_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, October 17, 2008

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள்

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போன்று நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள்..

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் : "நாட்டிலுக்கா' அழிவில் அரங்கேற்றம் : தசாவாதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கண்ணாடி குடுவையில் உள்ள வைரஸ் கிருமி (கடல் தண்ணீரில் விழுந்தால்) காற்றில் கலந்தால் அது கண்மூடி திறப்பதற்குள் பல மடங்கு அதிகரித்து உலக அழிவை ஏற்படுத்தும் என்பதால் அந்த குடுவையை கைப்பற்றும் முயற்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்த கமல் ஈடுபட்டிருப்பார். இருப்பினும் வில்லனால் அந்த குடுவை கடல் தண்ணீரில் விழுந்து வைரஸ் கிருமிகள் வெளியேறும். அப்போது மழை பெய்வதோடு சுனாமி ஏற்பட்டு அந்த வைரஸ் கிருமிகளுக்கு முற்றுபுள்ளியை ஏற்படுத்தும். அதேப்போன்று தற்போது மன்னார் வளைகுடாவிற்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய அழிவு மழையினால் தடுக்கப்பட்டுள்ளது. தனது பரப்பளவை அதிகரித்துக் கொண்டிருந்த "நாட்டிலுக்கா' கனமழையினால் காணாமல் போனது. அதேப்போன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த சிப்பிகள், மீன்கள் அனைத்தும் கடல் அலைகளால் இழுக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விட்டன. இதனால் கடற்கரை தூய்மையாக்கப்பட்டுள்ளது. தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போன்று இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதை நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள் இயற்கைக்கு என்றும் அழிவில்லை என்ற கருத்தை உறுதிபடுத்தினர்.

மேலும் அதிகப்படியான செய்தியைப் படிக்க தினமல்ர் சுட்டியை சுட்டவும் நன்றி தினமலர்

Thursday, October 16, 2008

அப்பத்தாவும் அம்மாவாசையும்!..

அப்பத்தாவும் அம்மாவாசையும்!..
ஏல பொன்னுதாயி, அப்பத்தா எப்படியிருக்கு? இன்னும் அப்படியேதான் இருக்கு சித்தப்பு, இந்த அம்மாவாசை வந்தா தெரியும் பாக்கலாம்.... நல்ல மவராசி ரொம்ம சிரமபடுது பொறந்த புள்ளைக்கு சொல்லியனுப்பி இந்த அம்மாவாசைக்கு எண்ணெய் தேச்சி விடலாமில்ல சொல்லும் சித்தப்பு. ஆமாம் சித்தப்பு அப்பாதான் வேணாங்குது... எத்தனை நாளைக்குதான் வேலை வெட்டி போகாம சிரமப்படுரது....

இப்படி கிராமபுறங்களில் பெசிக்கொள்வதை கேட்டுயிருக்கலாம். அப்பத்தாவிற்கும் அம்மாவாசைக்கும் என்ன தொடர்பு? அப்பத்தாவிற்கு என்ன பிரச்சனை, எதற்காக எண்ணெய் தெய்க்க வேண்டும்? மனிதன் வயதாவதும் முதுமையை அடைவதும் இயற்கைதானே! இந்த முதுமையின் கொடுமை மரணத்தை எதிர்நோக்குவது. இப்படி மரணத்தை நோக்கி செல்லும் அப்பத்தாவை பற்றிதான் இவர்கள் பேசிக்கொள்வது.

இந்த அப்பத்தா 80 வயதை தொட்டவள், இப்பொது உயிர் மட்டுமே இருக்கு. அவளுக்கு எந்த நினைவுகளும் இல்லை ஏதொ கொஞ்சம் எப்பொதாவது பால் மற்றும் நீர் உணவு, கழிப்பிடம் எல்லாமே அதே இடம்தான். படுத்த நிலையில் இருப்பதால் உடம்பெல்லாம் புண்ணாகி எறும்புக்கு உணவாகி கொண்டிருக்கின்றாள்.. எப்போதாவது உடலில் அசைவு வரும். இந்த மரண அவஸ்தையை பற்றிதான் இப்படி ஒரு பேச்சி.

அம்மாவாசையை எதிர்பார்ப்பது, இவளின் முழுநித்திரைக்குதான். அம்மாவாசையன்று சூரியனின் கதிர்கள் சற்றே தடுக்கப்படுவதால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் என்பது விஞ்ஞானம். (குறைந்த விஷத்தன்மை பூச்சி கடித்தவர்களுக்கு அம்மாவாசையன்று தடிப்பதும் இந்த எதிர்ப்பு தன்மை குறைவால்தான்).

எண்ணெய் தேய்ப்பது எதனால்? நம்மில் பலர் மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குழிப்பார்கள் உடம்பில் உள்ள சூடு குறையும் என்பது நம்பிக்கை. ஆனால் எண்ணெய் தேய்த்து குழிப்பதனால் எந்த பயனும்மில்லை என்பது நவீன மருத்துவம். எண்ணெயிட்டு குழிப்பதனால் உடலின் எதிர்ப்பு சக்தி தற்காலியமாக குறைகின்றது. இதனால்தான் உடல் சோர்வும் தூக்கமும் வரும் என்பது விஞ்ஞானம். இந்த சோர்வு பெரிதாக பாதிப்பு ஒன்றுமில்லை. அம்மாவசையன்று அப்பத்தாவிற்க்கு எண்ணெய் தேய்த்து குழிப்பதனால் ஏற்படுவதுதான் நிரந்தர நித்திரை.....

