_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, March 27, 2009

தங்கமான தங்கம்.....

தங்கமான தங்கம்...

"திருப்பி பார்த்த பதிவு.... சின்ன சின்ன சிதறல்கள்" சென்ற பதிவில் நண்பர் ஆதவா அவர்களின் கேள்விதான் இது :
ஆதவா said...
நான் இங்க வரதே உங்களோட புரிதலான அலசல்களால்தான். ரொம்ப எளிமையா புரிய வெச்சுப்புடறீங்க. பங்கு வணிகம் குறித்த உங்கள் அலசல்கள் பிரமிக்க வைக்கின்றன.இப்போ உங்க கிட்ட ஒரு கேள்வி...தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா சார்?

இதற்கு என்னுடைய பதிலை விட மிக அழகாக தோழி உமா அவர்கள் சொல்லியுள்ளார்கள்.. பராட்டிக்கூடியது: தங்கம் விலை கண்டிப்பாக குறையும்.ஆனால் சிறிதுகாலம் ஆகும். பங்குசந்தையில் இலாபமில்லாத்தால் தங்கத்தில் அதிகமாக விளையாடுகிறார்கள்.அதனால் தான் விலையேற்றம்.பங்குச்சந்தை திரும்பினால் இதிலிருந்து பணம் சந்தைக்கு போய்விடும். அப்போது வெகுவாக குறையும் சாத்தியமிருக்கு.தங்கத்தில் சேமிப்பதும் அப்போது குறையலாம்.

RajK க்கு தங்கத்தை பற்றிய விளக்கம்: ஒரு பொருளின் விலை அது எந்த அளவு அவசியமானது என்பதை பொருத்தது இல்லை; அது அதன் கிராக்கியை பொருத்தது (Supply-Demand). இது தான் சிறிதே பயன்படும் தங்கத்தின் விலைக்கும், வாழ்வின் அவசிமான தண்ணீரின் விலைக்கும் உள்ள வேறுபாடு.தங்கத்தின் கிராக்கி அதிகமானதால், அதை எடுக்க பல இயற்கை சீரழிவுகள் நடக்கின்றன. உலகின் காலநிலையை கட்டி காக்கும், அமேஸான் காடுகளின் அழிவும் அதில் ஒன்று. இதில் காமடி என்னவென்றால், இந்த உலகத்தை காக்க அந்நாட்டில் உள்ளோர், அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை குறைத்து கொள்ள வேண்டுமாம். எனது எண்ணம், தங்கம் வைரம் போன்ற வெட்டி பொருள்களை சேர்க்காதீர்.

இப்படி ஒவ்வொருவரும் தனது ஆபாரமான கருத்துகளை கூறியது பாராட்டகூடியதும் மற்றும் சிந்தனையை தூண்டி விடுகின்றது. எனக்கும் அதே எண்ணங்கள்தான்... இப்படிப் பட்ட கலந்து ஆலோசித்தல் மூலம் நமக்கு பல புரிதல் உண்டாகின்றது.. தங்கத்தின் விலைக்கும் பெட்ரோலியத்தின் விலைக்கும் எதிர் விகிதத்தில் வருகின்றது. பெட்ரோலின் விலை ஏற்றம் கண்டால் தங்கத்தின் விலை சரியும் என சொல்லப்படுகின்றது....

எனக்கும் ராஜ்K க்கு உள்ள சந்தேகமும் உண்டு, பெரும் உபயோகம் இல்லாத தங்கத்திற்கு ஏன் இந்த மதிப்பை கொடுக்கின்றார்கள்... மேலும் அரிதாக கிடைக்ககூடிய பொருளை மையமாக கொண்டு பொருளாதாரம் கணக்கிடப்படுவதும் ஒத்துகொள்ள வேண்டியதாகின்றது... ஆனால் பெரும்பாண்மையான தங்கம் ஆபரணங்களாகவே இருப்பது சரியான நிலைபாடை கொடுக்க முடியுமா என்பதும் கேள்வி?

