதில்கள் அனைத்தும்..

ஹேமா said...

நன்றி ஞானம்.என்னைத் தொடர் வண்டி இழுக்கக் கூப்பிட்டதுக்கு.
ஏற்கனவே பா.ரா அண்ணா.
கார்த்திகைப் பாண்டியனும் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள்.சரி சரி.
விடமுடியுமா வந்ததை.அடுத்த உப்புமடச் சந்தியின் பதிவு தொடர்தான்.

உங்கள் கேள்வி பதில் போலவே என் பதிலும் உப்புச் சப்பில்லாமல்தான் இருக்கும்.சரி எல்லோரோடும் சேர்ந்தே ஒட வேண்டியிருக்கு.
என்றாலும் இரண்டையும் சேர்த்துக் கலக்கிட்டீங்க.

Suresh Kumar said...

அருமையான பதில்கள் ....... இரண்டாவது பதில்கள்ம கலக்கல்

ஆ.ஞானசேகரன் said...

// Anbu said...

நல்லா இருக்கு அண்ணே பதில்கள் அனைத்தும்..//


நன்றி தம்பி

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...

நன்றி ஞானம்.என்னைத் தொடர் வண்டி இழுக்கக் கூப்பிட்டதுக்கு.
ஏற்கனவே பா.ரா அண்ணா.
கார்த்திகைப் பாண்டியனும் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள்.சரி சரி.
விடமுடியுமா வந்ததை.அடுத்த உப்புமடச் சந்தியின் பதிவு தொடர்தான்.

உங்கள் கேள்வி பதில் போலவே என் பதிலும் உப்புச் சப்பில்லாமல்தான் இருக்கும்.சரி எல்லோரோடும் சேர்ந்தே ஒட வேண்டியிருக்கு.
என்றாலும் இரண்டையும் சேர்த்துக் கலக்கிட்டீங்க.//

எப்படியோ பதிவை போட்டுங்க ஹேமா...

ஆ.ஞானசேகரன் said...

//Suresh Kumar said...

அருமையான பதில்கள் ....... இரண்டாவது பதில்கள்ம கலக்கல்//


நன்றி நண்பா

நட்புடன் ஜமால் said...

எழுத்துக்களை பிடிக்கும், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு படிக்கவில்லை.]]

நேர்மை நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

எழுத்துக்களை பிடிக்கும், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு படிக்கவில்லை.]]

நேர்மை நண்பா...//

வணக்கம் நண்பா,... நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்ததில் மகிழ்ச்சி

Raju said...

இரண்டு பதிவையும் ஒரே நேரத்துல போட்ட உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

//♠ ராஜு ♠ said...

இரண்டு பதிவையும் ஒரே நேரத்துல போட்ட உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.//

உங்களின் பின்னூட்ட நேர்மை என்னை கவர்ந்தது நண்பா... நன்றி.

பின்னோக்கி said...

தங்களின் அழைப்புக்கு நன்றி. ஏற்கனவே பிடித்ததும் பிடிக்காததும் எழுதிவிட்டேன்.
http://pinnokki.blogspot.com/2009/11/blog-post_04.html

திருச்சி எனது சொந்த ஊர். நீங்கள் அங்கிருந்தவர் என்றறிவதில் மகிழ்ச்சி.

ஆ.ஞானசேகரன் said...

// பின்னோக்கி said...

தங்களின் அழைப்புக்கு நன்றி. ஏற்கனவே பிடித்ததும் பிடிக்காததும் எழுதிவிட்டேன்.
http://pinnokki.blogspot.com/2009/11/blog-post_04.html

திருச்சி எனது சொந்த ஊர். நீங்கள் அங்கிருந்தவர் என்றறிவதில் மகிழ்ச்சி.//

மிக்க மகிழ்ச்சி நண்பா,... நான் முன்பே படித்துவிட்டேன். இருந்தும் மறந்துவிட்டேன்... இருப்பினும் வாழ்த்துகள்

திருச்சியில் எந்தப்பக்கம் நீங்கள்

S.A. நவாஸுதீன் said...

