_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, June 26, 2010

வாழ்க்கையினா,.. ஏதாவது ஒண்ணு வேணுங்க!....

வாழ்க்கையினா,.. ஏதாவது ஒண்ணு வேணுங்க!....

"யாரும் யாருக்காகவும் வாழவேண்டியதில்லை" என்பது என்னவோ சரிதான் போல தெரிகின்றது. ஆனால்
நாம் அப்படியா வாழ்ந்துக்கொண்டுள்ளோம்? இல்லையே!!!! நம் வாழ்க்கையை நம்மை சார்ந்த சூழல்கள்தான் நிர்ணயம் செய்துக்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடிவதில்லை.

ஒரு தவளை கதை ஒன்னுங்க...... தவளைகள் கூட்டமாக ஒரு மலையின் அடிவாரத்தில் நின்று பேசிகொண்டன அதில் ஒரு தவளை " யார் இந்த மலையில் உச்சியை முதலில் தொடுவார்கள் என்று பார்க்கலாமா?" என்று கேட்டது. அதில் சில தவளைகள் என்னால் முடியாது என்று நின்றுவிட்டது. சில தவளைகள் முயற்சிக்கலாம் என்று தயாரானது. அதன்படி சிலதவளைகள் உச்சியை நோக்கி புறப்பட்டது. ஆனால் கீழேயுள்ள தவளைகள் மேலே போகின்ற தவளைகள் பார்த்து "வேண்டாம் கால் வழிக்கும் நின்றுவிடுங்கள்.... இது வீண் முயற்சி" என்றேல்லாம சொல்லி சிரித்தன. அதை கேட்ட சில தவளைகள் பாதி தூரம் சென்றதும் நின்றுவிட்டது. இன்னும் சில தவளைகள் செல்லும் வழியில் சோர்வு அதிகமாகி நின்றுவிட்டன. ஆனால் ஒரு தவளை மட்டும் துள்ளி துள்ளி மலையின் உச்சியை அடைந்துவிட்டது. ஆச்சரியமாக அந்த மலையின் உச்சியை அடைந்த தவளைக்கு காது கேட்காது. அதன் வெற்றியின் ரகசியமே அதற்கு காது கேட்காததுதான்.... மற்ற தவளைகள் சொல்லிய முயற்சியற்ற வார்த்தைகள் இதனை பாதிக்கவில்லை. அதற்காக நமக்கும் காதுகேட்காமல் இருக்கவேண்டும் என்பதிற்கில்லை. மற்றவர்கள் சொல்லும் வசைசொற்களை புறந்தள்ளி வாழ்ந்தாலே வேற்றியின் படிகள் நமக்குதான்.


