_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, January 28, 2010

ஏன்? எதற்கு? எப்படி?..... 10

ஏன்? எதற்கு? எப்படி?..... 10

பல் போனால் சொல் போச்சுனு சொல்லுவாங்க, ஆமாம் "சொல்லுனா" என்னாங்க? வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாமா!.... தமிழ் இலக்கணத்தில் சொல் என்பதை "ஒரு பொருளை கூறும் மொழிக்கூறு" என்று சொல்லுவதுண்டு. அதேபோல் சொல் என்பது ஒரு ஒலி வடிவம். இந்த ஒலி வடிவம் வாய்வழியில் உருவாகி காதுகளால் உணரப்படுகின்றது. அப்படியானால் மொழி என்பது என்ன? ஒலியையும் சைகைகளையும் மூலகூறுகளாக கொண்ட இலக்கணங்கள் அடங்கிய சொற்களை மொழி என்று கூறலாம்.

ஒலி என்பதை விஞ்ஞானம் எப்படி அழைக்கின்றது? ஒலி என்பது காதுகளால் கேட்டு உணரகூடிய அதிர்வுகளை குறிக்கும். அதாவது ஒலி என்பதை அழுத்தம் மாற்றம், துகள் நகர்வு அல்லது துகள்களின் திசை வேகம் என்று கூறலாம்.

ஒலி எவ்வாறு கடத்தப்படுகின்றது அல்லது பரவுகின்றது? ஒலி அலைகளாக கடக்கின்றது. அதாவது எல்லாத்திசைகளிலும் சரியான விகிதத்தில் அலைகளாக பரவுகின்றது. அந்த அலையில் வேகம் மற்றும் அதிர்வெண்ணை பொருத்து தூரம் கடக்கின்றது. ஒலி பரவ ஊடகம் தேவை, காற்று மற்றும் வாயுக்களில் நெட்டலைகளாக ஒலி பரவுகின்றது. சில உலோகம் மற்றும் திடப்பொருள்களிலும் பரவும் ஆனால் பொருளின் தன்மைகேற்ப அதன் வேகம் குறையும் (உதாரணமாக கண்ணாடியில் ஒலியின் வேகம் குறைவு). வெற்றிடத்தில் ஒலி அலைகள் பரவாது. ஆனால் மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஈரக்காற்றில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்.

ஒலி எவ்வாறு உருவாகின்றது? பொருள் அதிவுருவதால் ஒலி உண்டாகின்றது. முறுக்கப்பட்ட கம்பியில் உண்டாக்கப்படும் அதிர்வுகளால் வீணை மற்றும் வயலினில் ஒலி உருவாகின்றது. காற்று மூலகூறுகளில் அதிர்வால் புல்லாங்குழலில் ஒலி உருவாகின்றது. முறுக்கப்பட்ட கம்பி அதிர்வுகளை கைகளால் கட்டுப்படுத்தி இசையாக வெளியாகின்றது. காற்றின் அதிர்வை பூல்லாங்குழலின் துளைகளை கட்டுப்படுத்தப்பட்டு நாதம் உருவாக்கப்படுகின்றது.

நாம் எவ்வாறு ஒலி எழுப்பி பேசுகின்றோம்? மனிதன் தன் குரல்வளை மூலம் ஒலி எழுப்புக்கின்றான். நுரையீரல்களிலிருந்து வரும் காற்றின் உதவியால் குரல்வளையில் உள்ள உள்நாக்கு அதிர்வடைந்து ஒலி உருவாகின்றது. அந்த ஒலி நாக்கு, உதடு, பல், வாய், தொண்டை குழி அகியவற்றின் அதிர்வளைகளால் ஒலி மாற்றம் அடைந்து சொல்லாக மொழியாக வெளிவருகின்றது. இப்படிப்பட்ட ஒலி அதிர்வைதான் சொல் என்கின்றோம். இலக்கணவரையறுக்கப்பட்ட சொல்லை மொழி என்று சொல்லுகின்றோம். மொழியானது உயிர் மற்றும் மெய்யொலிகளால் உருவாகின்றது. இவ்வாறு ஒலி சொல்லாக மாறுவதை ஒலிமாற்றம் என்று அழைக்கப்படுகின்றது.


