_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, September 13, 2010

எனர்ஜி பூஸ்ட் (energy boost) ஒரு துளியில்....

எனர்ஜி பூஸ்ட் (energy boost) ஒரு துளியில்.....

(இணையத்தில் சுட்டப்படம்)

இதற்கு முன் சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்
வலைப்பக்கத்தில் மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....
என்ற ஒரு இடுகை எழுதியிருந்தேன், சுட்டியை ஒரு முறை சுட்டுங்கள். நன்றி நண்பர்களே! உங்களின் எனர்ஜி உங்களின் கைகளில் இருக்கும்பொழுது எங்கே தேடுகின்றீகள்? அட ஆமாங்க நல்லா பாருங்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அதை எடுத்து சுவைக்கதான் நாம் மறந்துவிடுகின்றோம்.

என்னோடு வேலை செய்யும் ஒரு சீன நண்பர் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. ஏன் என்று விசாரித்ததில் அவருக்கு தோண்டை புற்று நோய் வந்து சிகிச்சையில் இருக்கின்றார் என்றும் பிழைப்பது மிக கடினம் என்றும் சொன்னார்கள். ஆனால் சில மாதங்களுக்கு பின் அவர் வேலைக்கு வந்தார். அவரை பார்த்ததும் ஆச்சரியம் கலந்த ஒரு மகிழ்ச்சி இருந்தது. அவரை பார்த்து "நான் (How are you sir?) நலமாக இருக்கின்றீர்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே" ( Till i am live) இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்" என்றார். அதை கேட்டதும் எனது மூச்சு காற்று சிறிது நின்றே வந்தது. என்ன வார்த்தை அது! ஆனால் அவர் அதை சிரித்துக்கொண்டே சொன்னார். அவரின் எதார்த்தம் இன்னும் அவரை வாழவிடுகின்றது. இன்னும் பல அவர் சொல்லுவார்..... " நான் தினமும் காலையில் எழுந்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பேன்"..... அந்த மகிழ்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. " என்று கூறுவார்..... ஏன் அப்படி என்று கேட்டால் " ஆகா நான் இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்.... இன்னும் அப்படியே இருப்பேன் என்ற நம்பிக்கை வரும் அதனால்தான் நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்" என்று சொல்லுவார். நம்மில் எத்தனை பேர் அந்த மகிழ்ச்சியை அனுபவித்துள்ளோம்... அவர் இன்றும் அதே நம்பிக்கையில் நலமாக இருக்கின்றார். அவரிடம் இருக்கும் எனர்ஜி பூஸ்டை சுவைப்பதினால் அவரால் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகின்றது. (பின் குறிப்பு: உறக்கம் என்பது தற்காலிக மரணம் என்று சீனர்கள் நம்புவதுண்டு. உறக்கதிலிருந்து எழுந்ததும் கடவுளிடம் நன்றி சொல்வதும் அவர்களின் பழக்கம்).

நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமில்லை நம்மோடு இருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்வை கொடுக்கும்... கொடுப்பதினால் குறையா பொக்கிசம் கொடுக்கப்பட்டால் வளருமேயன்றி குறையாது.......

கவணக்குறைவாக சாலையை கடக்கும்பொழுது எதிரே வரும் வண்டியை கவணிக்காமல் செல்கின்றோம். வண்டி ஓட்டுனர் விரைவாக வண்டியை நிறுத்துகின்றார். அப்போழுதான் நம்முடைய கவணக்குறைவை உணர்கின்றோம்.. உடனே வண்டி ஓட்டுனருக்கு கையை உயர்த்தி நம்முடைய நன்றியையும் சிரமபடுத்தியதற்கு வருத்ததையும் தெரியப்படுத்தலாம். ஏன் மன்னிப்பை கூட தெரிவிக்கலாம். இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். வண்டி ஓட்டுனருக்கு மன அதிர்வை குறைக்க முடியும்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

