_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, March 16, 2010

மீண்டும் உங்களோடு......

மீண்டும் உங்களோடு...

அன்பின் வலை மக்களே! வணக்கம்...
சில பல காரணங்களால் வலையின் பக்கம் வரமுடியாமலும், மனம் அதற்கான அனுமதியை கொடுக்காத காரணத்தாலும் உங்களை உங்களோடு சந்திக்க முடியாமல் போய்விட்டது. நான் வலைப்பக்கம் வராவிட்டாலும் என்பக்கம் வந்துசென்ற அணைத்து அன்பருக்கும் அன்பின் நன்றிகள். மீண்டும் உங்களோடு அதே புத்துணர்வோடு சந்திக்க முயற்சித்து கொண்டுள்ளேன். என்னதான் இருந்தாலும் சமுகத்தால் சமுக கோராப்பல்களால் கடிபடும்பொழுது வலியில்லாமல் இருப்பதில்லை அப்படிதான் எனக்கும்.

(இணையத்தில் சுட்டப்படம்)

"என்னடா வாழ்க்கை
கருவேலங்காட்டுக்குள் புகுந்த...
வண்ணத்துப்பூச்சி போல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..." ( எங்கேயோ கேட்ட கவிஞன் வரிகள்)

சலிப்பு மிக்க வரிகளாக இருந்தாலும் சூழல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் இப்படிதான் போய்விடுகின்றது. "நடக்ககூடாது ஆனால் நடந்துவிட்டது" இதுதான் மனதை அலைகளித்துவிடுகின்றது. நியாயமும் நேர்மையும் இந்த சமுகம் நமக்கு கொடுக்காத பச்சத்தில்தான் வன்முறைகள் வெடிகின்றன.

"நியாயத்தையும் நேர்மையும் நாம் கொடுத்து வாங்கும் ஐந்து ரூபாயில் வைத்துக்கொள்வோம் அதற்கு மேல் எதிர்ப்பார்பது நமது முட்டாள்தனம்..." (அப்துல்லா அண்ணனின் பொன்மொழி)... வேடிக்கையாக சொன்னாலும் எத்தனை நியாயங்கள் பொதிந்த வரிகள்.

வலிகள் என்றும் நிரந்தமாக இருப்பதில்லை காலம் அதற்கான மருந்தையும் கொடுத்துவிடும். அதுபோல் நானும் அதே புத்துணர்வோடு வருவேன் என்ற நம்பிக்கையில்

ஆ.ஞானசேகரன்.

17 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

மீண்டும் தங்கள் வருகையை எதிர்நோக்கி......

ராஜ நடராஜன் said...

என்னது மீள் வருகையா தல?போன வருடம் அடிச்சு ஆடிட்டு கொஞ்சம் ஓய்வா?

Raju said...

Welcome Back..!

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

வருக வருக - புத்துணர்வோடு வருக - காலம் வெல்லும் - கலங்க வேண்டாம் - நல்வாழ்த்துகள் ஞான சேகரன்

கலகலப்ரியா said...

வாங்க... ஞானசேகரன்... என்னாச்சு...ம்ம்

அன்புடன் அருணா said...

என்னாச்சு?Hope everything alright?
Take care.

"உழவன்" "Uzhavan" said...

நண்பா.. என்னாச்சு? இவ்வளவு விரக்தி? :-(
மீண்டு(ம்) வாருங்கள். உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

உமா said...

திரு.ஞானசேகரன் என்னவாயிற்று.
நீங்களே சொல்லியது போல் காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும், ஆற்றிவிடும். உற்சாகமாய் மீண்டும் வருவீர்கள்.
உங்கள் மனத்தினில் அமைதி நிலவிட இறைவனை வேண்டிய படி
உமா.

கார்த்திகைப் பாண்டியன் said...

நாம் மற்றவர்கள் கெட வேண்டும் என நினைக்கவில்லை.. நல்லதே நடக்கும்.. நம்பிக்கையோடு இருங்கள் நண்பா.. இதுவும் கடந்து போகும்..

இராகவன் நைஜிரியா said...

வாங்க... உங்கள் வரவு நல்வரவாகுக..

வினோத் கெளதம் said...

வெல்கம் தல..

நசரேயன் said...

வாங்க ... வாங்க

Muniappan Pakkangal said...

Cheer up Gnanaseharan,itz all in the world.

Thenammai Lakshmanan said...

மீண்டும் புத்துணர்வோடு வருக ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

அன்பிற்கினிய நண்பர்களே! உங்களின் அன்பிற்கு நன்றி! நன்றி!.... கூடிய விரைவில் உங்களோடு உங்களாக மகிழ வந்துவிடுவேன். அதற்கு கொஞ்சம் காலம் தேவை..
அதுவரை
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Anonymous said...

வாங்க ... வாங்க

Jerry Eshananda said...

வாங்கப்பு...வாங்க