மரணப்படுக்கையில் சிரமப்படும் முதியோர்களுக்கு செய்யும் கருணை கொலைதான் அம்மாவாசையில் எண்ணெய் தேய்த்து குழிப்பாட்டுவது. அம்மாவசையில் எதிர்ப்பு சக்தி குறைந்த நேரத்தில் எண்ணெயிடுவதால் மேலும் சக்தியிலந்து மரணத்தை தொட்டுவிடுகின்றது.

இந்திய சட்டத்தில் இன்னும் கருணைக் கொலைக்கு அனுமதியில்லை, பரிந்துரை நிலையிதான் உள்ளது. இந்த எண்ணெய் தேய்ப்புக்கு விஞ்ஞான அதாரம் இல்லை ஆனால் இன்னும் சில இடங்களில் நடத்தப்படுகின்றது.

ஒரு சில: முதல்மரியாதை திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் முதுமை மரணகாட்சியை நம் கண்முன் காட்டுவார். மரணப்படுகையில் இருப்பவர் ஆசையை தவிற்காமல் இருந்தால் மரண சிரமம் நீடிக்கும் என்பதும் நம்பிக்கை. சிவாஜியின் ஆசை தன் காதலி ராதவை பார்த்துவிடவேண்டும், ராதா சிறையிலிருந்து வந்து பார்த்ததும் மரணம் சம்பவிக்கும்படி காட்சி இருக்கும்... இன்றும் மனதை தொட்ட காட்சி...

Wednesday, October 15, 2008

பாவாடை தாவணியில் சினேகா.

பாவாடை தாவணியில் சினேகா.


Tuesday, October 14, 2008

வருவேனா? வரமாட்டேனா? வராட்டி சொல்லமாட்டேன் போ!.. குழப்பத்தில் எந்திரன்...

வருவேனா? வரமாட்டேனா? வராட்டி சொல்லமாட்டேன் போ!.. குழப்பத்தில் எந்திரன்...

என்னப்பா, ரஜினி அரசியலுக்கு வந்தா எல்லொரையும் போல நாலு காசு பாக்கலாம் என்று எதிர் பார்த்த ரசிகர்களுக்கு மேலும் மேலும் ஏமாற்றமே! அவருக்கொ தன்னுடைய வியாபாரம் முக்கியம் ரசிகனுக்கோ நாலு காசு முக்கியம் என்னபன்னுரது. இடையில் பொறுமையிலந்த கோவை ரசிகர்கள் கட்சியும் அரம்பித்து போஸ்டரும் கலக்கிவிட்டனர்.


கடந்த 7ம் தேதி ரஜினி பெயரில் சிலர் கட்சி துவங்கி, கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்கட்சியில் ரஜினி சேர வேண்டும் என கெடுவும் விதித்திருந்தனர். இது அபத்தமான, கண்டிக்கத்தக்க செயல். விரைவில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பார். அரசியல் குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ரசிகர்கள் அவரை நிர்பந்திக்கக் கூடாது. "ரஜினி ரசிகர்' என்ற போர்வையில் கேலிக்கூத்து நடத்திய, மாஜி மாவட்ட துணைச் செயலர் அபு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டார். கோவையில் கட்சி துவங்கி, ரஜினியின் புகழுக்கு அவப்பெயர் உண்டாக்க முயன்றவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மன்றத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நபர்கள் மேற்கொண்டு போஸ்டர்கள் ஒட்டி பிரச்னை ஏற்படுத்தினால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்; போலீசிலும் தெரிவிக்கப்படும். இவ்வாறு உலகநாதன் கூறினார்

இதற்க்கு மேல் ரஜினி நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களிடம் எதிர்ப்புதான் வரும். இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர் குழப்பத்திலிருந்து இன்னும் வெளிவராமல் மீண்டும் ரசிகனை குழப்பியும் உள்ளார். இதுதான் எந்திரனிம் வியாபரயுத்தி!...

அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது' என இறுதியாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகி
றேன். அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை நான் வரவேற்பேன்


இதுபோதும் எந்திரனின் வெற்றி விழாவிற்கு, அப்பரம் எந்திரனில் தான் அரசியலுக்கு வருவதாக சொல்லியுள்ளதாக ஒரு அறிக்கையும் வரும். சாமானிய ரசிகன் எந்திரனை 10 முறை பார்த்து தெரிந்துக் கொள்வான்.. என்ன ரஜினி சார் மனிசனை இப்படியா குழப்புவது? ஓஓஓ நீங்களே குழம்பிதான் இருகின்றீகளா! அதுசரி எப்பதான் உங்கள் குழப்பமும் ரசிகனை குழப்புவதும் நிறுத்துவீர்கள்.... ஒன்னுமட்டும் நிச்சயம் உங்கள் ரசிகர்களை உங்கள் கட்டளையின் கீழ் கொண்டுவரமுடியாது. நீங்களும் ஏமாற வேண்டாம்,... பாவம் உங்களை நம்பி குழம்பிய ரசிகனின் கெதி! அய்யோஓஓஓஓஓஒ.....