இதே போல இன்னொன்று சொல்லுவார்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்பொழுது நம்மை யாரோ விரட்டி வருவதாக நினைத்துக்கொண்டு ஓடினால் வெற்றி பெறலாம் என்றும் சொல்வதுண்டு. வாழ்க்கை ஓட்டத்திலும் அப்படிதாங்க நாம் ஓடிதான் ஆகவேண்டும் ஏன் ஓடவேண்டும் யாருக்காக ஓட வேண்டும் என்ற எண்ணங்கள் மனதில் ஓடினால் வாழ்வதற்கு அர்த்தமே இருக்காது. ஓடிதான் ஆகவேண்டும் ஓடிய தூரங்கள் நமது வேற்றியாக மகிழவேண்டும். இதுதான் வாழ்க்கை! இதுதான் நம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சப்பானியர்கள் உணவு வகைகளின் ஒரு வித்தியாசம் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படிதான் கடலிருந்து மீன் பிடித்து அந்த மீனை சாப்பிடுபொழுது அவர்களுக்கு திருப்தி அழிக்கவில்லை. மீனை பிடித்து கரைக்கு எடுத்து வரும்பொழுது அது இறந்து விடுகின்றது. அப்படி இறந்த மீனை உண்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை எனவே படகுகளில் தண்ணீர் தொட்டிகள் மூலம் மீன்களை எடுத்து வந்து சாப்பிட்டார்கள். அதுவும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. மீன்களை தண்ணீர் தொட்டிகளில் அடைக்கப்பட்டதால் மீன்கள் சோர்வாக இருக்கின்றன அதனால் அவர்களுக்கு திருப்தி தரவில்லை. மீண்டும் அந்த மீன்களுக்கு ஒரு புத்துணர்வு கொடுக்க அந்த மீன் தொட்டிகளில் ஒரு சுரா மீனை விட்டார்கள். சுராமீனால் விரட்டப்பட்டு தப்பித்த மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததால் அந்த மீனை உண்பதில் சப்பானியர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள் என்ற கதையும் உண்டு. ஆமாங்க நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு சுரா தேவைதான் படுகின்றது. நம் வாழ்க்கையில் ஓட வேண்டும் என்பது ஒரு மாயை எதையோ அடைய வேண்டும் என்பதும் ஒரு மாயை. அப்படிபட்ட வாழ்க்கை மாயையில் சுராவாக இருப்பது வாழ்க்கை ஓடத்தின் ஏற்ற இறக்கங்கள். எதையோ ஒன்றை நோக்கி ஓடவேண்டிய கட்டாயம். ஆனால் அதில் ஒருவரை அழித்து ஒருவன் வாழவேண்டும் என்ற எண்ணங்கள் எதனால்?........

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம் -பாரதிதாசன்

அழிந்து வரும் தமிழனுக்காக சின்னதாய் ஒரு முடிவு எடுப்பார்களா???... இந்த கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்............


நீண்ட இடைவெளியில் சின்னதாய் ஒரு இடுகை...
அன்புடன்...
ஆ.ஞானசேகரன்

22 comments:

நட்புடன் ஜமால் said...

தவளை ...

அறிவாளிகள் மத்தியில் வாய் மூடியிரு
அதுவற்றவர்கள் மத்தியில் காதுகளையும் ...

-------------------------

சின்னதா இல்லா பெருசா செய்வாங்க
இன்னும் எப்படி கொல்லலாமுன்னு ...

சொல்லரசன் said...

//எதையோ ஒன்றை நோக்கி ஓடவேண்டிய கட்டாயம். ஆனால் அதில் ஒருவரை அழித்து ஒருவன் வாழவேண்டும் என்ற எண்ணங்கள் எதனால்?.......//

நல்ல வேள்வி ஞானசேகரன
நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கிறோம் எப்படியிருக்கீங்க‌

ஆ.ஞானசேகரன் said...

//நட்புடன் ஜமால் said...
தவளை ...

அறிவாளிகள் மத்தியில் வாய் மூடியிரு
அதுவற்றவர்கள் மத்தியில் காதுகளையும் ...

-------------------------

சின்னதா இல்லா பெருசா செய்வாங்க
இன்னும் எப்படி கொல்லலாமுன்னு ...//


ம்ம்ம்ம்ம்ம் உண்மைதான் ஜாமால்...

ஆ.ஞானசேகரன் said...

[[சொல்லரசன் said...
//எதையோ ஒன்றை நோக்கி ஓடவேண்டிய கட்டாயம். ஆனால் அதில் ஒருவரை அழித்து ஒருவன் வாழவேண்டும் என்ற எண்ணங்கள் எதனால்?.......//

நல்ல வேள்வி ஞானசேகரன
நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கிறோம் எப்படியிருக்கீங்க‌]]

வாங்க சொல்லரசன் மிக்க நலம் நீங்கள்....

priyamudanprabu said...

நல்ல பதிவு

நம் நம்பிக்கை என்பது சிறிய செடிதான் அதை சில ஆட்டு மந்தைகள் தின்னபார்க்கும் ஒருவேளை அதுவே வளந்து பெரிய ஆலமரமா வந்தால் கேலி பேசிய ஆட்டுக்கூட்டம் மரநிழலில் இளைப்பார ஒதுங்கும்

. எங்கேயோ படித்தது

priyamudanprabu said...