அலுவலகம் ஒன்றிக்கு மகிழுந்தில்(car) செல்கின்றோம். காவலாளி கதவை திறந்து விடுகின்றார். கதவை திறந்த காவலாளிக்கு கையை உயர்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரியப்படுத்துகின்றோம். கதவை திறந்துவிடுவது அவரின் வேலையாக இருக்கலாம், நீங்கள் அப்படி செய்வதினால் அவரால் அந்த வேலையை சோர்வின்றி செய்ய முடிகின்றது. மறுமுறை நீங்கள் வரும்பொழுது உங்களை இன்னும் மகிழ்வுடன் வரவேற்று கதவை திறந்துவிடுவார்...... காலதாமதமாக அவர் திறந்துவிட்டால் நீங்களும் மன அழுத்ததிற்கு ஆளாவீர்கள் அதனால் அவரும் மன அழுத்தம் கொள்வார்..... இது அனைவருக்குமே நற்பயனை அழிக்காது..... நீங்க செய்வது ஒன்றுதான் சிறிது கையை உயர்த்தி வணக்கமும் நன்றியும் சொல்வதுதான்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் கத்திரிக்கா வாங்குகின்றார்.... கத்திரிக்கா கொடுத்ததும் அதற்கு சாமமான காசை கொடுக்கின்றார். வாடிக்கையாளருக்கு ஒரு " நன்றிங்க" என்று சொல்வதினால்!............ வாடிக்கையாளர்க்கு கத்திரிக்காவின் விலையின் கடினம் அற்றுபோய் மகிழ்வைதான் கொடுக்கும். அதனால் மீண்டும் பல முறை உங்கள் கடைக்குதான் வருவார்.... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட நம்கைகளில்தான் இருக்கின்றது!

நன்றி, வணக்கம், சிரமத்திற்கு கொடுக்கும் வருத்தம், சிறிய மன்னிப்பு இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்டை தாரளமாக கொடுப்பதினால் நம்மால் நாமும், நம்மால் அவர்களும் உச்சாகமுடன் மகிழ்வை அடைய முடிகின்றது......

எல்லோருக்கும் மகிழ்வை கொடுக்கும் எனர்ஜி பூஸ்ட் சிறு துளியில் இருக்கும்பொழுது.... அதை பயன்படுத்தி பயனாகலாம்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

20 comments:

ஹேமா said...

எனர்ஜி பூஸ்ட் என்று அழகாகப் பெயர் குடுத்திருக்கீங்க ஞானம்.சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை.ஆனால் நம்மவர்கள் வாயால் மனதார வாழ்த்து,நன்றி,மன்னிப்பு என்கிற சொல் வருவதென்றால் பெரும் கஸ்டம் !

அந்தந்தச் சமயத்தில் தேவையானதைச் சொல்வதால் நாங்களும் சந்தோஷம் அடைகிறோம்.மனப்பாரமும் குறைகிறது.சம்பந்தப்படவரும் மகிழ்வார்.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

எனர்ஜி பூஸ்ட் என்று அழகாகப் பெயர் குடுத்திருக்கீங்க ஞானம்.சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை.ஆனால் நம்மவர்கள் வாயால் மனதார வாழ்த்து,நன்றி,மன்னிப்பு என்கிற சொல் வருவதென்றால் பெரும் கஸ்டம் !

அந்தந்தச் சமயத்தில் தேவையானதைச் சொல்வதால் நாங்களும் சந்தோஷம் அடைகிறோம்.மனப்பாரமும் குறைகிறது.சம்பந்தப்படவரும் மகிழ்வார்.//

வணக்கம் ஹேமா,...
நீங்கள் சொல்வது போல நம்மவர்களுக்கு இப்படிபட்ட பழக்கம் குறைவாகதான் இருக்கு... என்ன செய்வது அவர்கள் வளரும் சூழல்.

மிக்க நன்றி ஹேமா

நட்புடன் ஜமால் said...

ரொம்ப எளிமையா வளிமையான விடயத்தை சொல்லிட்டீங்க

அருமை நண்பா

காமராஜ் said...

அன்பு நண்பா ஞான்ஸ். ஆசை முகம் மறந்து போச்சே இதை நான் யரிடம் சொல்வேனென்கிற குற்ற உணர்வோடு வருகிறேன்.
ரொம்ப எளிமையா சுருக்குனு தைக்குது நண்பா. எளிமை எல்லா கலத்துக்கும்,எல்லா தேசத்துக்கும் பொருத்தமானது.