பாவபட்ட ரசிகனே! உங்களை நீங்கள் அறிய பல காலகட்டங்களில் தவற விட்டுவிட்டீகள். இது ஒரு அறிய சந்தர்ப்பம் சலுகை முறையில் வாய்ப்புகள்! உங்களை நீங்கள் எண்ணிப்பார்க்க புதியதோர் வாய்ப்பு! புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்குள் உங்கள் குடும்பம் இருக்கின்றது............ ஊதுர சங்கை ஊதிவிட்டேன்!...

நன்றி தினமலர்

வருவதை யாரும் தடுக்க முடியாது: அரசியல் குறித்து ரஜினி

ரஜினி பெயரில் கட்சி ரசிகர்களுக்கு 'கல்தா'

Thursday, October 9, 2008

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...களின் பின்னூட்ட தொடர்ச்சி

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...களின் பின்னூட்ட தொடர்ச்சி

சென்ற பதிவின் (அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...) கருத்து பறிமாற்ற பின்னூட்டங்கள் விரிவாகவும் பயன் உள்ள கருத்துகளாக உள்ளதால் அதையும் பதிவாக இடுகின்றென் சென்ற பதிவை பார்க்க இங்கே அமுக்கி பாக்கலாம்


முதலில் RajK said... அவர்களின் இரண்டு பின்னூட்டத்தையும் அதன் பின் என் கருத்தையும் சொல்லியுள்ளேன். இக்கருத்தை கோவி. கண்ணன் அவர்களும் வழிமொழிந்துள்ளார் அவர்களுக்கும் இதே கருத்தைதான் சொல்லமுடியும்......( குழப்பமாக இருந்தால் படிப்பவர்கள் மன்னிக்கவும்)

ஒன்று:>>>>>>


RajK said...
சமயம், திருமணம், கூட்டு குடும்பம் இவையாவும் நாம் ஏற்படுத்திக் கொண்ட கோட்பாடுகள். இந்த சித்தாந்தாங்கள் சிறு வயதில் திணிக்கபடுவதால், பெரும்பாலோர் இச்சமூக கோட்பாடுகளின் கைதிகளாக வாழ்கின்றனர். சூழ்நிழைகள் மாறும் போதும், இக்கோட்பாடுகள் மாற மறுக்கின்றன; பெரிய போராட்டத்திற்க்கு பிறகே இதன் பிடி மெல்ல‌ தளற்கிறது. ஒரு காலத்தில் கூட்டு குடும்பத்திற்காக போராடினோம்; இன்று அதைப் பற்றி பெரிதாக பேச்சில்லை

பல விசங்களில், நம்முள் திணிக்கப்பட்டுள்ள நம்பிக்கைகள் (Beliefs and Moral-values) இன்றைய அறிவுக்கு (Scientific knowledge and understanding) முரன்பாடுகளாக உள்ளன. இதில் இன்றைய இளைஞர்கள் குழம்பிபோய் உள்ளனர். இவர்களை இச்சமூகம் நவீன உலகிற்க்கு தயார்படுத்தவில்லை. ஆனால், இவர்கள் எடுக்கும் புதிய பாதையில் (சரியானதோ அல்லது தவறானதோ) இச்சமூகம் புதிய சூழலை நோக்கி அனுபவ‌மடைகிறிது.

மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்கு துனை, குடும்பம், குழந்தைகள் யாவும் வேண்டும். அவ்வாறே நாம் பரிமான வளற்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் குடும்ப, சமூக கட்டுபாடுகள் அவனை அவ்வாறு வாழவிடாமல் (It won't be peaceful to live without listening our genes), அதைவிட சத்திவாந்த சுதந்திரத்தை நோக்கி அவனை தள்ளுகின்றன. இப்படி வெளியே தள்ளியவனை, முதுமை, நோய் என்று பயமுறுத்தி (கடவுள் பயம் போல்), பழைய சித்தாங்களுக்கு இழுத்து அலைகழிக்கப்படுகின்றான்.

ஒரு படி மேல்...

ஆணும், பெண்ணும் இணைந்து குழந்தைகள் பெறுவது மரபணுக்களின் கோட்பாடு. குழந்தைகளை பெறுவதும், வளற்பதும், அவற்களுக்காக வாழ்வதும்; நம்முடைய அன்பும், நேசமும்; பிறர்க்கு செய்யும் உதவிகளும், தியாகங்களும் ‍‍- மரபணுக்களின் ஆதிக்கமே! இதையே மற்ற விலங்குகளும் செய்கின்றன. இந்த மரபணுக்களுக்கு (சில வேதியல் மூலகூறுகள்) கட்டுபட்டு வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தம் உள்ளதா? மரபணுக்களை, குழந்தைகள் பெறுவதின் மூலம் விட்டு செல்வதில் மூலம் தான் சுவடுகளை இவ்வுலகிற்க்கு தரவேண்டுமா? அதை இன்னும் எளிதாக செய்ய முடியும்! (Preserving our one cell, or clone, or just having our personal genome). அதற்க்கு பதில், அறிவை (new ideas, knowledge, understanding) சுவடுகளாக இவ்வுலகிற்க்கு விட்டு செல்வதை சிறந்தது என்பேன்! மக்கள் மனித விலங்குகளாக (I mean it in scientific sense; living with basic instinct and emotional brain) வாழ்தில் வறுத்தம் இல்லை. ஆனால் அதைவிட மேலாக வாழ்வதை (living with thinking brain - neocortex) குறைசொல்லுவதில் தான் வறுத்தம்.

