_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, October 17, 2008

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள்

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போன்று நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள்..

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் : "நாட்டிலுக்கா' அழிவில் அரங்கேற்றம் : தசாவாதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கண்ணாடி குடுவையில் உள்ள வைரஸ் கிருமி (கடல் தண்ணீரில் விழுந்தால்) காற்றில் கலந்தால் அது கண்மூடி திறப்பதற்குள் பல மடங்கு அதிகரித்து உலக அழிவை ஏற்படுத்தும் என்பதால் அந்த குடுவையை கைப்பற்றும் முயற்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்த கமல் ஈடுபட்டிருப்பார். இருப்பினும் வில்லனால் அந்த குடுவை கடல் தண்ணீரில் விழுந்து வைரஸ் கிருமிகள் வெளியேறும். அப்போது மழை பெய்வதோடு சுனாமி ஏற்பட்டு அந்த வைரஸ் கிருமிகளுக்கு முற்றுபுள்ளியை ஏற்படுத்தும். அதேப்போன்று தற்போது மன்னார் வளைகுடாவிற்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய அழிவு மழையினால் தடுக்கப்பட்டுள்ளது. தனது பரப்பளவை அதிகரித்துக் கொண்டிருந்த "நாட்டிலுக்கா' கனமழையினால் காணாமல் போனது. அதேப்போன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த சிப்பிகள், மீன்கள் அனைத்தும் கடல் அலைகளால் இழுக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விட்டன. இதனால் கடற்கரை தூய்மையாக்கப்பட்டுள்ளது. தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போன்று இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதை நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள் இயற்கைக்கு என்றும் அழிவில்லை என்ற கருத்தை உறுதிபடுத்தினர்.

மேலும் அதிகப்படியான செய்தியைப் படிக்க தினமல்ர் சுட்டியை சுட்டவும் நன்றி தினமலர்

3 comments:

Anonymous said...

//கண்ணாடி குடுவையில் உள்ள வைரஸ் கிருமி கடல் தண்ணீரில் விழுந்தால் அது கண்மூடி திறப்பதற்குள் பல மடங்கு அதிகரித்து உலக அழிவை ஏற்படுத்தும் //

Wrong!

the virus will be destroyed by salt water

ஆ.ஞானசேகரன் said...

Anonymous said...
/////கண்ணாடி குடுவையில் உள்ள வைரஸ் கிருமி கடல் தண்ணீரில் விழுந்தால் அது கண்மூடி திறப்பதற்குள் பல மடங்கு அதிகரித்து உலக அழிவை ஏற்படுத்தும் //

Wrong!

the virus will be destroyed by salt water///
"கடல் தண்ணீரில் விழுந்தால் அது "
என்பது தினமலரில் வந்த பிழை.... பிழைத்திருத்ததிற்க்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

////கண்ணாடி குடுவையில் உள்ள வைரஸ் கிருமி கடல் தண்ணீரில் விழுந்தால் அது கண்மூடி திறப்பதற்குள் பல மடங்கு அதிகரித்து உலக அழிவை ஏற்படுத்தும் //

Wrong!

the virus will be destroyed by salt water///

தவற்றை திருத்தி அமைத்துவிட்டேன் தினமலரிலும் திருத்துவிடுவார்கள் என்று நம்புகின்றேன்