கீழே உள்ள படம் மின் அஞ்சலில் வந்தது..... தங்கத்தின் மதிப்பு உங்களுகே புரியும்:

இப்படி பல கோடி மதிப்புள்ள தங்கம் மக்கள் மத்தியில் புதைந்துள்ளது, இதனால் அரசிற்கு எந்த விதமான லாபமும் இல்லை... ஒரு முறை செய்திகள் வாயிலாக கேட்ட ஒன்று,... தாய்லாந்து நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை சென்றது. பேங்ராப்ட்(Bankrupt) ஆகும் நிலையை அடைந்தது. (Bankrupt தமிழில் வங்கி நோடிப்பு நிலை அல்லது ஓட்டாண்டி) . அப்பொழுது அரசு மக்களிடம் கேட்டது நம் நாட்டின் பொருளாதாரம் சீர்ப்படுத்த வேண்டும் என்றால் உங்களின் உதவி தேவைப்படுகின்றது, உங்களிடம் உள்ள ஆபரணத் தங்கங்களை அரசுக்கு கொடுத்து உதவுங்கள்.. அரசு மீழ்ச்சியடைந்த பிறகு திருப்பித் தருகின்றோம் என்று கோரியது. அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பை பெற்று மீண்டு பொருளாதாரம் மீழ்ச்சியடைந்தது. மக்கள் தம்மிடம் உள்ள ஆபரணங்களை கொடுத்து உதவினார்கள், இன்று வரலாற்றில் சாதனை பட்டியலில் உள்ளதாம்.

மற்றொன்று ஓகோன்னு இருந்த நாடு ஐஸ்லாந்து, தீடீர் என்று ஒருநாள் நாடே Bankrupt க்கு வந்துவிட்டது. இது வரலாற்றில் மனிதன் சிந்திக்க வைத்த நாளாகும். உலகநாடுகளின் உதவியால் இன்று வளர்ந்துகொண்டு உள்ளது..... இப்படி உலகம் பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கங்களை சந்தித்தவண்ணம் இருக்கின்றது. இப்படி ஒரு நிலை இந்தியாவிற்கு வந்தால் நாம் நாட்டு மக்களிடம் இது போன்ற பொருப்புணர்வு வருமா? என்ற கேள்வியும் வருகின்றது. நம் நாட்டின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்துள்ளதால் மோசமான நிலை எப்பொழுதும் ஏற்பட வாய்பே இல்லை என்பது உண்மை. அப்படிப்பட்ட விவசாயத்திற்கு அரசாங்கம் இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் நம்முடைய வேதனை...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

28 comments:

ஆதவா said...

ஓட்டாண்டிகள் நிறைந்த இந்நாட்டில் அப்படியொரு நிலை வருவதற்கான சாத்தியம் தெரியவில்லை. ஒருவேளை வந்தாலும் நான் தருவேன் நீங்கள் தருவீர்கள்... எங்கள் தெருவே தரும்... MLAக்களைத் தவிர்த்து.... ஆனால் திரும்பி வருவது சாத்தியமல்ல.



பேங்ரப்ட் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி!!!



அலசல்களில் எனக்கு அதிக பழக்கம் இல்லை!!! கேள்விகள் வேண்டுமானால் எழுப்பலாம்... ஹி ஹி ஹி...

ஆதவா said...

அந்தம்மாவுடையை முகத்தில்தான் (மூக்கு தவிர) நகையே இல்லை!!! அங்கேயும் ஏதாவது ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கலாமே!!!

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
ஓட்டாண்டிகள் நிறைந்த இந்நாட்டில் அப்படியொரு நிலை வருவதற்கான சாத்தியம் தெரியவில்லை. ஒருவேளை வந்தாலும் நான் தருவேன் நீங்கள் தருவீர்கள்... எங்கள் தெருவே தரும்... MLAக்களைத் தவிர்த்து.... ஆனால் திரும்பி வருவது சாத்தியமல்ல.//

நானும் தருவேன் என்நம்பிக்கைக்கு வாழ்த்துகள் ஆதவா

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...
அந்தம்மாவுடையை முகத்தில்தான் (மூக்கு தவிர) நகையே இல்லை!!! அங்கேயும் ஏதாவது ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கலாமே!!!//

பொண்ணு மூக்கு முழியுமா இருக்குனு சொல்லனுமே அதுதான்

சொல்லரசன் said...

//பெரும் உபயோகம் இல்லாத தங்கத்திற்கு ஏன் இந்த மதிப்பை கொடுக்கின்றார்கள்//
உலக உற்பத்தியில் சுமார் 35 சதவீத தங்கம் இந்தியா இறக்குமதி செய்கிறது.
இதில் 75 சதவீதம் ஆபரணங்களாகவும் மற்றும் வரதட்சனையாகவும் கொடுக்கபடுகிறது.
இந்தகைய நிலையிருக்கும் வரை தங்கம் மதிப்பு டாப்புதானுங்க.