இன்னும் ஒரு படி மேல்...

வாழ்வின் அர்த்தம் தான் என்ன? மரபணுக்களுக்கு கட்டுபட்டு வாழ்வதா? இன்றைய அறிவின்படி (based on current scientific understanding) அப்படி பெரிதாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை!(
http://theory-of-theory.blogspot.com/2008/08/origin-of-orders.html)
எப்படி ஆனாலும், அடுத்தவற்கு தொல்லை தராமல் எப்படி வாழ்தாலும் சரி. அது அவரவர் முடிவு. இதில் சரி, தவறு என்று பெரிதாக ஒன்றும் இல்லை!


இரண்டு:>>>>>


RajK said...
இப்பொழுது உலக மக்கள் தொகை, புவியின் இயற்கை வளங்களை பாதிக்கும் வகையில் பெரிகியுள்ளது. பல உயிர்கள், விலங்குகள் அழிந்து விட்டன, இன்னும் அழிந்து வருகின்றன. உயிரியல் மற்றும் சமூகவியலின் படி, எந்த உயிர்களின் தொகை அதிகமாக உயரும் போது, சில மாறுதல்கள் (Biologically, Socially, Behaviorally) ஏற்பட்டு சமன்நிலை செய்யப்படும். இது இந்தியாவிற்க்கு இன்னும் அவசியமானது. இதை நாம், கலாச்சாரம் என்ற பெயரில் செயற்கையாக தடுத்து வைத்துள்ளோம்.

* மலடிகளை கேவலப்படுத்தாதீர்கள்
* அலிகளை கேலி செய்யாதீர்கள்
* ஓரின பால் ஈர்ப்பு கொன்டோரையும் வாழவிடுங்கள்
* குழந்தைகள், திருமணம் வேண்டாம் என்போரையும் ஏற்று கொள்ளுங்கள்

எல்லா வகையினர்க்கும் சரியான வழிகால்கள் மற்றும் அங்கீகரிப்பும் கிடைத்தால் சுமூகமான சமன்நிலை கிடைக்கும். அவர்களால் எல்லாருக்கும் நன்மை பயக்கும். அவர்களுடைய உழைப்பும், அறிவும் பயன்பெறும். Diversity is the secret of evolution, life, and also for a healthy society!
இதை ந‌ம் கலாச்சாரம் அவ்வ‌ளவு எளிதாக‌ அங்கீகரிக்க‌ப்போவ‌தில்லை. இதை நாம் த‌ள்ளி வைத்தாலும், இய‌ற்கையே செய்யும் சமன்நிலை இன்னும் கொடூர‌மாக‌த்தான் இருக்கும்.
October 8, 2008 7:23 PM

கோவி.கண்ணன் said...
மேலே உள்ள பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.
October 8, 2008 7:40 PM


மெலேகண்ட பின்னூட்டத்திற்கு என் கருத்தாக

ஆ.ஞானசேகரன் said...
// RajK said... // 1,2 அனைத்தும் அறிவு ஏற்றுக் கொண்டதுபோல் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை... வாதத்திற்கும், வலையில் எழுதிக் குவிப்பதற்க்கும் சரியாக இருக்கும். நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்பாது. உதாரணமாக அழகான பெண்ணை ரசிப்பதில் தவறொன்றும் இல்லை தான் என் அறிவிற்க்கு சரி என்றே படுகின்றது. ஆனால் தன் தமக்கையோ, தன்மனைவியையோ வேறொருவன் ரசிப்பதில் மனம் ஏற்றுகொள்ளவில்லை. நடைமுறை வாழ்க்கைக்கு முரனாக வாழ்வதுதான் தியரி என்றால் சாப்பாட்டை எழுதிவைத்து வாழ்ந்துவிடலாம். உயிர் வாழ உணவு அவசியம் என்பது தியரி.உணவுக்கு சுவை நடைமுறை வாழ்க்கை.


>>>>>>>>>>>

//சூழ்நிலைகள் மாறும் போதும், இக்கோட்பாடுகள் மாற மறுக்கின்றன; பெரிய போராட்டத்திற்க்கு பிறகே இதன் பிடி மெல்ல‌ தளற்கிறது.//சூழ்நிலை மாறுபொது கோட்பாடுகள் மாற போராடதான் வேண்டும் என்பதும் இயற்கையே! அதில் எது மனித வாழ்கைக்கு தேவையோ அது வெல்லும் அதற்காக நான் மட்டும் மாறிவிட்டேன் என்பதும் மடமைதான் அறிவிற்க்கு அபாற்பட்டதுதான்...

>>>>>>>>>

//ஆணும், பெண்ணும் இணைந்து குழந்தைகள் பெறுவது மரபணுக்களின் கோட்பாடு. குழந்தைகளை பெறுவதும், வளற்பதும், அவற்களுக்காக வாழ்வதும்; நம்முடைய அன்பும், நேசமும்; பிறர்க்கு செய்யும் உதவிகளும், தியாகங்களும் ‍‍- மரபணுக்களின் ஆதிக்கமே! இதையே மற்ற விலங்குகளும் செய்கின்றன. இந்த மரபணுக்களுக்கு (சில வேதியல் மூலகூறுகள்) கட்டுபட்டு வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தம் உள்ளதா// இப்படி எல்லாம் மரபணு கட்டுபாடாக இருக்கட்டும், இதில் மாற்றுக்கூறு எதன் கட்டுபாடாக இருக்ககூடும். அதில் கட்டுப்பட்டு வாழ்வது மட்டும் ஞாயம் கற்பிக்கமுடியுமா?

