மனிதன் கவுளை சார்ந்து வாழப் பழகிக்கொண்டானா? இல்லை கடவுள் மனிதனை சார்ந்துள்ளதா? இதன் பதில்கள் இன்னும் தெளிவடையாமலே இருக்கின்றது. பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற சமய நூல்களும் அறநூல்களும் மனிதனை நெறிப்படுத்த தொகுக்கப்பட்டவைகள்தான்.
ஒருவனுக்கு நல்ல வெளிநாட்டு நிருவணத்தில் வேலைக்கிடைக்கின்றது. அதன் மகிழ்ச்சியை வணங்கிய இறைவனிடம் பகிர்ந்துக்கொள்கின்றான். "சர்வ வல்லமைப்படைத்த இறைவா எனக்கு கணனி பற்றிய அறிவும் எனக்கில்லை, வேலையை பற்றிய அனுபவமும் எனக்கில்லை இருந்தாலும் இந்த வேலை எனக்கு கிடைக்கும் என்று உம்மையையே நம்பியிருந்தேன். எனது நம்பிக்கையும் உன் ஆசிர்வாதமும் இருந்ததால் அந்த வேலை எனக்கே கிடைத்தது" என்று சொல்லி நன்றியை கடவுளிடம் ஆணந்த கண்ணீருடன் சொல்லியுள்ளான். ஆம் கடவுளின் கருணையிருந்தால் எல்லாம் நடக்கும்.......
மனிதன்: எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவனுக்கு தன்னை விசுவாசிக்கின்றான் என்ற ஒரு காரணத்தால் அந்த வேலையை அவனுக்கே கொடுக்கும் இறைவனை என்ன சொல்ல வேண்டும்? எல்லா தகுதியும் இருந்தும் தன் மீது இருக்கும் நம்பிக்கையை மட்டும் நம்பி வந்த ஒருவனுக்கு அந்த வேலை பறிக்கப்படுவதை என்னவென்று சொல்வது?... உங்களின் வாக்கின்படி இப்படிப்பட்ட இறைவன் ஞாயமற்றவரா இருக்கின்றாரா?.
தன் மகன் நோயினால் அவதிப்படுகின்றான், மருத்துவரிடம் அழைத்துச்செல்ல அவனிடம் காசு இல்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கேட்டுப்பார்க்கின்றான் காசு கிடைக்கவில்லை. தன் மகனின் நிலையை பார்த்து கண்ணீருடன் "இறைவா என் மகன் நோயினால் அவதிப்படுகின்றான் என்னிடம் காசு இல்லை எப்படியாவது மருத்துவரிடம் அழைத்துச்செல்ல காசு கொடுக்கவும்" என்று வேண்டுகின்றான். கடைசியில் மகன் இறந்துவிடுகின்றான்.
சார்வ வல்லமைப் படைத்த இறைவனிடம் "என் மகனை குணப்படுத்து இறைவா" என்று விசுவாசத்துடன் அவன் வேண்டியிருந்தால் அவனின் விசுவாசம் குணப்படுத்திருக்கும். ஆனால் அவனோ இறைவா எனக்கு காசுகொடு என்று வேண்டி தன் மகனையே இழந்துவிட்டான்.... உண்மையான விசுவாசிகளை கடவுள் கைவிடமாட்டார். அவனின் விசுவாசம் அவன் மகனை காப்பாற்றவில்லை.
மனிதன்: சர்வ வல்லமைப் படைத்த இறைவன் ஏன் அவன் மகனுக்கு நோயைக் கொடுக்க வேண்டும்?
பகவத் கீதையை படித்தறிந்த ஒருவன் தான் படித்தவற்றை அரசனிடம் விளக்கி சொன்னால் அரசன் காசுக்கொடுப்பான் என்று அரசனிடம் செல்கின்றான். அரசனிடம் சென்று " மன்னா நான் பகவத் கீதையை நன்றாக படித்துணர்ந்தவன் நான் உங்களுக்கு அவற்றை பற்றி விளக்கி சொல்கின்றேன்" என்றான். அரசன் அவனை பார்த்து " உன்னை பார்த்தால் நன்றாக படித்தவனாக தெரியவில்லை மீண்டும் நன்றாக படித்துவிட்டு வா! பின்னர் உன்னிடம் கேட்கின்றேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டார். அவனும் வேறு வழியில்லாமல் மீண்டும் கீதையை படிக்கின்றான்... பின்னர் ஒரு நாள் அரசனிடம் சென்று கேட்டான் அன்றும் அரசன் அதேதான் சொல்லி அனுப்பிவிட்டார். அவனோ சலிக்காமல் மீண்டும் பகவத் கீதையை படிக்கின்றான். இப்படியாக மூன்று நான்குமுறை படித்த பின் கீதையை உணருகின்றான். இப்பொழுது அவனுக்கு கீதையைப்பற்றி உணர்வு நன்றாக இருக்கின்றது ஆனால் அவன் அரசனிடம் செல்லவில்லை... நீண்ட நாள்களுக்கு பின் அரசனுக்கு நினைவு வருகின்றது.. தன்னிடம் மூன்று நான்கு முறை வந்து கீதைப்பற்றி விளக்க வந்தவர் ஏன் காணவில்லை என்று தேடி அவன் இருப்பிடம் செல்கின்றான். அரசன் அவனை வணங்கி " நீங்கள் எனக்கு கீதையைப்பற்றி விளக்கம் சொல்லிக்கொடுங்கள்" என்று கேட்கின்றார்..
பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவற்றில் சொல்லப்பற்றிருக்கும் நீதிகளை ஒருவன் படித்துணர்ந்தால் பொருளை பற்றிய ஆசை, புகழைப் பற்றிய ஆசை, பதவியை பற்றி ஆசையில்லாதவனாக இருப்பான். அப்படிப்பட்ட நிலைதான் பற்று அற்ற நிலை. அந்த நிலையை அவன் உணர்ந்ததால்தான் கடைசியில் அவன் அரசனின் காசுக்காக மீண்டும் செல்லவில்லை. அந்த நிலையை அறிந்ததால் அரசனும் அவனிடம் வந்து கீதையைப்பற்றி விளக்கம் கேட்டார்.
மனிதன்: அந்த பற்று அற்ற நிலையில் உள்ள மனிதன்தான் இறைவன்... கடவுளை தேடி நீ எங்கேயும் செல்ல தேவையில்லை உன்னில் இருக்கும் நல்ல குணங்களை உணர்ந்தாளே நீயே கடவுள்தான். இதைதான் மத நூல்களும், அறநூல்களும் சொல்கின்றது. அதை உணராத மனிதன்தான் பொருளுக்காக, புகழுக்காக, பதவிக்காக தேடித்தேடி எங்கேயோ அழைகின்றான். உனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்தால் நீயே அந்த நாடகத்தின் நாயகனாக இருப்பாய். நீ தேடிப்போகும் இறைவன் உனக்கு கொடுத்த பாத்திரத்தை உணர்ந்தாளே நீயே மனிதனாவாய். மகனாக மகளாக, தாயாக தந்தையாக, தாத்தா பாட்டியாக.... இப்படி கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து எவன் நடக்கின்றானோ...... அவனே இறைவன்!...... அவனே மனிதன்!....
அன்புடன்
ஆ.ஞானசேகரன்...