ஏம்பா பங்குச் சந்தைனு சொல்லுராங்களே! அதப்பத்தி கொஞ்சம் சொல்லேம்பா? என் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி... ம்ம்ம்ம்ம்..... என்னது பங்குச் சந்தையா? என்னபா என்ன நினைக்குற நான் என்ன காரைக்குடி அண்ணாமலை செட்டியாரா? இல்லை ஹர்ஷத் மேத்தாவா? என்னைப்போய் கேட்கிறியே..... இல்லைபா நீ இணையத்தில் ஏதோதோ படிக்குர அதுதான் கேட்டேனு சொன்னதும் கொஞ்சம் தலைநிமிர்த்தி நமக்கு தெரிஞ்சத சொல்ல...
எனக்கு அதப்பத்தி அனுபவம் இல்லபா, கொஞ்ச நாளுக்கு முன் ஆணந்த விகடனுல படிச்ச கதை ஒன்னு..... ஒருவன் ஒரு கிராமத்திற்கு சென்று அங்கிருந்தவரிடம் இங்கு குரங்குகள் இருக்குனு கேள்விப்பட்டேன் எனக்கு நான்கு குரங்குகள் வேனும் ஒரு குரங்குக்கு 50 ரூபாய் தருகின்றேன் பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அவர்களின் ஒருவன் ஒரு குரங்குக்கு 50 ரூபாயா? நான் பிடித்து தருகின்றேன் என்று பிடித்து தந்தான். இவர் சொன்னது போல நான்கு குரங்குகளுக்கு 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் கொடுத்தார். பின் அங்கேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அந்த குரங்குகளை அதில் வைத்து பூட்டிவிட்டு ஒரு காவல் காரனையும் வைத்துவிட்டு அங்குள்ளவர்களிடம் அடுத்தமுறை இன்னும் அதிக குரங்குகள் தேவை 75 ரூபாயானாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். 75ரூபாய் என்றதும் அந்த ஊரில் உள்ள அனைவரும் எல்லா குரங்குகளையும் பிடித்து வைத்திருந்தனர். அடுத்தமுறை வந்த வியாபாரி ரொம்ப மகிழ்ச்சியாக எல்லா குரங்குகளையும் ரூபாய் 75 வீதம் வாங்கி கொண்டார். அதேபோல் எல்லா குரங்குகளையும் அந்த வீட்டில் பூட்டினார். மீண்டும் அவ்வூர் மக்களிடம் அடுத்தமுறை இன்னும் நிறைய குரங்குகள் தேவை ரூபாய் 200 இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் செல்லும் முன் குரங்குகளை பார்த்து கொண்டிருக்கும் காவலாளிடம் யாராவது குரங்கு கேட்டால் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு விற்றுவிடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்தமுறை வியாபாரி 200 ரூபாய் தருவதாக சொன்னதும் எல்லா இடங்களிலும் குரங்குகளை தேடி அலைந்தனர், ஏற்கனவே எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால் கடைசியாக குரங்கு விற்கும் காவலாளிடம் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு வாங்கி சென்றனர் வியாபாரிடம் 200 ரூபாய்க்கு விற்பதற்காக....... சொன்னதுபோல வியாபாரியும் வந்தான்; எல்லொரும் தம்மிடம் உள்ள குரங்கை விற்பதற்காக தயாராக இருந்தனர். குரங்கு வாங்குபவன் அவர்களிடம் வந்து இந்தமுறை குரங்குகள் தேவைப்படவில்லை அடுத்த முறை வாங்கிக்கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு காவலாளிடம் குரங்கு விற்ற காசை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்....
என்னபா புரியுதா? என்று கேட்டேன் நண்பரிடம். ம்ம் நீ சொல்லுரதிலிருந்து பார்த்தா குரங்கு வியாபாரம்தான் பங்குசந்தை, குரங்குதான் பங்கு. மதிப்பே இல்லாத குரங்கை மதிப்புள்ளதாக ஆக்கி செய்யும் வியாபாரம்தான் பங்குசந்தையா என்றான்? நான் அப்படி சொல்லவில்லை பங்கு என்பது ஒரு மாய தோற்றம் அதை கைதேர்ந்தவர்கள் செய்யும் விளையாட்டில் இப்படியும் ஆகலாம். சிறிதே உபயோகம் உள்ள தங்கதிற்கு மதிப்புக் கொடுக்கப் படுவதும், அவற்றின் விலை கோபுரத்தில் இருப்பதும் எதை காட்டுகின்றது; ஒரு குரங்கு விளையாட்டுப் போல தோன்றவில்லையா? பங்கு வர்த்தகம் புரியாதவர்களுக்கு ஒரு சூதாட்டம் அதை முறைப்படி கற்றுக்கொண்டால் லாபத்தில் விளையாடலாம். கொஞ்சம் தெரிந்ததுமே எல்லாம் தெரிந்துக்கொண்டேன் என்று இருமாப்பு இல்லாமல் புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றுதான் எனக்குப் படுதுபா என்றேன். .......