>>>>>>>

//குழந்தைகள் பெறுவதின் மூலம் விட்டு செல்வதில் மூலம் தான் சுவடுகளை இவ்வுலகிற்க்கு தரவேண்டுமா? அதை இன்னும் எளிதாக செய்ய முடியும்! (Preserving our one cell, or clone, or just having our personal genome). அதற்க்கு பதில், அறிவை (new ideas, knowledge, understanding) சுவடுகளாக இவ்வுலகிற்க்கு விட்டு செல்வதை சிறந்தது என்பேன்!//இவ்வுலகிற்கு அறிவை சுவடுகளாக விட்டு செல்வதிற்க்கு மாற்று கருத்து இல்லை. இதில் குழந்தைகளுடன் விட்டு செல்வதில் என்ன குற்றம் காணமுடியும்...

>>>>>>>>

///இப்படி வெளியே தள்ளியவனை, முதுமை, நோய் என்று பயமுறுத்தி (கடவுள் பயம் போல்), பழைய சித்தாங்களுக்கு இழுத்து அலைகழிக்கப்படுகின்றான்.///முதுமையும் முதுமையில் நோயும் நடைபெறும் உயிரியல் மாற்றம்தானே! மேலை நாடுகளில் முதியோருக்கும் குழந்தைகளுக்கும் தேவையான பாதுகாப்பு அரசு மற்றும் சமுகத்தால் கிடைப்பதால் உங்களின் கருத்து சரியானது போல தோன்றும். இந்தியா போன்ற நாடுகளில் சமுக அமைப்பு ஒருவர் மற்றொருவருடன் அன்பு , பாசம் என்ற வலைப்பின்னலில்தான் இருக்கின்றது.மேலை நாடுகளில் பாசம் இல்லை என்று சொல்லிவிட முடியாது, என்னைப் பொருத்தவரை குழந்தை வளர்ப்பதில் சிறந்து விளங்குகின்றனர்.

>>>>>>>>

//பல உயிர்கள், விலங்குகள் அழிந்து விட்டன, இன்னும் அழிந்து வருகின்றன. உயிரியல் மற்றும் சமூகவியலின் படி, எந்த உயிர்களின் தொகை அதிகமாக உயரும் போது, சில மாறுதல்கள் (Biologically, Socially, Behaviorally) ஏற்பட்டு சமன்நிலை செய்யப்படும்.//இயற்கையே சமன் படுத்தும்போது நாம் ஏன் செயற்கையாக சமன் படுத்தவேண்டும்... இதற்காக உங்களுடைய சோம்பல்களையும், பொறுப்பின்மையும் ஞாயப்படுத்த வேண்டுமா? மனிதசமுதாயம் கலாச்சரம் மற்றும் சமுக அமைப்பு காலத்திற்கேற்றவாறு மாற்றத்தை ஏற்றுக்கொண்டுதான் வருகின்றது. அதற்காக மாற்றங்கள் சமசீர்யின்மை அழிவை கொடுக்குமேயொழிய நன்மையேதுமில்லை...புரிந்துவாழ்தலால் தமக்கும் தம்மை சார்தவர்களுக்கும் நலன் கொடுக்கும்....

///கோவி.கண்ணன் said... மேலே உள்ள பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்./// இதை வழிமொழிந்த கண்ணன் சாருக்கும் இதே கருத்துதான் சொல்லமுடியும்
October 9, 2008 8:13 AM

Tuesday, October 7, 2008

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...

விஞ்ஞானம், நவீனம், அதிநவீனம், தொலைப்தொடர்பு வசதிகளில் தொலைப்பேசி, கையடக்க தொலைப்பேசி, கனனி, இணையம்..... என்று வளர்ந்துக்கொண்டே போகிறகாலம். தனக்காகவும், குடும்பத்திற்காகவும் செலவிட கொஞ்சமும் நேரமும் மனநிலையும் இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி வருகின்ற காலமிது.

இக்கால இளஞர்களில் பலருக்கு குடும்ப சூழல்களிலிருந்து விலகியிருக்கும் மனோநிலையும் மெத்தன போக்கும் உருவாக்கிக் கொண்டுள்ளது. ஏன் திருமண சடங்கே தேவையா? என்ற போக்கும், ஒரு பெண்ணை துணையாக்கிக் கொண்டு அவளுடன் காலமெல்லாம் இருக்க வேண்டுமா? என்ற கேள்விகளும் இன்றைய இளஞர்களுக்கு வந்துக்கொண்டுள்ளது. இதே போல் இளஞிகளும் திருமணம் என்ற பெயரில் ஒரு ஆணுக்கு நான் அடிமையாக விரும்பவில்லை என்றும் நாங்கள் குழந்தை பெறும் இயந்திரம்மில்லை என்றும். உடலுரவுக்காக திருமணம் செய்யவெண்டிய அவசியமும் தேவையும் இல்லை, தேவைப்படும்போது விருப்பியவர்களுடன் உடல்கொள்ளுதல் தவறொன்றுமில்லை என்று சொல்லும் நிலைக்கு இளஞிகள் வந்துகொண்டுள்ளார்கள்.

