வணக்கம் நண்பர்களே!.......
நீண்ட நாட்களாக ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்கபடாமலே போய்விட்டது. அதை தூசி தட்ட ஒரு வாய்ப்பு ஒரு நண்பர் வழங்கியுள்ளார். நேற்று ஒரு நண்பர் facebook ல் என்னுடைய தளத்தை படித்துவிட்டு மேலும் சில கேள்விகள் கேட்டிருந்தார். அதாவது உராய்வை பற்றி நான் எழுதியலிருந்து சந்தேகம் எழுந்ததாக சொல்லியுள்ளார்.... அதன் சுட்டி ஏன்? எதற்கு? எப்படி?..... 4
அவர் கேட்ட கேள்வி. How to increase and decrease friction? அதாவது எப்படி உராய்வை அதிகப்படுத்துவது? மற்றும் குறைப்பது? இந்த கேள்விக்கு முன் உராய்வை பற்றி தெரிந்துக்கொள்ள சுட்டியை தட்டுங்கள் ஏன்? எதற்கு? எப்படி?..... 4 உராய்வு என்றால் என்ன என்பதை அறிந்துக்கொண்டோம். இரண்டு தளங்கள் அல்லது பரப்புகள் ஒன்றோடு ஒன்று உராயந்து நகரும் பொழுது உருவாகும் எதிர் விசைதான் "உராய்வு"(friction) என்று அழைக்கின்றோம். மேலே நண்பர் கேட்ட கேள்விக்கு முன் நாம் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.... உராய்வினால் என்ன பயன்? உராய்வை ஏன் அதிகபடுத்த வேண்டும்? ஏன் குறைக்க வேண்டும்? அதன் பின் எப்படி குறைக்கலாம்?, அதிகப் படுத்தலாம்? என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

உராய்வு நடைபெறும் பொழுது இயக்காற்றல் வெப்பற்றலாக மாறுகின்றது. நாம் நடக்க, ஓட உராய்வு பயனாகின்றது. மேலும் எழுத, கார் ஓட்ட உராய்வு பயனாகின்றது...... இங்கே நாம் வேகமாக ஓட, நடக்க, எழுத, கார் ஓட்ட.... உராய்வு விசை தடையாக இருக்கின்றது. எனவேதான் மனிதன் சிந்தித்தான்... எப்படி உராய்வை குறைத்து வேகத்தை அதிகப்படுத்தலாம்? உராய்வு நடைபெறும் இடத்தில் உயவுநெய்கள், உயவு இளகிகள், மசகு,மசகெண்ணைகள் பயன்படுத்தினால்..... வேகம் அதிகமாகும் அதேபோல் தாங்கிகள் பயன்படுத்தும்பொழுது கார் மற்றும் எந்திரங்கள் வேகமும் அதிகப்படுத்த முடியும். இதிலிருந்து உராய்வை குறைக்க உயவுநெய்கள், உயவு இளகிகள், மசகு,மசகெண்ணைகள்,தாங்கிகள் பயன்படுத்தபடுகின்றது.
அடுத்ததாக எப்படி உராய்வை அதிகப்படுத்தலாம்? அதிகபடுத்துவதால் என்ன பயன்? சொரசொரப்பான தளங்களை பயன் படுத்துவதின் மூலம் உராய்வை அதிகப்படுத்தலாம்.... உராய்வை அதிகப்படுத்துவதினால். ஓடும் வண்டியை நிறுத்தப்படுகின்றது. தீப்பெட்டியிருந்து தீக்குச்சியை உரசுவதினால் தீ உண்டாகின்றது.
மனிதனின் தேவைக்கெற்ப உராய்வை அதிகபடுத்தவோ! அல்லது குறைக்க செய்தோ! முழுமையாக பயன்படுத்துகின்றான்....
மேலும் கேள்விகளுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
8 comments:
வணக்கம் ஞானா ,
என்ன திடீர்னு அறிவியல் பக்கம் ம்ம்ம் புது முயற்சி தகவல்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு
தொடருங்கள்
நட்புடன் ,
கோவை சக்தி
நீண்ட நாளின் பின் கேள்வி பதிலோடு.சுகம்தானே நீங்கள் !
//sakthi said...
வணக்கம் ஞானா ,
என்ன திடீர்னு அறிவியல் பக்கம் ம்ம்ம் புது முயற்சி தகவல்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு
தொடருங்கள்
நட்புடன் ,
கோவை சக்தி//
வணக்கம் சக்தி
கற்றுகொண்டதை கற்றுகொடுக்க.... மற்றவை உங்கள் ஆசியுடன்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
// ஹேமா said...
நீண்ட நாளின் பின் கேள்வி பதிலோடு.சுகம்தானே நீங்கள் !//
வணக்கம் ஹேமா
நல்ல சுகம் நீங்கள்?
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
உங்கலின் இந்த ஏன் எப்படி மாறூபாட்ட கோணாத்தீள் பால செய்திகலை விலக்கு கிரது பாராட்டுகசல்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
வணக்கம் ஞானசேகரன்...
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
[[ சி.கருணாகரசு said...
வணக்கம் ஞானசேகரன்...
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்]]
வணக்கம் நண்பா
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
Post a Comment