குரல்வளையால் உருவாக்கிய ஒலி மற்றும் சொல்லை நாம் எவ்வாறு உணருகின்றோம்? அதாவது எப்படி கேட்கின்றோம்? காதுகளால் உணரப்படுகின்றது. பாலுட்டிகளுக்கு பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு காதுகள் உள்ளது. காதினுல் இருக்கும் திரவ குடத்தில் மிதக்கும் சுருள் போன்ற அமைப்புதான் குரல்வளையில் உருவாக்கப்பட்ட ஒலி அதிர்வுகளை உணர்ந்து அதன் ஒத்த அதிர்வுகளை மூளைக்கு அனுப்பி அதன் அதிர்வுகளை சொல்லாக மொழியாக நமக்கு மூளை உணர்த்துகின்றது.

இப்படிப்பட்ட ஒலி அதிர்வுகள்தான் நம்முடைய தொடர்பிற்கு மிகவும் பயனாக இருக்கின்றது. ஒலியின் அதிர்வுக்கு தகுந்த எழுத்துகளை உருவாக்கி எழுத்துகள் மூலமாகவும் செய்திகளை தொடர்புக்கொள்கின்றோம். மொழி என்பது தொடர்பிற்கு மட்டும் இல்லாது கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் ஊடகமாகவும் இருக்கு என்பதும் உண்மை.

மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........


இன்னும் செய்திகளுடன்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

36 comments:

கோவி.கண்ணன் said...

//மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........//

தகவல்களும் கடைசியாக சொல்லி இருப்பதும் அருமை

ஆ.ஞானசேகரன் said...

[[ கோவி.கண்ணன் said...

//மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........//

தகவல்களும் கடைசியாக சொல்லி இருப்பதும் அருமை]]

வணக்கம் கண்ணன்
மிக்க நன்றிங்க

S.A. நவாஸுதீன் said...

நண்பா!

ஆகா! எவ்வளவு எளிமையாக விளக்கியுள்ளீர்கள!

அருமை. வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

நண்பா!

ஆகா! எவ்வளவு எளிமையாக விளக்கியுள்ளீர்கள!

அருமை. வாழ்த்துக்கள்.//

வணக்கம் நண்பா,
உங்கள் அன்புக்கு நன்றி

priyamudanprabu said...

மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........
///

நச்

தகவல் பகிர்வுக்கு நன்றி

தாரணி பிரியா said...

ஒலியில இத்தனை விசயங்களா/ பகிர்ந்ததுக்கு நன்றி ஞானசேகர்

பின்னோக்கி said...

பல தெரியாத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல கட்டுரை.

ஆ.ஞானசேகரன் said...

[[ பிரியமுடன் பிரபு said...
மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........
///

நச்

தகவல் பகிர்வுக்கு நன்றி]]

வாங்க பிரபு நன்றிங்க‌

ஆ.ஞானசேகரன் said...

[[ தாரணி பிரியா said...
ஒலியில இத்தனை விசயங்களா/ பகிர்ந்ததுக்கு நன்றி ஞானசேகர்]]


மகிழ்ச்சியும் நன்றியும் ப்ரியா

ஆ.ஞானசேகரன் said...

[[பின்னோக்கி said...
பல தெரியாத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல கட்டுரை.
]]


மிக்க மகிழ்ச்சி நன்றிங்க‌

ஹேமா said...

//மனிதன் தன் குரல்வளை மூலம் ஒலி எழுப்புக்கின்றான். நுரையீரல்களிலிருந்து வரும் காற்றின் உதவியால் குரல்வளையில் உள்ள உள்நாக்கு அதிர்வடைந்து ஒலி உருவாகின்றது. அந்த ஒலி நாக்கு, உதடு, பல், வாய், தொண்டை குழி அகியவற்றின் அதிர்வளைகளால் ஒலி மாற்றம் அடைந்து சொல்லாக மொழியாக வெளிவருகின்றது. இப்படிப்பட்ட ஒலி அதிர்வைதான் சொல் என்கின்றோம்.//

புரிந்துகொள்ளும்படியான விளக்கம்.நன்றி ஞானம்.

ஆ.ஞானசேகரன் said...