2 இன் 1 கொடுத்துட்டீங்க நண்பா. இரண்டுமே அருமை

தேவன் மாயம் said...

அருமை!!! ஓட்டும் போட்டாச்சு!!!!!!!!!!

தேவன் மாயம் said...

ஏதாவது தொடருக்குக்கூப்பிட்டீர்களோ என்று ஓடி வந்தேன்!!

கலகலப்ரியா said...

:) easy a mudichitteenga..=).. v.good

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அழகு மற்றும் அதிரடி

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

2 இன் 1 கொடுத்துட்டீங்க நண்பா. இரண்டுமே அருமை//

வணக்கம்,.. மிக்க நன்றி நண்பா..

Admin said...

நல்ல பதில்கள் நண்பா....

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

அருமை!!! ஓட்டும் போட்டாச்சு!!!!!!!!!!


ஏதாவது தொடருக்குக்கூப்பிட்டீர்களோ என்று ஓடி வந்தேன்!!//


வாங்க சார் நீங்கள் கொடுத்த வேலையை சரியா செய்துட்டேனா?

ஆ.ஞானசேகரன் said...

// கலகலப்ரியா said...

:) easy a mudichitteenga..=).. v.good//


மிக்க நன்றிங்க ப்ரியா

ஆ.ஞானசேகரன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...

அழகு மற்றும் அதிரடி//


வணக்கம் டாக்டர் வருகைக்கும் அன்புக்கும் நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

நல்ல பதில்கள் நண்பா....//


நன்றிங்க சந்ரு

காமராஜ் said...

உங்கள் விருப்பங்கள் வித்தியாசமானதாகவும் தன்னடக்கம் உள்ளதாகவும் இருக்கிறது. வழ்த்துக்கள் நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜ் said...
உங்கள் விருப்பங்கள் வித்தியாசமானதாகவும் தன்னடக்கம் உள்ளதாகவும் இருக்கிறது. வழ்த்துக்கள் நண்பா.
//
மிக்க நன்றிங்க காமராஜ்... உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சி

பழமைபேசி said...

:-o)

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...
:-o)//



வணக்கம் நண்பா

ப்ரியமுடன் வசந்த் said...

ரசனையான தீபாவளி

ரசனையான பிடிமானங்கள்...

Muniappan Pakkangal said...

Nalla viruviruppaana pathivu Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
ரசனையான தீபாவளி

ரசனையான பிடிமானங்கள்...//


வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nalla viruviruppaana pathivu Gnanaseharan.
//


மிக்க நன்றி சார்...

பா.ராஜாராம் said...

//தலைமை ஆசிரியை அருணா அன்புடன் அருணா அவர்களும் நம்ம டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி அவர்களும் பிடித்ததும் பிடிக்காததும் என்ற தலைப்பின் கீழ் அழைத்துள்ளனர். பிடிக்காதவர்களை சொல்லும் அளவிற்கு என்னிடம் துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு என்னிடம் புரிதலும் இல்லை என்று சொல்லிக்கொள்ள துணிச்சல் இருக்கு. இங்கு கொடுக்கப்பட்ட வினாக்கள் என்னை யோச்சிக்க வைக்கவில்லை. உண்மையில் எதைப்பற்றியும் சிந்தனை என்னிடம் முழுமையில்லை. நான் பார்த்த, உணர்ந்த விடயங்களை உங்களுடன் பகிந்துக்கொள்ளத்தான் இந்த வலைப்பூ தவிற என்னுடை திறமையை வெளிப்படுத்த இல்லை. இசை, இலக்கியம்,கலை போன்றதுறைகளில் வியாக்கியானம் சொல்லும் அளவிற்கு என்னிடம் ஆர்வமும் ஞானமும் இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே பிடித்தது பிடிக்காதது என்று சொல்லும் அளவிற்கு என்னால் செல்ல முடிவில்லை. இருந்தாலும் உங்களின் அன்பின் காரணமாக எல்லோரையும் போல பிடித்தவைகளை சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணங்களுடன் ஆ.ஞானசேகரன்.//

மக்கா...மனசு நிறைகிறது.

ஆ.ஞானசேகரன் said...

[[ பா.ராஜாராம் said...

//தலைமை ஆசிரியை அருணா அன்புடன் அருணா அவர்களும் நம்ம டாக்டர் தேவன் மாயம் தமிழ்த்துளி அவர்களும் பிடித்ததும் பிடிக்காததும் என்ற தலைப்பின் கீழ் அழைத்துள்ளனர். பிடிக்காதவர்களை சொல்லும் அளவிற்கு என்னிடம் துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு என்னிடம் புரிதலும் இல்லை என்று சொல்லிக்கொள்ள துணிச்சல் இருக்கு. இங்கு கொடுக்கப்பட்ட வினாக்கள் என்னை யோச்சிக்க வைக்கவில்லை. உண்மையில் எதைப்பற்றியும் சிந்தனை என்னிடம் முழுமையில்லை. நான் பார்த்த, உணர்ந்த விடயங்களை உங்களுடன் பகிந்துக்கொள்ளத்தான் இந்த வலைப்பூ தவிற என்னுடை திறமையை வெளிப்படுத்த இல்லை. இசை, இலக்கியம்,கலை போன்றதுறைகளில் வியாக்கியானம் சொல்லும் அளவிற்கு என்னிடம் ஆர்வமும் ஞானமும் இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே பிடித்தது பிடிக்காதது என்று சொல்லும் அளவிற்கு என்னால் செல்ல முடிவில்லை. இருந்தாலும் உங்களின் அன்பின் காரணமாக எல்லோரையும் போல பிடித்தவைகளை சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணங்களுடன் ஆ.ஞானசேகரன்.//

மக்கா...மனசு நிறைகிறது.]]


மிக்க நன்றிங்க நண்பா... உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சி

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))))))

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))))))//


வணக்கம் கார்த்திகைப் பாண்டியன்

RAMYA said...

பதில்கள் அனைத்தும் யதார்த்தமா நேரில் பேசுவது போல் இருக்கு:)

ஆ.ஞானசேகரன் said...

// RAMYA said...

பதில்கள் அனைத்தும் யதார்த்தமா நேரில் பேசுவது போல் இருக்கு:)//

வணக்கம் ரம்யா,... நீண்ட இடைவெளிக்கு பின் பக்கம் வந்ததிற்கு நன்றிங்க... வேலை பழு அதிகம் என்று நினைக்கின்றேன்... சமயம் கிடைத்தால் வந்துவிட்டு செல்லுங்கள்

Anonymous said...

தெளிவான அடக்கமான பதில்கள்

ஆ.ஞானசேகரன் said...

[[தமிழரசி said...
தெளிவான அடக்கமான பதில்கள்]]


வாங்க தமிழ்... வந்திட்டிங்களா... மிக்க மகிழ்ச்சி

"உழவன்" "Uzhavan" said...

பிடித்தது பிடிக்காதது தொடருக்கும் ஒரு முற்றுப்புள்ளி வச்சிருக்கலாம்ல :-)
என்ன பழி வாங்கிட்டீங்க :-))))

ஆ.ஞானசேகரன் said...

// " உழவன் " " Uzhavan " said...
பிடித்தது பிடிக்காதது தொடருக்கும் ஒரு முற்றுப்புள்ளி வச்சிருக்கலாம்ல :-)
என்ன பழி வாங்கிட்டீங்க :-))))//


ம்ம்ம்.... உங்களைப் பற்றி நாங்களும் தெரிஞ்சுகுனுமுள்ள.... தொடருங்கள் தோழரே...