இன்னும் சில இடங்களில் பெற்றொர்களின் விருப்பத்தின் பெயரில் திருமணம் செய்துவிடுவதும், பின்னர் தானும் தன் துணையும் நிம்மதியில்லா சூழலுக்கு செல்லும் பலர். இவர்கள் திருமணத்தை தவிற்பவர்களை விட மோசமான மனபோக்குயுள்ளவர்கள்.

இன்னும் சிலர் திருமணத்திற்க்கு பிறகு குழந்தையும் அதன் வளர்ப்பை தவிற்கின்றனர். குழந்தைகள், தங்களின் சுதந்திரத்திற்க்கு தடையாக கருதுகின்றர்.

இப்படியாக குடும்பம், பெற்றோரிடம் அன்புக்கொள்ளுதல், எதாற்த்த வாழ்க்கையை தொலைக்க துடிக்கும் இளஞர் இள்ஞிகளுக்கு கனைக்கள்.....
1. நீங்கள் நம்பும் சுதந்திரமும் மகிழ்ச்சியையும் உங்கள் பெற்றவர்கள் நினைத்திருந்தால் நீங்கள்தான் இந்த மண்ணில் தவழமுடியுமா?
2. உங்களை பெற்றவர்கள் சுமையாக கருதியிருந்தால் நீங்கள் சுவைக்கும் மகிழ்ச்சி எங்கிருந்து வரும்?
3. இன்றய இளஞர்கள் நாளைய முதியோர்கள், நாளைய நிலையை எப்படி கழிப்பீர்கள்?
4. இளஞிகளே! உங்கள் இளமையும் அழகும் உள்ளவரை நீங்கள் நீங்களாக இருப்பீர்கள் இரண்டில் ஒன்று போனால் உங்களின் நிலை?
5. இளஞர்களே! இளமையும் நோயின்மையும் உள்ளவரைதான், உங்களை நீங்கள் உணரமுடியும். ஒன்று போய் ஒன்று வந்தால்! உங்களால் உணரதான் முடியுமா?
6. இதற்க்காக காலமெல்லாம் ஒரு பெண்ணுடனோ! ஆணுடனோ! வாழவேண்டிய அவசியமில்லை என்றால் உங்களால் உங்களுக்குதான் என்ன லாபம்? உலகிற்க்கு விட்டுச் சென்ற சுவடுகள்தான் என்ன?
7. நாம் சாப்பிடும் உணவு ஆற்றலாக எரிக்கப்பட்டும் கழிவாக தள்ளப்படுகின்றது, எனவே சாப்பிடாமல்தான் இருக்க முடியுமா?

உயிர்களின் ஆண், பெண்... அதில் ஆணுக்கு பெண்துணை! பெண்ணுக்கு ஆண் துணை! இருவரின் வாழ்வின் அர்த்தமான சுவடுகள் குழந்தைகள்...... இதுதான் நியதி....

தான் தனக்காகவும் தன் சுதந்திர மகிழ்ச்சிக்காகவும் வாழும் இளஞர் இளஞிகளே!!!.. உங்களை நீங்கள் இழக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்ற கேள்வியை உங்கள் முன்வைக்கின்றேன்........

இப்படி வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பலரின் பதில் எங்களால் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியும் வரை வாழ்வோம்! அதன் பிறகு தானே மரணத்தை நேசிப்போம் என்பதுதான்........

வாழ்கையில் தோல்விகளை சுவைத்த ஒருவரிடம் பேச நேர்ந்தது,. மிகவும் சந்தோஷ சலிப்புடன் அவர் சொன்னார் நான் யாருக்காகவும் வாழவேண்டிய அவசியமில்லை இருக்கும் வரை பணம் சம்பாரிப்பேன். கிடைக்கும் பணத்தில் மகிழ்ச்சியாக செலவு செய்வேன். எதைப்பற்றியும் கவலையில்லை என்றார். எனக்கோ, என்னமோ மனதில் பட்டது! எதை சொல்லுவது எப்படிச் சொல்லுவது ஒரு பொராட்டம். ஆனால் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

நாம் இந்த வலிமையும் ஆரோக்கியமும் உள்ளவரைதான். இப்படியெல்லாம் பேசமுடியும். இதில் ஒன்று போனால்கூட எதை செய்யமுடியும் எதை இழக்கமுடியும்.... எல்லாமே மனதிற்க் கொள்ளுதல்தான் நம்மை நாம் காப்பாற்றிகொள்ள முடியும். இதில் "தானே உயிர் நேசிப்பு" என்பது கசப்பான நிலை இதற்காக இத்தனை நாற்கள் கடக்கவேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு மனிதனுக்கும் முதுமைத் தொடும்போது இன்னும் வாழவேண்டும் ஆசைவரும். மரணப்படுக்கையில் இருப்பவனுக்கும் நாம் பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையும் ஆசையும் இருக்குமேயொழிய மரணத்தை நேசிக்க மாட்டான் . இதை என் அறிவுறையாக சொல்லாமல் விளையாட்டாக அவரிடம் சொல்லியே விட்டேன்.