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

ரொம்ப எளிமையா வளிமையான விடயத்தை சொல்லிட்டீங்க

அருமை நண்பா//

வணக்கம் நண்பா,..

மிக்க நன்றி....

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

அன்பு நண்பா ஞான்ஸ். ஆசை முகம் மறந்து போச்சே இதை நான் யரிடம் சொல்வேனென்கிற குற்ற உணர்வோடு வருகிறேன்.
ரொம்ப எளிமையா சுருக்குனு தைக்குது நண்பா. எளிமை எல்லா கலத்துக்கும்,எல்லா தேசத்துக்கும் பொருத்தமானது.//

அன்பின் நண்பா,.. வணக்கம்
என்னாலும் உங்கள் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. கடினமான சூழல்களே காராணம்..
உங்களின் அன்பிற்கு ஆயிராமாயிரம் வணக்கங்கள்.. மிக்க நன்றி நண்பா

sakthi said...

இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். வண்டி ஓட்டுனருக்கு மன அதிர்வை குறைக்க முடியும்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

நிஜம் தான் நல்லதொரு பகிர்வுங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் சரியாக சொல்லியிருகிறீர்கள்.... தவறுகள் செத்தால் மன்னிப்பு கேப்பதிலும்.. செய்தவர்களை மன்னிப்பதிலும்.... பிறருக்கு நன்றி சொல்வதனாலும் யாரும் குறைந்து போய் விடுவதில்லை... மாறாக நமக்கும் அவர்களுக்கும் ஒரு வித மன மகிழ்வே ஏற்ப்படுகிறது...

பொதுவாக சாரி என்ற சொல் எல்லோரும் எப்போதும் உபயோகிக்கும் ஓன்று.. ஆகையால் அந்த சொல்லுக்கு இன்று மரியாதை குறைந்து விட்டது எனலாம்... மாறாக தமிழர்களிடம் மன்னித்து விடுங்கள் என்ற வார்த்தைக்கு மதிப்பு அதிகம்... முறைத்துக்கொண்டு வந்தவர்கள் கூட புன்னகைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்...என் அனுபவத்தில்...

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். வண்டி ஓட்டுனருக்கு மன அதிர்வை குறைக்க முடியும்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

நிஜம் தான் நல்லதொரு பகிர்வுங்க//

வாங்க சக்தி,... மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// வெறும்பய said...

மிகவும் சரியாக சொல்லியிருகிறீர்கள்.... தவறுகள் செத்தால் மன்னிப்பு கேப்பதிலும்.. செய்தவர்களை மன்னிப்பதிலும்.... பிறருக்கு நன்றி சொல்வதனாலும் யாரும் குறைந்து போய் விடுவதில்லை... மாறாக நமக்கும் அவர்களுக்கும் ஒரு வித மன மகிழ்வே ஏற்ப்படுகிறது...//

உண்மைதான் நண்பா... அப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்டை சுவைக்காமல் இருப்பது நம் குற்றமே..

//பொதுவாக சாரி என்ற சொல் எல்லோரும் எப்போதும் உபயோகிக்கும் ஓன்று.. ஆகையால் அந்த சொல்லுக்கு இன்று மரியாதை குறைந்து விட்டது எனலாம்... மாறாக தமிழர்களிடம் மன்னித்து விடுங்கள் என்ற வார்த்தைக்கு மதிப்பு அதிகம்... முறைத்துக்கொண்டு வந்தவர்கள் கூட புன்னகைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்...என் அனுபவத்தில்...//

நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பா,...

CorTexT (Old) said...

நன்று!

ஒருவரின் மனநிலை அவரை சுற்றியுள்ளவர்களை மட்டுமல்லாமல் அதன் தொடர்வினையாக ஒரு பெரிய வட்டத்தையே பாதிப்பதாக சமிபத்திய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்துகின்றது. இது சிக்கலான ஒன்றுக்கொன்றுடன் தொடர்புடையது. அவ்வாறே ஒரு சமுகம்/இனம் மற்ற சமூகத்தை விட மகிழ்ச்சியாக இருக்கின்றது. மற்றவர் நன்றாக இல்லை என்றால், நாமும் நன்றாக இருக்க முடியாது. நம் வீட்டை மட்டும் சுத்தபடுத்திவிட்டு நம் நாட்டை சாக்கடையாக வைத்துக்கொண்டு சந்தோசத்தையோ சுகாதாரத்தையோ எதிர்பார்க்க முடியாது.