[[ஹேமா said...
//மனிதன் தன் குரல்வளை மூலம் ஒலி எழுப்புக்கின்றான். நுரையீரல்களிலிருந்து வரும் காற்றின் உதவியால் குரல்வளையில் உள்ள உள்நாக்கு அதிர்வடைந்து ஒலி உருவாகின்றது. அந்த ஒலி நாக்கு, உதடு, பல், வாய், தொண்டை குழி அகியவற்றின் அதிர்வளைகளால் ஒலி மாற்றம் அடைந்து சொல்லாக மொழியாக வெளிவருகின்றது. இப்படிப்பட்ட ஒலி அதிர்வைதான் சொல் என்கின்றோம்.//

புரிந்துகொள்ளும்படியான விளக்கம்.நன்றி ஞானம்.
]]


வாங்க ஹேமா,.. மகிழ்ச்சிங்க‌

jothi said...

முதல் எழுத்திலிருந்து கடைசி வரை அமர்க்களம்,..

தரமான பதிவு

ஆ.ஞானசேகரன் said...

//jothi said...
முதல் எழுத்திலிருந்து கடைசி வரை அமர்க்களம்,..

தரமான பதிவு
//
வாருங்கள் ஜோதி மிக்க நன்றிங்க‌

ரோஸ்விக் said...

சொல்லால் அடித்த சுந்தரா... என பாடலாமா?? :-)) சொல்லச் சொல்ல இனிக்குதடா ... என பாடலாமா??

நல்ல விளக்கங்கள். :-)

ஆ.ஞானசேகரன் said...

[[ரோஸ்விக் said...
சொல்லால் அடித்த சுந்தரா... என பாடலாமா?? :-)) சொல்லச் சொல்ல இனிக்குதடா ... என பாடலாமா??

நல்ல விளக்கங்கள். :-)]]

சொல்லத் தெரியவில்லை நண்பா,..
உங்களின் வ்ருகை மிக்க மகிழ்ச்சி நண்பா

CorTexT (Old) said...

//ஒலி என்பதை விஞ்ஞானம் எப்படி அழைக்கின்றது? ஒலி என்பது காதுகளால் கேட்டு உணரகூடிய அதிர்வுகளை குறிக்கும். அதாவது ஒலி என்பதை அழுத்தம் மாற்றம், துகள் நகர்வு அல்லது துகள்களின் திசை வேகம் என்று கூறலாம்.//

ஒலி என்பது அதிர்வு ஆற்றலை (ஒரு பொருள் அதிர்வதால் நிகழ்வது) ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திருக்கு காற்று போன்ற ஊடகங்கள் மூலமாக நிகழ்வது. இதில் ஊடக துகள்கள் நகருவதில்லை, ஆற்றல் மட்டுமே நகருகின்றது. இந்த ஒலி-அதிர்வுகளை காது, ஒலிவாங்கி (microphone) போன்றவை மின்-அதிர்வுகளாக மாற்றி தருகின்றன. கேட்பது என்பது மூளையில் நடக்கின்றது. மொத்ததில் சத்தம் வெளி-உலகில் இல்லை, அது நம் மூளை உருவாக்கிய உள்-உலகில் (மனம்) மட்டுமே உண்டு.

//ஒலி பரவ ஊடகம் தேவை, காற்று மற்றும் வாயுக்களில் நெட்டலைகளாக ஒலி பரவுகின்றது. சில உலோகம் மற்றும் திடப்பொருள்களிலும் பரவும்//

உதாரணம் ஒன்று: ஏரியில் அக்கரையில் துணி துவைக்கும் போது ஏற்படும் சத்தம் இரண்டு முறை கேட்கும் (எதிரொலி அல்ல). இது ஒலி அலை இருவேறு ஊடகங்கள் (காற்று மற்றும் நீர்) மூலமாக வெவ்வேறு வேகத்தில் நம் காதை அடைவதால் நிகழ்கின்றது (ஒலி நீரில் காற்றை விட நான்கு மடங்கு வேகமாக செல்லும். அதனால் தான் ஈரக்காற்றில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்).

//வெற்றிடத்தில் ஒலி அலைகள் பரவாது. ஆனால் மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும்.//

முன்பே கூறியது போல் ஒலி என்பது மற்ற ஊடக துகள்களை கொண்டு அதிர்வு-ஆற்றல் பரவுவது. ஆனால், ஒளி (மின்காந்த அலை) என்பது ஃபோட்டான் (photon) எனப்படும் ஒளி துகள்களே பரவுவது. ஓளி சில அலை-பண்புகளை கொண்டிருந்தாலும் (உலகிலுள்ள எல்லா பொருட்களுக்கும் அது உண்டு; நம்மையும் சேர்த்து) அது முற்றிலும் வேறுபட்ட ஒரு அடிப்படை துகள்.

//மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........//

இவையெல்லாம் அழகாக உள்ளது போலுள்ள, தவறான, மிகைபடுத்த பட்ட வார்த்தைகள் (தமிழ் மொழியை அப்படி பயன்படுத்தி விட்டோம்; அது அறிவியல் எழுதும் போதும் போக மறுக்கின்றது!). மொழி என்பது மனித கலாச்சாரத்தில் ஒரு பகுதி. மொழியின்றி வாழ்வு உண்டு; அப்படியே கோடானகோடி உயிரினங்கள் வாழ்கின்றன. மொழி என்பது நமது உணர்வு அல்ல; அம்மா, மொழி, தாய்மொழி, வாழைப்பழம், துர்நாற்றம், நறுமனம், எதிரி, இந்தியா, இங்கிலாந்து போன்ற அனைத்தும் நம்முள் வெவ்வேறு வகையான உணர்வுகளை ஏற்படுத்தலாம். மொழியிழந்தவன் வாழ்வின் ஒரு முக்கிய திறமையை இழக்கின்றான்; தன்னையே இழப்பதில்லை. நம் சுயநினைவை இழக்கும் போது கூட (Coma) அப்படி சொல்லலாமா என தெரியவில்லை.

ஆ.ஞானசேகரன் said...

[[ RajK said...
//ஒலி என்பதை விஞ்ஞானம் எப்படி அழைக்கின்றது? ஒலி என்பது காதுகளால் கேட்டு உணரகூடிய அதிர்வுகளை குறிக்கும். அதாவது ஒலி என்பதை அழுத்தம் மாற்றம், துகள் நகர்வு அல்லது துகள்களின் திசை வேகம் என்று கூறலாம்.//

ஒலி என்பது அதிர்வு ஆற்றலை (ஒரு பொருள் அதிர்வதால் நிகழ்வது) ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திருக்கு காற்று போன்ற ஊடகங்கள் மூலமாக நிகழ்வது. இதில் ஊடக துகள்கள் நகருவதில்லை, ஆற்றல் மட்டுமே நகருகின்றது. இந்த ஒலி-அதிர்வுகளை காது, ஒலிவாங்கி (microphone) போன்றவை மின்-அதிர்வுகளாக மாற்றி தருகின்றன. கேட்பது என்பது மூளையில் நடக்கின்றது. மொத்ததில் சத்தம் வெளி-உலகில் இல்லை, அது நம் மூளை உருவாக்கிய உள்-உலகில் (மனம்) மட்டுமே உண்டு.]]........>>>>>>>>>>>>>

நல்ல தெளிவான விளக்கத்திற்கு நன்றி ராஜ்....

[[//மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........//

இவையெல்லாம் அழகாக உள்ளது போலுள்ள, தவறான, மிகைபடுத்த பட்ட வார்த்தைகள் ]]


மிகைப்படுத்தியவை என்றாலும் தேவை என்றே தொன்றுகின்றது.

RAMYA said...

புதுமையான இடுகை, ஆராய்ச்சியும் படங்களும் அதன் விளக்கமும் அருமை.

RAMYA said...

//
மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........
//

அழகு வார்த்தைகள் கொண்ட வரிகள்
உணமைதான் நீங்கள் கூறி இருப்பது.

CorTexT (Old) said...

//மிகைப்படுத்தியவை என்றாலும் தேவை என்றே தொன்றுகின்றது.//

இப்படி மிகைப்படுத்தியே, தமிழ் எழுத்துகளில் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் போனது. வார்த்தைகளுக்காவும் அதன் அர்த்தங்களுக்காவும் போர்களே நிகழ்துள்ளன. மொழி பெயர்ப்பில் இடம்பெயர்ந்த ஒரு சிறு வார்த்தையால் கன்னி ஒருவள் குழந்தை பெற்றதாக இன்று கோடானகோடி மக்கள் நம்பிக்கொண்டுள்ளனர்.

மெய்ம்மை கட்டுக்கதைகளை
விடவும் வித்தியாசமானது!
நிதர்சனம் கற்பனைகளை
விடவும் அற்புதமானது!
உண்மை மிகைப்படுத்தலை
விடவும் அழகானது!
அதில் மூழ்கி முத்தெடுக்க...
உனக்கெதும் தடையுள்ளதோ?

