தசாவதாரமும் KFC யும்......
வேலையின்மித்தம் 1993-ல் மலேசியா சென்றேன். அங்கு ஒருவருட காலம் வேலைச் செய்துவந்தேன். அங்குதான் நான் KFC (Kentucky fried chicken) சாப்பிட்ட முதல் அனுபவம். நண்பர் ஒருவர் சாப்பிட அழைத்து சென்றார், இரண்டு சிக்கன் துண்டு ஒரு டப்பாவில் முட்டைகொஸ்(coleslaw) அரைத்த உருலைக்கிளங்கு(whipped potato) என்னிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். எனக்கு எதை எப்படி சாப்பிடுவது புரியவில்லை. பிறகு அவர் சாப்பிடுவதை பார்த்து நானும் சாப்பிட முற்ப்பட்டேன். ஆனால் ஒன்றுகூட சாப்பிடமுடியவில்லை, உப்பு சப்பில்லா உணவாக, வாசனையும் பிடிக்கவில்லை. கோக் மட்டும் குடித்துவிட்டு வந்துவிடேன். மற்றும் சிலசமயம் சாப்பிடும்பொது சுவை பழகி பிடித்து விட்டது. அந்த உணவின் புது சுவையும் புரிந்துகொண்டது. பின்பு நண்பர்கள் செரும்பொது KFC தான் சாப்பிடுவோம். அந்த அளவிற்க்கு KFC பிடித்த உணவாக மனதில் மாற்றம் ஏற்ப்பட்டது.
அதேபொல் 1997-ல் சிங்கபூர் வந்தேன், சிங்கபூர் வந்ததும் தேடிச்சென்று KFC சாப்பிட்டேன். சுமார் 10 வருடம் சிங்கபூரில் வேலைச்செய்துவருகின்றேன். தற்பொதும் KFC விரும்பிய உணவாகதான் சாப்பிடுகிறேன்.. என் நண்பர் ஒருவர் என்னுடன் KFC சாப்பிட விரும்பினார், இருவரும் சென்று சாப்பிட்டொம். அவர் சிக்கனை எடுத்து நுனி பல்லில் எடுத்து கடித்து சுவைத்தப்பின் என்னா நல்லாயிருக்கு என்று சொல்லி சொல்லி முழுவதும் முடித்துவிட்டார். பொதுவாக நம்முடைய உணவு வகை பல்சுவையுடையது சோறு, சாம்பார், காய், பொறியல், ரசம், மோர், வடை, பாயாசம் இப்படி சுவை கண்ட நாவிற்க்கு KFC ஒரு சாதாரண உணவாக தான் முதலில் தெரியும். போகபோகதான் KFC யும் ஒருவகை உணவுதான் என்பது அறியவரும். இப்படிதான் அந்த நண்பரும் சாப்பிட்ட முறையும், சிக்கன்65 சாப்பிட்ட நண்பருக்கு KFC சிக்கன் சுவையறிய காலதாமதமாகும். இப்படிதான் சுவை நாவில் உணரப்படும். நுனி பல்லில் சாப்பிட்ட நண்பர் தற்ப்பொது தன்னுடைய பிள்ளைகளுடன் அடிக்கடி சாப்பிட்டு வருகிறார் என்பதும் காலமறிந்த உண்மை.......
இப்படிதான் தசாவதாரம் படமும்,.... பயோபாம் அதன்பிறகு சேசிங் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட பத்து முகங்களும்... காதல், பாசம், செண்டிமென்ட், சொகம் இப்படி பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு KFC பொல சேசிங் படம் ஒரு நுனி பல்லில் சுவைத்த KFC பொலதான், சிக்கன்65 எதிர்ப்பார்த்த பதிவினர்களுக்கு KFC ஒரு மொக்கை சொத்தைதான்,...
மீண்டும் ஒருமுறை முடிந்தால் எந்த ஒரு எதிபார்ப்புமில்லாமல் படம் பார்த்துவிட்டு மறுபதிவை கொடுக்கவும்,.. சுவை KFC ல் மட்டுமில்லை தசாவதாரத்திலும் இருப்பதை உணர்வீர்கள். தசாவதாரம் விமர்சனம் இங்கே கொடுக்கவில்லை நல்ல விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறோம்...
0 comments:
Post a Comment