Tech Shankar said...

அந்தப் படத்தைப் பார்த்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பது போலவா தோன்றுகிறது (!@#$@^$#^#$&$%$)

//கீழே உள்ள படம் மின் அஞ்சலில் வந்தது..... தங்கத்தின் மதிப்பு உங்களுகே புரியும்:

ஆ.ஞானசேகரன் said...

//உலக உற்பத்தியில் சுமார் 35 சதவீத தங்கம் இந்தியா இறக்குமதி செய்கிறது.
இதில் 75 சதவீதம் ஆபரணங்களாகவும் மற்றும் வரதட்சனையாகவும் கொடுக்கபடுகிறது.
இந்தகைய நிலையிருக்கும் வரை தங்கம் மதிப்பு டாப்புதானுங்க.//

சரியா சொன்னிங்க சொல்லரசன்... நன்றி..

ஆ.ஞானசேகரன் said...

//அந்தப் படத்தைப் பார்த்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பது போலவா தோன்றுகிறது (!@#$@^$#^#$&$%$)///

அப்படியா? வணக்கம் தமிழ்நெஞ்சம்..
உங்கள் வருகைக்கு நன்றி

ஹேமா said...

ஞானசேகரன் இப்போ எல்லாம் கலர் கலரா உடுப்புக்கு ஏத்த மாதிரி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ,
டைட்டானியம்,பிளாஸ்டிக் ன்னு போடப் பழகிட்டு வரோம்.கவலையே இல்லை தங்கம் வேணும் ன்னு.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானசேகரன் இப்போ எல்லாம் கலர் கலரா உடுப்புக்கு ஏத்த மாதிரி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ,
டைட்டானியம்,பிளாஸ்டிக் ன்னு போடப் பழகிட்டு வரோம்.கவலையே இல்லை தங்கம் வேணும் ன்னு.
//

thanks heemaa...

கோவி.கண்ணன் said...

ஹலோ,
இது 100 ஆவது பதிவு, ட்ரீட் ஒண்ணும் இல்லையா ?

வாழ்த்துகள் !

எழுத்துத்திறன் கூடி இருக்கிறது, முன்பெல்லாம் இருக்கும் எழுத்துப் பிழைகளும் குறைந்திருக்கிறது. மேலும் பல பதிவர் நண்பர்களைப் பெற்றிருக்கிறீர்கள். பல விடயம் தொட்டு எழுதுகிறீர்கள்

உங்கள் எழுத்துப்பணி சிறப்பாக இருக்கிறது.

மீண்டும் நல்வாழ்த்துகள் ஞான சேகர் !

ஆ.ஞானசேகரன் said...

//கோவி.கண்ணன் said...
ஹலோ,
இது 100 ஆவது பதிவு, ட்ரீட் ஒண்ணும் இல்லையா ?

வாழ்த்துகள் !

எழுத்துத்திறன் கூடி இருக்கிறது, முன்பெல்லாம் இருக்கும் எழுத்துப் பிழைகளும் குறைந்திருக்கிறது. மேலும் பல பதிவர் நண்பர்களைப் பெற்றிருக்கிறீர்கள். பல விடயம் தொட்டு எழுதுகிறீர்கள்

உங்கள் எழுத்துப்பணி சிறப்பாக இருக்கிறது.

மீண்டும் நல்வாழ்த்துகள் ஞான சேகர் !
//

மூத்தபதிவர் என்ற முறையில் உங்களின் வாழ்த்து.... என்னை மகிழசெய்கின்றது.. உங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம்நிறைந்த நன்றிகள்...

ட்ரீட் எப்பவேனாலும் எதற்காகவும் உண்டு... எப்ப free சொல்லுங்க வந்துவிடுகின்றேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

யப்பா.. படத்த பார்த்தாலே கண்ணக் கட்டுதே.. நண்பர்களுக்கு பதில் சொல்ல ஒரு பதிவு.. குட்..

கார்த்திகைப் பாண்டியன் said...

அடடே...நூறாவது பதிவா... வாழ்த்துக்கள்.. தொடர்ந்து கலக்குங்க..