நீ சொல்லரதும் சரிதாம்பா...... ஆமாம் சுவிஸ் வங்கில இந்தியாவிலிருந்து மட்டும் 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணமா டிபாசிட் செஞ்சு இருக்காங்கலாமே, நம்ம அரசாங்கம் இதை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவருமா?
இங்க பாரு இப்படி எல்லாம் வம்புல மாட்டிவிடக்கூடாது.. இதெல்லாம் நடக்குறக் காரியமா? அப்படி ஒரு கொடுப்பினை எல்லாம் இந்தியாவிற்கு இல்ல, இல்லவே இல்லை...... அவரும் தலை ஆட்டிகொண்டே சென்றுவிட்டார், நானும் எஸ்கேப்
22 comments:
ஞானசேகரன், குரங்கு கதையெல்லாம் ரொம்ப பழசு, இப்ப பங்கு சந்தை கைப்புள்ள வடிவேலு வசனம் மாதிரி ஆயிப்போச்சி... இவ்வளவு அடி வாங்கியும் ஏண்டா திருபவும் ஷேர் வாங்குறீங்க-ன்னா, அந்த ஷேர் ரொம்ப நல்ல ஷேரு, எவ்வளவு கீழ போனானும் சீக்கிரமே மேல வந்துடும்-ன்னு சொல்லி என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தி என் கஜானாவ காலிப்பண்ணிட்டானுவோலே...அவ்வ்வ்வ்-ன்னு கத்திகிட்டு திரியிராங்க பல பேர் இப்போ.
உண்மையிலேயே அரசு நடத்தும் சூதாட்டம் இதுதாங்க.. கிரிக்கெட் சூதாட்டத்தைவிட மோசமானது!!
குரங்கு கதை தெளிவாக விஷயத்தைப் புரிய வைக்குது!! (நீங்க எவ்வளவு ஷேர் பண்ணியிருக்கீங்க??? ஹி ஹி)
// அரசூரான் said...
ஞானசேகரன், குரங்கு கதையெல்லாம் ரொம்ப பழசு, இப்ப பங்கு சந்தை கைப்புள்ள வடிவேலு வசனம் மாதிரி ஆயிப்போச்சி... இவ்வளவு அடி வாங்கியும் ஏண்டா திருபவும் ஷேர் வாங்குறீங்க-ன்னா, அந்த ஷேர் ரொம்ப நல்ல ஷேரு, எவ்வளவு கீழ போனானும் சீக்கிரமே மேல வந்துடும்-ன்னு சொல்லி என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தி என் கஜானாவ காலிப்பண்ணிட்டானுவோலே...அவ்வ்வ்வ்-ன்னு கத்திகிட்டு திரியிராங்க பல பேர் இப்போ.//
வணக்கம் அரசூரான்... உங்கள் முதல் வருகையே கலக்கலா இருக்கு, உங்கள் லெவலுக்கு நான் போகல எப்படியோ கஜானா காலி... நன்றி அரசூரான்...
உண்மைதானுங்க.இன்றை பங்கு சந்தை ஒரு சிலரின் கையில்தான் உள்ளது.
ஒடற குதிரைகளின் கடிவாளம் அனைத்தும் இவர்கள் கையில்,எதை முதலில்ஒடவைப்பது என்பதை முடிவுசெய்வதே இவர்கள்தான்
//ஆதவா said...
உண்மையிலேயே அரசு நடத்தும் சூதாட்டம் இதுதாங்க.. கிரிக்கெட் சூதாட்டத்தைவிட மோசமானது!!
குரங்கு கதை தெளிவாக விஷயத்தைப் புரிய வைக்குது!! (நீங்க எவ்வளவு ஷேர் பண்ணியிருக்கீங்க??? ஹி ஹி)//
வாங்க ஆதவா,... ஷேரா அப்படினா என்னங்க கொஞ்சம் புரியும்படி சொல்லுக? நமக்கு அதெல்லாம் ஒத்துபடதுனா ஒத்துபடது....