சுறா தேவை???

விசய் படம் பார்க்கனுமா??

ஆ.ஞானசேகரன் said...

// பிரியமுடன் பிரபு said...

நல்ல பதிவு

நம் நம்பிக்கை என்பது சிறிய செடிதான் அதை சில ஆட்டு மந்தைகள் தின்னபார்க்கும் ஒருவேளை அதுவே வளந்து பெரிய ஆலமரமா வந்தால் கேலி பேசிய ஆட்டுக்கூட்டம் மரநிழலில் இளைப்பார ஒதுங்கும்

. எங்கேயோ படித்தது//

வாங்க பிரபு
நல்ல சிந்தனையோட்டம்...மிக்க நன்றிபா,..


//சுறா தேவை???

விசய் படம் பார்க்கனுமா??//

அடடேய்... இப்படியும் சொல்லுராங்கபா....

அன்புடன் நான் said...

மிக அருமையான சிந்தனைங்க... அந்த தவளை கதை மிக அருமை.

சப்பானியரின்... ருசி தகவல்.... எல்லாமே நல்லாயிருதது.....

அன்புடன் நான் said...

ஆனா சுறா மட்டும்... வேண்டாம்!

யாரையும் பழிவாங்க கூடாது!

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Very nice one. Very Self motivating.

Thanks
Arul

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

மிக அருமையான சிந்தனைங்க... அந்த தவளை கதை மிக அருமை.

சப்பானியரின்... ருசி தகவல்.... எல்லாமே நல்லாயிருதது.....//

மிக்க நன்றி கருணா


//ஆனா சுறா மட்டும்... வேண்டாம்!

யாரையும் பழிவாங்க கூடாது!//

சுறா என்பது ஒரு உந்து சக்தியாக எடுத்துகொள்ளலாம்

ஆ.ஞானசேகரன் said...

// Arul Senapathi said...

Very nice one. Very Self motivating.

Thanks
Arul//

நன்றி அருள்

ராஜ நடராஜன் said...

நேர் சிந்தனை தலைப்புங்க ஞானசேகரன்!

நமக்குத்தான் சுறா கிடைச்சிருச்சே!ஓட வேண்டியதுதான் பாக்கி:)

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு.

Muniappan Pakkangal said...

nalla pathivu Gnanaseharan.Athu enna azhinthu varum Thamizhanukkaaha-there must me unity in the people-Shall we expect it ?

ஹேமா said...

வணக்கம் ஞானம்.சுகம்தானே.எங்க நீங்க?நிறைய நாளாக் காணோம்!

ம்ம்ம்...தவளை கதை,சுறாக் கதை யோசிக்க வைக்குது.

அதென்ன அழிந்து வரும் தமிழனுக்காக....!

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு.பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிச்சயம் என்று சங்கே முழங்கு."

ஆ.ஞானசேகரன் said...

// ராஜ நடராஜன் said...

நேர் சிந்தனை தலைப்புங்க ஞானசேகரன்!

நமக்குத்தான் சுறா கிடைச்சிருச்சே!ஓட வேண்டியதுதான் பாக்கி:)//

வணக்கம் ராஜ நடராஜன்
ஓட்டத்தின் முடிவு நன்மையில் இருக்கட்டும்... மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...

நல்ல பதிவு.//

வணக்கம் டீச்சர்.. மிக்க நன்றிங்க...

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

nalla pathivu Gnanaseharan.Athu enna azhinthu varum Thamizhanukkaaha-there must me unity in the people-Shall we expect it ?//

வணக்கம் டாக்டர்... குறைந்த பச்ச ஒன்றுமை மொழிக்காவது இருக்கட்டுமே...

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...

வணக்கம் ஞானம்.சுகம்தானே.எங்க நீங்க?நிறைய நாளாக் காணோம்!

ம்ம்ம்...தவளை கதை,சுறாக் கதை யோசிக்க வைக்குது.