உணர்ச்சி-அறிவின் (Emotional Intelligence) படி நம்முடைய உணர்ச்சிகளுக்கு நேர்மையாக, அதாவது உணர்ச்சிகளை அடக்கி போலியாக இல்லாமல், நடிக்காமல் இருப்பது நல்லதாக தெரிகின்றது. அதே நேரம் சிந்திக்கும்-அறிவின் நோக்கமே உணர்ச்சிகளை சரியாக கட்டுபடுத்தி வெளிபடுத்துவதே. இவை இரண்டிற்கும் இடையே தகுந்த சமரசம் செய்வது நமக்கும் உலகிற்கும் நல்லது.

jothi said...

எல்லாரும் தெம்பா இருக்க பூஸ்ட் தேவை என அழகாய் சொல்லி இருக்கீர்கள். அது எப்படியோ இந்த விளம்பரத்துடன் ஒத்துப்போய் விட்டது.

"Boost is the secret of our energy"

ஆ.ஞானசேகரன் said...

//CorText said...

//
நீங்களும் மிக சரியாக விளக்கியுள்ளீர்கள்... மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஆ.ஞானசேகரன் said...

//jothi said...
எல்லாரும் தெம்பா இருக்க பூஸ்ட் தேவை என அழகாய் சொல்லி இருக்கீர்கள். அது எப்படியோ இந்த விளம்பரத்துடன் ஒத்துப்போய் விட்டது.

"Boost is the secret of our energy"//

வணக்கம்...
நன்றியும் மகிழ்ச்சியும்

அன்புடன்
ஆஞானசேகரன்

S.Gnanasekar said...

"எனர்ஜி பூஸ்ட்"
நல்ல பதிவு
ஒருவர் நமக்கு உதவி செய்யும் போது நன்றி என்றும் தவறு செய்யும் போது மன்னிக்கவும் என்று எத்தனை பேர் சொல்கிறோம். அப்படி நன்றி,மன்னிக்கவும் சொல்லும் போது எதிர் தரப்பில் இருந்து வரும் பதில் இரண்டு விதமாகவும் இருக்கும். சாதகமான பதிலை விட எதிரான பதில்தான் அதிகமாக இருக்கும். எது எப்படியோ உதவி கிடைக்கும் போது நன்றியும், தவறு செய்யும் போது மன்னிக்கவும் என்று சொல்லும் போது கேப்பவருக்கு எப்படி இருக்குமோ தெரியாது சொல்பவருக்கு எனர்ஜி பூஸ்ட்டாக இருக்கிறது.
நன்றி நன்பர் ஆர்.ஞானசேகரன் அவர்களே...

சோ.ஞானசேகர்.

ஆ.ஞானசேகரன் said...

//S.Gnanasekar said...

சோ.ஞானசேகர்.//

வணக்கம் ஐயா... நீங்கள் சொல்வதும் உண்மைதான்... அந்த எனர்ஜி பூஸ்டை சுவைக்காமல் இருக்கும் வரை அப்படிப்பட்ட சூழல் இருக்கதான் செய்யும். சுவைக்க கற்றுக்கொண்டால்.... அதன் வேகமே தனி. அதற்கு நல்ல உதாரணமாக இருப்பது சிங்கபூர் வளர்ச்சி

மிக்க நன்றி ஐயா

Muniappan Pakkangal said...

Nice post Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

Nice post Gnanaseharan.//

மிக்க நன்றி சார்

priyamudanprabu said...

நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமில்லை நம்மோடு இருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்வை கொடுக்கும்... கொடுப்பதினால் குறையா பொக்கிசம் கொடுக்கப்பட்டால் வளருமேயன்றி குறையாது.......
//

YES
NICE POST

ஆ.ஞானசேகரன் said...

[[பிரியமுடன் பிரபு said...

நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமில்லை நம்மோடு இருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்வை கொடுக்கும்... கொடுப்பதினால் குறையா பொக்கிசம் கொடுக்கப்பட்டால் வளருமேயன்றி குறையாது.......
//

YES
NICE POST]]

நன்றிப்பா.....