குடந்தை அன்புமணி said...

நல்ல இடுகை.தங்களின் தேடலுக்கு வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// RAMYA said...

புதுமையான இடுகை, ஆராய்ச்சியும் படங்களும் அதன் விளக்கமும் அருமை.//


மிக்க நன்றிங்க ரம்யா

ஆ.ஞானசேகரன் said...

[[RajK said...

//மிகைப்படுத்தியவை என்றாலும் தேவை என்றே தொன்றுகின்றது.//

இப்படி மிகைப்படுத்தியே, தமிழ் எழுத்துகளில் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் போனது. வார்த்தைகளுக்காவும் அதன் அர்த்தங்களுக்காவும் போர்களே நிகழ்துள்ளன. மொழி பெயர்ப்பில் இடம்பெயர்ந்த ஒரு சிறு வார்த்தையால் கன்னி ஒருவள் குழந்தை பெற்றதாக இன்று கோடானகோடி மக்கள் நம்பிக்கொண்டுள்ளனர்.

மெய்ம்மை கட்டுக்கதைகளை
விடவும் வித்தியாசமானது!
நிதர்சனம் கற்பனைகளை
விடவும் அற்புதமானது!
உண்மை மிகைப்படுத்தலை
விடவும் அழகானது!
அதில் மூழ்கி முத்தெடுக்க...
உனக்கெதும் தடையுள்ளதோ?]]

நீங்கள் சொல்வது உண்மையானாலும்... மொழியும் அதன் மேல் உள்ள காதலும் மெய்யானதே.. மொழி ஒரு தொடர்பியல் கரு என்பதை விட அது ஒரு சமுகம் சார்ந்த கலவையாக உள்ளது. எனவேதான் மொழியை இழந்தால் தன்னையே மற்றும் தன் சமுகத்லிருந்து விடுப்பட்டவனாவான்..

உங்களின் கருத்துரைக்கும் நன்றி ராஜ்

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

நல்ல இடுகை.தங்களின் தேடலுக்கு வாழ்த்துகள்.//

வணக்கம் அன்புமணி
மிக்க நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

நல்ல படங்களுடனான செய்திகள். இதுபோன்று நிறைய எழுதுங்கள் நண்பா.
 
//மொழி என்பது நமது வாழ்வாதாரம்//
 
யாரைச் சொல்லுறீங்க? பிளாக்கர்ஸ்யா? அல்லது அரசில்வாதியவா? :-))

ஆ.ஞானசேகரன் said...

[[ " உழவன் " " Uzhavan " said...
நல்ல படங்களுடனான செய்திகள். இதுபோன்று நிறைய எழுதுங்கள் நண்பா.

//மொழி என்பது நமது வாழ்வாதாரம்//

யாரைச் சொல்லுறீங்க? பிளாக்கர்ஸ்யா? அல்லது அரசில்வாதியவா? :-))]]


வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க இருவரையும் சொல்லலாம் என்றே நினைக்கின்றேன்..

காமராஜ் said...

ஆஹா,ரொம்ப போரடிச்ச பிசிக்ஸ் பாடத்த எப்படி அழகா ஒரு இலக்கியமா மாற்றூரு கொடுத்துவிட்டீர்கள் ஞானசேகரன்.எவ்வளவு கேட்கப்படாத செய்திகள் கிடக்கிறது.அற்புதம் இந்த வலையுலகம். இது மிகப்பெரிய திண்ணை சுவார்ஸ்ய,விஞ்ஞானபூர்வத் திண்ணை.
நலமா என் அன்புத்தோழா.
மனது கஷ்டமாக இருக்கிறது எவ்வளவு காலம்....ம்ம்.

வலசு - வேலணை said...

//
சொல்லுனா" என்னாங்க? வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாமா!....
//

உங்கள் கருத்துடன் முரண்படுகிறேன் ஞானம். வரையறுக்கப்பட்ட பல ஒலிகளை நாங்கள் எழுத்துவடிவினில் அடக்க முடியாது. உதாரணத்திற்கு மாடு கலைக்க சில வகையான ஒலிக்குறிப்புகளைப் பயன்படுத்துவார்கள். அதனை எனக்குத் தெரிந்த வரையில் தமிழிலோ அன்றி ஆங்கிலத்திலோ எழுத முடியாது.
எனவே சொல் என்பது எழுத்து வடிவில் மாற்றப்படக்கூடிய வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாம் என்பது எனது கருத்து

ஆ.ஞானசேகரன் said...