நண்பரே ரயிலு படம் பழசா? இப்ப வந்து பாருங்கள் ஜங்சனை.
// சொல்லரசன் said...
உண்மைதானுங்க.இன்றை பங்கு சந்தை ஒரு சிலரின் கையில்தான் உள்ளது.
ஒடற குதிரைகளின் கடிவாளம் அனைத்தும் இவர்கள் கையில்,எதை முதலில்ஒடவைப்பது என்பதை முடிவுசெய்வதே இவர்கள்தான்//
வாங்க வாங்க..... இத தெரிந்தே குதிரை மேல பந்தயம் கட்டுவதும் நாம தாங்க... இன்னும் ஒரு கதைங்க ஒருவர் லாட்டரி வாங்கினார், அதற்கு ஒருவர் நீங்கள் வாங்கும் லாட்டரியில் பரிசு விழுகாது, விழுந்தா நான் 500 ரூபாய் தருகின்றேன். விழுவலனா 50 ரூபாய் கொடுங்கள் என்றார். அவருக்கு பரிசு கிடைக்காது என தெரிந்து பந்தயத்திற்கு வரவில்லை. உங்களுக்கே நம்பிக்கையில்லை அப்பறம் ஏன் லாட்டரி வாங்க்குகின்றீர்கள்... என்றார். இப்படிதாங்க தெரிந்தே பலது நடக்குது, நன்றி சொல்லரசன்
//சொல்லரசன் said...
நண்பரே ரயிலு படம் பழசா? இப்ப வந்து பாருங்கள் ஜங்சனை.//
ஓ அப்படியா!!!! May 1st வருகின்றேன் நன்பரே.....
ரொம்ப எளிமையா சொல்லி இருக்கேங்க நண்பா.. அதனாலத்தான் நான் இந்த சூதாட்டத்துல இறங்குரதில்ல..
//கார்த்திகைப் பாண்டியன் said...
ரொம்ப எளிமையா சொல்லி இருக்கேங்க நண்பா.. அதனாலத்தான் நான் இந்த சூதாட்டத்துல இறங்குரதில்ல//
நல்லது கார்த்திகை பாண்டியன்... எதுவாணாலும் கவனத்துடன் இறங்கினால் நல்லது.. இப்ப நம்மைபோல இப்படியே இருப்பதும் நல்லதுதான். சமயம் கிடைத்தால் முறைப்படி கற்றுகொள்ளுங்கள்.. நானும்தான்.... நன்றி நண்பா..
//suresh said...
nice//
நன்றி நண்பரே
சட்டத்தில் எவ்வளவோ ஓட்டைகள் இருக்கின்றன. இவைகளைக்கொண்டுதான் பலர் பவிதமாய் விளையாடுகிறார்கள்.அரசியல்வாதிகள் பெரும் புள்ளிகள் எவ்வளவு பேர் எந்த தண்டணையும் பெறாமலே தன் வாழ்நாளையே கழித்துவிடுகிறார்கள்.அதனால் சட்டம் தவறா? இல்லையே. அதுபோல் தான் இது.பங்கு சந்தையில் கிடைக்கும் பணத்தால் தான் பல மெகா மெகா வாணிபம் செய்ய முடியும். பொதுமக்களுக்கு பயன் படக்கூடிய பல திட்டங்கள் மின்சாரம், கட்டுமானம்,ஆயில் என பல துறைகள் இந்த பணத்தை நம்பி தான் உள்ளது.பங்கிலே முதலீடு செய்வது வேறு. வியாபாரம் [trade] செய்வது வேறு.வியாபாரம் கூட சூதாட்டமில்லை.இதில் உள்ள சில ஓட்டிகளைப் பயன் படுத்தி சிலர் ஹர்ஷத் மேத்தா செய்தது போல் மோசடி செய்தார்கள். on line வந்த பிறகு மோசடிகள் நடக்காவண்ணம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எந்த பங்கில் முதலீடு செய்வது என்றாலும் அந்த நிறுவனத்தைப்பற்றி அனைத்து விவரங்களும் கிடைக்கும்.அறிந்து கொண்டு முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும்.பாங்கிலே deposit செய்து வட்டியீட்டுவதில்லையா? mutual fundல் போடுவதில்லையா அவர்கள் என்னச் செய்கிறார்கள். உங்கள் பணத்தை பங்கில் தான் முதலீடு செய்கிறார்கள். அப்போ அது கூட சூதாட்டமா?