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
யப்பா.. படத்த பார்த்தாலே கண்ணக் கட்டுதே.. நண்பர்களுக்கு பதில் சொல்ல ஒரு பதிவு.. குட்..//

நன்றி கார்த்திகைப் பாண்டியன்

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
அடடே...நூறாவது பதிவா... வாழ்த்துக்கள்.. தொடர்ந்து கலக்குங்க..
//

உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன். 100 ரோ 1000 மோ .... மனதில் பதியக்கூடிய பதிவாக இருக்க வேண்டும் என் ஆசைகள்... முயற்சி செய்கின்றேன்.. வேலையின் பழு, மற்றும் சோம்பலின் காரணமாக சிந்தனா சக்தி குறைகின்றது.. பயிற்சி எடுக்க முயற்சி செய்கின்றேன்... நன்றிகள் கோடி

குடந்தை அன்புமணி said...

இது 100 ஆவது பதிவுக்கு
வாழ்த்துகள் !

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தைஅன்புமணி said...
இது 100 ஆவது பதிவுக்கு
வாழ்த்துகள் !//

வணக்கம் குடந்தை அன்புமணி..
உங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோடி

உமா said...

முதலில் வாழ்த்துக்கள் 100வது பதிப்பிற்கு.
தங்கம் நம் நாட்டில் தான் இப்படி அனாவசிய அலங்காரமாக பயன்படுத்தப்படுகிறது.[ நகை இல்லாமலே அவங்க அழகாக இருப்பாங்கல்ல]

மற்றபடி தங்கம் நகை மட்டுமில்லை.அது அரசின் கையிலிருக்கும் ஒர் ஆயுதம். பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த உதவும் ஒரு சாதனம். பணப்புழக்கம் அதிகமிருக்கும் போது [பட்ஜெட் நிதி பற்றாக்குறையை சரிகட்ட அதிகமாக பணம் அச்சிடடப்படலாம்]அல்லது விலை உயர்வு கட்டுக்கடங்காத போது அரசு தன்னிடமுள்ள தங்கத்தை விற்பதின் மூலம்[சந்தையில் அதிகமாக உள்ளப் பணம் உறிஞ்சப்படும்]பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரும்.[திரு சந்திரசேகர் பிரதமராக இருந்தகாலத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்த போது நாட்டின் கையிருப்பு தங்கத்தை வெளிநாட்டில் அடகு வைத்து பணம் திரட்டி நிதிநிலையை சீராக்கினார்.]

அச்சிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கு பின்னாலும் கொஞ்சம் தங்கம் இருக்கத்தானே செய்யும்.

ஏங்க ஆதவா நாமதாங்க ஓட்டாண்டி நம் நாட்டிலேயே 400 கோடிக்கு வீடு கட்டிக்கறவங்க இருக்காங்க.[அதன் பக்கத்திலேயே 40000 ஏழைகள் வசிக்கும் தாராவியும் உள்ளது] ஸ்சுவிஸ் பாங்க் பணம் கேள்விப்பட்டீங்க இல்ல. என்னப்பண்ணறது, நம்நாட்டில் சோஷியலிசம் என்பது தோற்றுபோன ஒன்று பணக்காரன் பணக்காரனாகவே இருக்கான் ஏழை இன்னும் ஏழையாகவே இருக்கான்.வெட்கக் கேடு.

மணி இரவு 8.30 [global earth hour]ஆகிவிட்டது. விளக்குகளை அணைக்கப்போகிறேன். நாமாவது கொஞ்சம் நல்லவங்களா இருப்போம்.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் உமா,
//முதலில் வாழ்த்துக்கள் 100வது பதிப்பிற்கு.//
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்

//தங்கம் நம் நாட்டில் தான் இப்படி அனாவசிய அலங்காரமாக பயன்படுத்தப்படுகிறது.[ நகை இல்லாமலே அவங்க அழகாக இருப்பாங்கல்ல] //

உண்மைதான் ....

//என்னப்பண்ணறது, நம்நாட்டில் சோஷியலிசம் என்பது தோற்றுபோன ஒன்று பணக்காரன் பணக்காரனாகவே இருக்கான் ஏழை இன்னும் ஏழையாகவே இருக்கான்.வெட்கக் கேடு.//

இது கலப்படமான் சனநாயக நாடு அதுதான்... வெட்கபடதான் முடியும்..

//மணி இரவு 8.30 [global earth hour]ஆகிவிட்டது. விளக்குகளை அணைக்கப்போகிறேன். நாமாவது கொஞ்சம் நல்லவங்களா இருப்போம்.//

வாழ்த்துகள்..
உங்கள் கருத்துகளுக்கு நன்றி உமா...

sury siva said...

