_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, June 13, 2008

ஆசையில்லாதவன் அரைமனிதன்! எல்லையில்லா ஆசை நிறைவு பெராது!!

ஆசையில்லாதவன் அரைமனிதன்! எல்லையில்லா ஆசை நிறைவு பெராது!!
கி.மு.566-கி.மு.486 ல் வாழ்ந்த புத்தரின் முக்கிய பொதனைகளில்,..
ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம்.
துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.


நான் வாழவேண்டும், என்ற ஆசையின்றி எப்படிதான் வாழ்வை தொடங்கமுடையும். ஆசைபடுகிறவன் வாழ்ந்து வருகின்றான், ஆசை படுகிறவன் வெற்றிபெருகின்றான். ஆசையில்லாதவன் அரை மனிதன் (பத்தியக்காரன்) , மனிதனின் முதல் முக்கிய கண்டுபிடிப்பு வட்டம். இந்த வட்டத்திற்க்குப்பின்தான் உலகம் வந்துகொண்டுள்ளது.

"பெண்மீது ஆசைக்கொண்டு மணமுடிக்கிறான்,

மழலைமீது ஆசைக்கொண்டு குழந்தை பெருகின்றான்,

அவன்மீது ஆசைக்கொண்டு வாழ்ந்து வருகின்றான்,

என்மீது ஆசைக்கொண்டு கடவுள் என்னைப்படைத்தான்.


விரைவாக செல்ல ஆசைக்கொண்டு புகைவண்டி கண்டான்,

வின்னில் பறக்க ஆசைக்கொண்டு விமானம் கண்டான்,

வின்னை தொட ஆசைக்கொண்டு ராக்கட் கண்டான்,

எதன் மீது ஆசைக்கொண்டு உலகை பிரித்தான்?......................."

பிள்ளை வரம்வேண்டி ஆசைப்பட்டு, பேருகாலத்தில் துன்புற்று, பெற்றெடுத்த பிள்ளையோ பேரின்ப மகிழ்ச்சி. இடைப்பட்ட துன்பம் சுகமான சுமைதான் கடினமில்லை. ஆசைக்கும் கனவுக்கும் உருவம் ஒன்றுதான். டாக்டர். அப்துல் கலாம் இளஞர்களை கனவுகான சொன்னது மனிதனின் வளர்ச்சிக்குதான், துன்பட இல்லை. அவனின்றி அனுவும் அசையாது! ஆசையின்றி ஒன்றும் செய்திட முடியாது.

ஆசையின்றி ஒன்றும் செய்திடமுடியாது, எல்லையற்ற ஆசை நிறைவுபெரா பெராசையாகும்.

"பணம் வேண்டும் என்பது எல்லையில்லை,
ஒரு இலட்சம் ஒரு வருடத்தில் வேண்டும் என்பது ஆசையாகும். "

ஆசைப்பட்ட ஒரு இலட்சம் உன்னால் அடையமுடியும். ஆனால் பணம் வேண்டும் என்பது பேராசையால் துன்பதை கொடுக்கும்.

எந்த ஒரு ஆசைக்கும் எல்லை கொடுத்தால், துன்பம் தலைதெரிக்க ஓடிவிடும்.......


பின்குறிப்பு: தமிழ்மீது ஆசை கொண்டு வலைபூ படைத்தேன்.........



0 comments: