_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, November 15, 2009

படம் சொல்லும் கதைகள் எனது மற்றொரு பக்கம்

படம் சொல்லும் கதைகள் எனது மற்றொரு பக்கம்


" சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல... அதுபோல படங்கள் பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் சில செய்திகளையாவது சொல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி நான் பார்த்ததும் சுட்டப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று ஒரு ஆசையில் உருவான என் மற்றொரு பக்கம் கண்டதும் சுட்டதும்.

பிடித்திருந்தால் ஊக்கம் கொடுங்கள்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்...


43 comments:

ஹேமா said...

தங்கக் கலயம்போல
தொங்கும் மாதுளை
குழந்தைகள் தினத்திலாவது
கொஞ்சம் இ(ற)ரங்கி வாராதோ !

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

தங்கக் கலயம்போல
தொங்கும் மாதுளை
குழந்தைகள் தினத்திலாவது
கொஞ்சம் இ(ற)ரங்கி வாராதோ !//

வணக்கம் ஹேமா,...
மிக அருமையான ஆசை வரிகள்...

Anonymous said...

கண்டதும்.... சுட்டதும்

புதுமையாய்

இங்கே

தொடரட்டும்...மலரட்டும்
பூக்கள்-இந்த வெற்றி பூக்கள்

S.A. நவாஸுதீன் said...

தலையில் விஷயம் அதிகமுள்ளவர்கள் அனாவசிமாய் வாய் திறக்க மாட்டார்கள் என்பது போல் இருக்கிறது மாதுளை. அங்கேயும் பார்ப்போம் நண்பா!

இராகவன் நைஜிரியா said...

கண்டதும் சுட்டதும் அருமை...

மேலும், மேலும் எதிர்ப்பார்க்கின்றேன்.

கலகலப்ரியா said...

அழகா இருக்கு ஞானசேகரன்..! சிறு வயது ஞாபகங்களைத் தூண்டுகிறது படம்..!

cheena (சீனா) said...

அங்கு சென்று வாழ்த்தி விட்டு வந்தேன் - மறுபடியும் செல்கிறேன்

நல்வாழ்த்துகள் ஞானசேகரன்

தமிழ் said...

அருமையான படங்களின் தொகுப்பு

வாழ்த்துகள் நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

// கடையம் ஆனந்த் said...

கண்டதும்.... சுட்டதும்

புதுமையாய்

இங்கே

தொடரட்டும்...மலரட்டும்
பூக்கள்-இந்த வெற்றி பூக்கள்//

மிக்க நன்றி ஆனந்த்

ஆ.ஞானசேகரன் said...

//S.A. நவாஸுதீன் said...

தலையில் விஷயம் அதிகமுள்ளவர்கள் அனாவசிமாய் வாய் திறக்க மாட்டார்கள் என்பது போல் இருக்கிறது மாதுளை. அங்கேயும் பார்ப்போம் நண்பா!///

அருமையான கர்ப்பனை
மிக்க நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// இராகவன் நைஜிரியா said...

கண்டதும் சுட்டதும் அருமை...

மேலும், மேலும் எதிர்ப்பார்க்கின்றேன்.//

வணக்கம் நண்பா,... உங்களின் ஊக்கம் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் பயனை கொடுக்கின்றது... நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// கலகலப்ரியா said...

அழகா இருக்கு ஞானசேகரன்..! சிறு வயது ஞாபகங்களைத் தூண்டுகிறது படம்..!//

வாங்க ப்ரியா...
நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

அங்கு சென்று வாழ்த்தி விட்டு வந்தேன் - மறுபடியும் செல்கிறேன்

நல்வாழ்த்துகள் ஞானசேகரன்//

உங்களை போன்றவர்களின் வாழ்த்து கிடைக்க பேருபெற்றேன்... மிக்க நன்றி ஐயா..

ஆ.ஞானசேகரன் said...

// திகழ் said...

அருமையான படங்களின் தொகுப்பு

வாழ்த்துகள் நண்பரே//

வணக்கம் நண்பா,.. மிக்க நன்றிங்க

தேவன் மாயம்! said...

மிக அழகான படம்!! இப்போது மாதுளை மரங்களைக் காண இயலவில்லை!!

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம்! said...

மிக அழகான படம்!! இப்போது மாதுளை மரங்களைக் காண இயலவில்லை!!//

மிக்க நன்றி தேவன் சார்..

வினோத் கெளதம் said...

ரைட்டு போய் பார்கிறேன் தல..

ஆ.ஞானசேகரன் said...

// வினோத்கெளதம் said...

ரைட்டு போய் பார்கிறேன் தல..//

பார்த்துட்டு சொல்லுங்க நண்பா

RAMYA said...

தொகுப்பு அருமை ஞானசேகரன் !!

மேலே மேலே தொடர வாழ்த்துக்கள்!!

ஆ.ஞானசேகரன் said...

// RAMYA said...

தொகுப்பு அருமை ஞானசேகரன் !!

மேலே மேலே தொடர வாழ்த்துக்கள்!!//

வணக்கம் ரம்யா,.. மிக்க நன்றிங்க..
நேரம் இருக்கும்போது வந்துசெல்லுங்கள்..

பா.ராஜாராம் said...

அருமையான தொகுப்பு சேகர்.வாழ்த்துக்கள்!

Admin said...

படங்கள் அருமை தொடருங்கள் நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

// பா.ராஜாராம் said...

அருமையான தொகுப்பு சேகர்.வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

படங்கள் அருமை தொடருங்கள் நண்பா.//


வணக்கம் சந்ரு,
மிக்க நன்றிபா...

முனைவர் இரா.குணசீலன் said...

இயற்கையின் விந்தை..

முனைவர் இரா.குணசீலன் said...

அழகான நிழற்படம்...
தொடருங்கள் நண்பரே..

மாதேவி said...

படமும் அருமை. பழமும் அருமை. தொடரட்டும் படங்களின் தொகுப்பு.

ஆ.ஞானசேகரன் said...

// முனைவர்.இரா.குணசீலன் said...

இயற்கையின் விந்தை..//

உண்மைதான் நண்பா..

//அழகான நிழற்படம்...
தொடருங்கள் நண்பரே..//

மிக்க நன்றி... உங்களின் ஊக்கம் எனக்கு மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

//மாதேவி said...

படமும் அருமை. பழமும் அருமை. தொடரட்டும் படங்களின் தொகுப்பு.//

வணக்கம் உங்களின் முதல் வருகை.... உங்களின் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிங்க..

Suresh Kumar said...

அருமை நண்பா தொடருங்கள்

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

அருமை நண்பா தொடருங்கள்//

மிக்க நன்றிபா....

S.Gnanasekar said...

எங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள மாதுளைம் பழத்தை அணில் எடுத்து வந்து உங்கள் இடுகையில் பதிவு செய்துள்ளது என்று நினைக்கிறேன்..

சோ.ஞானசேகர்..

ஆ.ஞானசேகரன் said...

// S.Gnanasekar said...

எங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள மாதுளைம் பழத்தை அணில் எடுத்து வந்து உங்கள் இடுகையில் பதிவு செய்துள்ளது என்று நினைக்கிறேன்..

சோ.ஞானசேகர்..//

ஆகா... அழகா சொல்லிவிட்டீர்கள் அய்யா....
மிக்க நன்றிங்க

அன்புடன் அருணா said...

பார்த்தாச்சு....மற்றொரு பக்கம்!

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
பார்த்தாச்சு....மற்றொரு பக்கம்!//



வருகைக்கு மிக்க நன்றிங்க‌

ராமலக்ஷ்மி said...

கண்டதும் சுட்டிடுங்கள்.
சுட்டதும் பகிர்ந்திடுங்கள்:)!

வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...
கண்டதும் சுட்டிடுங்கள்.
சுட்டதும் பகிர்ந்திடுங்கள்:)!

வாழ்த்துக்கள்!//



மிக்க நன்றிங்க..

பின்னோக்கி said...

நல்லாயிருக்கு..தொடருங்க..

அன்புடன் நான் said...

கண்டதும் சுட்டதும் .... தலைப்பு நெஞ்சை தொட்டது.....வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// பின்னோக்கி said...
நல்லாயிருக்கு..தொடருங்க..//


மிக்க நன்றி நண்பா,... தொடர்வோம்..

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
கண்டதும் சுட்டதும் .... தலைப்பு நெஞ்சை தொட்டது.....வாழ்த்துக்கள்.//


வாங்க சி.கருணாகரசு,... உங்களின் வாழ்த்துதழுக்கு அன்பின் நன்றிகள்

ரோஸ்விக் said...

காவல்துறையில் உபயோகிக்கும் "கண்டதும் சுட உத்தரவு" நினைவுக்கு வருகிறது....
அந்த உத்தரவை அன்பாக உங்களுக்கு இடுகிறேன் :-)

மொட்டவிழ்ந்த மாதுளை என யார் உரக்கக் கூறினார்களோ தெரியவில்லை...அவள் கன்னம் கடுமையாகத்தான் சிவந்து போய் இருக்கிறது...:-))
கவிதையாக எழுத நினைத்தேன்...கொஞ்சம் விரசம் கூடிப்போகிறது...அதனால இப்ப வேணாம்...

ஆ.ஞானசேகரன் said...

//ரோஸ்விக் said...
காவல்துறையில் உபயோகிக்கும் "கண்டதும் சுட உத்தரவு" நினைவுக்கு வருகிறது....
அந்த உத்தரவை அன்பாக உங்களுக்கு இடுகிறேன் :-)

மொட்டவிழ்ந்த மாதுளை என யார் உரக்கக் கூறினார்களோ தெரியவில்லை...அவள் கன்னம் கடுமையாகத்தான் சிவந்து போய் இருக்கிறது...:-))
கவிதையாக எழுத நினைத்தேன்...கொஞ்சம் விரசம் கூடிப்போகிறது...அதனால இப்ப வேணாம்...//


வாஙக ரோஸ்விக்,... மிக்க நன்றிஙக.. மாதுளை கவிதையும் ரொம்ப அழகாக இருக்கு பாராட்டுகள்.. உங்கள் அன்பு உத்தரவை ஏற்கின்றேன்.