நீங்கள் எனது வலைப்பதிவுக்கு வருகை தந்ததன் வழியாக உங்கள் பதிவுக்கு வந்தேன்.
தஞ்சையா நீங்கள் ? நானும் தஞ்சையே.

கோவில்களில் உத்சவ தினத்தன்று அலங்கரிக்கப்படும் அம்பாளைக்கூட மிஞ்சிவிடும் போல்
இருந்தது இந்த அம்மா செய்திருக்கின்ற நகை அலங்காரம்.

ஒருவேளை நகைக்கடை அதிபரின் பெண்ணோ !

மற்ற நாடுகளில் தங்கம் ஒரு மூலதனப் பொருளாகக்கருதப்படும்பொழுது, நமது நாட்டில்
அது ஒரு சென்டிமென்ட் அடிப்படையில் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடுமபமும்
தம் கையிருப்பில் உள்ள தங்க ஆபரணங்களை வைத்துத் தான் சமூகத்தில் தனது முகம்
காணப்படுகிறது என உறுதியாக நம்புகிறார்கள். ஒவ்வொரு திருமணத்தின் போதும் 20 முதல்
100 சவரன் வரை பெண்ணுக்கு போடவேண்டும் எனற கட்டாயத்திலும் பெண்ணைப்பெற்றவர்கள்
இருப்பதால், தங்க சேகரிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்திய மக்கள் மன நிலை மாறும் என்று தோன்றவில்லை.

சுப்பு ரத்தினம்.

ஆ.ஞானசேகரன் said...

//sury said...

இந்திய மக்கள் மன நிலை மாறும் என்று தோன்றவில்லை.

சுப்பு ரத்தினம்//

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

//sury said...

இந்திய மக்கள் மன நிலை மாறும் என்று தோன்றவில்லை.

சுப்பு ரத்தினம்//

ஐயா உங்கள் வலைபூக்கள் அனைத்தையும் எப்படி கவனம் செலுத்துகின்றீர்கள்....

உமா said...

இந்த படம் கண்டிப்பாக உண்மையானது அல்ல.எந்த பெண்ணும்
இப்படி அணியமாட்டார்கள். அணியவும் முடியாது. சும்மா வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டதாகத்தான் இருக்கும். ஆனாலும் நம்மை இவ்வளவு யோசிக்க வைத்துவிட்டது.

ஆ.ஞானசேகரன் said...

// உமா said...
இந்த படம் கண்டிப்பாக உண்மையானது அல்ல.எந்த பெண்ணும்
இப்படி அணியமாட்டார்கள். அணியவும் முடியாது. சும்மா வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டதாகத்தான் இருக்கும். ஆனாலும் நம்மை இவ்வளவு யோசிக்க வைத்துவிட்டது.//

மீண்டும் வணக்கம் உமா..
உண்மையோ பொய்யோ.. பலரிடம் பாராம்பரியம் என்று சொல்லி இதுபோல் தங்கமாலைகள் வைத்துள்ளார்கள் என்பது உண்மை... இந்த படம் மின்னஞ்சலில் வந்தது. கேரளா திருமணத்தில் எடுத்ததாக சொல்லப்படுகின்றது.. பக்கத்தில் உள்ள சின்ன பெண் பார்வையை வைத்து படம் உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகின்றது...

நன்றி உமா...

Tech Shankar said...

ஒரு பெண்ணின் கையெழுத்தால் இப்படி எழுதி அதைப் படிக்கும்போது மிக மகிழ்வாக இருக்கிறது..


//ஹேமா said...

ஞானசேகரன் இப்போ எல்லாம் கலர் கலரா உடுப்புக்கு ஏத்த மாதிரி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ,
டைட்டானியம்,பிளாஸ்டிக் ன்னு போடப் பழகிட்டு வரோம்.கவலையே இல்லை தங்கம் வேணும் ன்னு.

Tech Shankar said...

Congrats for 100th post. Yesterday I came here. but didnt look it. sorry

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்நெஞ்சம் said...
ஒரு பெண்ணின் கையெழுத்தால் இப்படி எழுதி அதைப் படிக்கும்போது மிக மகிழ்வாக இருக்கிறது..//

நன்றி நண்பரே....

//தமிழ்நெஞ்சம் said...
Congrats for 100th post. Yesterday I came here. but didnt look it. sorry//

உங்கள் வாழ்த்துகளுக்கு கோடி நன்றி தமிழ்நெஞ்சம்.....