[[காமராஜ் said...

ஆஹா,ரொம்ப போரடிச்ச பிசிக்ஸ் பாடத்த எப்படி அழகா ஒரு இலக்கியமா மாற்றூரு கொடுத்துவிட்டீர்கள் ஞானசேகரன்.எவ்வளவு கேட்கப்படாத செய்திகள் கிடக்கிறது.அற்புதம் இந்த வலையுலகம். இது மிகப்பெரிய திண்ணை சுவார்ஸ்ய,விஞ்ஞானபூர்வத் திண்ணை.
நலமா என் அன்புத்தோழா.
மனது கஷ்டமாக இருக்கிறது எவ்வளவு காலம்....ம்ம்.]]

வணக்கம் தோழரே!
உங்களின் வருகையே ஒரு ஆணந்தமே.... அடிக்கடி வந்து செல்லுங்கள் மனதிற்கு தெம்பை தருகின்றது நன்றி தோழரே!

ஆ.ஞானசேகரன் said...

[[ வலசு - வேலணை said...

//
சொல்லுனா" என்னாங்க? வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாமா!....
//

உங்கள் கருத்துடன் முரண்படுகிறேன் ஞானம். வரையறுக்கப்பட்ட பல ஒலிகளை நாங்கள் எழுத்துவடிவினில் அடக்க முடியாது. உதாரணத்திற்கு மாடு கலைக்க சில வகையான ஒலிக்குறிப்புகளைப் பயன்படுத்துவார்கள். அதனை எனக்குத் தெரிந்த வரையில் தமிழிலோ அன்றி ஆங்கிலத்திலோ எழுத முடியாது.
எனவே சொல் என்பது எழுத்து வடிவில் மாற்றப்படக்கூடிய வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாம் என்பது எனது கருத்து]]


வாங்க நண்பா நலமா?
நீங்கள் சொல்வதிலும் உடன் படுகின்றேன். வரையறுக்கப்பட்ட என்றாலே எழுத்து வடிவம் கொடுக்க முடியும் என்ற பொருளைதான் நினைக்கின்றேன். அதில் தமிழுக்கு தனி சிறப்பு இருப்பதையும் உணர்கின்றேன்.

மிக்க நன்றி நண்பா..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........//

மொழி ஒன்றும் உயிர் இல்லேங்க.. அது சும்மா நம் கருத்தை வெளிப்படுத்த உதவும் கருவி தான்.. ஹீம்ம்ம் ..

ஆ.ஞானசேகரன் said...

[[குறை ஒன்றும் இல்லை !!! said...
//மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........//

மொழி ஒன்றும் உயிர் இல்லேங்க.. அது சும்மா நம் கருத்தை வெளிப்படுத்த உதவும் கருவி தான்.. ஹீம்ம்ம் ..]]

வணக்கம் நண்பா,... மொழியை சும்மானு நினைத்தால் அது சும்மாதான்.... அது ஒரு காற்றுனு நினைத்தால் காற்றுதான்.... ஆனால் அப்படியில்லங்க காற்றின் அதிர்வுதான் மொழியாகின்றது..... மொழி என்பது உயிரும் மெய்யும் கலந்தது. உணர்ந்தவருக்கு உண்மை உணரமுடியாதவருக்கு மொழியும் ஒரு சும்மாதான்,.... உங்களின் கருத்துரைக்கும் நன்றி நண்பா,....

S.Gnanasekar said...

மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........

மொழிக்கு அருமையான விளக்கம்

நன்பர் ஞானசேகரன் அவர்களே..

ஆ.ஞானசேகரன் said...

[[ S.Gnanasekar said...
மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........

மொழிக்கு அருமையான விளக்கம்

நன்பர் ஞானசேகரன் அவர்களே..
]]

மகிழ்ச்சியும் நன்றியும் ....

உமா said...

ஆஹா நல்ல நல்லப் பதிவுகளையெல்லாம் படிக்காமப் போயிட்டேனே.
நல்லப் பதிவு.
வாழ்த்துக்கள்.
உமா.