ஒருவாரம் கழித்து அவர் என்னிடம் வந்து நன்றி என்று சொன்னார். உங்களிடம் பேசியதிலிருந்து தூக்கமில்லை, என்னமோ சிந்தித்துக்கொண்டே இருந்தேன். பின்னர் நான் எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்தேன்.... என் முதுமைகாலத்தை கருத்தில்கொண்டு மாதம் சேமிக்கும் முறையை தேர்வு செய்து வங்கியில் அதற்கான பதிவையும் செய்துவிட்டேன் என்றார்.. பின் இயலாதவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்கின்றேன், மேலும் செய்வேன் என்றார். இப்படி என் மனமாற்றதிற்க்கு காரணமாக இருந்த உங்களுக்கு நன்றி என்று மனமகிழ்ந்து சொன்னார். மேலும் நான் கண்ட சிரமம் என்நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று கண்கலங்கி சொன்னார்.. அன்று என்னால் சாப்பிடமுடியவில்லை, அவர் மனமாற்றம் அந்த அளவிற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த நண்பர் எடுத்த முடிவில் எக்காரணத்தாலும் நிலைமாறாமல் இருக்க வேண்டும் என்பதால்தான் இந்தப் பதிவை எழுதுகின்றேன்.. மேலும் இந்த பதிவை அவருக்கு காணிக்கையாக்குகின்றேன்...........
(பி.கு: ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் நண்பர் பெயரும் சூழலும் தவிற்க்கப்பட்டுள்ளது)

Saturday, October 4, 2008

சங்கீதம் தெரியாட்டி பரவாயில்லைங்க! இங்கீதம் தெரிஞ்சுகோங்க!..

சங்கீதம் தெரியாட்டி பரவாயில்லைங்க! இங்கீதம் தெரிஞ்சுகோங்க!..
ஆமங்க! கொஞ்சம்,... கொஞ்சனாலும் இங்கீதம் இருக்கனுங்கோ!.. நாம நம்மலப்பத்தி நினைப்பது போல மத்தவங்களையும் நினைக்குறதுல என்ன தப்புன்னு சொல்லுங்க. உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்வதும் சரிதாங்க. அதை செய்யும் முன் மற்றவர்களுக்கு என்ன சங்கடத்தைக் கொடுக்கும் என்பதையும் கொஞ்சம், கொஞ்சனாலும் நினைப்பது என்ன தப்புன்னு சொல்லுங்க!...

இப்படிதான் சாப்பாட்டுக் கடைக்கு சாப்பிட சென்றேன், கும்பல் அதிகமாக இருந்தது கடைசியில் இரண்டு இருக்கை மட்டும் இருந்தது, நான் அதில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒருவர் இடமில்லாமல் நின்றிருந்தார் அவரை கூப்பிட்டு என் பக்கத்தில் உள்ள இருக்கையை காட்டினேன். நான் வலதுப் பக்க சுவர் ஓரமாக அமர்ந்தேன்,வலது கை பக்கம் சுவர்யிருந்ததால் சாப்பிட சிரமம்தான். இருப்பினும் அருகில் உள்ளவர் நன்றாக உண்ண வசதியாக இருக்கட்டுமே என்று ஒடுங்கியமர்ந்தேன். அவர் பூரி சாப்பிட்டார், என்னமோ இவர்மட்டும் தான் சாப்பிட வந்தவர் போல அகன்று அமர்ந்து வெள்ளகார துரை தோசையை கடினப்பட்டு கையில் சாப்பிட்டால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு அலட்டல். அவர் முலங்கை என் முகம் அருகில் வந்து செல்கிறது, எனக்கோ சாப்பிட சிரமமாக இருந்தது. என்னபன்னுவது இதுபொன்ற மனிதர்களையும் சந்திக்கவேண்டிதான் இருக்கும்.

இன்னும் சிலர் பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்வது. அப்படியே மற்றும் ஒருவர் வந்து அமர்ந்தால் அவர்மட்டுமே அகன்று அமர்ந்து தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது.

நண்பர்களுடன் இருக்கும்போது யாருடனோ தொடர்ந்து தொலைபேசியில் பேசுவது.

வீட்டுக்கு வந்த நண்பரை கவணிக்காமல் தொலைகாட்சியில் மூழ்கி விடுவது.

யாரை பற்றியும் கவலைப்படாமல் நால்வர் மத்தியில் புகை ஊதித் தல்லுவது.

இப்படி மற்றவர்களை சங்கடங்களுக்கு உற்ப்படுத்துவது பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். யாருக்கும் உதவி செய்ய வேண்டாங்க இம்சை கொடுக்காமலிருந்தாலே கோடி புன்னியமுங்கோகோகோ.....

Wednesday, October 1, 2008

கிருஷ்ணன்! கிருஷ்ணன்!

கிருஷ்ணன்! கிருஷ்ணன்!
ஒரு சின்னப் புள்ளைத்தனமான பதிவுதான், சிறுவர்கள் விளையாடும் சின்னப் புள்ளைத்தனமான விளையாட்டை பற்றிய பதிவுதான்...

சிறுவர்கள் விளையாடும்போது சிலநேரங்களில் தன்னுடன் விளையாடுபவரை திட்டுவதுமுண்டு. அப்படி திட்டும்போது அவர்கள் பேரை சொல்லி திட்டுவார்கள். பேரை பழிக்கும் விதமாக திட்டுவதை நாம் அனைவருக்கும் தெரியும். உதாரணமாக,.....
குமாரு!... கிமாரு!....
ரஜினி!... கிஜினி!....
கமலு!.... கிமலு!...
குஸ்பு!... கிஸ்பு!...
என்று பழித்து திட்டுவதை பார்த்துள்ளோம். அப்படி திட்டுவதும் அவர்களுக்கு கோபம் வருவதும் உண்டு.....

இப்படி பழித்து சொல்ல முடியாத பெயர்! அந்த பெயருக்கு சொந்தகாரனை பழிக்க முடியாத அந்த பெயர்!.....
கிருஷ்ணன்!..... பழித்த பெயர் கிருஷ்ணன்!....
கிருஷ்ணமூர்த்தி!... பழித்த பெயர் கிருஷ்ணமூர்த்தி!...
பழித்த பின்னும் அவர் பெயர் அப்படியேதான் இருக்கும்!...

கிருஷ்ணா! என்ன சின்னபுள்ளதனமா இருக்கு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

Sunday, September 28, 2008

வலையில் கசிந்த வண்ணப்படம்!...

வலையில் கசிந்த வண்ணப்படம்!...



http:வலையில் கசிந்த வண்ணப்படம்!...//specials.rediff.com/movies/2008/sep/25sld1.htm

இனிதான இதயம்பெற இதயம்கனிந்த வாழ்த்துக்கள்!...

இனிதான இதயம்பெற இதயம்கனிந்த வாழ்த்துக்கள்!...

இன்று செப்டம்பர் 28ம் தேதி மாதக்கடைசி ஞாயிறு உலக இருதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிர்களின் வாழ்வில் இதயம் முக்கிய பங்கு பெறுகின்றது. இதயமே சக்திகளை மூளை மற்றும் இதறபாகங்களுக்கும் எடுத்து செல்கின்றது. இப்படி முக்கியமான இதயத்தை நோயின்றி காப்பாற்றவும், இதயநோய் பற்றிய விழிப்புனர்வு ஏற்படுத்தவும் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் விரிவான செய்திகளை தினமலர் சுட்டியை சுட்டி பார்க்கவும்...



இன்று செப். 28 உலக இருதய தினம் இங்கே அமுக்கி பார்க்கலாம்


சுட்டாமல் செய்தி பார்க்க........


வாழ்க்கை முறை மாற்றத்தால் இருதய நோயை தடுக்கலாம் : இருதய நோயால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஒரு கோடியே 75 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். மற்ற நோய்களைப் போல இல்லாமல் இருதய நோயை வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரிதளவு தடுக்கலாம். இந்தச் செய்தியை உலக மக்களுக்கு அறியச் செய்யும் நோக்கத்துடன் கொண்டாடப்படும் தினம்தான் உலக இருதய தினம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத கடைசி ஞாயிறு ( 28ம் தேதி) உலக இருதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இருதய நோயை தடுக்கும் முறைகளை எடுத்துச் சொல்லவும் இந்த தினம் உதவுகிறது. இந்த ஆண்டு உலக இருதய தினத்தின் முதன்மைச் செய்தி என்னவென்றால், "இருதய நோய் ஏற்படுவதற்கான எச்சரிக்கை குறிகளை அறியவும்' என்பதே.


முக்கியமான காரணங்கள்:
1) உயர்ந்த ரத்த அழுத்தம், 2) ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருத்தல், 3) சர்க்கரை வியாதி, 4) சிகரெட் புகைப்பது, 5) உடல் பருமன், 6) உடற்பயிற்சி இல்லாமை, 7) தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், 8) மனஅழுத்தம். இவையாவும்தான் இருதய நோய் வருவதற்கான மிக முக்கியமான காரணங்களாகும்.



இவற்றை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் இருதய நோயை 85 சதவீதம் தடுக்க முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதில் ஒருவருக்கு எந்தெந்த "ரிஸ்க்' இருப்பது என்று தெரிந்து கொள்வதே இந்த ஆண்டின் இருதய தினத்தின் சிறப்பு அம்சமாகும்


ரிஸ்கைக் குறைக்கும் வழி:
உங்கள் "ரிஸ்க்'கை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள் வருமாறு
1. சிகரெட் புகைப்பவரானால் அதனை விடுவதே முதற்படி ஆகும். சிகரெட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால் மட்டும் போதாது. அறவே நிறுத்த வேண்டும்.



2. தினமும் உணவில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.


3. எண்ணெயில் பொறித்த உணவு வகைகள், உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை (பஜ்ஜி, அப்பளம் போன்றவற்றை) தவிர்க்க வேண்டும்.


4. ரத்தக் கொதிப்பு நோய் இருந்தால் ரத்த அழுத்தம் 140 / 90க்கு கீழ் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


5. ரத்தத்தில் எல்.டி.எல்., கொலஸ்ட் ரால் (கெட்ட கொழுப்பு) 100 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும்.


6. சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 100 மி.கி.,யும், சாப்பிட்ட பின்னர் 140 மி.கி.,க்கு மேலும் இருக்கக் கூடாது.


7. தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்வது முக்கியம்.


8. இன்றைய உலகில் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வெளிச் சூழ்நிலை மனதை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம். யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் இதற்கு உதவும்.

மற்ற நோய்களைப் போல அல்லாமல் இருதய நோயை பெரிதளவில் தடுக்க முடியும் என்பதை உணர்ந்து நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்றாகும்.

மேலும்,.அறிந்துக்கொள்ள.. ..நன்றி வெப்துனியா

1.மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்

2.மனநோயின் அறிகுறிகள்!

3.மனநோய் ஏன் உண்டாகிறது?

4.மனநோய்க்கு அடிப்படை என்ன?