பங்கு சந்தை என்பது மேலும் கீழுமாகத்தான் இருக்கும். பேராசைக் கொண்டால் ஏமாற்றுபவரின் வலையில் விழ நேரலாம். அப்படி சிறு முதலீட்டாளர்கள் ஏமாறாமலிருக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.என்றாலும் நம்வரையில் குறிபிட்ட பங்கைப்பற்றி அறிந்துக்கொண்டு [மெனெக்கெட்டால் தான் காசு]முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையும் நமது பொருளாதாரத்தில் ஒரு நாடி.
//உமா said...
சட்டத்தில் எவ்வளவோ ஓட்டைகள் இருக்கின்றன. இவைகளைக்கொண்டுதான் பலர் பவிதமாய் விளையாடுகிறார்கள்.அரசியல்வாதிகள் பெரும் புள்ளிகள் எவ்வளவு பேர் எந்த தண்டணையும் பெறாமலே தன் வாழ்நாளையே கழித்துவிடுகிறார்கள்.அதனால் சட்டம் தவறா? இல்லையே. அதுபோல் தான் இது.பங்கு சந்தையில் கிடைக்கும் பணத்தால் தான் பல மெகா மெகா வாணிபம் செய்ய முடியும்//
வாங்க உமா, உங்களின் கருத்துகள் உண்மையின் எல்லாரும் ஏற்றுகொள்ளக்கூடியது. பங்கு சந்தையும் ஒரு நாட்டின் உயிர்நாடி என்பதும் உண்மை என்னை போல சாமானியனுக்கு இன்னும் எழிமையாகவில்லை, அல்லது இன்னும் சாம்மனியனுக்கு பயம் தெளியவில்லை. அதற்குள் சிலர் செய்யும் விசமம் நம்மை பயம்க்கொள்ளவைக்கின்றது..
//பங்கு சந்தையில் கிடைக்கும் பணத்தால் தான் பல மெகா மெகா வாணிபம் செய்ய முடியும். பொதுமக்களுக்கு பயன் படக்கூடிய பல திட்டங்கள் மின்சாரம், கட்டுமானம்,ஆயில் என பல துறைகள் இந்த பணத்தை நம்பி தான் உள்ளது.பங்கிலே முதலீடு செய்வது வேறு. வியாபாரம் [trade] செய்வது வேறு.வியாபாரம் கூட சூதாட்டமில்லை.இதில் உள்ள சில ஓட்டிகளைப் பயன் படுத்தி சிலர் ஹர்ஷத் மேத்தா செய்தது போல் மோசடி செய்தார்கள்.//
இப்படி மோசடி செய்பவர்களை கண்டிப்பாக கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.. நாட்டின் தூணை ஆட்டி பிடுங்ககூடிய செயல்..
//நம்வரையில் குறிபிட்ட பங்கைப்பற்றி அறிந்துக்கொண்டு [மெனெக்கெட்டால் தான் காசு]முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையும் நமது பொருளாதாரத்தில் ஒரு நாடி.//
நன்றி உமா.. நல்ல செய்திகள் சொல்கின்றீகள் இதற்கான முழு செய்திகளை தொகுத்து ஒரு பதிவு இடுங்கள் என்னை போன்ற சாமானியர்களுக்கு துணையாக இருக்கலாம்..
ரொம்ப எளிமையா சொல்லி இருக்கேங்க
// ராம்.CM said...
ரொம்ப எளிமையா சொல்லி இருக்கேங்க//
வாங்க ராம்.... உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி
தஞ்சாவூர்ல எங்கண்ணே
// வருங்கால முதல்வர் said...
தஞ்சாவூர்ல எங்கண்ணே//
வணக்கம் வருங்கால முதல்வரே...
எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் நவலூர் என்ற கிராமம். தற்பொழுது பணியின் காரணமாக திருச்சி பின் சிங்கபூர்..
பெற்றொர்களிடம் முக்கிய குறைகளாக தன் மகளுக்கும், தன் மருமகளுக்கும் உள்ள புரிதலின் குறைகள்தான் ஒட்டுமொத்த குடும்ப பிரச்சனைக்கு காரணங்களாக இருக்கும். இதற்கு பாரம்பரிய இடைவெளி என்று சொல்லிவிட முடியாது///
மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்!
// thevanmayam said...