அதென்ன அழிந்து வரும் தமிழனுக்காக....!

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு.பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிச்சயம் என்று சங்கே முழங்கு."//

வணக்கம் ஹேமா,.. வேலையின் பளு இந்த பக்கம் வரமுடிவதில்லை முடிந்தாலும் பின்னூட்டம் இட நேரம் ஒதுக்க முடிவில்லை... மிக்க நன்றி ஹேமா...

CorTexT (Old) said...

//"யாரும் யாருக்காகவும் வாழவேண்டியதில்லை" என்பது என்னவோ சரிதான் போல தெரிகின்றது//

இது சரியா, தவறா என்பது அவரவர் பார்வையை, பார்வைக் கோணத்தை பொருத்தது. ஏனெனில், சரி தவறெல்லாம் நாமாக உருவாக்கி கொண்டது. ஆனால் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம்; அவ்வாறே நாம் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளோம். அதையும் மீறி எந்த மனிதரையும் சாராமல் வாழ்வோரும் உண்டு (வாழ்வின் சில பகுதியாவது; யோகி அல்லது புத்த பிச்சிகளை போல்). ஆனால், அவர்கள் எதை சாதித்தார்கள் என்று தான் தெரியவில்லை.

//மற்றவர்கள் சொல்லும் வசைசொற்களை புறந்தள்ளி வாழ்ந்தாலே வேற்றியின் படிகள் நமக்குதான்.//

ஆனால் வெற்றி என்று எதை சொல்லுகின்றீர்கள். ஆக... மலையின் உச்சியை அடைந்த தவளை எதை சாதித்தது என்று நினைக்கின்றீர்கள். வாழ்வின் வெற்றியை சற்றே வேறுமாதிரி பார்த்தால், வசைசொற்கள் அறிவுரையாக மாறிவிடும். முதலில் வாழ்வின் அர்த்தம் என்ன என்பது தெரிந்தால் தான், அதன் வெற்றி என்ன என்பதை முடிவு செய்ய முடியும். பரிணாமம் சிறிதளவு புரிந்தால், வாழ்விற்கு எந்த பெரிய அர்த்தமும் இல்லை என்பது அப்பட்டமாக தெரியும். அதானால் என்ன? நீங்களே உங்களுக்கு பிடித்த ஒன்றை உங்கள் வாழ்வின் அர்த்தமாகவோ அல்லது கனவாகவோ வைத்து கொள்ளுங்கள். அதை, நீங்கள் கூறுவது போல் "எதையோ ஒன்றை நோக்கி ஓடவேண்டிய கட்டாயம்" என்று வைத்து கொள்ளலாம் என்றாலும், அதில் எதற்கு "கட்டாயம்"?

//நம்மை யாரோ விரட்டி வருவதாக நினைத்துக்கொண்டு ஓடினால்//
//நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு சுரா தேவைதான் படுகின்றது//
//ஆனால் அதில் ஒருவரை அழித்து ஒருவன் வாழவேண்டும் என்ற எண்ணங்கள் எதனால்?//

வாழ்விற்கு எந்த பெரிய அர்த்தமும் (நீங்கள் நினைப்பது போல்) இல்லை என்றாலும், நாம் பல இலக்குகளுடன் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம்...அவ்வாறே நாம் வடிவமைக்கப் பட்டுள்ளோம். அதில் சுராவும் உண்டு, அடுத்தவரை அழித்து வாழ வேண்டும் என்ற எண்ணங்களும் உண்டு, நம்மையே நாம் ஏமாற்றி கொள்ளும் "யாரோ விரட்டி வருவதாக நினைக்கும்" வினோதங்களும் உண்டு. அதை மீற, நீங்கள் என்ன இயற்கைக்கு அப்பாற்பட்டவரா?

ஆ.ஞானசேகரன் said...

@... CorText


உங்களின் பார்வையில் நல்ல விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள். நல்ல பகிர்தலுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்...