வணக்கம் நண்பர்களே!
இந்த இடுகையை படிக்கும் முன் கீழ்கண்ட எனது முந்தய இடுகையை படித்திருந்தால் நன்றாக இருக்கும்.....
சுட்டியை தட்டுங்கள்
சாமானியனின் சத்தம் சந்தைக்கு வந்தால்.
சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பணவீக்கம் அதிகமாகுமா? பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?
மேற்கண்ட எனது சுட்டிகளை படித்திருப்பீர்கள்... மிக்க நன்றிங்க.
உண்மைதானுங்க சாமனியந்தான் உலகப் பொருளியியலை நிர்ணயம் செய்யக்கூடியவன். ஒரு நான்கு நாட்களுக்கு முன் சிங்கப்பூர் வானோலியில் கேட்ட செய்தி.... "கடந்து வந்த பொருளியியல் மந்தநிலையிலிருந்து சிங்கப்பூர் பாதிக்கப்படாமல் மீண்டு வந்துள்ளது. அதே சமயம் பொருளாதார வளர்ச்சியும் பெற்று இன்று ஒரு சிறப்பான பொருளியியல் நிலையும் பெற்றதற்கு காரணம் என்ன?" என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் " சிங்கப்பூர் இதற்கு முன் சந்தித்த பொருளியியல் மந்தநிலையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்தான் இந்த பொருளியியல் மந்தநிலையை சாமாளிக்க முடிந்தது. நாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தின்படி, இந்த பொருளியியல் மந்தநிலையில் நாங்கள் சாமானியனுக்கு வேலையிழப்பு செய்யவில்லை மாறாக அரசு கசானாவிலிருந்து காசு எடுத்து சமன்படுத்தினோம். அது ஆரப்பத்தில் கடிணமாக இருந்தாலும் போக போக பொருளியியல் நிலைப்பு தன்மைப்பெற்றது. இதுதான் எங்களின் வெற்றிக்கு காரணம்" என்று கூறப்பட்டது. மேலும் சொல்லப்பட்டது " அப்படி வேலையிழப்பு செய்த நாடுகளில் இன்னும் பொருளியியல் மீட்சி பெறாமல் இருக்கின்றது. மேலும் விலைவாசியும் அத்தியவசிய பொருள்களின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றதாக என்று சொல்லப்பட்டது."
ஒரு அரசாங்கம் சாமானியனுக்கு மனபுழுக்கம் இல்லாத பணபுழக்கம் கொடுத்தால் நாடும் அதன் பொருளியியலும் கெட்டியான இடத்தை பிடிக்கும் என்பது மேலே சொன்ன பதில்களிலிருந்து தெரிகின்றது. பொருளியியல் பற்றிய சாதாரண விளக்கங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள கீழேயுள்ள எனது இடுகையை பார்க்கலாம். மேலும் உங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது.
சொல்லதான் நினைக்கின்றேன்....
சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு....
தங்கமான தங்கம்.....
திருப்பி பார்த்த பதிவு.... சின்ன சின்ன சிதறல்கள்
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.
9 comments:
இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாம் தலைவரே..
//கார்த்திகைப் பாண்டியன் said...
இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாம் தலைவரே..//
ம்ம்ம்ம்... அடுத்து முயற்சிப்போம்..
பொருளாதாரம் ஒரு மிகப்பெரிய சுழற்ச்சி. அதில் ஒரு பகுதி சாமானியனின் நம்பிக்கை (மனபுழுக்கம் இல்லாத பணபுழக்கம்). மேலும் நீங்கள் கூறியது போல், அதற்கு நல்ல அரசு வேண்டும். அரசாங்கம் செலவு செய்ய முதலில் வரவு வேண்டும். அதற்கு நல்ல வர்த்தகங்கள் வேண்டும். அதற்கு நல்ல சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சி வேண்டும்.
பொருளாதார மந்தநிலையில் முதலீடு குறையும்; அதனால் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும்; அதனால் முதலீடு மேலும் குறையும். இந்த சுழற்ச்சியிலிருந்து மீள அதிகமான முதலீடு செய்ய வேண்டும். இதற்கு அரசு உதவ வேண்டும். இந்த பாடம் மிக பழையது. சாமானியனுக்கு வேலையிழப்பில்லாமல் பார்த்து கொள்வதெல்லாம் (அரசு முதலீடு), சிங்கப்பூர் போன்ற ஊர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம்; ஒரு மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ அது எளிதல்ல. அது நாட்டையே திவாலாக்கலாம்.
//RajK said...
பொருளாதாரம் ஒரு மிகப்பெரிய சுழற்ச்சி. அதில் ஒரு பகுதி சாமானியனின் நம்பிக்கை (மனபுழுக்கம் இல்லாத பணபுழக்கம்). மேலும் நீங்கள் கூறியது போல், அதற்கு நல்ல அரசு வேண்டும். அரசாங்கம் செலவு செய்ய முதலில் வரவு வேண்டும். அதற்கு நல்ல வர்த்தகங்கள் வேண்டும். அதற்கு நல்ல சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சி வேண்டும்.
பொருளாதார மந்தநிலையில் முதலீடு குறையும்; அதனால் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும்; அதனால் முதலீடு மேலும் குறையும். இந்த சுழற்ச்சியிலிருந்து மீள அதிகமான முதலீடு செய்ய வேண்டும். இதற்கு அரசு உதவ வேண்டும். இந்த பாடம் மிக பழையது. சாமானியனுக்கு வேலையிழப்பில்லாமல் பார்த்து கொள்வதெல்லாம் (அரசு முதலீடு), சிங்கப்பூர் போன்ற ஊர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம்; ஒரு மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ அது எளிதல்ல. அது நாட்டையே திவாலாக்கலாம்.//
உண்மைதான்... மிக்க நன்றி ராஜ்
எந்த ஒரு பொருளாதார கொள்கையானானும், எப்படிப்பட்ட நாடானாலும்... வாடிக்கையாளர்கள் என்பது முக்கியம், அந்த வாடிக்கையாளர்கள் சாமானியர்கள்தான். அவர்களின் வாங்கும் சக்தி என்பது நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யக் கூடியதே... மிக்க நன்றி
good post brother
அதற்கு நல்ல அரசு வேண்டும்.
///
yes
//பிரியமுடன் பிரபு said...
good post brother//
Thanks Brother
Nice Gnanaseharan.
//Muniappan Pakkangal said...
Nice Gnanaseharan.//
மிக்க நன்றி சார்
Post a Comment