பெற்றொர்களிடம் முக்கிய குறைகளாக தன் மகளுக்கும், தன் மருமகளுக்கும் உள்ள புரிதலின் குறைகள்தான் ஒட்டுமொத்த குடும்ப பிரச்சனைக்கு காரணங்களாக இருக்கும். இதற்கு பாரம்பரிய இடைவெளி என்று சொல்லிவிட முடியாது///
மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்//
நன்றி நண்பரே
சூதாட்டம்தான்..! இருந்தாலும், பேராசை கொண்ட மனிதர்களால்தான் இந்த சூதாட்டம் இன்னமும் சூடாக இருக்கிறது.
ஒரு நிருவனத்தின் உண்மையான நிதி நிலைமையை ஆராய்ந்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். ஆனால், குறுகிய காலத்தில் லட்சங்களை புரட்ட வேண்டும் என்ற பேராசையில் தீக்குள் விரலை விட்டுவிட்டு சுட்டபிறகு பிரறை குறை சொல்வானேன்?!
//மீண்டும் அவ்வூர் மக்களிடம் அடுத்தமுறை இன்னும் நிறைய குரங்குகள் தேவை ரூபாய் 200 இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் செல்லும் முன் குரங்குகளை பார்த்து கொண்டிருக்கும் காவலாளிடம் யாராவது குரங்கு கேட்டால் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு விற்றுவிடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்தமுறை வியாபாரி 200 ரூபாய் தருவதாக சொன்னதும் எல்லா இடங்களிலும் குரங்குகளை தேடி அலைந்தனர், ஏற்கனவே எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால் கடைசியாக குரங்கு விற்கும் காவலாளிடம் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு வாங்கி சென்றனர் வியாபாரிடம் 200 ரூபாய்க்கு விற்பதற்காக....... சொன்னதுபோல வியாபாரியும் வந்தான்; எல்லொரும் தம்மிடம் உள்ள குரங்கை விற்பதற்காக தயாராக இருந்தனர். குரங்கு வாங்குபவன் அவர்களிடம் வந்து இந்தமுறை குரங்குகள் தேவைப்படவில்லை அடுத்த முறை வாங்கிக்கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு காவலாளிடம் குரங்கு விற்ற காசை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்....
என்னபா புரியுதா?//
எப்படி புரியாம இருக்கும்
இப்படி எளிய குரங்கு கதையை வத்து அழகாக புரியவைத்து விட்டீர்கள்
உங்களுக்ககு நன்றி சொல்லிகனும் பங்கு சந்தைன்னா என்னனு இதுக்குமுன்னாடி ஒரு பங்கு கூட தெறியாதுங்கோ..
//கிருஷ்ணா said...
சூதாட்டம்தான்..! இருந்தாலும், பேராசை கொண்ட மனிதர்களால்தான் இந்த சூதாட்டம் இன்னமும் சூடாக இருக்கிறது.
ஒரு நிருவனத்தின் உண்மையான நிதி நிலைமையை ஆராய்ந்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். ஆனால், குறுகிய காலத்தில் லட்சங்களை புரட்ட வேண்டும் என்ற பேராசையில் தீக்குள் விரலை விட்டுவிட்டு சுட்டபிறகு பிரறை குறை சொல்வானேன்?!
//
நன்றி கிருஷ்ணா... உங்களின் கருத்தும் ஏற்றுக் கொள்ளகூடியதே.. நல்ல
ஒரு நிருவனத்தின் உண்மையான நிதி நிலைமையை ஆராய்ந்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். ஆனால், குறுகிய காலத்தில் லட்சங்களை புரட்ட வேண்டும் என்ற பேராசையில் தீக்குள் விரலை விட்டுவிட்டு சுட்டபிறகு பிரறை குறை சொல்வானேன்?!
என்பதும் சிந்தனைக்குறியது
// ஆ.முத்துராமலிங்கம் said...
எப்படி புரியாம இருக்கும்
இப்படி எளிய குரங்கு கதையை வத்து அழகாக புரியவைத்து விட்டீர்கள்
உங்களுக்ககு நன்றி சொல்லிகனும் பங்கு சந்தைன்னா என்னனு இதுக்குமுன்னாடி ஒரு பங்கு கூட தெறியாதுங்கோ..//
நன்றி ஆ.முத்துராமலிங்கம் நமக்கு தெரிஞ்சது இம்மாதுண்டு... தெரியாதது.... நிறைய இருக்கு...
Post a Comment